டாஸ்மாக்: வைக்கவிடாதே…அப்புறம் சசிபெருமாள் கதிதான்…@

55845094.cms

நெடுஞ்சாலை ஓரமாக சாராயக்கடையை அகற்றுங்கள் என உச்சநீதிமன்றம் தொடர்ந்து உத்தரவு போட்டும் முடியாது என வாய்தா வாங்கிய தமிழக அரசு கடந்த வாரமும் முயற்சி செய்தபோது உச்சநீதிமன்றம் அதெல்லாம் முடியாது என்று கூறிவிட்டது. மற்றமாநிலங்களுக்கு செப் 31 கடைசி என்றால் தமிழகத்துக்கு மார்ச் 31 கடைசி என சொல்லிவிட்டது.

கடையை மாற்ற முடியாது என தொடர்ந்து போராடும் இந்த ‘மக்கள் தேர்தெடுத்த அரசு’ மூடிவிட்டு சும்மா இருக்குமா… பின்வாசல் போட்டு கடையை நடத்திய அரசு ஆச்சே.

கடையினை ஊருக்குள் மாற்ற முடிவு செய்து மாற்றி வருகிறது. அனைத்து இடங்களிலும் மக்கள் மூடுடா கடையை, திறக்காதடா கடையை என போராடும் நிலையில், போலீசு காரர்கள் இப்ப விட்டுடுங்க… கலெக்டர் பார்த்து மனு கொடுங்க என அப்புறப்படுத்த பார்ப்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.

மதுரை அருகே ஒத்த டாஸ்மாக் கடையை மூடுங்க என மதுரை உயர் நீதிமன்ற உத்தரவை எடுத்துக்கொண்டு கலெக்டர் ஆபிஸ், அரசு அலுவலங்களுக்கு நடையாக நடந்து இறுதியில் சசி பெருமாள் அந்த டாஸ்மாக் கடை எதிரே டவரில் ஏறி போராடும்போது கொலைசெய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே..

ஆக கடையை வைக்கவிட்டீங்கனா… அப்புறம் எடுக்கமாட்டான் அவ்வளவு சீக்கிரத்தில்….மத்திரபிரதேசத்தில் நேற்று இதே போல சாராயக்கடையினை ஊருக்குள் வைக்க வந்த டெம்போ வண்டியை மக்கள் கற்களை வீசி விரட்டிய காட்சியை நீயூஸ் 18 ல் பார்க்க முடிந்தது.

தமிழகம் அடுத்த கட்ட போராட்டத்தை அம்மாநில மக்கள் உணர்த்துவது போல இருந்தது.

Advertisements

டோல்கேட்-ல் போகும் டுவீலர்காரரும் – விஜய் மல்லையாவும் ….!

டோல்கேட்-ல் டூவீலரில் போகும் லட்சக்கணக்கான சாதாரண ஏழை எளிய மக்கள் பணம் கொடுக்காமல் போகும்பாதையினை கவனித்தீர்கள் என்றால் அந்த பாதை டோல்கேட்டின் மிக ஓரமாக,  மிக நெரிசலாக, ஒரே ஒரு பாதை மட்டும், ரோடு சரியாக தார் போடாமல் ரோடேஇல்லாமல் குண்டும் குழியுமாக இருப்பதை பார்க்கலாம்.

ஆனால் பணம் கட்டி போகும் வாகனங்கள் நேர் ரோடு, அதிக பாதை, ரோடு பக்காமாக இருப்பதை பார்க்கலாம்.

எவ்வளவு வசூல் செய்யிறான், என்ன செலவு செய்யுறான், இன்னமும் இது தேவையா என மக்கள் எந்தவித ஆய்வுக்கு செல்ல முடியாது. ஆனால் இவன் வசூல் செய்வது படியே பணம் கொடுத்து போவனுக்கு மட்டும் எப்படிப்பட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது என்பதை நாம் கவனிக்கனும்.

இதே போலத்தான் எல்லா இடமும், கோடக் தனியார் வங்கி கடன் வாங்கிய விவசாயியை அடிக்கும் போலீசு, அரசு வங்கியில் கடன் வாங்கி ஆட்டையை போட்ட மல்லையாவை பிளைட் ஏற்றி வழியனுப்பி வைக்கிறது.

பெட்ரோல் முதல் தீப்பெட்டி வரை வரி போட்டு, மினிமம் பேலன்ஸ் 5 ஆயிரம் வை, ஏடிஎம் 4 முறைக்கு மேல் 150 ரூபாய் என மக்கள் பாக்கெட் ஆட்டையை போடும் அரசு மறுபுரம் அந்த பணத்தை எப்படிபட்டவர்களுக்கு கடன் கொடுத்து வாராக்கடன் என பைல் எழுதுகிறது.

இப்படி நம் கண் முன் எண்ணீலடங்கா உதாரணங்கள் இருக்கிறது இந்த அரசு நமக்கானது அல்ல என்பதற்கு… நமது மரமண்டைக்கு தான் அது புரியவே மாட்டேன் என்கிறது.

26 பற்பசை தயாரிக்கின்ற கோல்கேட்-யின் தண்ணீர் பாசம்…!

colgate.PNG

 

26 விதமான பற்பசை தயாரித்து வியாபாரம் செய்யும் கோல்கேட் கம்பெனிக்காரர்கள் தண்ணீருக்கான மக்கள் படும் கஷ்டங்களை வீடியோவாக போட்டு தண்ணீரை சேமியுங்கள் என விளம்பரம் செய்கிறது.

இவர்கள் 26 பற்பசை தயாரிக்க எவ்வளவு தண்ணீர் செலவு செய்வார்கள் என யோசித்தீர்கள் என்றால் புரியும் இதன் அயோக்கியத்தனம்.

தெருவுக்கு இரண்டு டாஸ்மாக் கடையை நடத்திக்கொண்டு மறுபுறம் குடிச்சுட்டு வண்டி ஓட்டினீயா? இந்த மக்கள் நல அரசு கேட்பது போல உள்ளது.

அரசே தண்ணீரை பாட்டில் போட்டு விற்றுக்கொண்டும் கோல்கேட் கம்பெனிக்காரனை விளம்பரம் போடுவதும் ஒப்பிட்டால் புரியும் இந்த அரசு மல்லையாவுக்கா? விவசாயிக்கா?

 

நான் ஜெ , நீ சசி வாரிசு: நான் எட்டாங் கிளாஸ் பாசுனே..!

 

je-sasi.PNG

சசி படத்தை போட்டு, ஓட்டு கேட்டு பாரு என்கிறார் மதூசூதனன். ஆனால் மொத்தத்தில ஜெ படத்தை போடப்போறீங்க…. அப்புறம் என்ன பெருமை..? இப்படி யோசிக்க கூட மக்கள் அரசியல் படுத்தபட வில்லை என்பது தான் முகஸ்டாலின் முதல் சீமான், அன்புமணி வரை அனைவரின் பலமே….

என்னவேணாலும் பேசலாம்…. யாரை வேணாலும் மாறி, மாறி ஆதரிக்கலாம்… மக்கள் வாக்குசாவடிக்கு வருவது என்ற ஆனபின் பார்ச்சூனர் காரில் தண்ணியை போட்டு ஏசியை போட்டு கொடியை போட்டு திரிவதற்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற சிந்திப்பது தான் ஓட்டுப்பொறுக்கி அரசியலின் அனைத்துக்கு கட்சியினருக்கும் அடிப்படை தகுதி என ஆகிப்போய்விட்டது.

CM முதல் CM தொகுதிவரை: ஏமாத்த பார்க்கும் சீமான்களுக்கும், தொடர்ந்து ஏமாற பார்க்கும் மக்களுக்கும்..!

 

‘நான் முதல்வர் ஆனால்’ என சீமான் முதல் அன்புமணி வரை சவடால் அடிப்பது ஒருபுறம் என்றால், ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டுப்போடனும்-ஆளும் கட்சிக்கு ஓட்டுப்போடனும் என மக்கள் ஒருபுறம் மிகப்பெரிய கண்டுப்பிடிப்பு போல பேசுவதை பார்க்கலாம்.

இப்படி ஏமாத்த பார்க்கும் சீமான்களுக்கும், தொடர்ந்து ஏமாற பார்க்கும் மக்களுக்கும் கீழ்கண்ட இரண்டு வீடியோவை அர்பணிக்கிறேன்.

 

 

234 தொகுதியிலும் ஜெயித்து சீமானை முதல்வராக்கினால்…!

 

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து சீமான் கொடுத்த பேட்டியில், இந்த தேர்தல் பணநாயகமாகிவிட்டது என விட முடியுமா? அதனை மாற்றி புரட்சியை ஏற்படுத்த வேண்டும் எனவும், தனது கட்சி அத்தகைய புரட்சியை சாதிக்க இருப்பதாகவும் கூறினார்.

அப்பேட்டியில் உயிர் , உழவு, உயிர் என வார்த்தை விளையாடி பேசும் இந்த ’புரட்சியாளர்’ இந்த ஓட்டுப்பொறுக்கி பணநாயகத்தில் அதிகாரம் அற்ற எம்.எல்.ஏக்களை பெற்று எதையும் சாதிக்க முடியாது என்பதை கேள்விகேட்ட பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்ல ஓட்டுபோடும் மக்களும் ஏற்றுக்கொண்டு வேறு வழியில்லாமல் தான் வாக்குச்சாவடிக்கு செல்கின்றனர் என்பதால் அதனை விளக்க முற்படவில்லை இப்பதிவில்.

ஆனால் புரட்சியை சாதிக்க போவதாக கூறும் சீமான் எத்தகைய கருத்துக்களை உடையவர் என பார்ப்பது தான் இப்பதிவு.

பிஆர்பியிடம் பணம் வாங்கிவிட்டு போலீஸ்காரர்கள் நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர் என்றும், தருமபுரியில் பேருந்து எரிவதை அணைக்கப்போவர்கள் அதிமுகவினர் என்றும், போலீசுகாரர்கள் வாங்குவது லஞ்சம் அல்ல அன்பளிப்பு என்றும், இறந்த போன பெரியாரை அழைத்து மேடையேற்றி  எம்ஜீஆர் பாராட்டு விழா நடத்தினார் என்றும், கூடங்குளம் அணு உலையினை ஒருநாள் முதல்வர் ஆக்கினால் மூடுவேன், கத்திபார்ப்பேன் 5 வருஷத்துக்கு இல்லைன்னா நமீதாவுடன் நடிக்க போய்விடுவேன், கனிம வள திருடன் வைகுண்டராஜன் எனது அப்பா , கல்வி கொள்ளையன் பச்சமுத்து எனது அண்ணன், சாதிவெறியர் ராமதாஸ் எனது ஐயா, முருகன் எனது பாட்டான் என்றும் , இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என தெருத்தெருவாக அதிமுகாவுக்கு தொடர்ந்து ஓட்டுக்கேட்டது நான் தான் என்றும் … இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்….!

இப்படிப்பட்டவர் முதல்வர் ஆனால் ஏற்கனவே பிஆர்பிக்கு ஆதராவாக தீர்ப்பு எழுதிய பூபதியை , ஜெயாவுக்கு ஆதரவாக தீர்ப்பு எழுதிய குமாரசாமியை தண்டிக்க நினைப்பாரா? ராம் மோகன் ராவை தண்டிக்க நினைப்பாரா? நினைத்தாலும் முடியாது என்பது யதார்த்தம், அது சீமானுக்கு தெரிந்தாலும் அப்படி சிந்திக்க கூட தன்னால் முடியாது என வெளிப்படையாக திருடர்களுக்கு சாதிவெறியர்களுக்கு, கல்வி கொள்ளையர்களுக்கு ஆதரவாக பேசவரும் இந்த தம்பி புரட்சியாளர் வெட்கம் இல்லாமல் மறுபுரம் பொய் வசனங்கள் அவிழ்த்துவிட முடியும் என்பதும் நமது இந்த கேடுகெட்ட ஜனநாயகத்தின் சிறப்பு அம்சம் கூட.

 

***************************************

ஆட்சிக்கு வந்தா பிஆர்பி-வைகுண்டராஜனை கைது செய்வேன்- ‘புரட்சியாளர்’ சீமான்.!

சீமான் அவர்கள் நியூஸ் 7 தொலைக்காட்சியில் கொடுத்த நேர்காணலில், சாதிவெறிக்கு திராவிட கட்சிகள் என்ன செய்ததது என கேட்டீங்களா? ஊழல் கட்சி – இனவெறிக்கு துணைபோன கட்சி என அதிமுக-திமுகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் சிபிஎம், சிபிஐ, பாமக என சொல்லிவிட்டு தமிழினவெறியர்கள் வருகிறார்கள் என அதிமுக, திமுகவை அழைத்தவர் வைகோ அவர்கள் என நேற்றைய  அம்மா வழிபாடு முதல் இன்றைய முருகன் வழிபாடு வரை அனைத்தையும் ‘மாறி மாறி எதிர்க்கேள்வி கேட்டு’ நியாயப்படுத்தினார் சீமான் அவர்கள்.

ஒரு நாளில் அணு உலையினை மூடுவேன், நமது வாக்கு நம்மை ஆளவா நாமே ஆளவா, சாதிவெறி பாத்துக்கோ ஆனால் வெளியில் பேசாதே என அவருடைய பல புரூடா கண்டுபிடிப்புகளை அம்பலபடுத்தி நாமும் எழுதிவிட்டோம். இருந்தாலும் மேற்கண்ட பேட்டியில் ஜெ குறித்தும், ஆட்சிக்குவந்தால் நாம் தமிழர் கட்சி என்ன செய்யும், கூட்டணி வைக்கமாட்டோம் என்றைக்கோ சொல்லிவிட்டு கட்சி ஆரம்பித்தோம் என்பது குறித்து சீமான் உதிர்த்த மொட்டுகள் மிகவும் கவனிக்கத்தக்கவை.. விவாதிக்க வேண்டியவை.

images

தீய ஆட்சி அகற்றி நல்லாட்சி நாங்கள் கொடுப்போம் , மாற்று என சொல்பவர்கள் அதிமுக என்ற ஊழல் கட்சியுடன் கூட்டணி வைத்தவர்கள் சீட்டுக்காக என சொல்லும் சீமானை கடந்த தேர்தல்களில் இதே ஜெயலலிதாவுக்காக ஓட்டுக்கேட்டீர்களே என செந்தில் மடக்கியபோது, சீமான் அதற்கு ஆமா கேட்டேன் அதிமுகவுக்கு மட்டுமா சிபிஎம், சிபிஐ, திமுக ஏன் காங்கிரஸ் கைசின்னத்திற்கு கூட ஓட்டுக்கேட்டேன் ஆனால் நான் சீட்டு பேரம் பேசி கேட்கவில்லை என விளக்கம் கொடுத்தார். அதற்கு அன்றைக்கு அது அவசியம் என பட்டது என அல்ஜிப்ரா கணக்கு போடுகிறார் சீமான்.

ஜெயலலிதாவுக்காக தருமபுரி மாணவிகளை கொளுத்திய அதிமுக காலிகளை யோக்கியர்கள் என சிந்தரிப்பது என்பது முதல் பக்க அதிமுக விசுவாசியாக அடையாளப்படுத்திக்கொண்டு போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்றும், புலி புலி என ஈழத்தமிழர்கள், அகதிகள் மீது அரசை ஏவிவிட்ட ஜெயாவின் அதிமுகவிற்காக  2011, 2014 ஓட்டுக்கேட்டு அதனை ஈழ மக்களுக்காக என சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்…!

 மக்கள் 3 முறை தேர்தலில் ஜெயிக்க வைத்து ஜெயலலிதாவை மக்கள் ஏற்றுக்கொண்டபின் நாம் ஜெயலலிதாவுக்கு எதிராக மேல்முறையீடு போவது தவறு என சில மாதங்களுக்கு முன்னர் கூட ஊழலுக்கு விளக்கம் கொடுத்த நீங்கள் இன்று அதிமுக ஊழல் கட்சி என தீர்ப்பு எழுதுவது ஏன்..?

எல்லாத்தையும் அடித்து நொறுக்குவோம், புதிதாக ஆரம்பிப்போம் என சொல்லிவிட்டு அதே கட்டமைப்பின் ஒரு அங்கமான தேர்தலில் பங்கெடுப்பது எப்படி சரியாகும், வெளிச்சம் இங்க தான் இருக்கு என தொலைத்த இடத்தைவிட்டுவிட்டு வேறு இடத்தில் தேடுவது அல்லவா இது, அரசு கட்டமைப்பின் ஒரு அங்கமான போலீசு துறையில் வேலைசெய்யும் போலீசு குறித்து இன்று விசாரணை இயக்குனருக்கு இருக்கும் அறம் கூட தெரியாமல், போலீசு நம்ம ஆட்கள் , லஞ்சம் கொடுப்பது டிப்ஸ் மாதிரி என போலீசுக்கு வக்காலத்து வாங்கி பேசும் நீங்கள் உடைத்தெறிய போகும் அரசு கட்டமைப்பு எதை?

தெரிந்து இருந்தாலே தேர்தல் மூலம் உடைக்க முடியாத அரசை நீங்கள் இவங்க ரொம்ப நல்லவங்க என சொல்லிவிட்டு எந்த வெங்காய கட்டமைப்பை அடித்து நொறுக்க போகிறீர்கள்..? கடனை தள்ளுபடி செய்து கல்வி, சுகாதாரம் கொடுப்போம் என சொல்லும் நீங்கள் பச்சமுத்து தமிழரின் கல்வி நிறுவனங்களை, மருத்துவமனைகளை என்ன செய்வோம் என சொல்ல மறுப்பது ஏன்? பச்சமுத்துகள்  இருக்கின்ற வரை அனைவருக்கும் பொதுவான கல்வி, சுகாதாரம் சாத்தியமா? சொத்து சேர்ப்பது ஏற்றுக்கொண்ட பின் ஏழ்மையை ஒழிக்க முடியுமா?

IJK

 பச்சமுத்துவையும், வைகுண்டராஜனை ஜப்தி செய்து மக்கள் உரிமையை, சொத்தை மீட்பேன் என சொல்லமுடியுமா சீமான் அவர்களே…? பிஆர்பியிடம் காசுவாங்கிய  போலீசு இன்று அவரை எதிர்ப்பது தவறு என வக்காலத்து வாங்கி நீங்கள் பிஆர்பி கைது கைது செய்து தமிழ்நாட்டின் மலைகளை மீட்பேன் என சொல்ல முடியுமா? ஒருவேளை தமிழனை தமிழன் கொள்ளையடிக்கலாம் என விட்டுவிடலாமா…?

seeman-cartoon

ஆக தேர்தல் மூலம் நீங்கள் புரட்சி என சொல்வது மக்களை ஏமாற்ற என்பதற்கு பச்சமுத்து குறித்தும் போலீசு, நீதிமன்றம், அதிகார மையம் குறித்தும் பேச மறுப்பதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்..?  இதெல்லாம் பேசுபவன் தேர்தலில் அதனை சாதிக்க முடியாது என ஆரம்ப கட்டத்திலேயே முடிவு செய்துவிடுவான்… தமிழனிவாதி தியாகுவிற்கு இருக்கும் அரசு குறித்த அறிவு கூட தங்களுக்கு இல்லையே என்பதல்ல அதனை சொல்லும் அறம் இல்லை.

bala-cartoons-seeman-20-5-13-e-trim

மூன்றாவதாக யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என்பது, கடந்த காலங்களில் 2016 ஜெயிக்க எவர் வேணும் ஆனாலும் வாங்க ஆனா தலைமை நாங்கதான்… ஏன் காங்கிரஸ் கட்சி கூட என் பின்னாடி வந்து நில்லு என இன்றைக்கு திமுக-காங்கிரஸ் கூட்டு போல ஜெயிப்பதற்கு எவனுடனும் சேரதயார் என சொன்னவர் நீங்கள், இதை தான் பாமக அன்புமணி சொல்றாரு இன்றைக்கு… அன்புமணியை ஏற்றுக்கொள் என்று.

ஆக சாதிவெறியர்கள் குறித்து, பச்சமுத்து-வைகுண்டராஜன்-பிஆர்பி போன்ற மாபியாக்கள் குறித்து துளி கூட கருத்து சொல்லாமல் நேற்றுவரை ஜெயா உள்ளிட அனைவருக்கும் வக்காலத்துவாங்கிவிட்டு இன்று காங்கிரஸை கூட என் பின்னால் வந்து நில்லு என முதல்வர் பதவிக்கு நீங்கள் ஒளிவட்டம் போடுவது கடைதெடுத்த பிழைப்புவாதம் அன்றி வேறென்ன?

Nanjil-Sampath

இதற்கு புரட்சி , கட்டமைப்பு என சொல்லாடல்களை பயன்படுத்துவது தான் சகிக்க முடியவில்லை…? பதவி , சொகுசான வாழ்க்கை வேணும் என்றால் அம்மா, அம்மா என நாஞ்சில் போல போய் திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லலாம்… இப்பவும் சொன்ன வசனங்களை தான் திரும்ப திரும்ப சொல்கிறீர்கள் ஆனால் அது மக்களின் விடுதலையை கேலி செய்வதாக உள்ளதே…!

பதிவின் தலைப்பை படித்தால் பொருத்தமற்று இருக்கிறதே என யோசிக்கலாம்… சீமான் தனக்கு ஓட்டுப்போட சொல்லும் காரணமும் இதைவிட பொருத்தமற்று இருப்பதால் தான் மேற்கண்ட தலைப்பு.

தொடர்புடைய பதிவுகள்

தருமபுரி மாணவிகள் எரியும்போது காப்பாற்றியவர்கள் அதிமுகாவினர் – சீமான்…!

திருடர்கள் தேர்தலில் ஜெயிச்சா ‘பரிசுத்த’ ஆவிகளாகின்றனர்-சீமான்…!

சரத்குமார் சிறந்த உழைப்பாளியாம் – ‘புரட்சியாளர்’ சீமான்…!

தமிழினத்தை ஆளப்பிறந்த ஒரேதமிழன் சீமான்- அல்ஜீப்ரா இதோ..!

திருடர்கள் தேர்தலில் ஜெயிச்சா ‘பரிசுத்த’ ஆவிகளாகின்றனர்-சீமான்…!

1991-96 ஊழல் செஞ்ச ஜெயலலிதாவை மக்கள் அடுத்த தேர்தலில் தண்டிச்சுட்டு பின்னர் 2 முறை முதல்வர் ஆக்கிட்டாங்க, 37 தொகுதிகளில் ஜெயிக்கவைச்சுட்டாங்க மக்களே அவங்களை ஏத்துகிட்ட பின் ஊழல் என பேசுவது தவறு… மேலும் அவருக்கு எதிராக மேல்முறையீடு பண்ண இங்க யாருக்கும் தகுதி இல்லை…. எனக்கு தகுதி இருந்தாலும் எனக்கு விருப்பமில்லை, நிறைய வேலை இருக்கு ….

இது ஜெயா வழக்கு குறித்து புதிய தலைமுறை பேட்டியின் இறுதியில் சீமான் உதிர்த்த முத்துக்கள்…. நிறைய முத்துக்கள் உதிர்த்தார்…. இவற்றை தனித்தனியாக பின்னர் பார்க்கலாம். இப்போதைக்கு ஜெயா வழக்கு குறித்து மட்டும்.

மக்கள் சொத்தை கொள்ளை அடிச்சுட்டு 18 வருஷம் வழக்கை வாய்தா வாங்கி, தண்டனை வாங்கிய பின் 3 மாதத்தில் வழக்கில் இருந்து விடுதலை வாங்கி மீண்டும் முதல்வர் பதவியில் அமர முடியும் என மொத்த நீதித்துறை, தேர்தல் ஆணையம் என எல்லா மானமும் காற்றில் பறக்கும் போது, மக்கள் அவரை முதல்வராக்கிட்டாங்க அதனால் விட்டுரலாம் என்றால் என்ன சீமான் இப்படி பேசுறீங்களே…

அரசு என்றால் என்ன? ஆட்சியாளார்கள் என்றால் என்ன? எவன் வந்தாலும் நல்லது நடக்கலை என்றால் ஆட்சியாளர்களை மாற்றனுமா? மக்களுக்கு அதிகாரம் இல்லாத அரசமைப்பை அடித்து நொறுக்கிவிட்டு மக்களுக்கு அதிகாரம் இருக்கின்ற ஒரு மக்கள் சர்வாதிகார கட்டமைப்பை ஏற்படுத்தனுமா?

sushma-1--1_650_030714101220

நாம் தமிழர் கட்சியில் உறுப்பினர் அட்டையோ, அமைப்பு முறையோ கூட இல்லை, சீமான் என்ற தனிநபர் கட்சியாக (அதிமுக போல) மாறி விட்டது என அய்யநாதன் உங்க கட்சியில் இருந்து விலகி பின் கூறுகிறார்.

ஒரு கட்சியை கூட தனிநபர் சாகசவாதமாக நடத்தும் நீங்கள் முதல்வராகி விட்டால் பச்சமுத்து காலேஜ் அரசுடைமை ஆகிடுமா? அல்லது ராமதாஸ் போன்ற ஆதிக்க சாதிவெறியர்களை சிறையில் அடைக்கப்பட்டு விடுவார்களா? ஐயா என கட்டமொம்மபனையும் முத்துராமலிங்க தேவரையும் ஒரே தட்டில் வைத்து மதிப்பிடும் உங்களுக்கு சாதி குறித்து 1ம் வகுப்பு பையனுக்கு தெரிந்தது கூட தெரியாதது போல பேசுவது ரொம்ப பெரிய மொக்கை சீமான் அவர்களே…?

சாதி குறித்து, கல்வி தனியார்மயம் குறித்து ஒரு புரிதல் கூட இல்லாமல் தமிழன் வந்தா எல்லா பிரச்சனையும் தீரும் என்பது, மோடி வந்தா எல்லா பிரச்சனை தீரும் என்பது போல உள்ளது. தீரலை என மோடி முகமூடி கிழிந்து தொங்கபின்னரும் சீமான் முகமூடி அதுவும் மாநில அளவில் ஒரு பால்தாக்கரே முகமூடி வைத்து மக்கள் என்ன நன்மை வந்துவிடும்…

மற்ற மாநிலங்கள் மக்களும் சேர்ந்து அரசுடன் இனவெறி அரசியல் நடத்துறாங்க என நீங்கள் சொல்வது உண்மையினா கேரளா, கர்நாடக, ஆந்திராவில் பாலாறும், தேனாறும் ஓடனும்,,, ஓடலையே சீமான்..?

பிரச்சனை திசைதிருப்பி அந்த இனவெறியர்கள் குளிர்காய்வது போல நீங்கள் உங்க குளிர்காயனும்…. இதற்கு இந்த அக்கப்போரா?

சீமானை முதல்வராக்கிவிட்டால் அணு உலையினை மூடுவேன்,ராணுவத்திற்கு பயிற்சி கொடுப்பென் என்று பேசுவது என்ன சின்னப்பிள்ளைதனமாக இருக்க்கு?

போராடிக்கிட்டே தான் இருக்கனுமா என்றால் போராட்டத்தின் வெற்றி புரட்சியில் இருக்கிறதா அல்லது வாக்குசீட்டில் இருக்கிறதா?

மொத்த கட்டமைப்பு நொறுக்கி விழும் போது மீண்டும் வந்து எனக்கு வாய்ப்பு கொடுங்க என 56 இன்ச் மார்ப்பளவை தகுதியாக காண்பித்த மோடி போல நீங்கள் ஆண்மை உள்ள தமிழன் என பேசுவது எப்படி அறிவுடையதாகும்…?

நீங்கள் வாங்கு சீட்டுக்கு ஒளிவட்டம் போடாமல் ஒதுங்கி நில்லுங்க…. மக்கள் தங்கள் சொந்த கையில் இந்த அரசை நொறுக்கி ஒரு மக்கள் தலைமை நிறுவதை பார்த்து ரசியுங்கள்…அதை விட்டுவிட்டு பிரபாகரன் போல தனிநபர் சாகசவாத பாதையில் அதுவும் அவரை விட படுகேவலமாக ஓட்டுப்பொறுக்கி அரசியலில் சாகசம் செய்து ராணுவ பயிற்சி,என்ன செய்கிறேன் பார், அணு உலையினை மூடுகிறேன் என வெத்து பில்டப்பு கொடுப்பது உலகிலேயே மிகவும் கடைந்தெடுத்த பிழைப்புவாதம்.

தருமபுரி மாணவிகள் எரியும்போது காப்பாற்றியவர்கள் அதிமுகாவினர் – சீமான்…!

கடந்த தேர்தல்களின் போது பல முறை ‘அம்மா’வுக்காக சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்ட சீமான் அவர்கள் கம்பம் தொகுதியில் பேசிய வீடியோ இதோ…!

இதில் போலீசுகாரர்கள் ரொம்ப நல்லவர்கள் எனவும் 5ரூ லஞ்சம் வாங்கி 2 ரூ டீ சாப்பிடுபவர்கள், நாம் டிப்ஸ் கொடுப்பது போல  இதனை நினைச்சுறாமல் தப்பா சொல்வது தப்பு என போலீசுக்கு சர்டிபிகேட் கொடுப்பது, சகாயத்தை கார் ஏற்றி கொல்ல கலைஞர் அரசு முயல்வதாகவும் (இன்று அம்மா அரசு சகாயத்தை மெஞ்சுகிறார் என எவனும் கேட்கப்புடாது….) என சீமான் பேசுவது போன்றவற்றை கூட சகித்துகொள்ளலாம், ஆனால் தருமபுரி பேருந்து எரிப்புக்கு புதிய வசனம் எழுதி வாங்கிய காசுக்கு மேலே கூவுவது ரொம்ப ரொம்ப பட்டவர்த்தனமாக தெரிவதை நாம் அனைவரும் பார்க்கலாம்.

அதாவது கொடைக்கானல் வழக்கில் ஜெயாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தவுடன் அதிமுக காலிகள் தருமபுரி அருகே வேளான் பல்கலைக்கழக மாணவிகள் வந்த பேருந்தை வழிமறித்து தீ வைத்து அதில் 25 மாணவிகள் படுகாயம் அடைந்து 3 மாணவிகள் படுகொலை செய்யப்பட்டதையும் இதனை செய்த அதிமுக காலிகளை ஜெயா இன்று வரை ஆதரித்து வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

ஆனால் சீமான் அவர்கள் சொல்கிறார், ‘தான் வேலூர் சிறையில் அந்த அதிமுக காலிகள் உடன் இருந்ததாகவும் அவர்கள் அப்பாவிகள் என்றும், பேருந்தை நிறுத்திவிட்டு மாணவிகள் அருகில் டிபன் சாப்பிட்டு கொண்டு இருந்ததாகவும் அப்போது சிலர் யாரும் இல்லாத பேருந்தை தவறாக தீ வைத்து எரிக்க முற்பட்டபோது அப்பேருந்தில் விலை உயர்ந்த துணிகளை வைத்து இருந்ததால் அதனை எடுக்க சென்ற மாணவிகள் 3 பேர் மாட்டிக்கொண்டதாகவும் அவர்களை காப்பாற்ற சென்றவர்கள் தான் அந்த 3 அதிமுக காரர்கள் என்றும் சத்தியம் அடித்து கூறுகிறேன்’ என சொல்லிவிட்டு இதே போல தினகரன் ஆபிஸில் 3 பேரை எரித்தவர்களுக்கு என்ன தண்டனை என பேசுகிறார்.

திமுக காரரும் செம் திருடன், கொலைகாரன் என சீமான் மட்டுமல்ல நாமும் ஏற்றுக்கொள்வதால் மேலும் தொடர்ந்து அதிகாரத்துக்கு வந்த ஜெயாவும் அந்த கொலைகார அழகிரியையும், கொள்ளைக்கார திமுகாவையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கவும் இல்லை என்பதாலும் அதற்குள் செல்லாமல் தருமபுரி விஷயத்திற்கு வருவோம்….

ஒரு கும்பல் பேருந்தை வழிமறித்து தீ வைத்து கொளுத்தி 3 மாணவிகள் படுகொலை உள்ளீட்ட பல மாணவிகள் படுகாயம் அடைய காரணமாக இருந்து உள்ளதை சன் டிவிகாரன் வீடியோ பார்த்து அன்றைய மக்கள் அறிந்த ஒன்றை இன்று வந்து வேலூரில் உடன் இருந்தேன், இது சத்தியம் என அதிமுக காலிகளுக்கு வக்காலத்து வாங்கும் இந்த சீமான் தான் இன்று மாற்றம் குறித்து வகுப்பு எடுக்கிறார். நமது வாக்கு நம்மைஆளவா? நாமே ஆளவா? சீமானின் அறம் என்ன வென்பதற்கு மேற்கண்ட தருமபுரி பொய்யுரையே உதாரணம்.

பாமக காரன் கூட எல்லோர் கூடவும் கூட்டணி வைத்து இன்று திமுக, அதிமுக க்கு மாற்றாக மற்ற எந்த கட்சியும் அதாவது தினந்தோறும் கருச்சுக்கொட்டும் விஜயகாந்த் உடன் கூட கூட்டணி வைக்க ரெடி என்று தான் சொல்கிறார்கள், ஆனால் நம்ம சீமான் எந்த காங்கிரஸை எதிர்த்து அதிமுக வை கூட ஆதரித்து பிரச்சாரம் செய்தாரோ அந்த காங்கிரஸை கூட அதாவது தனது இனத்தை கொன்றொழித்த கட்சி என தினந்தோறும் பேசிவந்த காங்கிரஸ் கட்சி கூட தனது தலைமையை ஏற்றால் கூட்டணி வைத்து மக்களுக்கு சேவை செய்யும் சி எம் கிரீடத்தை சுமக்க தயார் என்கிறார்.

உலகில் இதை விட சந்தர்ப்பவாத பொறுக்கி அரசியலுக்கு உதாரணம் வேணுமா என்ன?

தொடர்புடைய பதிவுகள்:

‘தமிழக முதல்வர் நாற்காலி’ : சீமானின் ‘பெருங்கனவு’ …!

சரத்குமார் சிறந்த உழைப்பாளியாம் – ‘புரட்சியாளர்’ சீமான்…!

அதிமுக கூட்டணி பற்றி சீமானுக்கு ’என்னையா’ கவலை…?

 

சரத்குமார் சிறந்த உழைப்பாளியாம் – ‘புரட்சியாளர்’ சீமான்…!

அதிமுக அடிமையாக இருக்கும் ஒருவரின் உழைப்பு என்பது யாருக்கானதாக இருக்கும்..? சொந்த வாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் நேர்மையில்லாத ஒருவரின் உழைப்பு என்பது எப்படிப்பட்டதாக இருக்கும்..? நிச்சியமாக அது மக்களுக்காக இருக்க முடியாது எனபதே நிதர்சன உண்மை.

seeman

ஆனால் பாருங்க நம்ம தேர்தல் பாதையில் புரட்சியை கண்டெடுக்க கிளம்பியிருக்கும் சீமான் அவர்களுக்கு சரத்குமார் ஒரு சிறந்த உழைப்பாளி ஆக தெரிகிறார்.

கூடங்குளம் அணு உலையினை தான் முதல்வர் ஆனால் ஒரே நாளில் மூடுவேன் என பிரச்சனையின் அடிப்படை தெரியாமல் பேசும் சீமானால் கூடங்குளம் வந்தால் 2000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் 2012 பொதுக்கூட்டம் போட்டு ஆதரவாக பேசிய சரத்குமார்  ( இன்றைக்கு வரை கிடைக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று) உழைப்பாளி என்று தான் முடிவுக்கு வர முடியும்.

தான் செத்தபின் என் உடல் மீது திமுக கொடிதான் போர்த்தபட வேண்டும் என சொல்லி 2 மாதத்தில் அதிமுக சென்று சேர்ந்த சரத்குமாரின் உழைப்பு, போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்ன ஜெயலலிதாவை ஈழத்தாய் ஆக மாற்ற முயற்சித்த சீமான் அவர்களால் தான் நிச்சியம் அறிய முடியும்.

நடிகர் சங்கத்திற்கான இடத்தை தனியார் ஷாம்பிங் காம்ளக்ஸ் கட்ட 29 வருஷம் லீசு போட்டு நடிகர்களுக்கு எதிராக அம்பலப்பட்டு போய் நிற்கும் சரத்குமாரை நடிகர் சஙக் தேர்தல் சமயத்தில் வெறும் இடப்பிரச்சனை மற்றபடி சரத்குமார் நல்ல உழைப்பாளி என சொல்லும் சீமான் குறித்து நடிகர்கள் மட்டுமல்ல மக்களும் ஏற்கனவே முடிவுக்கு வந்துவிட்டார்கள் எனபதே நிதர்சன உண்மை.

அதிமுக கூட்டணி பற்றி சீமானுக்கு ’என்னையா’ கவலை…?

ஜெயலலிதா மீது வழக்கு போட்டதே தவறு, அவரை மக்கள் தண்டிச்சுட்டு மீண்டும் ஏத்துக்கொண்டு முதல்வர் ஆக்கிவிட்டார்கள் என்றும்,

அவர் மீது மேல்முறையீடு போக இங்க யாருக்கும் யோக்கியதை இல்லை என பக்க அதிமுக அடிமை ஆக பேட்டி கொடுத்த சீமான் பின்னர் தமிழகத்தை ஆளப்பிறந்த ஒரே தலைவன் ப்ளஸ் தமிழன் தான் மட்டும் தான் அந்த அடிப்படையில் 234 தொகுதிகளிலும் நாம்தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என சொல்லிவிட்டார்.

இந்நிலையில் நேற்று கோவையில் அதிமுக கட்சி பாஜக உடன் கூட்டணி போக அச்சாரம் போடுகிறது என சீமான் பேட்டி கொடுத்து உள்ளார்.

seeman-admk

நீங்க தான் தனிச்சு போட்டியிடப்போகிறோம் என்ற சொல்லிவிட்டீர்கள் அப்புறம் அதிமுக கூட்டணி வச்சா என்ன வக்காட்டி உங்களுக்கு என்ன?

பாஜக பக்கம் அதிமுக சாய்வதற்கு காரணத்தை பட்டியலிடும் நீங்கள் அதே அதிமுகவுக்கு சாதகமாக பேசுவதற்கு ஏன் இரண்டு தேர்தலில் ஓட்டு கேட்டீர்களே அதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்…?

அதிமுகவுடன் கூட்டணி கனவு பறிபோகுமோ என்ற பதற்றம் என்று தான் இதனை யாரும் நினைக்கத்தோன்றும்.

என்ன இருந்தாலும் சீமான் போல 100 தொடர் வசனங்கள் மனப்பாடம் செய்துகொண்டு தொலைக்காட்சியானாலும், பொதுக்கூட்டமானாலும் கையை மடக்கி மடக்கி சொன்னதையே திரும்ப திரும்ப பேசுவதற்கு ஒரு தைரியம் யாருக்கும் வராது.

ஜெயலலிதா வழக்கு குறித்து புதிய தலைமுறையில் சொன்ன கேடுகெட்ட விளக்கத்துக்கு விளக்கம் கேட்ட தந்தி டிவி பாண்டேவிடம் அதே விளக்கத்தை மீண்டும் ”துபாய், துபாய் குறுக்கு சந்து” என வடிவேலு பாணியில் ரிவர்ஸில் சொல்லும் துணிச்சல் சீமானை விட்டால் தமிழகத்தில் யாருக்கும் வராது.

தமிழினத்தை ஆளப்பிறந்த ஒரேதமிழன் சீமான்- அல்ஜீப்ரா இதோ..!

தமிழகத்தை ஒரு தமிழன் தான் ஆளனும்- அந்த தமிழனும் ’தான்’ தான் எனும் சீமான் அதற்கான அல்ஜீப்ரா பார்முலாவையும் அவரே கூறுகிறார்.

பெரியார் போல தமிழனாக வாழ்ந்தவர்களும் தமிழன் அல்ல, ப.சிதம்பரம் போல தமிழனாக பிறந்தவர்களும் தமிழன் அல்ல தமிழனாக பிறந்து ஈழத்தமிழ் இன அழிப்புக்காக அழுந்து சோகமாக திரிந்து பிரபாகரனை அண்ணனாக ஏற்றுக்கொண்டு ஜெயலலிதாவை ஈழத்தாயாக மாற்றுவதற்கு போராடி, சாதிவெறியர்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் விரோதிகளையும் ஐயா, அண்ணன், தாத்தா என தமிழில் அழைத்துக்கொண்டு, இன்று தமிழகத்து முதல்வராக மிகக்கடுமையான ஆயுதமான வாக்குச்சீட்டை கொண்டு போராடும் ஒரே தமிழனான சீமான் மட்டுமே தமிழன்… அந்த தமிழனே ஆளப்பிறந்தவன் என்று முடிக்கிறார்.

அதாவது ‘ஒத்த தமிழனை ஆள அதுவும் அதே தமிழனே ஓட்டுப்போட்டு  அந்த தமிழனே தமிழகத்தின் முதல்வராவது’, மேலே தமிழனுக்கான அல்ஜீப்ரா பார்முலா ரத்தின சுருக்கம் இது தான்.

இதை கேட்டா இப்பவே நமக்கு கண்ண கட்டுது… இன்னும் சீமான் ’முதல்வராவதற்குள்’ எத்தனை பார்முலாவை அவிழ்த்துவிட போறாரோ….

2015-ல் இல்லாத ஜனநாயாகம் எப்படி 2017 வந்தது Mrஸ்டாலின்…?

குமாரசாமியால் விடுதலை வாங்கி ஆர்.கே.நகரில் 2015 ஜெயலலிதா போட்டியிட்டபோது அங்கே ஜனநாயகம் மதிக்கப்படாது என்றும் அதனால் அந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக திமுக அறிவித்தது.

குமாரசாமி தீர்ப்பு தப்பு என இன்று உச்சநீதிமன்றம் சொல்லித்தான் திமுகவுக்கு தெரியுமா? இல்லையே அன்றே தெருதெருவாக போய் ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்து இருக்க வேண்டியதுதானே?

இன்று ஜனநாயத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் தங்களை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் Mrஸ்டாலின் அவர்கள் அன்று 2015-ல் இல்லாத ஜனநாயாகம் எப்படி 2017 வந்தது என விளக்க முடியுமா?

அன்று ஜனநாயகத்தின் மீது திமுக நம்பிக்கை வைக்காமல் யாருக்கும் ஆதரவு கூட கொடுக்காமல் இருந்ததன் பின்னணி விளக்க முடியுமா?

இடைத்தேர்தல் கூட ஜெ உயிருடன் இருந்தால் ஜனநாயகம் கசக்கும்… இல்லாதபோது இனிக்குமா?

ஆனால் இந்த இடைத்தேர்தல், பொதுத்தேர்தலால் மக்களுக்கு இம்மியளவும் பிரோஜனம் இல்லை என்பது தான் உண்மை. இதோ அம்மக்கள் வார்த்தைகள்:

2015 RKநகரில் இல்லாத ஜனநாயகத்தில் எப்படி நம்பிக்கை வரும் Mrஸ்டாலின்…?

 

 

 

குமாரசாமியால் விடுதலை வாங்கி ஆர்.கே.நகரில் 2015 ஜெயலலிதா போட்டியிட்டபோது அங்கே ஜனநாயகம் மதிக்கப்படாது என்றும் அதனால் அந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக திமுக அறிவித்தது.

குமாரசாமி தீர்ப்பு தப்பு என இன்று உச்சநீதிமன்றம் சொல்லித்தான் திமுகவுக்கு தெரியுமா? இல்லையே அன்றே தெருதெருவாக போய் ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்து இருக்க வேண்டியதுதானே?

இன்று ஜனநாயத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் தங்களை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் Mrஸ்டாலின் அவர்கள் அன்று 2015-ல் இல்லாத ஜனநாயாகம் எப்படி 2017 வந்தது என விளக்க முடியுமா?

அன்று ஜனநாயகத்தின் மீது திமுக நம்பிக்கை வைக்காமல் யாருக்கும் ஆதரவு கூட கொடுக்காமல் இருந்ததன் பின்னணி விளக்க முடியுமா?

இடைத்தேர்தல் கூட ஜெ உயிருடன் இருந்தால் ஜனநாயகம் கசக்கும்… இல்லாதபோது இனிக்குமா?

ஆனால் இந்த இடைத்தேர்தல், பொதுத்தேர்தலால் மக்களுக்கு இம்மியளவும் பிரோஜனம் இல்லை என்பது தான் உண்மை. இதோ அம்மக்கள் வார்த்தைகள்:

 

2014: தலைக்கு 15 லட்சம் 2017: ATMல் எடுத்தால்150ரூபாய்..!

cbpa8yqumaadbei

கருப்பு பணத்தை மீட்டு ஆளுக்கு 15 லட்சம் போடுவேன் – இது 2014 மோடி சொன்னது.

capture

4 முறைக்கு மேல் ஏடிஎம் பணம் எடுத்தால் 150 ரூபாய் வசூலிக்க வங்கிகள் முடிவு, எஸ்.பிஐ வங்கில் மெட்ரோபாலிட்டன் சிட்டியில் சேமிப்பு வங்கியில் மினிமம் 5000 இருக்க வேண்டும் இல்லையென்றால் அபராதம் – இது 2017 மோடி அரசு அறிவிப்பு.

Keep minimum balance or pay fine, says State Bank of India

By Express News Service  |   Published: 04th March 2017 11:41 AM  |

Last Updated: 04th March 2017 11:43 AM  |   A+A-   |  

A man counts Indian rupee banknotes after withdrawing them from State Bank of India ATM in Kolkata, India | Reuters

CHENNAI: State Bank of India (SBI), India’s largest lender, will resume charging customers who don’t maintain monthly account average balance (MAB) in their savings bank accounts from April 1. These charges will be based on the difference between the minimum balance required and the shortfall

ஜனநாயக படுகொலை: சட்டமன்றத்திலா? நெடுவாசலிலா?

 “இது ஜனநாயக நாடு, மக்கள் கருத்தை கேட்டு ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட எதையும் அமுலபடுத்த வேண்டும், ஆனால் அப்படி செய்யாமல் அரசு தொடர்ந்து மீத்தேன், கூடங்குளம், கெயில், நியூட்ரினோ… இப்ப ஹைட்ரோகார்பன் என அமுல்படுத்துவது ஏன்? இளைஞர்களே வாடிவாசலுக்காக போராடியது போல நம்ம நெடுவாசலுக்காகவும் போராட வாங்க…”

   – இது ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்துக்கு எதிராக போராடும் அமைப்பின் ஒருவர் தொலைக்காட்சி பேட்டியில் சொன்னது.

இதோ குரலை தொடர்ச்சியாக நாம் கேட்டு வருகிறோம். மக்கள் கருத்தை கேளுங்க… அபாயகரமான திட்டங்களை அமுல்படுத்தாதீங்க…! என.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்றும், ஓட்டுரிமை நமது ஜனநாயக கடமை என்பதிலிருந்து ….  சட்டமன்றத்தில் கடந்த வாரம் எதிர்கட்சியை அடித்து ஜனநாயக படுகொலை செய்து விட்டனர் அதிமுகவினர் என்பது வரை ஜனநாயகம் , ஜனநாயகம்  என பேசுகின்றனர் அந்த ஜனநாயகம் என்பதும்…

ஏற்கனவே மக்களுக்கு இருக்கிற பிரச்சனையில மீத்தேன்,கெயில், ஹைட்ரோ போன்ற திட்டங்களுக்கு எதிராக போராடித்தான் தடுக்க முடியும்- மக்கள் கருத்தை கேட்கும் ஜனநாயகம் இன்னும் வரலை என நெடுவாசலில் கூடங்குளத்தில் அமுல்படுத்த முடியாமல் போகும் ஜனநாயகம் என்பது வேற வேறவோ…?