மூடிய Petrol’பங்குகளை திறக்கும் ரிலையன்ஸ்:’குஜராத்மாடல்’ வளர்ச்சி…!

reliance

விலைகட்டுபடியாகவில்லை என மூடிய 1000த்துக்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகளை மீண்டும் திறக்க ரிலையன்ஸ் முடிவு செய்து உள்ளதாக அறிவித்து உள்ளது.

மானியமில்லா விலையில் டீசல் விற்பதை மாற்ற மன்மோகன் ஆரம்பித்த மாதம் 50 பைசா விலையேற்றம் என்பதை தான் ஆட்சிக்கு வந்தபின்னரும் தொடர்ந்த மோடி இறுதியில் மன்கோகன் பெட்ரோல் விலைநிர்ணயத்தை கம்பெனிகளின் கையில் கொடுத்தது போல டீசல் விலைநிர்ணயத்தை கம்பெனிகளின் கொடுத்து தனது விசுவாசத்தை காட்டிக்கொண்டார்.

இதற்கு முன்னராக டீசல் விலை கட்டுபடியாகவில்லை என உள்நாட்டில் தனது பெட்ரோல் பங்குகளில் 1000க்கும் மேற்பட்ட பங்குகளை மூடிவைத்து இருந்த ரிலையன்ஸ் தற்போது இனி கல்லா கட்டலாம் என மூடிய பங்குகளை திறக்க முடிவு செய்து உள்ளது.

அதுபோல எஸ்ஸார் நிறுவனம் தனது பங்குகளை 1600 லிருந்து 2500 ஆக அதிகரிக்க முடிவு செய்து உள்ளது.

திருப்பூர், கோவையில் நமது சிறுதொழில்கள் மூடப்படும் அதேகாலக்கட்டத்தில் நாடு முழுவதும் மூடிய petrol பங்குகளை ரிலையன்ஸ் திறக்கிறது. இந்த இரண்டையையும் ஒப்பிட்டு பார்த்தால் புரியும் நடப்பது யாருக்கான அரசு என்பது

கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந்தபோது பெட்ரோல், டீசல் விலையினை குறைக்காமல் மோடி அரசு இருந்தது யாருக்காக என்பது பட்டவர்த்தனமாக ரிலையன்ஸ், எஸ்ஸார் செய்திகள் காட்டுகிறது.

இப்படி கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக அரசை நடத்துவதை விட அந்த அரசு ஏழைகளுக்கானது, அம்பானிக்கும் பாமரனுக்கும் ஒரே கொள்கையினை கடைபிடிக்கிறது என கூச்சமே இல்லாமல் இவர்கள் சொல்வது தான் ‘அபாயகரமானதாக’ இருக்கிறது.

Leave a comment