பார்ச்சூனர் காரையும், டாஸ்மாக்கையும் தடை செய்…!

hqdefault

குடிநீர், ரேசன் முதல் லாக்கப் டெத் வரை அன்றாட மக்கள் பிரச்சனைகள் அனைத்தும் முதல்வர் தொகுதி உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும்  தீர்க்கப்படாமல் இருக்கும்போது மொத்தமாக அடையாள போராட்டம் நடத்துவது அல்லது வீடுவீடாக ஓட்டுக்கேட்டு வருவது இந்த இரண்டை மட்டும் பார்க்கும் முகஸ்டாலின் முதல் சீமான் கட்சி வரை அனைத்து ஓட்டுக்கட்சியினரின் செயல்பாடாக இருக்கிறது.

vaiko-pacha

மக்கள் பிரச்சனைகளை ஒரு கோடி உறுப்பினர் கொண்ட கட்சியும், ஆயிரக்கணக்கில் உறுப்பினர் கொண்ட கட்சியும் ஒரே மாதிரி அனுகுவதன் பின்னணி என்ன?

ஒன்றும் இல்லை மக்களுக்கு அதிகாரம் இல்லாத இந்த அமைப்பில் கவுன்சிலர் முதல அமைச்சர் வரை நல்லா கல்லா கட்டலாம். மாட்டிக்கிட்டாலும் சொத்து பறிமுதல் செய்யப்படமாட்டாது,  சிறிது காலம் கழித்து வேறு கட்சியில் ‘மக்கள் சேவை’ செய்யலாம் என்ற உறுதியான நம்பிக்கை தான் காரணம்..

vaiko_350_020914045507

நினைத்தவுடன் கட்சி மாற நாஞ்சில், சேகர்பாபு, பரிதி, வைகோ, குஷ்பூ… வகைறாக்கள் பயப்படாமல் இருப்பது, நினைத்தவுடன் நிலைப்பாடை மாற்றிக்கொள்ள சீமான் ( ஜெ ஆதரவு) , திருமா (காங்கிரஸ் முதல் கலைஞர் ஆதரவு),  ராமதாஸ் ( வன்னியர் ஆளனும்- மோடி ஆகனும்) போன்றவர்கள் சீறுவதும், லைபாய் தான் தெரியும் வாஜ்பாய் வர நாந்தான் காரணம் என்ற ஜெ முதல் & குஜராத் படுகொலை அது வேறுமாநில பிரச்சனை என்ற கருணாநிதி வரை வேறு வேறு கூட்டணி மாற தைரியம் அளிப்பதற்கும் மேற்கண்டநம்பிக்கை தான் அஸ்திவாரமே.

55845094.cms

ஒரு ஓட்டுக்கட்சிகாரனும் நாங்க வந்தால் பிஆர்பி- பச்சமுத்துவை தண்டிப்போம் சொத்தை பறிமுதல் செய்வோம் என எந்த வாக்கு உறுதியும் தருவது இல்லை, நல்லாட்சி தருவோம் என பொதுவாக தான் கொடுக்க முடியும்.

கடவுள் நம்பிக்கையை என்றைக்குமே கேள்விக்குள்ளாக்காமல் கோவிலுக்கு செல்வது போல இன்று திருடனுக்கும் ஆதரவு பறிகொடுத்தவனுக்கும் ஆதரவு என சொல்லிக்கொண்டு திரியும் மக்கள் பிரதிநிதிகளை என்றைக்குமே கேள்விக்குள்ளாக்காமல் அவர்களை தேர்தெடுக்க வாக்குச்சாவடிக்கு  போவது என்ற நிலைக்கு மக்கள் வந்து விட்டனர்.

Advertisements

அரிசிக்கு ஆதார் கொடு – 1 ரூபாய் இட்லி அன்லிமிடெட்…!

 

card_liveday

 

ரேஷன் கடையில் புளுத்த அரிசிக்கு ஆதார் கேட்கும் அரசு மறுபுறம் எத்தனை இட்லி வேணாலும் வாங்கிக்கோ என அதே அரிசியை சுட்டு விக்கிறது…! எப்படிப்பட்ட அயோக்கியத்தனம்.

Amma-Canteens

பாதி கார்டுக்கு மொத்த பொருட்கள் இல்லை, அந்த பாதிக்கும் பாதி பொருட்கள் இல்லை என சொல்லும் ரேஷன் கடையில் அரசு இடத்தில் இல்லை, கம்யூட்டர் பில் இல்லை, கேமரா இல்லை, செக்கூரிட்டி இல்லை, ஆனால் அதனை அரைத்து விற்கும் அம்மா இட்லி கடையில் இவை அனைத்தும் இருக்கிறது….!

வெரிகுட் கவர்மெண்ட்…. வெரிகுட் பொதுஜனம்…!

மோடியின் செல்லாத நோட்டினால் பாதிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் அழுகுரல் இதோ….!

பெத்த குழந்தையின் பசிக்கு சோறு போடமுடியலை… என கூலி வேலைக்கு செல்லும் சென்னை நகரத்து பெண்ணின் அழுகுரல் ….

என் சாவுக்கு காரணம் மோடியின் 2000 ரூபாய் என எழுதி வைத்து சாவேன் –  கூலி வேலை செய்யும் முதியவர் ,எம்.ஜீ,ஆர் நகர் சென்னை.

இந்த மோடிக்கு தெரியாதா யாரு யாரு பணக்காரன், கருப்பு பணம் வைச்சுயிருக்கானு…? – விவசாய பெண்மணி ,விழுப்புரம் கிச்சிரபாளையம்

என் வீட்டில் ஒரு 2000 ரூபாய் நோட்டும் இல்லாத நிலையில் இன்றைக்கு பணக்காரன் ஒவ்வொருத்தன் வீட்டிலும் கோடிக்கணக்கில் புது ரூபாய் நோட்டு எப்படி வந்தது…? வெள்ளிமலை கிராமவாசி….

இப்படி

இரவு ஒரு மணிமுதல் பேங்க் வாசலில் உட்கார்ந்து இருந்து 2 ஆயிரம் வாங்க படாதபாடு படும் கிராமவாசிகளும், சென்னை போன்ற பெருநகரங்களில் வாழ வந்த கூலி வேலை செய்யும் நகரத்துவாசிகளும் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருவதை தான் கண்களில் கண்ணீர் வர வைக்கும் நியுஸ் 18 டிவியின் நேரடி காட்சி பதிவு வெளிவந்து உள்ளது.. …

ஆன் லைனுக்கு மாறு ஆப்புக்கு மாறு என1% கூட மோடிக்கு ஆதரவு எண்ணம் உடையவர்களா நீங்கள்…. கண்டிப்பாக இந்த விடியோவை பார்த்து விட்டு சொல்லுங்கள்… எப்படிப்பட்ட தாக்குதலை இந்தியாவின் ஏழை எளிய மக்கள் மீது இந்த 2000 நோட்டு ஏற்படுத்தி உள்ளது என்பதை….!

Not accept debit card: அப்ப வார்தா..இப்ப மோடி புயல்…!

petrol-bunks

 

ஆன் லைன் டிரான்ஸக்‌ஷன் யோக்கியதை போன மாதம் வார்தா புயல் கிழித்து போட்டது என்றால் இன்று மோடி புயல் வரியினை போட்டு கிழித்து தொங்கவிட்டு விட்டது.

Will not accept debit/credit cards from tonight, say petroleum dealers

பெட்ரோல் இந்த ஆண்டு ரூபாய் 100ஐ தொடுவது உறுதி…!

petrol-100

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளால் கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்த ஆண்டுஅதிகரிப்பது உறுதி என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டுகளில் 149 டாலரில் இருந்து 30 டாலர் வந்தபோது இது தான் சாக்கு என கலால் வரியினை உயர்த்தி விலை குறையாமல் பார்த்து கொண்ட ‘ஏழைகளின்’  வாழ்வை உயர்த்த உறுதி பூண்டுள்ள மோடி அவர்கள் இந்த முறை அந்த வரியினை சற்று குறைத்து விலை மீண்டும் ஏறாமலாவது நியாயமாக நடப்பார் என பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னரும் நம்புவார்கள் குறைவு தான்.

அதன்படி கடந்த ஒரு மாதமாகவே 3ரூபாய், 2 ரூபாய் என விலை யேற்றி 70 ரூபாய்க்கு கொண்டு வந்து விட்டார் மோடி. 70 ரூபாயில் 36 ரூபாய் வரியாம்.

உலகில் ஒரு பொருள் விலையில் பாதிக்கும் மேல் வரி போட்டு விற்கும் நாடு நமது இந்தியாவாகத்தான் இருக்கும். அதுவும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் , விலைவாசி உயர்வுக்கு காரணமாக இருக்கும் பெட்ரோல் டீசல் மீது வரி போடு கொள்ளை அரசு நமது இந்திய அரசாகத்தான் இருக்கும்.

விலை நிர்ணய அதிகாரத்தை பெட்ரோலுக்கு தாரைவார்த்தது காங்கிரஸ் என்றால் , டீசலை தாரை வார்த்த பெருமை நமது மோடி அவர்களையே சாரும். அப்படி கொடுத்தபின் விலை குறையும் போது மட்டும் வரி போட்டு கொள்ளை அடுத்து கின்னஸ் சாதனை செய்த பெருமை மட்டும் மோடி அரசுக்கு மட்டுமே கிடைத்து உள்ளது.

இனி வரும் காலங்களில் கச்சா எண்ணெய் மீண்டும் 100 டாலராக உயர்வது உறுதி என்பது எல்லோருக்கும் தெரியும் , ஆனால் அப்படி கூடும் போது நமது பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து போய் கொண்டுயிருக்கும்.

அன்று பருப்பு விலை, அரிசி விலை என்னவாக இருக்கும் என்பதை விட அப்போது சம்பந்தமே இல்லாமல் மோடி உள்ளிட்ட ஆளும் வர்க்கம் ஏழைக்காக உழைக்கிறேன், ஏழை வீட்டில் அடுப்பு எரிய வைக்கிறேன் என சொல்லிக்கொண்டே நமக்கு கொள்ளி வைப்பது தான் உலகில் வேறு எங்கும் இல்லாத வக்கிரம்.

மக்களுக்கு பதில் சொல்லாமல் ஆளில்லாத மேடைகளில் வீரவசனம் பேசும் ஆளும் வர்க்க கும்பல் உருவாகி அது மக்களை அணிதிரளாமல் இருக்கும் என்னமா நடிக்கிறது…!

 

1ரூ இட்லிக்கு சிசிடிவி, 28,000 கோடி டாஸ்மாக்-க்கு….?

இன்றைக்கு ரேஷன் கடையில் பருப்பு இல்லை, எண்ணெய் இல்லை இன்றாலும் அதே ரேஷன் பொருட்கள் மூலம் தயாராகும் ஒரு ரூபாய் இட்லிக்கடையில் இட்லி, பொங்கலுக்கு தட்டுபாடு இல்லாமல் விற்பனை ஆகுகிறது.

Amma-Canteens

அப்படிப்பட்ட இட்லிகடை சாப்பிடும் இடத்தை எப்படி பராமரிக்கிறார்கள் என பார்த்தோமானால், இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் & டைல்ஸ் தளம், மின்வசிறி, எல்சிடி டிவி,கம்யூட்டரைஸ்டு பில் என வசதிகள் செய்யப்பட்டதோடு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, செக்கூரிட்டி தனியாக வாசலில் உட்காரவைக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரம் மட்டும் திறக்கப்பட்டு நடத்தப்படுகிறது, அந்த டிவி வரிக்கு வரி தமிழக முதல்வர் என இன்னமும் ஜெயலலிதா (அம்மா என்று தான் அவர்கள் கூறுவார்கள்) அவர்கள் குறித்த செய்திகள் ஒளிப்பரப்பப்படும்.திரும்பி பக்கம் எல்லாம் அம்மா படங்கள் இருக்கும்.

ஒரு ரூபாய் இட்லிக்கு இத்தனை வசதிகள். கண்காணிப்புகள்.

ஆனால் ‘குடிப்பழக்கம் நாட்டுக்கு, உயிருக்கு, வீட்டுக்கு கேடு’ என போடு வைக்கப்பட்டு மக்களின் தாலி அறுக்கும் டாஸ்மாக் கடைக்கு,அதுவும் அரசுக்கு 28,000 கோடி அள்ளி தரும் அமுத சுரபிக்கு எந்தவிதமாக வசதியும், பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதை ஒப்பீட்டு பாருங்கள்.

maxresdefault

சரக்கின் மேல் 5 முதல் 10 ரூபாய் அதிகம் வைத்து பில் இல்லாமல் விற்கும் விற்பனையாளர்கள், எச்சில், முத்திரம் கமழும் பார், ஒரு ரூபாய் கூட பெறாத வாட்டர் பாக்கெட், 7 ரூபாய், அதுபோல அனைத்து வித பொருட்களும் 4,5 மடங்கு விலை உயர்வு,சுகாதாரமற்ற முறையில் பொருட்கள் தயாரிப்பு, காலை 10 முதல் இரவு 10 வரை தொடர்ந்து கடையிலும் மீதி நேரம் பாரிலும் என 24நான்கு மணி நேரமும் சரக்கு கிடைக்கும் வசதி என ’மக்கள் நலன்’ பாதுகாக்கப்படுகிறது.

ஒரு ரூபாய் கடையை கூட தேடனும் ஆனால் நம்ம டாஸ்மாக் கடை தெருமுனைக்கு ஒன்று, சிக்னலுக்கு 3 என திறக்கப்பட்டு ’மக்களின் நலன்’ பாதுகாக்கப்படுகிறது.

உண்மையில் ஒரு இட்லிக்கடைக்கு ஏன் சிசிடிவி இருந்தும் செக்கூரிட்டி என்றால் எல்லாம் அதிமுக கட்சிக்காரன் டெண்டர் எடுத்து சம்பாதிப்பதற்க்கு என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.

டாஸ்மாக் சரக்கு – மிடாஸ், எலைட்,கால்ஸ் என கட்சிக்கு ,இலவசங்கள் கொடுக்க அரசுக்கு. கழககண்மணிகள் பொறுக்கி திண்ண, சிந்திக்கும்  தகுதி இல்லாத மூளையை சமூகம் உற்பத்தி பண்னுவதற்கு… 

ஒரு  ரூபாய்இட்லிக்கடை – மக்களை சிந்தனை அளவில் விலைவாசி உயர்வை ஏற்றுக்கொள்ள வைக்க, மக்கள் விரோத அரசை மக்கள் நண்பன் போல நம்ப வைக்க, டெண்டர் மூலம் கழககண்மணிகள் பொறுக்கி திண்ண.