சமுத்திரகனியும் உருட்டுகட்டையும் 108 ஆம்புலன்ஸும்….!

தொண்டன் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்த சமுத்திரகனி அவர்கள் அப்படத்தின் காட்சிப்படுத்தபட்ட சமூக பிரச்சனைகளை பட்டிலிட்டு சொன்னதையும், இப்படிப்பட்ட அட்டைகத்தி சகாய நேர்மைகளுக்கு ஒளிவட்டம் போட்டு ராஜீ முருகன், யுகபாரதி போன்றோர் பேசியதையும் விமர்சனத்துக்கு உட்பத்தி ஒரு பதிவு எழுத வேண்டும் என தோன்றியது.

நிமிர்த்துநில் போன்ற டிராபிக் கான்ஸ்டபிள் லஞ்சத்தை பெரிதாக்கி மொத்த காக்கிசட்டையின் கோரமுகத்தை மறைத்தது போல….

தொண்டன் குறித்து சமுத்திரகனி சொல்லும் போது, ஒரு கல்லூரியில் நுழைந்த ஒரு இளைஞன் உருட்டைக்கட்டையினால் ஒரு மாணவியை அடித்து கொல்லும் துணிச்சல் எப்படி வருகிறது, அவனை சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் எதுவும் செய்யமாட்டார்கள் என்ற தைரியத்திலிருந்து தான் வருகிறது. ஆனால் வேடிக்கை பார்க்காமல் அவர்கள் அவனை திருப்பி தாக்கி இருந்தால் எப்படி இருக்கும்… அப்படி யோசித்த கதை தான் இது என ஆரம்பித்து 108 ஆம்புலன்ஸ் சேவை அதில் உயிர் காக்கும் பயிற்சி, மனிதாபிமானம் என அவர்களுடன் தங்கி அதனை காட்சிபடுத்தி உள்ளோம் என்றார்.

அதனை மடக்கி செய்தியாளர்கள் கேள்வி எழுப்புவதை ( அதெல்லாம் மூட் செய்யப்பட்டு உள்ளது) அடுத்து சமுத்திரகனி நாங்கள் பார்ப்பது உயிர் காப்பாற்றப்படுவது தான் என்றும், போலீசில் நல்ல போலீஸ் எனக்கு தெரிகிறது உங்களுக்கு வேற போலீஸ்கார்கள் தெரிகிறது என உதாரணம் வேறு கொடுத்தார்.

இறுதியாக அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவு கொடுத்து பங்கெடுப்பதை கூறிவிட்டு மாற்றம் என்பது மற்றவர்களிடம், சட்டத்திடம் இருந்து வரவேண்டும் என எண்ண கூடாது என நம்மிடம் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என ஒரே போடாக போட்டார்.

இது தான் சமுத்திரகனி…. போராட்டாங்களை ஆதரிக்கும் சமுத்திரகனி, மாற்றம் எனும் வரும் போது நம்மிடம் என ஜக்கியிடன் சரணடைவது ஏன்?

மாணவியை கொன்ற இளைஞனுக்கு எதிராக தாக்குதல் தொடுக்க அழைக்கும் சமுத்திரகனி, 108 ஆம்புலன்ஸ் என்று தனியார் ஏஜென்ஸிக்கும், தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு அடியாள் வேலை பார்ப்பது அரசு ஆஸ்பத்திரியை குழிதோண்டி புதைத்துவருவதையும் அம்பலப்படுத்தாமல் அதனை மனிதாபிமானம் என மெஞ்சுவது ஏன்?

இது தான் சமுத்திரகனியின் நிமிர்த்துநிற்க மக்களுக்கு காட்டும் இடம்?

போலீசு முதல் நெடுவாசல் வரை, விவசாயிகள் டெல்லியில் எலிக்கறி சாப்பிடுவது முதல் கொல்லிமலையில் பிரதமர் சிரிப்பது வரை அனைத்தும் நமக்கு வெளியில் நடக்கும் போது மாற்றம் மட்டும் எமக்கு உள்ளே என சொல்வது எப்படிப்பட்ட அயோக்கியத்தனம்…?

இதனை ராஜி முருகனும், யுகபாரதியும் மெஞ்சுவதற்கான காரணம்..என்ன ? வேற் என்றும் இல்லை… இவர்கள் இந்த அமைப்பை மாற்றாமல் பிஆர்பியிடம் இருந்தும், வைகுண்டராஜன் – பச்சமுத்துவிடம் இருந்தும் மக்களை மீட்க முடியும் என சிபிஎம்- சிபிஐ சிந்தனையில் மூழ்கி திளைப்பவர்கள் என்பதால் தான்.

இதனையே பிஆர்பியும் வைகுண்டராஜனும் நம்ம ஆள்தான், மண்ணை பறிகொடுத்த மக்களும் நம்ம ஆள் தான் என தமிழ் இனவெறியில் இந்த அமைப்பை ஆதரிப்பவர் சீமான்.

Advertisements

திமுக Boycott ஜனநாயகம் – மக்கள் Boycott தீவிரவாதமா..?

 

 

குமாரசாமியால் விடுதலை வாங்கி ஆர்.கே.நகரில் 2015 ஜெயலலிதா போட்டியிட்டபோது அங்கே ஜனநாயகம் மதிக்கப்படாது என்றும் அதனால் அந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக திமுக அறிவித்தது.

குமாரசாமி தீர்ப்பு தப்பு என இன்று உச்சநீதிமன்றம் சொல்லித்தான் திமுகவுக்கு தெரியுமா? இல்லையே அன்றே தெருதெருவாக போய் ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்து இருக்க வேண்டியதுதானே?

இன்று ஜனநாயத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் தங்களை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் Mrஸ்டாலின் அவர்கள் அன்று 2015-ல் இல்லாத ஜனநாயாகம் எப்படி 2017 வந்தது என விளக்க முடியுமா?

அன்று ஜனநாயகத்தின் மீது திமுக நம்பிக்கை வைக்காமல் யாருக்கும் ஆதரவு கூட கொடுக்காமல் இருந்ததன் பின்னணி விளக்க முடியுமா?

இடைத்தேர்தல் கூட ஜெ உயிருடன் இருந்தால் ஜனநாயகம் கசக்கும்… இல்லாதபோது இனிக்குமா?

+++++++++++++++++

எவன்வந்தாலுங்கிறிங்க… அப்ப என்ன சசி.. பன்னீரு…!

நம்பர் ஒன் குற்றவாளியின் வாரிசு நம்பர் டூவா இல்லை நம்பர் ஒன் உடன்  இருந்த நம்பிக்கைக்குரிய பன்னீரா என ஒரு வாரமாக வாய் கிழிய ஆபாசத்தை அலசும் ஊடகங்களும், அப்படியே அலச பழக்கப்பட்டு போன ஜனங்களும்  இருப்பதை பார்க்கும் போது நந்தினியின் சாதிவெறி கொலையாளிகளை, ஹாசினி கொலைகளை ஊக்குவிக்கும்  பாலியல் சமுதாயத்தை மாற்றுவது என்பது எத்தகையதொரு  மிக கடினமாக பணி என்பது தெரிகிறது.

( ஜெயா சசிக்கு எதிராக போட்ட வீடியோவை டெலிட் செய்து விட்ட சுப்பனின் இன்னொரு விடியோ இது)… தீர்ப்பு வைந்தவுடன் திருந்திய எம் எம்ல் ஏ போல சுப்பன் திருந்திவிட்டார் போல.

மேலே உள்ள வீடியோவில் சுப்பன் என்பவர் ஒரு முதல்வரையே 75 நாள் வைச்சு செச்சு அது குறித்து ஒரு ரகசியமும் கசியாமல் பார்த்து கொண்ட சசி, ஜெயுடன் சிறைக்கு போன சசி என சசி முதல்வர்  ஆக வேண்டிய காரணத்தை  அடுக்குகிறார்.

அடுத்தது சசி எதிர்ப்பு … இதற்கு வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றன.
அதில் ஒன்று

 

அதாவது சசி ஒரு மாபியா, ஒரு கவுன்சிலாராக கூட நிக்கலை,பன்னீரு எளிமை என ஒரே பல்லவி தான் எல்லாத்திலேயும்.
இதில் சசி ஆதரவு, பன்னீரு ஆதர்வு என சொல்லும் பெரும்பாண்மையினர் ஒன்றுக்கொள்ளும் ஒரு விசயம் எவன் வந்தாலும் எதுவும் ஆகப்போறது இல்லை என்பது.

இதோ ஓட்டுப்போட்ட மக்களை தே… மகன் என திட்டும்  அம்பத்தூர் அதிமுக எம்.எல்.ஏ.

 

இவன் மட்டும் அல்ல சேகர் ரெட்டி முதல் ராம மோகன் ராவ் வரை ஒருவனையும் இந்த சட்டத்தை கொண்டு ஒரு மயிரைக்கூட புடுங்க முடியாது.

அம்பத்தூர் எம் எல் ஏ வை தண்டிக்க அடுத்த எலெக்சன் சரி சேகர் ரெட்டி, ராம மோகன் ராவை தண்டிக்க என்ன செய்ய போகிறோம்….?

 

75 நாளாக ஒரு முதல்வரை வைச்சு செய்ய எய்ம்ஸ் , பிரதமர்  முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் என அனைத்து அதிகாரங்களும் மொத்தமாக வேலை செய்து உள்ளது அல்லது முறையான வேலை செய்யாமல் உள்ளது எனும் போது மொத்த கட்டமைப்பும் அயோக்கியத்தனமானது என புரியவில்லையா

இதுல என்ன அடுத்த எலெக்‌ஷன், நல்லவனுக்கு ஓட்டு..?

எந்த நலலவனை கொண்டு தண்டிக்க போறோம்…?

பன்னீரு சிம்பிள்….. ஐயா இந்த பன்னீரை விட சிம்பிளு எங்க நல்லகண்ணு. பன்னீராவது இன்னோவா எங்க நல்லக்கண்ணு அதை விட சிம்பிள் அம்பாஸிடர் தான் போராரு, நோக்கியா 1100 போன்ல பேசுறாரு,,, இதெல்லாம் ஒரு தகுதியா? 

அதே நல்லக்கண்ணு 1100 ல ஜெயலலிதாவிடன் 2 சீட்டு வாங்க எப்ப வரட்டும் என பேசும் போது  நம்பர் 1 குற்றவாளியை அங்கிகரித்த பின் என்ன சிம்பிள்…நோக்கியா 1100.????

தருமபுரியில் அதிமுக காலிகள் 3 மாணவிகளை எரிக்கவில்லை என பொய் பேசி, நேற்று வரை அம்மாவுக்கு ஓட்டு கேட்ட சீமானும் நம்பர் 1 குற்றவாளியிடம் என்ன வாங்கிக்கொண்டு கத்தினார் என உங்களால் அவர் சட்டையை பிடித்து கேட்டும் அமைப்பு இருக்கிறதா நம்மிடம்..?

போதை தவறு எனும் போது அது மிடாஸ் சரக்கா ஜெகத்ரட்சன் சரக்கா  என விவாதிப்பது என்ன நேர்மை….?

கொள்ளை குற்றவாளி தப்பு என்றால் அதில் நம்பர் 1  குற்றவாளி ஆதரவு  பன்னீரு, சீமான், வைகோ, நியூஸ் 7 …. என நீளும் பட்டியல் நல்லவங்களா? இல்லை நம்பர் 2 குற்றவாளி ஆதரவு சசி, சுவாமி, சிபிஎம், சுப்பன்… என நீளும் பட்டியல் நல்லவங்களா? இப்படி விவாதிப்பது ஆபாசம் என தெரியலை…

தமிழகத்தில் இப்போது நிலையான அரசு இல்லாம மக்கள் பாதிக்ப்பட்டு வருகிறார் என முக ஸ்டாலின் வருத்தப்படுவதையே எடுத்து கொள்ளுவோம்…

நந்தினி ஆதிக்கசாதிவெறி கொலை முதல் ஹாசினி கொலை வரை எந்த கொலை நடந்து இருக்காது, இல்லை எந்த கொலைகாரர்கள் தண்டிப்பட்டு இருப்பார்கள் நிலையான அரசு இருந்திருந்தால்….!

120 ரூபாய் ரேசன் பொருளுக்கு ஆதார் கட்டாயம், தெருவுக்கு 2 டாஸ்மாக், விண்ணை முட்டும் பருப்பு, அரிசி விலை, ஆதார் இல்லாதவனுக்கு 120 ரூபாய் மானியம் இல்லை, வாங்குகின்ற 71 ரூ பெட்ரோலில் வரிக்கொள்ளை ரூ35 , அரசு ஆஸ்பத்திரியில் ஆதார் கட்டாயம், விவசாயிகள் தற்கொலை, திரும்பிய பக்கமெல்லாம் ஜேப்பியார் – பச்சமுத்து போன்றவர்களின் கல்வி கொள்ளை, நிமிடத்துக்கு ஒரு பார்ச்சுனர் காரில் பறக்கும் கறை வேட்டிகள்….

இதில் எந்த ஆணியை புடுங்க ஓட்டு, மக்களுக்கு இதை விட்டால் வேறு வழி இல்லை என்ற உங்க  ‘ஜனநாயகத்தை’  நினைக்கும் போது ….

இந்த ஓட்டுப்போட்டு ஒரு திருட்டை அங்கீகரிக்கவில்லை என போன வாரம் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி உனக்கு இந்த அரசை கேள்வி கேட்கும் தகுதியில்லை என சொன்னதை நாம் நினைவு படுத்தி பார்க்க வேண்டும்.

ஓட்டுபோட்டால் தான் அரசின் தவறை கேள்வி கேட்க முடியும்  என சொல்வது மூலம் , நாம் ஓட்டுப்போடவில்லை என்றால் தான் இந்த தவறான  அரசை மாற்ற முடியும் என நமக்கு உரைக்கவில்லை…!

நீங்கள் போடும் ஓட்டு தான், டாஸ்மாக்கை மூடனும்மா அதை தேர்தலில் செய் மக்களை கலைந்து போக சொல்கிறது…

நீங்கள் போடும் ஓட்டு தான், நான் ரெண்டு முறை முதல்வர் ஆக இருந்தவள் என பெங்களூரு கோர்ட்டில் ஜெயா  தன்னை நல்லவர் என காட்டிக்கொள்ள ஆதாராமாக காட்டப்படுகிறது….

நீங்கள் போடும் ஓட்டு தான், நந்தினி, சங்கர், இளவரசனை கொன்ற ஆதிக்கச்சாதிவெறியர்கள் சுத்ந்திரமாக் நடமாட , கட்சி நடத்த அனுமதிக்கிறது….

……
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்…

ஆக முதலில் திருடர்களை அங்கீகரிப்பதை நிறுத்துவோம்…. இல்லை மாட்டேன் என பேசுபவர்கள் நீங்கள் என்றால் உங்கள் ஓட்டால் சேகர் ரெட்டி, ராம் மோகன் ராவின் ஒரு மயிரை புடுங்கிவிட்டோம் என ஆதாரம் காட்டிவிடுங்கள் …?

சரி ஓட்டுபோட்டவர்களை தே… மகன் என திட்டிய அம்பத்தூர் எம் எல் ஏ வை தண்டிச்சுட்டு அதாவது எம்.எல்.ஏ எலெஷனில் அடுத்த 4 வருசன் கழித்து  தண்டிப்பது இல்லை, இப்பவே அவன் பதவியை பறித்து சிறையில் அடைத்து காண்பிக்கனும்…?

இது எதுவும் இல்லாமல் கிணறு வெட்டுன ரசீது இருக்கு என பார்த்திபன் மெரினாவில் நின்று கத்துவது போல பில்டப் கொடுக்காமல் ஒதுங்கி கொள்ளவும்..!

சாராயக்கடை அரசும் கொலைகார தாயும்…!

tasmac.PNG

அரசு சாராயக்கடையினை மூட முடியாது என போராடும் அரசை உலகில் வேறொங்கும் பார்க்க முடியாது.

இதோ தனது பாலிடெக்னிக் படிக்கும் மகன் குடிகாரனாகி தொந்தரவு கொடுப்பதை பொறுக்காமல் அவனை வெட்டி கொன்ற செய்தியை கடந்த வாரம் பார்க்க முடிந்தது.

குழந்தைகளுக்கு மது கொடுப்பது, மாணவர்கள் போதையுடன் வருவது ஒரு புறம் என்றால் குடியால் தந்தையை, மகனை , நண்பனை கொலை செய்வது தொடர்ந்து வருகிறது.

நீ எவனுக்கு ஓட்டுபோட்டாலும், காசு வாங்கிட்டோ, காசு வாங்காமலோ…

சகாயம் போதையிலோ போய் ஓட்டுப்போட்டாலும் அது இந்த டாஸ்மாக் அரசை அங்கிகரிப்பது என்று தான் சொல்ல முடியும்.

குற்றத்தை அங்கீகரித்துவிட்டு பின் அதனிடம் நேர்மையினை எதிர்பார்ப்பது எப்படி..?

பணம் வாங்காமல் போனால் மட்டும் வாக்கு இயந்திரத்தில் கக்கனா தெரியப்போகிறார்..?

கொலைகாரனை ஆதரிக்கும் பாதுகாக்கும் கொலைகாரர்களாக நீங்கள் மாறி வருகிறீர்கள் என்பதை உணர முடிகிறதா?

டாஸ்மாக்: வைக்கவிடாதே…அப்புறம் சசிபெருமாள் கதிதான்…@

55845094.cms

நெடுஞ்சாலை ஓரமாக சாராயக்கடையை அகற்றுங்கள் என உச்சநீதிமன்றம் தொடர்ந்து உத்தரவு போட்டும் முடியாது என வாய்தா வாங்கிய தமிழக அரசு கடந்த வாரமும் முயற்சி செய்தபோது உச்சநீதிமன்றம் அதெல்லாம் முடியாது என்று கூறிவிட்டது. மற்றமாநிலங்களுக்கு செப் 31 கடைசி என்றால் தமிழகத்துக்கு மார்ச் 31 கடைசி என சொல்லிவிட்டது.

கடையை மாற்ற முடியாது என தொடர்ந்து போராடும் இந்த ‘மக்கள் தேர்தெடுத்த அரசு’ மூடிவிட்டு சும்மா இருக்குமா… பின்வாசல் போட்டு கடையை நடத்திய அரசு ஆச்சே.

கடையினை ஊருக்குள் மாற்ற முடிவு செய்து மாற்றி வருகிறது. அனைத்து இடங்களிலும் மக்கள் மூடுடா கடையை, திறக்காதடா கடையை என போராடும் நிலையில், போலீசு காரர்கள் இப்ப விட்டுடுங்க… கலெக்டர் பார்த்து மனு கொடுங்க என அப்புறப்படுத்த பார்ப்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.

மதுரை அருகே ஒத்த டாஸ்மாக் கடையை மூடுங்க என மதுரை உயர் நீதிமன்ற உத்தரவை எடுத்துக்கொண்டு கலெக்டர் ஆபிஸ், அரசு அலுவலங்களுக்கு நடையாக நடந்து இறுதியில் சசி பெருமாள் அந்த டாஸ்மாக் கடை எதிரே டவரில் ஏறி போராடும்போது கொலைசெய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே..

ஆக கடையை வைக்கவிட்டீங்கனா… அப்புறம் எடுக்கமாட்டான் அவ்வளவு சீக்கிரத்தில்….மத்திரபிரதேசத்தில் நேற்று இதே போல சாராயக்கடையினை ஊருக்குள் வைக்க வந்த டெம்போ வண்டியை மக்கள் கற்களை வீசி விரட்டிய காட்சியை நீயூஸ் 18 ல் பார்க்க முடிந்தது.

தமிழகம் அடுத்த கட்ட போராட்டத்தை அம்மாநில மக்கள் உணர்த்துவது போல இருந்தது.

CM முதல் CM தொகுதிவரை: ஏமாத்த பார்க்கும் சீமான்களுக்கும், தொடர்ந்து ஏமாற பார்க்கும் மக்களுக்கும்..!

 

‘நான் முதல்வர் ஆனால்’ என சீமான் முதல் அன்புமணி வரை சவடால் அடிப்பது ஒருபுறம் என்றால், ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டுப்போடனும்-ஆளும் கட்சிக்கு ஓட்டுப்போடனும் என மக்கள் ஒருபுறம் மிகப்பெரிய கண்டுப்பிடிப்பு போல பேசுவதை பார்க்கலாம்.

இப்படி ஏமாத்த பார்க்கும் சீமான்களுக்கும், தொடர்ந்து ஏமாற பார்க்கும் மக்களுக்கும் கீழ்கண்ட இரண்டு வீடியோவை அர்பணிக்கிறேன்.

 

 

‘நான்மணி vs வினவு’- விடியல் மட்டும் கண்ணுக்கு தெரியலை..!

புரட்சிகர அரசியல் குறித்தோ, அமைப்பு குறித்தோ நமக்கு பெரிய அறிவு இல்லாவிட்டாலும் மக்கள் படும் கஷ்டங்களுக்கு இவர்கள் வேலை செய்யும் முறைகளையும் வேகத்தையும் பார்க்கும் போது எங்கையோ தவறு நடக்கிறது என்பது மட்டும் தெளிவு என்ற அடிப்படையில், ஆதங்கத்தில் எழுதப்பட்ட கட்டுரை தான் இது.

வினவின் ஹைட்ரோ கார்பன் கட்டுரையினை அம்பலப்படுத்தி நான்மணி அவர்கள் எழுதி உள்ள கட்டுரையில் கடைசியாக என்ன சொல்லவர்றார் என தெரியலை.

ஸ்டிக்கர் புரட்சி, மெரின புரட்சி குறித்து வினவின் நடவடிக்கையினை அம்பலப்படுத்தி எழுதியவை ஓரளவு புரியுது. பரிசீலிக்க வேண்டியது என தோன்றுகிறது.

ஆனால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் இப்பவே நாலுபேருக்கு புற்றுநோய் வந்து உள்ளது என்பதையும், 2000 ஆண்டுக்கு முன்னர் தஞ்சையில் விவசாயம் நடைபெற்றது என்பதையும் கேள்விக்குள்ளாக்கும் நான் மணி சொல்ல வருவது எதை என்பது புரியவில்லை.

சூறாவளி இப்ப நான்மணியா?

ஆனால் நான்மணி சொன்னது போல மேல் கமிட்டி, 3 மாத அறிக்கை என உள்ளே இருக்கும் உறுப்பினர்களின் கருத்தையே ஏற்காத, மாற்றக்கூடிய நிலையில் இப்படி இணையத்தில் எழுதுவது குறித்தெல்லாம் அவர்கள் யோசிப்பார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது

ஒருபுறம் டாஸ்மாக் கடையில் இரவு 9.59 மணிக்கு 50 பேர் மல்லுக்கட்டுவதும்,

பார்ச்சுனர் காரில் பறந்து கொண்டு ரியல் எஸ்டேட் ரவுடிகளாக ஓட்டுப்பொறுக்கிகள் சீரழிந்த பின்னரும் மக்கள் ‘ என் வாக்கு என் உரிமை’ என வாக்குச்சாவடியில் மல்லுக்கட்டுவதும்,  

ஜெ விடு்தலை உறுதி என பாஜககாரர் தீர்ப்புக்கு முன்னர் வரை கூட பேசுவதும், தீர்ப்புக்கு பின்னர் கூட மொத்தஅரசு நிர்வாகமும், அதிமுக அணிகளும் ஏனைய ஓட்டுக்கட்சிகளும் ஜெ குறித்தபிம்பத்தை தொடர மள்ளுகட்டுவதும்

இந்நிலையில் இப்பத்தான் 1905-ல் இந்தியா இருக்கிறது அதுவாக 1917 வந்துவிடும் நம்புங்க  என முடிவு செய்துவிட்டு முடிந்தவரை போராடுவது – இயன்றவரை வேலை செய்வது – இதை எதிர்ப்பவர்களை , இந்த வரையறைக்குள் வர முடியாமல் தவிப்பவர்ளை மொத்தமாக ’புரட்சிகர’ அமைப்பில் இருந்து வெளியேற்ற மல்லுக்கட்டுவதும் என ’இவர்கள்’ நடவடிக்கைகள் என்பது ரத்தமும் சதையுமாக தினந்தோறும் பிணவறைக்கு வீசியெறியப்பட்டு வரும்,  கோடிக்கணக்கான மக்களின் விடியல் மட்டும் கண்ணுக்கு எட்டிய தூரம்  வருவதற்கான அறிகுறியை காட்டவில்லை..

http://www.vinavu.com/2017/03/13/neduvasal-hydrocarbon-project-is-not-about-the-growth/

ம.க.இ.க மாநில பொதுச்செயலர் மருதையன் அளிக்கும் ‘சங்கிலி திருடன்’

GH, 108 ஆம்புலன்ஸில் இலவசமுன்னு ஏன்டா எழுதுற..!

அம்மா பிறந்தநாளை முன்னிட்டு, முகஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு என்று பலரும் இலவச மருத்துவ முகாம் என நடத்துவதை நாம் பார்க்கின்றோம். ஆனால் நமது வரிப்பணத்தில் இயங்கும் அரசு மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ், 155377 அமரர் ஊர்தி என எங்கு பார்த்தாலும் இலவசம், இலவச சிகிச்சை இலவச ஊர்தி என எழுதி உள்ளது அரசு.

14317430_1272641402748851_1940780198426450022_n

ஒரு புறம் அரசு அனைத்து மட்டங்களிலும் சட்டப்படி பணம் வசூலிக்க தொடங்கி விட்டத்தால் இது மட்டும் இலவசம் என நமக்கு சுட்டி காட்டுகிறது.

நாம் வாங்கும் தீப்பெட்டி முதல் பெட்ரோல், கொசுபத்தி வரை வரி போட்டு அதில் ஆட்சி செய்யும் அரசு, டாஸ்மாக்கில் மட்டும் 30ஆயிரம் கோடி வரி போட்டு கல்லா கட்டும் அரசு மறுபுறம் நம்மிடம் இலவசம் இலவசம் என போங்காட்டம் ஆடுகிறது.

Ambulance

Enter a caption

மனைவியின் பிணத்தை எடுத்துசெல்ல ஆம்புலன்ஸ் பணம் கேட்டதால் தன் தோளில் எடுத்து செல்லும் கணவன் – பிண பேய் அரசின் வக்கித்திற்கு இதைவிட உதாரணம் ஏது..?

 

இவன் டிரைவருக்கு சம்பளம் கம்மியாக கொடுப்பதால் தான் பிணத்தை எடுக்க அரசு ஆம்புலன்ஸ் டிரைவர் லஞ்சம் கேட்கிறார், டாஸ்மாக் கடையில் ஊழியருக்கு சம்பளம் கம்மியாக கொடுப்பதால் அவர்கள் பாட்டிலுக்கு 5ரூபாய்,10 ரூபாய் உயர்த்தி வைத்து மேல் மட்டம் வரை லஞ்சத்தை பகிர்ந்துகொள்கின்றனர்.

ஆக இலவசம் என இவன் போர்டு போட்டு சொல்ல வருவது என்ன?

மீனாட்சி மிஷன் அறம் என இலவச சிகிச்சை பப்பிளிசிட்டி போல தானே இவன் செய்கிறான்.

gh-hospital

இதற்கு எதுக்கு ஓட்டு, இத்தனை வரிகள் … அனைத்தையும் பேர் மாற்றி இது பிஆர்பி ஏரியா, வைகுண்டராஜன் ஏரியா , அதானி ஏரியா, டாடா ஏரியா என பிரித்து கொடுத்து விடலாமே…!

அப்படித்தான் ஆல்ரெடி இருக்கிறது … நமக்கு தான் சுட்டு போட்டாலும் சுரனை வராதே..?

Related links:

பிணம் என்றாலும் பணம் வேண்டும் ! இலவச அமரர் ஊர்தி ஓட்டுனர்கள் மீது குற்றச்சாட்டு

மீனாட்சிமிஷனின் அறமும், அரசு மருத்துவமனைகளின் இலவச போங்காட்டமும்…!

GH: தப்பு ஸ்டக்சருக்கு 50ரூபாயா? சிடிஸ்கேனுக்கு 500ரூபாயா?

நேற்று சென்னை அரசு மருத்துவமனையில் மருத்தவர் தாக்கப்பட்டதை கண்டித்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவசர வார்டு உள்ளிட்ட அனைத்து நோயாளிகளும் பாதிக்கப்பட்டதையும், அதில் ஒருவர் மரணம் அடைந்துவிட்டதையும் தொடர்ச்சியாக தொலைக்காட்சிகள் செய்திகளாக வெளியீட்டு வந்தனர்.

அப்போது அரசு மருத்துவமனையில் எங்குபார்த்தாலும் லஞ்சம், ஸ்டக்சர் தள்ள கூட 50, 100 ரூ என லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என மக்கள் கோபமாக பேட்டி கொடுப்பதை பார்த்தோம்.

அதில் ஒருவர் தன் மனைவி அனுமதிக்கப்பட்டு 20நாள் ஆகியும் இந்த டெஸ்ட் எடு, அந்த டெஸ்ட் எடு என்கிறானே தவிர என்ன சிகிச்சை எப்ப சரியாகும் என சொல்லமாட்டேன் என்கிறான்… என குமுறியதை பார்க்க  முடிந்தது.

அதற்கு அடிப்படை காரணம் என்பது ஸ்டெக்சருக்கு 50 ரூபாய் கேட்கும் லஞ்சம் அல்ல… நோயாளியை பதிவு செய்வதற்க்கு 20 ரூபாய் , சிடிஸ்கேனுக்கு 500 ரூபாய், முழு உடல் பரிசோதனைக்கு இவ்வளவு, பெரிய பரிசோதனைக்கு வெளியில் விட பாதி பணம் என்றும்… அப்படியே ஆப்ரேசன் என்றால் அம்மா காப்பீடு கொடு மீதி பணம் கொடு என எங்கு பார்த்தாலும் பணம் வசூல் செய்யும் அரசு நிர்வாகம் தான் காரணம்.

பணம் பணம் என ராமச்சந்திரா, அப்போலா போன்ற தனியார் மருத்துவமனைகள் மட்டும் அலைகிறது என நம் சிந்திக்க பழக்கப்பட்டு விட்டோம். ஆனால் அரசே இப்படி எதற்கெடுத்தாலும் பணம் என மாறிவிட்டது என்பதை நாம் சிந்திப்பது இல்லை.

அப்படி மாறிய காரணத்தால் தான்  அரசு மருத்துவமனையில் குடிக்க தண்ணீ கூட அக்குவா ஃபால்ஸ் வாங்கி தான் குடிக்கனும் என்றும், வார்டுக்கு வெளியே உள்ள கழிவறைகள் அனைத்தும் பூட்டு போட்டு மக்கள் பயன்படுத்த முடியாமல் வைத்து இருப்பதும் நடக்கிறது. மக்களை கிள்ளூ கீரை போல பேசுவதும், மதிக்காமல் எதையும் தெரிவிக்காமல் அலைக்கழிப்பதும் இருக்கிறது.

ஆக பிரச்சனை என்பது ஸ்டக்சர் தள்ளுவதற்கு வாங்கும் லஞ்சம் அல்ல… மொத்த அரசும் பணம் பிடுக்கும் பேயாக மாறிவிட்டது என்பது தான்.

தெருவுக்கு 2 டாஸ்மாக் நடத்தும் அரசு, அதனால் மக்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு அவன் பாக்கெட்டில் பிளேடு போடும் அவலம் எங்கேயாவது உண்டா?

இப்ப கூட பெட்ரோலுக்கு 4ரூ டீசலுக்கு 2ரூ வரி போட்டு மக்களை சுரண்டும் அரசு மறுபுறம் அந்த மக்களுக்கு என்ன வித சேவைகள் வழங்குகிறது…?

இப்படிப்பட்ட அரசை நாம் அங்கீகரிப்பது தான் மிகப்பெரிய தவறு.

அரசு ஆஸ்பத்திரியில் எதற்கு காப்பீடு, பணம்…. எதற்கு பயிற்சி மருத்துவர்கள்… !

1000 உயர் மருத்துவம் படித்த மருத்துவர்களை நியமி… மக்களுக்கு உயரிய சிகிச்சை கொடு…. ஸ்கூட்டியும், லேப்டாப்பும் வேணாம்… மருத்துவமும் படிப்பும் கொடு என நாம் யோசிப்பது எப்போது..?

 அதற்கான வழி வாக்குச்சாவடிக்கு போய் மக்களை தே.மகன் என பேசும் எம் எல் ஏகள், சட்டசபையில் நீலப்படம் பார்க்கும் எம் எல் ஏக்கள், கோடிகளில் புரளும் பார்ச்சூனர் காரில் பறக்கும் எம் எல் ஏக்கள் அல்லது அனைத்தையும் பார்த்துக்கொண்டு மவுனமாக  நான் நல்லவருப்பா என அம்பாசிடர் போகும் அரசியல் கட்சிக்காரர்களை நாம் தேர்ந்தெடுப்பது மூலம் நிறைவேற்ற முடியுமா என சிந்திக்க போகிறோமா?

அல்லது இவர்களை மக்கள் விரோதிகள் என அடையாளப்படுத்தும் விதமாக….. தினந்தோறும் இந்த அரசு எந்திரத்தால் பாதிக்கப்படும் ஏழைகள், வினோதினி முதல் நந்தினி போன்ற பெண்கள், ஸ்ருதி முதல் கும்பகோணம் பள்ளி மாணவர்கள் என எண்ணிலடங்கா மக்களின் விடியலுக்கு நாம் தடைகற்களாக இருக்கும் வாக்குச்சாவடிக்கு போக மாட்டோம் என உறுதி எடுக்க போகிறோமா?

ஓட்டுப்போட்டாத்தான் கருத்து சொல்லனுமாம்.. கரு.பழனியப்பனும் கமலும்..!

கமல் டிவிட்டர் கருத்து குறித்த நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதத்தில் கரு.பழனியப்பன் உள்ளிட்டவர்கள் நிறைய விசயங்களை விவாதித்தாலும் அதில் குறிப்பாக கரு.பழனியப்பன் அவர்கள் கமல் ஓட்டுப்போடுகிறார், நான் ஓட்டுப்போடுகிறேன் அதனால் கருத்து சொல்ல உரிமை உள்ளது என திரும்ப திரும்ப சொல்வதை பார்க்க முடிந்தது.

இதே கருத்தை கமல் அவர்களுடம் புதிய தலைமுறை அக்னிபரிட்ச்சை நிகழ்ச்சியிலும் நானும் இந்த தேர்தலை ஏற்றுக்கொண்டு விரலில் மை வைப்பவன் என்ற அடிப்படையில் கருத்து சொல்கிறேன் என பேசியதையும். பார்க்கமுடிந்தது.

இதே கருத்தை கடந்த மாதம் உச்சநீதிமன்ற நீதிபதி ‘ ஓட்டுபோடாத உனக்கு இந்த அரசை குறை கூற உரிமை கிடையாது’ என்று சொன்ன கருத்தோடு நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என தோன்றுகிறது.

அதாவது ஓட்டுப்போட்டவனுக்கு தான் அரசை கேள்வி கேட்கும் தகுதி இருக்கிறது என்பது நீ எனக்கு ஓட்டுபோடலைலா… உன் தொகுதி என் கட்சியை ஜெயிக்க வைக்க வில்லையில்ல என கேட்பது போன்றது தானே.

3 ஆயிரம் ஓட்டு, 5 ஆயிரம் ஓட்டு என ஜெயித்து 29%, 35% என ஓட்டுவாங்கி ஆட்சிக்கு வரும்  இவர்கள், அதற்காக சீமான் போன்ற பினாமிகளை நிற்கவைத்து, வைகோ மூலம் சில அணிகளை உருவாக்கு ஆட்சியை பிடிக்கும் கீழ்த்தர வேலைகளில் இறங்கும் அளவுக்கு நாறி போய் உள்ளவர்கள், மறுபுறம் கோர்ட், போலீசு என மொத்த அமைப்பும் மக்கள் நம்பிக்கை இழந்து விட்ட நிலையில் இவர்கள் இன்னமும் ஓட்டுரிமை ஓட்டுரிமை என தூங்கி பிடிப்பது எப்படிப்பட்ட அயோக்கியத்தனம்.

அவன் ஓட்டுப்போடுகிறான், போடலை கேள்வி கேட்டா பதில் சொல்லுடா அதுதான சரி.

கடவுள் நம்பிகை இல்லாதவன் வரம் கேட்பது , நாளை இந்த அரசிடமே எப்படி நாம் கோரிக்கை வைக்க முடியும் என சீமான் ‘தம்பி’ வசனம் பேசுவது போல உள்ளது ஓட்டுப்போட்டவனுக்கு தான் கருத்து என்பது….?

போன 2015 ஆர் கே நகர் இடைத்தேர்தலை திமுக ஏன் புறக்கணித்தது? நீங்க புறக்கணிச்சா அது ஜனநாயகத்தை காப்பது நீங்க இன்னைக்கு 2017 அதே இடைத்தேர்தலில் நின்றால் அதுவும்  ஜனநாயகத்தை காப்பது… என்னங்கடா உங்க ஜனநாயகம்…!

எனக்கு சாமி நம்பிக்கை இருக்கு…இல்லை… நம்பிக்கை இருக்குறவனை கோவிலுக்குள் விடுடா என கேட்க கூடாதா…?

  ஓட்டுப்போட்ட 65% த்தில் 35% ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வருபவருக்கு ஓட்டே போடாத 35% பேரின் மேல் என்ன ஒரு கோபம்..,? போடாத அனைவரும் உணர்ந்து புறக்கணிக்க வில்லை என்பது எப்படி சரியோ அதுபோல போட்ட அனைவரும் உணர்ந்து போடவில்லை என்பது தான் நிதர்சன உண்மை.

ஓட்டுப்போட்டாத்தான் கேள்வி கேட்க முடியும்… கருத்து சொல்ல முடியும் என்பது அடிப்ப்டையில் மிக தவறானது.…. ஒரு தவறை ஆதரித்துகொண்டு அதனை அங்கீரிகரித்துக்கொண்டு எப்படி நியாயத்தை தேட முடியும்…. வெளிச்சம் இருக்கு என்பதால் தொலைந்த இடத்தை விட்டுவிட்டு வேறு இடத்தில் தேடுவ்து போலத்தான் இன்று மக்கள் தங்கள் முன் உள்ள தேர்தலை்  ஆதரிக்கின்றனர்.

இதோ இங்கிலாந்து தேர்தலையே ஒரு நடிகன் காறித்துப்புகிறான். நீங்க  பார்ச்சுனர் காரில் பறந்துகொண்டு ஜனநாயகம் சொல்லீறீங்க… ஓட்டுரிமை சொல்லீறீங்க….

https://www.youtube.com/watch?v=3YR4CseY9pk

குமாரசாமி, ராம்மோகன் ராவை தண்டிக்க எந்த வாக்குசாவடிக்கு போகனும்…?

p19

குன்ஹா தீர்ப்பு தான் சரி , 211% சொத்து சேர்த்ததை 8%  என குமாரசாமி மாற்றியது செல்லாது என்றால் குமாரசாமி முதல் ஜெயாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியவர்கள், அதன் மூலம் அவர் முதல்வராக தொடர வாய்ப்பு அளித்தவர்களுக்கு என்ன தண்டனை?

மக்களை தே.மகன் திட்டிய அம்பத்தூர் எம் எல் ஏ வை அடுத்த தேர்தலில் ’தண்டிச்சிடலாம்’ சரி கோடிக்களில் புரண்ட,  ’அம்மா ஆளுடா நான்’  என ஜெயா தீர்ப்பு முன் கத்திய ராம் மோகன் ராவை எப்படி தண்டிப்பது?

ஆமா இவர்களை தண்டிக்க எந்த வாக்குசாவடிக்கு போகனும், எந்த சின்னத்தில் குத்தனும்…..?

சரி விடுங்க…

ஊழல் செய்தவர்கள்,  தவறு செய்தவர்கள் என ஆட்சி மாற்றி நீங்கள் (37% மக்கள்) அமர்த்திய மோடி, ஜெயா போன்றவர்கள் குறைந்தபட்சம் பழைய ஆட்சியாளர்களை எத்தனை பேரை தண்டித்தார்கள் அதையாவது சொல்லுங்கள்…?

தொடர்புடைய பதிவு

மணல் கொள்ளையராகவே மாறிவிட்ட ராம்மோகன் ராவ்’ – எங்கும் நடக்காது கொடுமை இது.!!!