கூடங்குளம்…. ஜாதுகோடாவையும் போபாலையும் நோக்கி…? அதிர்ச்சி வீடியோ..!

பல மாதங்களாக கூடங்குளத்தில் முதல் அணு உலை மூடு வைச்சுட்டு இரண்டாவது அணு உலை திறந்தாங்க…. இப்ப மூனாவது நாலாவது அணு உலைக்கு மன்மோகனை விட  மோடி ஜெட் வேகத்தில் வேலை பார்க்கிறார்…

ஆனால் இப்படி அணு உலை இயக்காமல் வைத்து இருப்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்பது குறித்து விகடன் சேனலில் வந்த வீடியோ ….

 

உலகில் மிக மோசமான விஷவாயு படுகொலைபோபாலில்  1984 ல்நடத்தி இன்று வரை எந்த நிவாரனும் கிடைக்காத மக்கள் உடைய நாடு நம் நாடு.

இதோ

 

நம் நாட்டில் யுரேனியம் எடுக்கும் ஜார்க்கண்ட் ஜாதுகோடாவிற்கு கடந்த மாதம் சைக்கிள் பயணம் மேற்கொண்டவரின் அனுபவம் இதோ…

ரஷ்யாவில் செர்னோபில் அணு உலை விபத்தினால் இன்று அப்பகுதி ….

Advertisements

தோழர். திருமுருகன் காந்தி மற்றும் சீமான் – ஓர் ஒப்பீடு

இந்த கூடங்குளம் விடியோவை பார்க்கும்போது குரு9900 என்ற வாசகர் எழுதிருந்த கமெண்ட் தான் இந்த பதிவு.

 நாம் திருமுருகன் காந்தியின் இன்றைய தேர்தல் புறக்கணிப்பு, பெரியார் ஏற்பு போன்ற நடவடிக்கைகள் மிகவும் வரவேற்க தக்கது என்ற நிலையில் இந்த கருத்தை பதிவாக இட வேண்டும் என தோன்றியது.  அந்த கமெண்ட் இருக்கும் வீடியோ லிங்க்….

தோழர் திருமுருகன் காந்தி

1. பகுத்தறிவாளர் – பெரியாரை ஏற்று கொண்டவர்

2. பாபாசாகேப், மார்க்ஸ் முதலியோரை மொழி கடந்து ஏற்று கொள்ளும் ஜனநாயகவாதி

3. நேரடியாக பிராமணிய எதிர்ப்பாளர்

4. உலகமயமாக்கலையும் உழைப்பு சுரண்டலையும் புரிந்து வைத்துள்ளவர்

5. தலித்துகளை இழிவு படுத்துபவர் அல்ல 6. பி.ஜே.பிக்கு தொடர்ந்து சவாலாக இருந்து அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்பவர்

7. முதலமைச்சர் கனவு இல்லாதவர்

8. பொது இடங்களில் மரியாதையாக பேச கூடியவர் 9. சாதி வேறுபாடுகளை கடந்தவர்.

10. உண்மை தமிழ் தேசியவாதி

சீமான்

1. பிற்போக்குவாதி – பெரியாரை கன்னடர் என்று நிராகரிப்பவர்

2. மார்க்ஸியம் என்றால் என்னவென்றே தெரியாது

3. பாபாசேகேபை தமிழர் அல்ல என்று காமெடியாக கூறுபவர்

4. ஐயர்/ஐயர்கார்களை தமிழர் என்று ஏற்று கொள்ளும் தந்திரவாதி

5. உலகமயமாக்கல் – உழைப்பு சுரண்டல் பற்றி எந்த அறிவும் இல்லாதவர்

6. பி.ஜே.பியுடன் கள்ள உறவு வைத்துள்ளவர். தலித் மக்களையும், அவர்களது அரசியலையும் இழிவுபடுத்துபவர்

7. முதலமைச்சர் கனவில் மிதப்பவர்

8. த்தா..ம்மா என்று மேடைகளில் அநாகரிகமாக பேச கூடியவர்

9. சாதி தான் தமிழனின் அடையாளம் என்பவர்

10. புலம் பெயர்ந்த தமிழர்களின் பணத்தை உருவும் போலி தமிழ்தேசியவாதி

 

தமிழன் எனச்சொல்லி எங்களை கொஞ்சம் ஆளவிடுங்கப்பா…- சீமான்.!

தமிழன் எனச்சொல்லி எங்களை கொஞ்சம் ஆளவிடுங்கப்பா…- சீமான்.!

 

ஊரும் சேரியும் தனித்தனியாக இருக்கு என ரஞ்சித், எவிடன்ஸ் கதிர் உள்ளிட்டவர்கள் கேள்வி எழுப்பியதற்கு சீமான் அண்ணன் பதில் இதோ பாருங்கள்…!

இந்த கேள்விக்கு இந்த பதில் இல்லையே என கமலின் பதில் வாங்குவது போல உள்ளது. ஐயா அன்புமணி, ஐயா தேவரய்யா என குழை கும்பிடு போடும் சீமான் போன்றவர்ளுக்கு அனிதாவின் வலி நிச்சியம் தெரியாது. இளவரசன், சங்கருக்கும் அழுகிறேன், தேவரையாவையும் வணங்குகிறேன் என்றால் என்னடா பித்தலாட்டம். ….

முதல் போட்டு தொழில் ஆரம்பித்து உள்ளது போல இந்த பாரு நான் 7 வருட சீனியர் எனவும் பொழப்பை விட்டுட்டு வந்து கத்துகிறேன் என்கிறார்.

சுத்தி சுத்தி என்ன சொல்லி வர்றார்… தமிழன் சொல்லி எங்களை ஆளவிடுங்கப்பா இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியலில் என்பது தான் இறுதியில் சொல்ல வருகிறார்.

சாதியை ஒழிக்க என்ன வலி என நீ சொல்லு, ஈழத்தில் நம் சொந்தம் செத்தப்ப நீ என்ன செய்ச்ச சீமான் எதிர் கேள்வி கேட்பது என்பது   ரஞ்சித் கேள்விக்கு எப்படி பதில் ஆகும்..!

 

இப்ப விசயத்துக்கு வருவோம்…!

இப்ப சொல்கிற தேர்தல் பாதை முதல்வர், அதிகாரட்தின் யோக்கியதை தெரியனுமா… இதோ திருமுருகன் காந்தியின் உரையை கேளுங்க…!

 

சீமான் யார் என தெரியனுமா இதோ.. சில பதிவுகள்… முழுமையாக அவரைதெரிந்து கொள்ள…!

 

சீமானிக்கு சில கேள்விகள்

http://valarumkavithai.blogspot.com/2017/09/blog-post_23.html

ஜெ இட்லி சாப்பிட்டதும் பொய்! தருமபுரி மாணவிகளை எரித்ததும் பொய்..!

 

இது எதைபற்றியும் கவலைப்படாமல் மோடி போல இணையத்தில் ஒரு 11 பேர் கொண்ட குழுவை வைத்து கொண்டு சீமான் பதிலடி, இந்த வீடியோவை மட்டும் பாருங்க சீமான் புரிந்துகொள்ள என 10 யூடியுப் சேனல் மூலம் கை, கால் என ஹரோ அறிமுக போல செய்கின்றனர்.

ஆனால் மொத்த சீமான் என்பவர் உழைக்கும் மக்களுக்கு மிக பெரிய எதிரியாக இருக்கிறார் என்பதே நிதர்சனம்.

வைகுண்டராஜனையும், பிஆர்பியை, ஜெயலலிதாவையும் ஆராதிக்கும்  ஒருவரால்  எந்த ஒரு மக்கள் வலியை உணர முடியாது என்பது சாதரண மக்கள் மீது அன்பு கொண்டவர்களால் கூட புரிந்து கொள்ள முடியும்.

ஒரு நாள் முதல்வர் கிடக்கட்டும் ஒரு நாள் GH-ல் இருந்துபார் …. !

 

தனியார் மருத்துவமனை பார்க்க முடியவில்லை என்றால் GH-க்கு அனுப்பி வையுங்கள் என விஜயபாஸ்கர் அமைச்சர் நேற்று கூறுகிறார். டெங்குவால் ஒரு குழந்தை இறப்பு என்பதை கூட தமிழகம் ஏற்காது என மெருமிதம் கொள்கிறார்.

தினம் ஒரு வார்டில் இரண்டு பேர் என எங்குபார்த்தாலும் அழுகுரல் கேட்கும் , குடிக்க தண்ணி, மருந்து மாத்திரை, உணவு, டாக்டர், சுகாதாரம், லிப்ட் வசதி என எதுவும் இல்லாமல் அதிகாரபூர்வமாக இந்த ஸ்கேனுக்கு இவ்வளவு என பில் போட்டு ஆயிரக்கணக்கில் மக்களை ஆதாரை கொடு, காப்பிடு கொடு என அலைக்கழித்து கொண்டு இருக்கும் GH என்பது ஒரு ஈழப்போர் போல உள்ளது.  உணர முடியாதவர்கள் ஒரு நாள் போய் பாருங்கள்… இதுல அனிதாவை வரக்கூடாது என கேட் போடுகிறது ஆர் எஸ் எஸ். தரம் கெட்டுவிடும் என்று… இந்த தரம் இருந்தா என்ன இல்லைனா என்ன?

எல்லா ஓட்டுப்பொறுக்கி கட்சிக்காரனுங்களும் அப்பல்லோ, ராமச்சந்திரா என தனியார் மருத்துவமனைக்கு போய்கிட்டு வெட்கம் இல்லாமல் நம்ம GH வரச்சொல்றான்.

அப்பல்லோ யோக்கியதைக்கு ஜெயலலிதா மட்டுமல்ல இதோ ஹேமநாதன் தனது தாயின் மருத்துவத்தை அப்பல்லோ வழங்கிதை கூறுகிறார்.

ஒரு நாள் முதல்வர் ஆனால் கூடங்குளம் மூடுவேன் என்கிறார் சீமான், ஊழலை ஒழிப்பேன் என்கிறார் கமல், ஆனால் 365 நாள் முதல்வராக இருந்தாலும்  எதையும் புடுங்க முடியாது என்பதற்கு அவர்களை என்றக்குமே GH தான் மருத்துவம் பார்ப்பேன் என எழுதி தரசொல்லுங்க… பார்ப்போம்.

ஐயா சாமி எனக்கு உசுரு தான் முக்கியம் என ஓடிடுவான்… ஏன்னா அவன் மாற்றம் என பேச்வது அனைத்தும் இந்த அதிகாரத்திற்கு அப்பாற்றப்பட்டது என அவனுக்கு தெரியும். நமக்கு ?

இட்லி மட்டுமல்ல மொத்த சிஸ்டமும் பொய்…!எய்ம்ஸ் முதல் கவுன்சிலர் டவுசர் வரை…!

தம்ஸ் அப் காட்டலை – தீபக், 

தம்ஸ் அப் காட்டுனாங்க – ஆளுநர்,

இட்லி சாப்பிடலை,

சிபிஐ கேட்டவர்கள் ஓய்வு பெற்ற நீதிபதி  விசாரணைக்கு உத்தரவு,

ஜெ-யுடன் இருந்ததாக மொத்தமாக குற்றசாட்டுக்கு ஆளாகும் தினகரன் தரப்பு எனக்கு இண்டர்போல் போலீசுதான் வேணும் என கேட்பது,

எப்பவேணாலும் வீட்டுக்கு போகலாம் என பிரதாப் ரெட்டி,

எப்பவுமே முன்னேற்றம் வரலை இது பீலே,

வீடியோ அனுமதியுடன் சசி எடுத்தாங்க இது தினகரன்,

எய்ம்ஸ் டாக்டர் வந்தாங்க,

ஆளுநர் அறிக்கை விட்டாங்க,

15 மணி நேரத்தில் ஏற்ற முடியாத திரவத்தை 15 நிமிடத்தில் ஏற்றியது எப்படி,

2 நாளில் 2 பெரிய குளிர்சாதன மெஷினில் வைக்க எதற்கு பதப்படுட்தனும்,

கையெழுத்து போட்டாங்க, இல்லை வாங்குனோம்…

கால் இருந்துச்சு, இல்லை என

ஒரு முதல்வரை 75 மருத்துவமனை மர்மமாக வைக்க முடியும் என்றால் என்ன அர்த்தம்…

இதோ நம்ம விடுதலை சிறுத்தை ஆளூர் நவாஸே சொல்கிறார் கேளுங்க..

“ பிரதமர், ஆளுநர், எய்ம்ஸ் டாக்டர், அதிகாரிகள், தலைவர்கள் என அனைவரின் கண்ணையும் மறைத்து விட்டு ஒருவரால் (சசி) ஒரு முதல்வரை 75 நாட்கள் மருத்துவமனையில் வைக்க முடியும் என்றால், தகவல்களை மறைக்க முடியும் என்றால் என்ன அர்த்தம்….. ஆக இதனை ஏற்றால்  மொத்த அரசியல் செட்டப்பும், அதிகார செட்டப்பும்  என அனைத்தும் சந்திக்கு வருவது நிச்சியம்… மாட்டினா கூட்டோடு மாட்டனும் அது நடக்காது…!” 

தேர்தல் பாதைதான் தீர்வு என வாதிடும் இவர் போன்றவர்களே

தேர்தல் பாதையின் அதிகாரத்தை இன்று தோலுரிப்பது தான் காலத்தின் கட்டாயம்.

 

 

பிரதமர் 4ஜீ காலத்தில் வானொலியை தேர்தெடுத்தது ஏன்?

 

தொலைக்காட்சி கண்டுபிடித்து 100 ஆண்டுகள் ஆன பின்னரும் மீண்டும் வானொலியில் பிரதமர் மான் கி பாத் விளையாடுவது ஏன்? மன்மோகன் போல என்ரோ ஒரு நாள் ஆவது பத்திரிக்கையாளர்களை சந்திக்கலாமே என நீங்கள் கேட்கலாம்…

ஆனால் ஒரு பத்திரிக்கையாளரை பார்த்தே நமது 56 இன்ச் பிரதமர் வாக் அவுட் செய்த நிலையில் பல பத்திர்க்கையாளர்களை சந்தித்தால் என்ன நடக்கும்?

டிமானிட்ரசேசன், ஜிஎஸ்டி, பெட்ரோல் கொள்ளை, கழிப்பறை இலக்கு, மானியம் ரத்து, மாடுக்கு ஆம்புலன்ஸ் என கேள்வி கனைகளை நினைத்தாலே தலை சுற்றும்.

அதனால யாரும் கேள்வி கேட்க முடியாத மான் கீ பாத் கரெக்ட்டா…. 

உங்கள் நம்பிக்கை உங்கள் விசுவாசம்…! நாடு முன்னேற்ற பாதையில் செல்கிறது…!

 

2014: தலைக்கு 15 லட்சம் 2017: ATMல் எடுத்தால்150ரூபாய்..!

 

ஆச்சாரியாவை மிரட்டுனது..ஜெயாவுக்கு வாழ்த்து சொன்னதெல்லாம் யாருப்பா..?

 

கேஸ்மானியமும் பாராளுமன்ற 20ரூ மட்டன்கறி கேண்டீனும்..!

 

0.35% பேர் கேஸ்மானியமும் GIVEITUP விளம்பரமும்…!

 

 

ஏகே74 துப்பாக்கியை கடித்து துப்பும் ராஜ்கிரண்… வீடியோ!

 

 

 

 

234 தொகுதியிலும் ஜெயித்து சீமானை முதல்வராக்கினால்…!

 

தருமபுரி மாணவிகள் எரியும்போது காப்பாற்றியவர்கள் அதிமுகாவினர் – சீமான்…!

திருடர்கள் தேர்தலில் ஜெயிச்சா ‘பரிசுத்த’ ஆவிகளாகின்றனர்-சீமான்…!

சரத்குமார் சிறந்த உழைப்பாளியாம் – ‘புரட்சியாளர்’ சீமான்…!

ஜெ இட்லி சாப்பிட்டதும் பொய்! தருமபுரி மாணவிகளை எரித்ததும் பொய்..!

ஜெ-யை நாங்க பார்க்கவே இல்லை, ஜெ இட்லி சாப்பிட்டார் – சட்னி சாப்பிட்டார் என நாங்கள் சொன்னது எல்லாம் பொய் என இன்று பொதுக்கூட்டட்தில் சொல்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். விசாரனை நடத்த வேண்டிய இடத்தில் இருப்பதாக நீங்கள் நினைக்கும் அதிகாரத்தின் யோக்கியதை இது…!

 

சரி இதனை ‘புரட்சியாளர்’ சீமான் அம்பலப்படுத்தி பேசுகிறார். தலைவர்கள் கருத்து என இதனை இந்த ஊடகங்கள் வாந்தி எடுக்கின்றனர்..

 

இதே சீமான்  அதிமுக காலிகளுக்காக பேசியதை பார்க்கும் போது இட்லி சாப்பிட்டாங்க என சொன்னதை விட அவங்களுக்கு எதுவும் தெரியாது – காப்பாற்ற போனவங்க என சொல்வதற்கு ஒரு ‘தைரியம்’ வேண்டும்.

 

 

 

 

இதனை சேர்த்து ஊடகங்கள் வெளியிட்டால் மொத்த கட்டமைப்பு நொறுக்கி விழும் என்பதால் அதனை செய்ய எவனும் துணிய மாட்டன்.

 

http://valarumkavithai.blogspot.com/2017/09/blog-post_23.html

234 தொகுதியிலும் ஜெயித்து சீமானை முதல்வராக்கினால்…!

 

தருமபுரி மாணவிகள் எரியும்போது காப்பாற்றியவர்கள் அதிமுகாவினர் – சீமான்…!

திருடர்கள் தேர்தலில் ஜெயிச்சா ‘பரிசுத்த’ ஆவிகளாகின்றனர்-சீமான்…!

சரத்குமார் சிறந்த உழைப்பாளியாம் – ‘புரட்சியாளர்’ சீமான்…!

தமிழினத்தை ஆளப்பிறந்த ஒரேதமிழன் சீமான்- அல்ஜீப்ரா இதோ..!

ஆட்சிக்கு வந்தா வைகுண்டராஜனை கைது செய்வேன்- ‘புரட்சியாளர்’ சீமான்.!

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து சீமான் கொடுத்த பேட்டியில், இந்த தேர்தல் பணநாயகமாகிவிட்டது என விட முடியுமா? அதனை மாற்றி புரட்சியை ஏற்படுத்த வேண்டும் எனவும், தனது கட்சி அத்தகைய புரட்சியை சாதிக்க இருப்பதாகவும் கூறினார்.

அப்பேட்டியில் உயிர் , உழவு, உயிர் என வார்த்தை விளையாடி பேசும் இந்த ’புரட்சியாளர்’ இந்த ஓட்டுப்பொறுக்கி பணநாயகத்தில் அதிகாரம் அற்ற எம்.எல்.ஏக்களை பெற்று எதையும் சாதிக்க முடியாது என்பதை கேள்விகேட்ட பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்ல ஓட்டுபோடும் மக்களும் ஏற்றுக்கொண்டு வேறு வழியில்லாமல் தான் வாக்குச்சாவடிக்கு செல்கின்றனர் என்பதால் அதனை விளக்க முற்படவில்லை இப்பதிவில்.

ஆனால் புரட்சியை சாதிக்க போவதாக கூறும் சீமான் எத்தகைய கருத்துக்களை உடையவர் என பார்ப்பது தான் இப்பதிவு.

பிஆர்பியிடம் பணம் வாங்கிவிட்டு போலீஸ்காரர்கள் நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர் என்றும்,

தருமபுரியில் பேருந்து எரிவதை அணைக்கப்போவர்கள் அதிமுகவினர் என்றும், போலீசுகாரர்கள் வாங்குவது லஞ்சம் அல்ல அன்பளிப்பு என்றும்,

இறந்த போன பெரியாரை அழைத்து மேடையேற்றி  எம்ஜீஆர் பாராட்டு விழா நடத்தினார் என்றும்,

கூடங்குளம் அணு உலையினை ஒருநாள் முதல்வர் ஆக்கினால் மூடுவேன், கத்திபார்ப்பேன் 5 வருஷத்துக்கு இல்லைன்னா நமீதாவுடன் நடிக்க போய்விடுவேன்,

கனிம வள திருடன் வைகுண்டராஜன் எனது அப்பா , கல்வி கொள்ளையன் பச்சமுத்து எனது அண்ணன்,

சாதிவெறியர் ராமதாஸ் எனது ஐயா, முருகன் எனது பாட்டான் என்றும் ,

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என தெருத்தெருவாக அதிமுகாவுக்கு தொடர்ந்து ஓட்டுக்கேட்டது நான் தான் என்றும் …

இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்….!

இப்படிப்பட்டவர் முதல்வர் ஆனால் ஏற்கனவே பிஆர்பிக்கு ஆதராவாக தீர்ப்பு எழுதிய பூபதியை , ஜெயாவுக்கு ஆதரவாக தீர்ப்பு எழுதிய குமாரசாமியை தண்டிக்க நினைப்பாரா? ராம் மோகன் ராவை தண்டிக்க நினைப்பாரா? நினைத்தாலும் முடியாது என்பது யதார்த்தம், அது சீமானுக்கு தெரிந்தாலும் அப்படி சிந்திக்க கூட தன்னால் முடியாது என வெளிப்படையாக திருடர்களுக்கு சாதிவெறியர்களுக்கு, கல்வி கொள்ளையர்களுக்கு ஆதரவாக பேசவரும் இந்த தம்பி புரட்சியாளர் வெட்கம் இல்லாமல் மறுபுரம் பொய் வசனங்கள் அவிழ்த்துவிட முடியும் என்பதும் நமது இந்த கேடுகெட்ட ஜனநாயகத்தின் சிறப்பு அம்சம் கூட.

***************************************

ஆட்சிக்கு வந்தா பிஆர்பி-வைகுண்டராஜனை கைது செய்வேன்- ‘புரட்சியாளர்’ சீமான்.!

சீமான் அவர்கள் நியூஸ் 7 தொலைக்காட்சியில் கொடுத்த நேர்காணலில், சாதிவெறிக்கு திராவிட கட்சிகள் என்ன செய்ததது என கேட்டீங்களா? ஊழல் கட்சி – இனவெறிக்கு துணைபோன கட்சி என அதிமுக-திமுகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் சிபிஎம், சிபிஐ, பாமக என சொல்லிவிட்டு தமிழினவெறியர்கள் வருகிறார்கள் என அதிமுக, திமுகவை அழைத்தவர் வைகோ அவர்கள் என நேற்றைய  அம்மா வழிபாடு முதல் இன்றைய முருகன் வழிபாடு வரை அனைத்தையும் ‘மாறி மாறி எதிர்க்கேள்வி கேட்டு’ நியாயப்படுத்தினார் சீமான் அவர்கள்.

ஒரு நாளில் அணு உலையினை மூடுவேன், நமது வாக்கு நம்மை ஆளவா நாமே ஆளவா, சாதிவெறி பாத்துக்கோ ஆனால் வெளியில் பேசாதே என அவருடைய பல புரூடா கண்டுபிடிப்புகளை அம்பலபடுத்தி நாமும் எழுதிவிட்டோம். இருந்தாலும் மேற்கண்ட பேட்டியில் ஜெ குறித்தும், ஆட்சிக்குவந்தால் நாம் தமிழர் கட்சி என்ன செய்யும், கூட்டணி வைக்கமாட்டோம் என்றைக்கோ சொல்லிவிட்டு கட்சி ஆரம்பித்தோம் என்பது குறித்து சீமான் உதிர்த்த மொட்டுகள் மிகவும் கவனிக்கத்தக்கவை.. விவாதிக்க வேண்டியவை.

images

தீய ஆட்சி அகற்றி நல்லாட்சி நாங்கள் கொடுப்போம் , மாற்று என சொல்பவர்கள் அதிமுக என்ற ஊழல் கட்சியுடன் கூட்டணி வைத்தவர்கள் சீட்டுக்காக என சொல்லும் சீமானை கடந்த தேர்தல்களில் இதே ஜெயலலிதாவுக்காக ஓட்டுக்கேட்டீர்களே என செந்தில் மடக்கியபோது, சீமான் அதற்கு ஆமா கேட்டேன் அதிமுகவுக்கு மட்டுமா சிபிஎம், சிபிஐ, திமுக ஏன் காங்கிரஸ் கைசின்னத்திற்கு கூட ஓட்டுக்கேட்டேன் ஆனால் நான் சீட்டு பேரம் பேசி கேட்கவில்லை என விளக்கம் கொடுத்தார். அதற்கு அன்றைக்கு அது அவசியம் என பட்டது என அல்ஜிப்ரா கணக்கு போடுகிறார் சீமான்.

ஜெயலலிதாவுக்காக தருமபுரி மாணவிகளை கொளுத்திய அதிமுக காலிகளை யோக்கியர்கள் என சிந்தரிப்பது என்பது முதல் பக்க அதிமுக விசுவாசியாக அடையாளப்படுத்திக்கொண்டு போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்றும், புலி புலி என ஈழத்தமிழர்கள், அகதிகள் மீது அரசை ஏவிவிட்ட ஜெயாவின் அதிமுகவிற்காக  2011, 2014 ஓட்டுக்கேட்டு அதனை ஈழ மக்களுக்காக என சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்…!

 மக்கள் 3 முறை தேர்தலில் ஜெயிக்க வைத்து ஜெயலலிதாவை மக்கள் ஏற்றுக்கொண்டபின் நாம் ஜெயலலிதாவுக்கு எதிராக மேல்முறையீடு போவது தவறு என சில மாதங்களுக்கு முன்னர் கூட ஊழலுக்கு விளக்கம் கொடுத்த நீங்கள் இன்று அதிமுக ஊழல் கட்சி என தீர்ப்பு எழுதுவது ஏன்..?

எல்லாத்தையும் அடித்து நொறுக்குவோம், புதிதாக ஆரம்பிப்போம் என சொல்லிவிட்டு அதே கட்டமைப்பின் ஒரு அங்கமான தேர்தலில் பங்கெடுப்பது எப்படி சரியாகும், வெளிச்சம் இங்க தான் இருக்கு என தொலைத்த இடத்தைவிட்டுவிட்டு வேறு இடத்தில் தேடுவது அல்லவா இது, அரசு கட்டமைப்பின் ஒரு அங்கமான போலீசு துறையில் வேலைசெய்யும் போலீசு குறித்து இன்று விசாரணை இயக்குனருக்கு இருக்கும் அறம் கூட தெரியாமல், போலீசு நம்ம ஆட்கள் , லஞ்சம் கொடுப்பது டிப்ஸ் மாதிரி என போலீசுக்கு வக்காலத்து வாங்கி பேசும் நீங்கள் உடைத்தெறிய போகும் அரசு கட்டமைப்பு எதை?

தெரிந்து இருந்தாலே தேர்தல் மூலம் உடைக்க முடியாத அரசை நீங்கள் இவங்க ரொம்ப நல்லவங்க என சொல்லிவிட்டு எந்த வெங்காய கட்டமைப்பை அடித்து நொறுக்க போகிறீர்கள்..? கடனை தள்ளுபடி செய்து கல்வி, சுகாதாரம் கொடுப்போம் என சொல்லும் நீங்கள் பச்சமுத்து தமிழரின் கல்வி நிறுவனங்களை, மருத்துவமனைகளை என்ன செய்வோம் என சொல்ல மறுப்பது ஏன்? பச்சமுத்துகள்  இருக்கின்ற வரை அனைவருக்கும் பொதுவான கல்வி, சுகாதாரம் சாத்தியமா? சொத்து சேர்ப்பது ஏற்றுக்கொண்ட பின் ஏழ்மையை ஒழிக்க முடியுமா?

IJK

 பச்சமுத்துவையும், வைகுண்டராஜனை ஜப்தி செய்து மக்கள் உரிமையை, சொத்தை மீட்பேன் என சொல்லமுடியுமா சீமான் அவர்களே…? பிஆர்பியிடம் காசுவாங்கிய  போலீசு இன்று அவரை எதிர்ப்பது தவறு என வக்காலத்து வாங்கி நீங்கள் பிஆர்பி கைது கைது செய்து தமிழ்நாட்டின் மலைகளை மீட்பேன் என சொல்ல முடியுமா? ஒருவேளை தமிழனை தமிழன் கொள்ளையடிக்கலாம் என விட்டுவிடலாமா…?

seeman-cartoon

ஆக தேர்தல் மூலம் நீங்கள் புரட்சி என சொல்வது மக்களை ஏமாற்ற என்பதற்கு பச்சமுத்து குறித்தும் போலீசு, நீதிமன்றம், அதிகார மையம் குறித்தும் பேச மறுப்பதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்..?  இதெல்லாம் பேசுபவன் தேர்தலில் அதனை சாதிக்க முடியாது என ஆரம்ப கட்டத்திலேயே முடிவு செய்துவிடுவான்… தமிழனிவாதி தியாகுவிற்கு இருக்கும் அரசு குறித்த அறிவு கூட தங்களுக்கு இல்லையே என்பதல்ல அதனை சொல்லும் அறம் இல்லை.

bala-cartoons-seeman-20-5-13-e-trim

மூன்றாவதாக யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என்பது, கடந்த காலங்களில் 2016 ஜெயிக்க எவர் வேணும் ஆனாலும் வாங்க ஆனா தலைமை நாங்கதான்… ஏன் காங்கிரஸ் கட்சி கூட என் பின்னாடி வந்து நில்லு என இன்றைக்கு திமுக-காங்கிரஸ் கூட்டு போல ஜெயிப்பதற்கு எவனுடனும் சேரதயார் என சொன்னவர் நீங்கள், இதை தான் பாமக அன்புமணி சொல்றாரு இன்றைக்கு… அன்புமணியை ஏற்றுக்கொள் என்று.

ஆக சாதிவெறியர்கள் குறித்து, பச்சமுத்து-வைகுண்டராஜன்-பிஆர்பி போன்ற மாபியாக்கள் குறித்து துளி கூட கருத்து சொல்லாமல் நேற்றுவரை ஜெயா உள்ளிட அனைவருக்கும் வக்காலத்துவாங்கிவிட்டு இன்று காங்கிரஸை கூட என் பின்னால் வந்து நில்லு என முதல்வர் பதவிக்கு நீங்கள் ஒளிவட்டம் போடுவது கடைதெடுத்த பிழைப்புவாதம் அன்றி வேறென்ன?

Nanjil-Sampath

இதற்கு புரட்சி , கட்டமைப்பு என சொல்லாடல்களை பயன்படுத்துவது தான் சகிக்க முடியவில்லை…? பதவி , சொகுசான வாழ்க்கை வேணும் என்றால் அம்மா, அம்மா என நாஞ்சில் போல போய் திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லலாம்… இப்பவும் சொன்ன வசனங்களை தான் திரும்ப திரும்ப சொல்கிறீர்கள் ஆனால் அது மக்களின் விடுதலையை கேலி செய்வதாக உள்ளதே…!

பதிவின் தலைப்பை படித்தால் பொருத்தமற்று இருக்கிறதே என யோசிக்கலாம்… சீமான் தனக்கு ஓட்டுப்போட சொல்லும் காரணமும் இதைவிட பொருத்தமற்று இருப்பதால் தான் மேற்கண்ட தலைப்பு.

தொடர்புடைய பதிவுகள்

தருமபுரி மாணவிகள் எரியும்போது காப்பாற்றியவர்கள் அதிமுகாவினர் – சீமான்…!

திருடர்கள் தேர்தலில் ஜெயிச்சா ‘பரிசுத்த’ ஆவிகளாகின்றனர்-சீமான்…!

சரத்குமார் சிறந்த உழைப்பாளியாம் – ‘புரட்சியாளர்’ சீமான்…!

தமிழினத்தை ஆளப்பிறந்த ஒரேதமிழன் சீமான்- அல்ஜீப்ரா இதோ..!

சமுத்திரகனியும் உருட்டுகட்டையும் 108 ஆம்புலன்ஸும்….!

தொண்டன் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்த சமுத்திரகனி அவர்கள் அப்படத்தின் காட்சிப்படுத்தபட்ட சமூக பிரச்சனைகளை பட்டிலிட்டு சொன்னதையும், இப்படிப்பட்ட அட்டைகத்தி சகாய நேர்மைகளுக்கு ஒளிவட்டம் போட்டு ராஜீ முருகன், யுகபாரதி போன்றோர் பேசியதையும் விமர்சனத்துக்கு உட்பத்தி ஒரு பதிவு எழுத வேண்டும் என தோன்றியது.

நிமிர்த்துநில் போன்ற டிராபிக் கான்ஸ்டபிள் லஞ்சத்தை பெரிதாக்கி மொத்த காக்கிசட்டையின் கோரமுகத்தை மறைத்தது போல….

தொண்டன் குறித்து சமுத்திரகனி சொல்லும் போது, ஒரு கல்லூரியில் நுழைந்த ஒரு இளைஞன் உருட்டைக்கட்டையினால் ஒரு மாணவியை அடித்து கொல்லும் துணிச்சல் எப்படி வருகிறது, அவனை சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் எதுவும் செய்யமாட்டார்கள் என்ற தைரியத்திலிருந்து தான் வருகிறது. ஆனால் வேடிக்கை பார்க்காமல் அவர்கள் அவனை திருப்பி தாக்கி இருந்தால் எப்படி இருக்கும்… அப்படி யோசித்த கதை தான் இது என ஆரம்பித்து 108 ஆம்புலன்ஸ் சேவை அதில் உயிர் காக்கும் பயிற்சி, மனிதாபிமானம் என அவர்களுடன் தங்கி அதனை காட்சிபடுத்தி உள்ளோம் என்றார்.

அதனை மடக்கி செய்தியாளர்கள் கேள்வி எழுப்புவதை ( அதெல்லாம் மூட் செய்யப்பட்டு உள்ளது) அடுத்து சமுத்திரகனி நாங்கள் பார்ப்பது உயிர் காப்பாற்றப்படுவது தான் என்றும், போலீசில் நல்ல போலீஸ் எனக்கு தெரிகிறது உங்களுக்கு வேற போலீஸ்கார்கள் தெரிகிறது என உதாரணம் வேறு கொடுத்தார்.

இறுதியாக அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவு கொடுத்து பங்கெடுப்பதை கூறிவிட்டு மாற்றம் என்பது மற்றவர்களிடம், சட்டத்திடம் இருந்து வரவேண்டும் என எண்ண கூடாது என நம்மிடம் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என ஒரே போடாக போட்டார்.

இது தான் சமுத்திரகனி…. போராட்டாங்களை ஆதரிக்கும் சமுத்திரகனி, மாற்றம் எனும் வரும் போது நம்மிடம் என ஜக்கியிடன் சரணடைவது ஏன்?

மாணவியை கொன்ற இளைஞனுக்கு எதிராக தாக்குதல் தொடுக்க அழைக்கும் சமுத்திரகனி, 108 ஆம்புலன்ஸ் என்று தனியார் ஏஜென்ஸிக்கும், தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு அடியாள் வேலை பார்ப்பது அரசு ஆஸ்பத்திரியை குழிதோண்டி புதைத்துவருவதையும் அம்பலப்படுத்தாமல் அதனை மனிதாபிமானம் என மெஞ்சுவது ஏன்?

இது தான் சமுத்திரகனியின் நிமிர்த்துநிற்க மக்களுக்கு காட்டும் இடம்?

போலீசு முதல் நெடுவாசல் வரை, விவசாயிகள் டெல்லியில் எலிக்கறி சாப்பிடுவது முதல் கொல்லிமலையில் பிரதமர் சிரிப்பது வரை அனைத்தும் நமக்கு வெளியில் நடக்கும் போது மாற்றம் மட்டும் எமக்கு உள்ளே என சொல்வது எப்படிப்பட்ட அயோக்கியத்தனம்…?

இதனை ராஜி முருகனும், யுகபாரதியும் மெஞ்சுவதற்கான காரணம்..என்ன ? வேற் என்றும் இல்லை… இவர்கள் இந்த அமைப்பை மாற்றாமல் பிஆர்பியிடம் இருந்தும், வைகுண்டராஜன் – பச்சமுத்துவிடம் இருந்தும் மக்களை மீட்க முடியும் என சிபிஎம்- சிபிஐ சிந்தனையில் மூழ்கி திளைப்பவர்கள் என்பதால் தான்.

இதனையே பிஆர்பியும் வைகுண்டராஜனும் நம்ம ஆள்தான், மண்ணை பறிகொடுத்த மக்களும் நம்ம ஆள் தான் என தமிழ் இனவெறியில் இந்த அமைப்பை ஆதரிப்பவர் சீமான்.