திமுக Boycott ஜனநாயகம் – மக்கள் Boycott தீவிரவாதமா..?

 

 

குமாரசாமியால் விடுதலை வாங்கி ஆர்.கே.நகரில் 2015 ஜெயலலிதா போட்டியிட்டபோது அங்கே ஜனநாயகம் மதிக்கப்படாது என்றும் அதனால் அந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக திமுக அறிவித்தது.

குமாரசாமி தீர்ப்பு தப்பு என இன்று உச்சநீதிமன்றம் சொல்லித்தான் திமுகவுக்கு தெரியுமா? இல்லையே அன்றே தெருதெருவாக போய் ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்து இருக்க வேண்டியதுதானே?

இன்று ஜனநாயத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் தங்களை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் Mrஸ்டாலின் அவர்கள் அன்று 2015-ல் இல்லாத ஜனநாயாகம் எப்படி 2017 வந்தது என விளக்க முடியுமா?

அன்று ஜனநாயகத்தின் மீது திமுக நம்பிக்கை வைக்காமல் யாருக்கும் ஆதரவு கூட கொடுக்காமல் இருந்ததன் பின்னணி விளக்க முடியுமா?

இடைத்தேர்தல் கூட ஜெ உயிருடன் இருந்தால் ஜனநாயகம் கசக்கும்… இல்லாதபோது இனிக்குமா?

+++++++++++++++++

எவன்வந்தாலுங்கிறிங்க… அப்ப என்ன சசி.. பன்னீரு…!

நம்பர் ஒன் குற்றவாளியின் வாரிசு நம்பர் டூவா இல்லை நம்பர் ஒன் உடன்  இருந்த நம்பிக்கைக்குரிய பன்னீரா என ஒரு வாரமாக வாய் கிழிய ஆபாசத்தை அலசும் ஊடகங்களும், அப்படியே அலச பழக்கப்பட்டு போன ஜனங்களும்  இருப்பதை பார்க்கும் போது நந்தினியின் சாதிவெறி கொலையாளிகளை, ஹாசினி கொலைகளை ஊக்குவிக்கும்  பாலியல் சமுதாயத்தை மாற்றுவது என்பது எத்தகையதொரு  மிக கடினமாக பணி என்பது தெரிகிறது.

( ஜெயா சசிக்கு எதிராக போட்ட வீடியோவை டெலிட் செய்து விட்ட சுப்பனின் இன்னொரு விடியோ இது)… தீர்ப்பு வைந்தவுடன் திருந்திய எம் எம்ல் ஏ போல சுப்பன் திருந்திவிட்டார் போல.

மேலே உள்ள வீடியோவில் சுப்பன் என்பவர் ஒரு முதல்வரையே 75 நாள் வைச்சு செச்சு அது குறித்து ஒரு ரகசியமும் கசியாமல் பார்த்து கொண்ட சசி, ஜெயுடன் சிறைக்கு போன சசி என சசி முதல்வர்  ஆக வேண்டிய காரணத்தை  அடுக்குகிறார்.

அடுத்தது சசி எதிர்ப்பு … இதற்கு வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றன.
அதில் ஒன்று

 

அதாவது சசி ஒரு மாபியா, ஒரு கவுன்சிலாராக கூட நிக்கலை,பன்னீரு எளிமை என ஒரே பல்லவி தான் எல்லாத்திலேயும்.
இதில் சசி ஆதரவு, பன்னீரு ஆதர்வு என சொல்லும் பெரும்பாண்மையினர் ஒன்றுக்கொள்ளும் ஒரு விசயம் எவன் வந்தாலும் எதுவும் ஆகப்போறது இல்லை என்பது.

இதோ ஓட்டுப்போட்ட மக்களை தே… மகன் என திட்டும்  அம்பத்தூர் அதிமுக எம்.எல்.ஏ.

 

இவன் மட்டும் அல்ல சேகர் ரெட்டி முதல் ராம மோகன் ராவ் வரை ஒருவனையும் இந்த சட்டத்தை கொண்டு ஒரு மயிரைக்கூட புடுங்க முடியாது.

அம்பத்தூர் எம் எல் ஏ வை தண்டிக்க அடுத்த எலெக்சன் சரி சேகர் ரெட்டி, ராம மோகன் ராவை தண்டிக்க என்ன செய்ய போகிறோம்….?

 

75 நாளாக ஒரு முதல்வரை வைச்சு செய்ய எய்ம்ஸ் , பிரதமர்  முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் என அனைத்து அதிகாரங்களும் மொத்தமாக வேலை செய்து உள்ளது அல்லது முறையான வேலை செய்யாமல் உள்ளது எனும் போது மொத்த கட்டமைப்பும் அயோக்கியத்தனமானது என புரியவில்லையா

இதுல என்ன அடுத்த எலெக்‌ஷன், நல்லவனுக்கு ஓட்டு..?

எந்த நலலவனை கொண்டு தண்டிக்க போறோம்…?

பன்னீரு சிம்பிள்….. ஐயா இந்த பன்னீரை விட சிம்பிளு எங்க நல்லகண்ணு. பன்னீராவது இன்னோவா எங்க நல்லக்கண்ணு அதை விட சிம்பிள் அம்பாஸிடர் தான் போராரு, நோக்கியா 1100 போன்ல பேசுறாரு,,, இதெல்லாம் ஒரு தகுதியா? 

அதே நல்லக்கண்ணு 1100 ல ஜெயலலிதாவிடன் 2 சீட்டு வாங்க எப்ப வரட்டும் என பேசும் போது  நம்பர் 1 குற்றவாளியை அங்கிகரித்த பின் என்ன சிம்பிள்…நோக்கியா 1100.????

தருமபுரியில் அதிமுக காலிகள் 3 மாணவிகளை எரிக்கவில்லை என பொய் பேசி, நேற்று வரை அம்மாவுக்கு ஓட்டு கேட்ட சீமானும் நம்பர் 1 குற்றவாளியிடம் என்ன வாங்கிக்கொண்டு கத்தினார் என உங்களால் அவர் சட்டையை பிடித்து கேட்டும் அமைப்பு இருக்கிறதா நம்மிடம்..?

போதை தவறு எனும் போது அது மிடாஸ் சரக்கா ஜெகத்ரட்சன் சரக்கா  என விவாதிப்பது என்ன நேர்மை….?

கொள்ளை குற்றவாளி தப்பு என்றால் அதில் நம்பர் 1  குற்றவாளி ஆதரவு  பன்னீரு, சீமான், வைகோ, நியூஸ் 7 …. என நீளும் பட்டியல் நல்லவங்களா? இல்லை நம்பர் 2 குற்றவாளி ஆதரவு சசி, சுவாமி, சிபிஎம், சுப்பன்… என நீளும் பட்டியல் நல்லவங்களா? இப்படி விவாதிப்பது ஆபாசம் என தெரியலை…

தமிழகத்தில் இப்போது நிலையான அரசு இல்லாம மக்கள் பாதிக்ப்பட்டு வருகிறார் என முக ஸ்டாலின் வருத்தப்படுவதையே எடுத்து கொள்ளுவோம்…

நந்தினி ஆதிக்கசாதிவெறி கொலை முதல் ஹாசினி கொலை வரை எந்த கொலை நடந்து இருக்காது, இல்லை எந்த கொலைகாரர்கள் தண்டிப்பட்டு இருப்பார்கள் நிலையான அரசு இருந்திருந்தால்….!

120 ரூபாய் ரேசன் பொருளுக்கு ஆதார் கட்டாயம், தெருவுக்கு 2 டாஸ்மாக், விண்ணை முட்டும் பருப்பு, அரிசி விலை, ஆதார் இல்லாதவனுக்கு 120 ரூபாய் மானியம் இல்லை, வாங்குகின்ற 71 ரூ பெட்ரோலில் வரிக்கொள்ளை ரூ35 , அரசு ஆஸ்பத்திரியில் ஆதார் கட்டாயம், விவசாயிகள் தற்கொலை, திரும்பிய பக்கமெல்லாம் ஜேப்பியார் – பச்சமுத்து போன்றவர்களின் கல்வி கொள்ளை, நிமிடத்துக்கு ஒரு பார்ச்சுனர் காரில் பறக்கும் கறை வேட்டிகள்….

இதில் எந்த ஆணியை புடுங்க ஓட்டு, மக்களுக்கு இதை விட்டால் வேறு வழி இல்லை என்ற உங்க  ‘ஜனநாயகத்தை’  நினைக்கும் போது ….

இந்த ஓட்டுப்போட்டு ஒரு திருட்டை அங்கீகரிக்கவில்லை என போன வாரம் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி உனக்கு இந்த அரசை கேள்வி கேட்கும் தகுதியில்லை என சொன்னதை நாம் நினைவு படுத்தி பார்க்க வேண்டும்.

ஓட்டுபோட்டால் தான் அரசின் தவறை கேள்வி கேட்க முடியும்  என சொல்வது மூலம் , நாம் ஓட்டுப்போடவில்லை என்றால் தான் இந்த தவறான  அரசை மாற்ற முடியும் என நமக்கு உரைக்கவில்லை…!

நீங்கள் போடும் ஓட்டு தான், டாஸ்மாக்கை மூடனும்மா அதை தேர்தலில் செய் மக்களை கலைந்து போக சொல்கிறது…

நீங்கள் போடும் ஓட்டு தான், நான் ரெண்டு முறை முதல்வர் ஆக இருந்தவள் என பெங்களூரு கோர்ட்டில் ஜெயா  தன்னை நல்லவர் என காட்டிக்கொள்ள ஆதாராமாக காட்டப்படுகிறது….

நீங்கள் போடும் ஓட்டு தான், நந்தினி, சங்கர், இளவரசனை கொன்ற ஆதிக்கச்சாதிவெறியர்கள் சுத்ந்திரமாக் நடமாட , கட்சி நடத்த அனுமதிக்கிறது….

……
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்…

ஆக முதலில் திருடர்களை அங்கீகரிப்பதை நிறுத்துவோம்…. இல்லை மாட்டேன் என பேசுபவர்கள் நீங்கள் என்றால் உங்கள் ஓட்டால் சேகர் ரெட்டி, ராம் மோகன் ராவின் ஒரு மயிரை புடுங்கிவிட்டோம் என ஆதாரம் காட்டிவிடுங்கள் …?

சரி ஓட்டுபோட்டவர்களை தே… மகன் என திட்டிய அம்பத்தூர் எம் எல் ஏ வை தண்டிச்சுட்டு அதாவது எம்.எல்.ஏ எலெஷனில் அடுத்த 4 வருசன் கழித்து  தண்டிப்பது இல்லை, இப்பவே அவன் பதவியை பறித்து சிறையில் அடைத்து காண்பிக்கனும்…?

இது எதுவும் இல்லாமல் கிணறு வெட்டுன ரசீது இருக்கு என பார்த்திபன் மெரினாவில் நின்று கத்துவது போல பில்டப் கொடுக்காமல் ஒதுங்கி கொள்ளவும்..!

பொங்கல் லீவு, ஜல்லிக்கட்டுக்கு விளக்கம் தருபவர்கள் இதற்கு தருவார்களா..?

பொங்கல் லீவு ஏற்கனவே விருப்ப லீவாகத்தானிருந்தது என விளக்கம் அளிப்பவர்கள், ஜல்லிக்கட்டு நீதிமன்றத்தில் உள்ளது என பிரச்சனையை இழு இழு என மூன்று ஆண்டாக இழுப்பதை வெட்கம் இல்லாமல் விளக்கம் அளிப்பவர்கள்,

1) அப்படியே டிமானிட்ரசேஷனால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களுக்கு நேரடி பதில் தருவார்களா..?

2) விவசாயிகள் கொத்து கொத்து ஆக சாவது குறித்து என்ன மாற்று வைத்து உள்ளீர்கள்…? 

3) பெட்ரோல் போல டீசலையும் விலை நிர்ணய அதிகாரத்தை கம்பெனிக்கு தாரை வார்த்த பின் , அதில் தலையிட்டு விலை குறையாமல் கலால் வரியினை கூட்டி மக்களுக்கு அலவா கொடுத்தது பற்றி அதாவது ஒரு லிட்டர்க்கு 36 ரூபாய் வரி போடு அயோக்கியத்தனம் குறித்து பதில் சொல்வார்களா..?

 

img-20170112-wa0001

ஒன்றும் இல்லாத விசயத்துக்கு அறிக்கை விடும் மோடி இவ்வளவு பேர் செத்த பின்னரும் திருவாரூர் எங்க இருக்கு, அது எங்கோ துபாய் பக்கத்துல – ஆப்கானிஸ்தான் பக்கத்துல இருப்பது போல இருப்பது ஏன்?

கோடிக்கணக்கணக்கான மக்களை டிமானிட்ரசேஷன் மூலம் நடுத்தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தி விட்ட நீங்கள் வெறும் ஒரு மாநில பிரச்சனைக்காகவா வருத்தப்பட போகிறீர்கள்…!