திமுக Boycott ஜனநாயகம் – மக்கள் Boycott தீவிரவாதமா..?

 

 

குமாரசாமியால் விடுதலை வாங்கி ஆர்.கே.நகரில் 2015 ஜெயலலிதா போட்டியிட்டபோது அங்கே ஜனநாயகம் மதிக்கப்படாது என்றும் அதனால் அந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக திமுக அறிவித்தது.

குமாரசாமி தீர்ப்பு தப்பு என இன்று உச்சநீதிமன்றம் சொல்லித்தான் திமுகவுக்கு தெரியுமா? இல்லையே அன்றே தெருதெருவாக போய் ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்து இருக்க வேண்டியதுதானே?

இன்று ஜனநாயத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் தங்களை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் Mrஸ்டாலின் அவர்கள் அன்று 2015-ல் இல்லாத ஜனநாயாகம் எப்படி 2017 வந்தது என விளக்க முடியுமா?

அன்று ஜனநாயகத்தின் மீது திமுக நம்பிக்கை வைக்காமல் யாருக்கும் ஆதரவு கூட கொடுக்காமல் இருந்ததன் பின்னணி விளக்க முடியுமா?

இடைத்தேர்தல் கூட ஜெ உயிருடன் இருந்தால் ஜனநாயகம் கசக்கும்… இல்லாதபோது இனிக்குமா?

+++++++++++++++++

எவன்வந்தாலுங்கிறிங்க… அப்ப என்ன சசி.. பன்னீரு…!

நம்பர் ஒன் குற்றவாளியின் வாரிசு நம்பர் டூவா இல்லை நம்பர் ஒன் உடன்  இருந்த நம்பிக்கைக்குரிய பன்னீரா என ஒரு வாரமாக வாய் கிழிய ஆபாசத்தை அலசும் ஊடகங்களும், அப்படியே அலச பழக்கப்பட்டு போன ஜனங்களும்  இருப்பதை பார்க்கும் போது நந்தினியின் சாதிவெறி கொலையாளிகளை, ஹாசினி கொலைகளை ஊக்குவிக்கும்  பாலியல் சமுதாயத்தை மாற்றுவது என்பது எத்தகையதொரு  மிக கடினமாக பணி என்பது தெரிகிறது.

( ஜெயா சசிக்கு எதிராக போட்ட வீடியோவை டெலிட் செய்து விட்ட சுப்பனின் இன்னொரு விடியோ இது)… தீர்ப்பு வைந்தவுடன் திருந்திய எம் எம்ல் ஏ போல சுப்பன் திருந்திவிட்டார் போல.

மேலே உள்ள வீடியோவில் சுப்பன் என்பவர் ஒரு முதல்வரையே 75 நாள் வைச்சு செச்சு அது குறித்து ஒரு ரகசியமும் கசியாமல் பார்த்து கொண்ட சசி, ஜெயுடன் சிறைக்கு போன சசி என சசி முதல்வர்  ஆக வேண்டிய காரணத்தை  அடுக்குகிறார்.

அடுத்தது சசி எதிர்ப்பு … இதற்கு வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றன.
அதில் ஒன்று

 

அதாவது சசி ஒரு மாபியா, ஒரு கவுன்சிலாராக கூட நிக்கலை,பன்னீரு எளிமை என ஒரே பல்லவி தான் எல்லாத்திலேயும்.
இதில் சசி ஆதரவு, பன்னீரு ஆதர்வு என சொல்லும் பெரும்பாண்மையினர் ஒன்றுக்கொள்ளும் ஒரு விசயம் எவன் வந்தாலும் எதுவும் ஆகப்போறது இல்லை என்பது.

இதோ ஓட்டுப்போட்ட மக்களை தே… மகன் என திட்டும்  அம்பத்தூர் அதிமுக எம்.எல்.ஏ.

 

இவன் மட்டும் அல்ல சேகர் ரெட்டி முதல் ராம மோகன் ராவ் வரை ஒருவனையும் இந்த சட்டத்தை கொண்டு ஒரு மயிரைக்கூட புடுங்க முடியாது.

அம்பத்தூர் எம் எல் ஏ வை தண்டிக்க அடுத்த எலெக்சன் சரி சேகர் ரெட்டி, ராம மோகன் ராவை தண்டிக்க என்ன செய்ய போகிறோம்….?

 

75 நாளாக ஒரு முதல்வரை வைச்சு செய்ய எய்ம்ஸ் , பிரதமர்  முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் என அனைத்து அதிகாரங்களும் மொத்தமாக வேலை செய்து உள்ளது அல்லது முறையான வேலை செய்யாமல் உள்ளது எனும் போது மொத்த கட்டமைப்பும் அயோக்கியத்தனமானது என புரியவில்லையா

இதுல என்ன அடுத்த எலெக்‌ஷன், நல்லவனுக்கு ஓட்டு..?

எந்த நலலவனை கொண்டு தண்டிக்க போறோம்…?

பன்னீரு சிம்பிள்….. ஐயா இந்த பன்னீரை விட சிம்பிளு எங்க நல்லகண்ணு. பன்னீராவது இன்னோவா எங்க நல்லக்கண்ணு அதை விட சிம்பிள் அம்பாஸிடர் தான் போராரு, நோக்கியா 1100 போன்ல பேசுறாரு,,, இதெல்லாம் ஒரு தகுதியா? 

அதே நல்லக்கண்ணு 1100 ல ஜெயலலிதாவிடன் 2 சீட்டு வாங்க எப்ப வரட்டும் என பேசும் போது  நம்பர் 1 குற்றவாளியை அங்கிகரித்த பின் என்ன சிம்பிள்…நோக்கியா 1100.????

தருமபுரியில் அதிமுக காலிகள் 3 மாணவிகளை எரிக்கவில்லை என பொய் பேசி, நேற்று வரை அம்மாவுக்கு ஓட்டு கேட்ட சீமானும் நம்பர் 1 குற்றவாளியிடம் என்ன வாங்கிக்கொண்டு கத்தினார் என உங்களால் அவர் சட்டையை பிடித்து கேட்டும் அமைப்பு இருக்கிறதா நம்மிடம்..?

போதை தவறு எனும் போது அது மிடாஸ் சரக்கா ஜெகத்ரட்சன் சரக்கா  என விவாதிப்பது என்ன நேர்மை….?

கொள்ளை குற்றவாளி தப்பு என்றால் அதில் நம்பர் 1  குற்றவாளி ஆதரவு  பன்னீரு, சீமான், வைகோ, நியூஸ் 7 …. என நீளும் பட்டியல் நல்லவங்களா? இல்லை நம்பர் 2 குற்றவாளி ஆதரவு சசி, சுவாமி, சிபிஎம், சுப்பன்… என நீளும் பட்டியல் நல்லவங்களா? இப்படி விவாதிப்பது ஆபாசம் என தெரியலை…

தமிழகத்தில் இப்போது நிலையான அரசு இல்லாம மக்கள் பாதிக்ப்பட்டு வருகிறார் என முக ஸ்டாலின் வருத்தப்படுவதையே எடுத்து கொள்ளுவோம்…

நந்தினி ஆதிக்கசாதிவெறி கொலை முதல் ஹாசினி கொலை வரை எந்த கொலை நடந்து இருக்காது, இல்லை எந்த கொலைகாரர்கள் தண்டிப்பட்டு இருப்பார்கள் நிலையான அரசு இருந்திருந்தால்….!

120 ரூபாய் ரேசன் பொருளுக்கு ஆதார் கட்டாயம், தெருவுக்கு 2 டாஸ்மாக், விண்ணை முட்டும் பருப்பு, அரிசி விலை, ஆதார் இல்லாதவனுக்கு 120 ரூபாய் மானியம் இல்லை, வாங்குகின்ற 71 ரூ பெட்ரோலில் வரிக்கொள்ளை ரூ35 , அரசு ஆஸ்பத்திரியில் ஆதார் கட்டாயம், விவசாயிகள் தற்கொலை, திரும்பிய பக்கமெல்லாம் ஜேப்பியார் – பச்சமுத்து போன்றவர்களின் கல்வி கொள்ளை, நிமிடத்துக்கு ஒரு பார்ச்சுனர் காரில் பறக்கும் கறை வேட்டிகள்….

இதில் எந்த ஆணியை புடுங்க ஓட்டு, மக்களுக்கு இதை விட்டால் வேறு வழி இல்லை என்ற உங்க  ‘ஜனநாயகத்தை’  நினைக்கும் போது ….

இந்த ஓட்டுப்போட்டு ஒரு திருட்டை அங்கீகரிக்கவில்லை என போன வாரம் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி உனக்கு இந்த அரசை கேள்வி கேட்கும் தகுதியில்லை என சொன்னதை நாம் நினைவு படுத்தி பார்க்க வேண்டும்.

ஓட்டுபோட்டால் தான் அரசின் தவறை கேள்வி கேட்க முடியும்  என சொல்வது மூலம் , நாம் ஓட்டுப்போடவில்லை என்றால் தான் இந்த தவறான  அரசை மாற்ற முடியும் என நமக்கு உரைக்கவில்லை…!

நீங்கள் போடும் ஓட்டு தான், டாஸ்மாக்கை மூடனும்மா அதை தேர்தலில் செய் மக்களை கலைந்து போக சொல்கிறது…

நீங்கள் போடும் ஓட்டு தான், நான் ரெண்டு முறை முதல்வர் ஆக இருந்தவள் என பெங்களூரு கோர்ட்டில் ஜெயா  தன்னை நல்லவர் என காட்டிக்கொள்ள ஆதாராமாக காட்டப்படுகிறது….

நீங்கள் போடும் ஓட்டு தான், நந்தினி, சங்கர், இளவரசனை கொன்ற ஆதிக்கச்சாதிவெறியர்கள் சுத்ந்திரமாக் நடமாட , கட்சி நடத்த அனுமதிக்கிறது….

……
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்…

ஆக முதலில் திருடர்களை அங்கீகரிப்பதை நிறுத்துவோம்…. இல்லை மாட்டேன் என பேசுபவர்கள் நீங்கள் என்றால் உங்கள் ஓட்டால் சேகர் ரெட்டி, ராம் மோகன் ராவின் ஒரு மயிரை புடுங்கிவிட்டோம் என ஆதாரம் காட்டிவிடுங்கள் …?

சரி ஓட்டுபோட்டவர்களை தே… மகன் என திட்டிய அம்பத்தூர் எம் எல் ஏ வை தண்டிச்சுட்டு அதாவது எம்.எல்.ஏ எலெஷனில் அடுத்த 4 வருசன் கழித்து  தண்டிப்பது இல்லை, இப்பவே அவன் பதவியை பறித்து சிறையில் அடைத்து காண்பிக்கனும்…?

இது எதுவும் இல்லாமல் கிணறு வெட்டுன ரசீது இருக்கு என பார்த்திபன் மெரினாவில் நின்று கத்துவது போல பில்டப் கொடுக்காமல் ஒதுங்கி கொள்ளவும்..!

Advertisements

டோல்கேட்-ல் போகும் டுவீலர்காரரும் – விஜய் மல்லையாவும் ….!

டோல்கேட்-ல் டூவீலரில் போகும் லட்சக்கணக்கான சாதாரண ஏழை எளிய மக்கள் பணம் கொடுக்காமல் போகும்பாதையினை கவனித்தீர்கள் என்றால் அந்த பாதை டோல்கேட்டின் மிக ஓரமாக,  மிக நெரிசலாக, ஒரே ஒரு பாதை மட்டும், ரோடு சரியாக தார் போடாமல் ரோடேஇல்லாமல் குண்டும் குழியுமாக இருப்பதை பார்க்கலாம்.

ஆனால் பணம் கட்டி போகும் வாகனங்கள் நேர் ரோடு, அதிக பாதை, ரோடு பக்காமாக இருப்பதை பார்க்கலாம்.

எவ்வளவு வசூல் செய்யிறான், என்ன செலவு செய்யுறான், இன்னமும் இது தேவையா என மக்கள் எந்தவித ஆய்வுக்கு செல்ல முடியாது. ஆனால் இவன் வசூல் செய்வது படியே பணம் கொடுத்து போவனுக்கு மட்டும் எப்படிப்பட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது என்பதை நாம் கவனிக்கனும்.

இதே போலத்தான் எல்லா இடமும், கோடக் தனியார் வங்கி கடன் வாங்கிய விவசாயியை அடிக்கும் போலீசு, அரசு வங்கியில் கடன் வாங்கி ஆட்டையை போட்ட மல்லையாவை பிளைட் ஏற்றி வழியனுப்பி வைக்கிறது.

பெட்ரோல் முதல் தீப்பெட்டி வரை வரி போட்டு, மினிமம் பேலன்ஸ் 5 ஆயிரம் வை, ஏடிஎம் 4 முறைக்கு மேல் 150 ரூபாய் என மக்கள் பாக்கெட் ஆட்டையை போடும் அரசு மறுபுரம் அந்த பணத்தை எப்படிபட்டவர்களுக்கு கடன் கொடுத்து வாராக்கடன் என பைல் எழுதுகிறது.

இப்படி நம் கண் முன் எண்ணீலடங்கா உதாரணங்கள் இருக்கிறது இந்த அரசு நமக்கானது அல்ல என்பதற்கு… நமது மரமண்டைக்கு தான் அது புரியவே மாட்டேன் என்கிறது.

தமிழகத்தில் இனி இட்லி 1ரூ, பெட்ரோல் 74ரூபாய்..!

ஒரு ரூபாய் இட்லி போட்டா தான் வாழ முடியும் என்ற நாட்டில பெட்ரோல் , டீசல் வாட் வரியினை கூட்டி இந்தியாவில் அதிக விலையில் பெட்ரோல், டீசல் விலை விற்கும் முதலிடத்தை நெருங்கி விட்டது தமிழகம்.

நாம நீயூட்ரினோவுக்கும், ஹைட்ரோவுக்கும் எதிராக போராடும் போது , அவங்க சின்னம்மாவும் பெங்களூர் ஜெயிலில் இருக்கும் போது  தமிழக அரசு இந்த செயல்பாடு படுவேகமாக இருக்கிறது.

மத்திய அரசில் கூட்டணியில் இருக்கும்போது மன்மோகன் சிங் அரசு பெட்ரோல் விலையினை உயர்த்திய போது கருணாநிதி அவரள் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் பெட்ரோலே என அண்ணாசாலையில் உண்ணாவிரதம் இருந்தார்.

அதுபோல தமிழக அரசு வாட் வரியை கூட்டி பெட்ரோல் 4 ரூ, டீசல் 2 ரூபாய் உயர்த்தியதற்கு எதிராக நாளை இபிஎஸ் போராடினால் ஆச்சிரியப்பட ஏதுமில்லை.

இந்த அரசுகள் மக்களுக்கானது என்றும், அதனை ஓட்டுரிமை என்ற ’மிகபெரிய’ ஜனநாயக உரிமை மூலம் தேர்தெடுக்கின்றோம் என நம்புகிறவன் முகத்தில் மலத்தை அடித்தது போல உள்ளது தமிழக அரசின் அறிவிப்பு.

***************************

ஒரு லிட்டர் பெட்ரோல் வரி நீங்கலாக ரூ31 தானாம்..!

img-20170112-wa0001

ஒரு லிட்டர் பெட்ரோல் தயாரித்து முடிந்த நிலையில் ரூபாய் 31.54 மட்டுமே.. டீசல் விலை 30.34 மட்டுமே. ஆனால் தன் பின் மத்திய கலால் வரி மட்டும் 21.48 ரூபாய் பெட்ரோலுக்கும், 17.33 ரூபாய் டீசலுக்கும் போடப்படுகிறது. அதன் பின் வாட் வரி மாநில அளவில் முறையே ரூபாய் 15.01  , ரூபாய் 8.51 போடப்பட்டு பெட்ரோல் பங்க் கமிஷனாக ரூபாய் 2.58 , ரூபாய் 1.65  போடப்பட்டு இறுதியில் மக்கள் கையில் ரூபாய் 70.6 மற்றும் 57.82 ரூபாய் க்கு கொடுக்கப்படுகிறது.

அதாவது 100% மேல் வரி போடப்பட்டு விற்கப்படுகிறது. தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் விலை குறைந்த போது  தொடர்ந்து அதன் பயனை மக்களுக்கு அளிக்காமல் கலால் வரியினை உயர்த்தியது மோடி அரசு. வெட்கமே இல்லாமல் இன்று ஏழைகளின் வீட்டில் அடுப்பு எரிய கேஸ் மானியத்தை விட்டு தாருங்கள் என 150 ரூபாய்க்கு ஆத்து ஆத்து என பெட்ரோல் பங்க் 50 அடி பேனரில் சிரிக்கும் மோடி மேற்கண்ட பெட்ரோல் கலால் வரிகொள்ளை குறித்து என்ன சொல்ல போகிறார்?

காங்கிரஸ் ஆட்சி இப்ப இருந்தாலும் வரிக்கொள்ளை நடந்து இருக்கும், ஆனால் மன்மோகன் வாய் கிழிய ஏழைகளின் நண்பன், கருப்பு பணத்தை மீட்டு 15 லட்சம் போடுவேன் என சொல்லியிருக்க மாட்டார் என்பது மட்டும் ஆறுதல்.

பெட்ரோல் இந்த ஆண்டு ரூபாய் 100ஐ தொடுவது உறுதி…!

 

பெட்ரோல் 60ரூ மோடி அடிச்சது 30ரூ அம்பானிக்கு லாபம் 5000கோடி ரூபாய்…!

போனமுறை எண்ணெய் நிறுவனங்கள் விலை குறைத்த 1 மணி நேரத்தில் கலால் வரியை கூட்டு சமன் செய்த மோடி,

இந்த முறை 1 நாள் முன்னதாகவே கலால் வரி கூட்டி எண்ணெய் நிறுவனங்கள் 5 பைசா, 3 பைசா விலை குறைக்கும் வரலாற்று’விலை குறைப்பு’அறிவிப்புக்கு வித்திட்டு உள்ளது மிகப்பெரிய சாதனை புரிந்து உள்ளார்.

modi-petrol

 

கடந்த காலங்களில் கச்சா எண்ணெய் 140 டாலருக்கு மேலாக போனபோது அதன் விலையினை 70, 74 ரூபாய் என கூட்டிய அரசு கேட்டால் விலை நிர்ணய உரிமையினை கொடுத்துவிட்டோம், நாங்கள் என்ன செய்ய முடியும் என அன்று சொன்ன ஆட்சியாளர்கள் இன்று கலால் வரியை கூட்டி விலை குறைப்பு மக்களை சென்றடையாமல் தடுத்தது எதற்காக?

 

நடப்பது ஏழைகளின் அரசு எனில் அதன் செயல் இதுவாகவா இருக்க முடியும்?  இதன் மூலம் பருப்பு விலை 170 ரூபாய் விற்பது குறையாது , மக்கள் கஷ்டப்படுவது தொடரும் என மோடிக்கு தெரியாதா?

எல்லாம் தெரியும்.

நடப்பு கணக்கு பற்றாக்குறை என மோடி உள்ளிட்ட அரசுகள் கார்பப்ரேட்களுக்கு போடும் பட்ஜெட் நிதிக்கு நமது தலையில் மிளகாய் அரைக்கும் செயல் தான் தொடர்ந்து கலால் வரி கூட்டி லாபம் அடையும் நடவடிக்கை.

200 ரூபாய் மானியத்தை விட்டுக்கொடு என கேஸ் மானியத்துக்கு பில்டப்பு கொடுக்கும் மோடி, இப்படி கலால் வரியை போட்டு மக்கள் தலையில் கல்லை போடுவது குறித்து கிஞ்சிதும் வெட்கப்படுவதும் இல்லை , பதில் சொல்வதும் இல்லை.

ஏனெனில் நடப்பது ஏழைகளின் பெயரில் அம்பானிகளின் ஆட்சி தானே..!

 

 

 

 

கச்சா எண்ணெய்: குறைந்தா வரியை போடு – கூடினா விலையை கூட்டு..!

disal-petrol-tax

கச்சா  எண்ணெய் பேரல் 45 டாலருக்கும் குறைவாக வந்தபோது 4 முறை  வரியை கூட்டிய மோடி அரசு இன்று சிறிய அளவில் கச்சா எண்ணெய் விலை கூடும் போது பெட்ரோல், டீசல் விலையினை மிகக்கடுமையாக கூட்டுகிறது.

விலை நிர்ணய உரிமையினை கொடுத்துவிட்டோம், நாங்கள் என்ன செய்ய முடியும் என இன்று கேட்கும் ஆட்சியாளர்கள் அன்று கலால் வரியை கூட்டி விலை குறைப்பு மக்களை சென்றடையாமல் தடுத்தது எதற்காக?

நடப்பது ஏழைகளுக்காக அரசு என்று சொல்லும் அரசின் செயல் இதுவாக இருக்க முடியும்..? டீசல் விலை இப்படி கூடினா பருப்பு முதல் பஸ் கட்டணம் வரை அனைத்தும் கூடும் என்று தெரியாதா இவர்களுக்கு..?

எல்லாம் தெரியும்.

ஏனெனில் நடப்பது ஏழைகளின் பெயரில் அம்பானிகளின் ஆட்சி தானே. அம்பானி மூடிய பெட்ரோல் பங்குகள் திறக்கும்போதே தெரிந்துகொள்ளலாம் மோடியின் ஆசியும், ஆட்சியும் யாருக்கானது என்று.

டீசல் செஞ்ச்சூரி போடும் முன் அரிசி சதம் போடுவது உறுதி…!

Tamil_News_large_1253796

பெட்ரோல் 70 ரூபாயும், டீசல் 56 ரூபாயும் விற்கும் போதே அரிசி 50 ரூபாய்க்கு வந்து விட்டது, உளுந்தம் பருப்பு 120 ரூபாய்க்கு வந்து விட்டது.

15 நாளைக்கு ஒரு முறை என்று எண்ணெய் நிறுவனங்கள் விலையினை இப்ப போல தொடர்ந்து கூட்டும் போது டீசல் விலை சதம் போடுவதற்கு முன் அரிசி விலை சதம் போடுவது உறுதி…!

பாருங்கையா… கச்சா எண்ணெய் பேரல் எம்பூட்டு கூடியிருக்குனு..!

பாருங்கையா… வரைப்படத்தை கச்சா எண்ணெய் பேரல் எவ்வளவு கூடியிருக்குனு, ரூபாய் மதிப்பு எங்க பெருசா கவிழ்ந்திருக்குனு…..

crude oil

usd to inr

டீசல் விலை நிர்ணயக்கும் அதிகாரத்தை எண்ணெய் கம்பெனிகளிடம் ஒப்படைத்த மோடிக்கு டீசல் விலை உயர்ந்தால் அரிசி, பருப்பு முதல் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என தெரியாதா..?

விலை உயரும் போது கண்டிப்பது போல ஜெயலலிதா முதல் ஜி,கே,வாசன் வரை அறிக்கை விட்டுத்தான் மோடி அரசுக்கு தெரியனுமா,,,?

நிச்சியம் அப்படி இல்லை. விலை கூட்டிய அரசுக்கும், கண்டிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் நிச்சியம் தெரியும் நடப்பது அம்பானி அண்ட் கோ அரசு என்று.

மக்களுக்கு அந்த அரசை மக்கள் நல அரசு போலவும் அல்லது அடுத்து எங்களை கொண்டு வந்தா மக்கள் நல அரசு வரும் என்பது போல ஒரு சதுரங்க விளையாட்டை தான் அனைத்து கட்சிகளும் ஆடி வருகின்றன.

மின்சாரம், டீசல், ரயில் கட்டணம், தொலைத்தொடர்பு என அனைத்தும் ஒழுக்குமுறை ஆணையம், அந்தந்த நிறுவனங்கள் கையில் ஒப்படைத்த பின் என்ன வெங்காயத்துக்கு ஆளும் கட்சி, எதிர்கட்சி என போங்காட்டம்…?

சின்னதாக இரண்டு டாலர் கூடும்போதே இப்பிடி விலையினை கூட்டுறாங்கனா… நாளை 120- 140 டாலர் என முன்னர் போல ஏறும்போது டீசல் விலை டபுள் செஞ்ச்சூரி போட்டுவிடும்..!

இப்படி மறைமுக சர்வாதிகார ஆட்சிக்கு நிரந்தமாக இருக்கும் நீதிமன்றம், போலீசு, கலெக்டர் இவர்களின் நேரடி சர்வாதிகார ஆட்சி என டிக்களர் பண்ணிடலமே…

அம்பானி மூடிய பெட்ரோல் பங்குகளை திறக்கும் போதே நமக்கு தெரிய வேண்டாமா? இனி மக்களுக்கு ஆப்புத்தான் என்று.

 

கச்சா எண்ணெய்: குறைந்தா வரியை போடு – கூடினா விலையை கூட்டு..!

பெட்ரோல் 51 ரூபாய் இருந்தப்ப அதன் உண்மையான விலை 26 ரூபாய்..25 ரூபாய் வரி

கச்சா  எண்ணெய் பேரல் 45 டாலருக்கும் குறைவாக வந்தபோது 4 முறை  வரியை கூட்டிய மோடி அரசு இன்று சிறிய அளவில் கச்சா எண்ணெய் விலை கூடும் போது பெட்ரோல், டீசல் விலையினை மிகக்கடுமையாக கூட்டுகிறது.

விலை நிர்ணய உரிமையினை கொடுத்துவிட்டோம், நாங்கள் என்ன செய்ய முடியும் என இன்று கேட்கும் ஆட்சியாளர்கள் அன்று கலால் வரியை கூட்டி விலை குறைப்பு மக்களை சென்றடையாமல் தடுத்தது எதற்காக?

நடப்பது ஏழைகளுக்காக அரசு என்று சொல்லும் அரசின் செயல் இதுவாக இருக்க முடியும்..? டீசல் விலை இப்படி கூடினா பருப்பு முதல் பஸ் கட்டணம் வரை அனைத்தும் கூடும் என்று தெரியாதா இவர்களுக்கு..?

எல்லாம் தெரியும்.

ஏனெனில் நடப்பது ஏழைகளின் பெயரில் அம்பானிகளின் ஆட்சி தானே. அம்பானி மூடிய பெட்ரோல் பங்குகள் திறக்கும்போதே தெரிந்துகொள்ளலாம் மோடியின் ஆசியும், ஆட்சியும் யாருக்கானது என்று.

 

ஒரு லிட்டர் பெட்ரோல் வரி நீங்கலாக ரூ31 தானாம்..!

img-20170112-wa0001

ஒரு லிட்டர் பெட்ரோல் தயாரித்து முடிந்த நிலையில் ரூபாய் 31.54 மட்டுமே.. டீசல் விலை 30.34 மட்டுமே. ஆனால் தன் பின் மத்திய கலால் வரி மட்டும் 21.48 ரூபாய் பெட்ரோலுக்கும், 17.33 ரூபாய் டீசலுக்கும் போடப்படுகிறது. அதன் பின் வாட் வரி மாநில அளவில் முறையே ரூபாய் 15.01  , ரூபாய் 8.51 போடப்பட்டு பெட்ரோல் பங்க் கமிஷனாக ரூபாய் 2.58 , ரூபாய் 1.65  போடப்பட்டு இறுதியில் மக்கள் கையில் ரூபாய் 70.6 மற்றும் 57.82 ரூபாய் க்கு கொடுக்கப்படுகிறது.

அதாவது 100% மேல் வரி போடப்பட்டு விற்கப்படுகிறது. தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் விலை குறைந்த போது  தொடர்ந்து அதன் பயனை மக்களுக்கு அளிக்காமல் கலால் வரியினை உயர்த்தியது மோடி அரசு. வெட்கமே இல்லாமல் இன்று ஏழைகளின் வீட்டில் அடுப்பு எரிய கேஸ் மானியத்தை விட்டு தாருங்கள் என 150 ரூபாய்க்கு ஆத்து ஆத்து என பெட்ரோல் பங்க் 50 அடி பேனரில் சிரிக்கும் மோடி மேற்கண்ட பெட்ரோல் கலால் வரிகொள்ளை குறித்து என்ன சொல்ல போகிறார்?

காங்கிரஸ் ஆட்சி இப்ப இருந்தாலும் வரிக்கொள்ளை நடந்து இருக்கும், ஆனால் மன்மோகன் வாய் கிழிய ஏழைகளின் நண்பன், கருப்பு பணத்தை மீட்டு 15 லட்சம் போடுவேன் என சொல்லியிருக்க மாட்டார் என்பது மட்டும் ஆறுதல்.

பெட்ரோல் இந்த ஆண்டு ரூபாய் 100ஐ தொடுவது உறுதி…!

 

Not accept debit card: அப்ப வார்தா..இப்ப மோடி புயல்…!

petrol-bunks

 

ஆன் லைன் டிரான்ஸக்‌ஷன் யோக்கியதை போன மாதம் வார்தா புயல் கிழித்து போட்டது என்றால் இன்று மோடி புயல் வரியினை போட்டு கிழித்து தொங்கவிட்டு விட்டது.

Will not accept debit/credit cards from tonight, say petroleum dealers

பெட்ரோல் இந்த ஆண்டு ரூபாய் 100ஐ தொடுவது உறுதி…!

petrol-100

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளால் கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்த ஆண்டுஅதிகரிப்பது உறுதி என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டுகளில் 149 டாலரில் இருந்து 30 டாலர் வந்தபோது இது தான் சாக்கு என கலால் வரியினை உயர்த்தி விலை குறையாமல் பார்த்து கொண்ட ‘ஏழைகளின்’  வாழ்வை உயர்த்த உறுதி பூண்டுள்ள மோடி அவர்கள் இந்த முறை அந்த வரியினை சற்று குறைத்து விலை மீண்டும் ஏறாமலாவது நியாயமாக நடப்பார் என பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னரும் நம்புவார்கள் குறைவு தான்.

அதன்படி கடந்த ஒரு மாதமாகவே 3ரூபாய், 2 ரூபாய் என விலை யேற்றி 70 ரூபாய்க்கு கொண்டு வந்து விட்டார் மோடி. 70 ரூபாயில் 36 ரூபாய் வரியாம்.

உலகில் ஒரு பொருள் விலையில் பாதிக்கும் மேல் வரி போட்டு விற்கும் நாடு நமது இந்தியாவாகத்தான் இருக்கும். அதுவும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் , விலைவாசி உயர்வுக்கு காரணமாக இருக்கும் பெட்ரோல் டீசல் மீது வரி போடு கொள்ளை அரசு நமது இந்திய அரசாகத்தான் இருக்கும்.

விலை நிர்ணய அதிகாரத்தை பெட்ரோலுக்கு தாரைவார்த்தது காங்கிரஸ் என்றால் , டீசலை தாரை வார்த்த பெருமை நமது மோடி அவர்களையே சாரும். அப்படி கொடுத்தபின் விலை குறையும் போது மட்டும் வரி போட்டு கொள்ளை அடுத்து கின்னஸ் சாதனை செய்த பெருமை மட்டும் மோடி அரசுக்கு மட்டுமே கிடைத்து உள்ளது.

இனி வரும் காலங்களில் கச்சா எண்ணெய் மீண்டும் 100 டாலராக உயர்வது உறுதி என்பது எல்லோருக்கும் தெரியும் , ஆனால் அப்படி கூடும் போது நமது பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து போய் கொண்டுயிருக்கும்.

அன்று பருப்பு விலை, அரிசி விலை என்னவாக இருக்கும் என்பதை விட அப்போது சம்பந்தமே இல்லாமல் மோடி உள்ளிட்ட ஆளும் வர்க்கம் ஏழைக்காக உழைக்கிறேன், ஏழை வீட்டில் அடுப்பு எரிய வைக்கிறேன் என சொல்லிக்கொண்டே நமக்கு கொள்ளி வைப்பது தான் உலகில் வேறு எங்கும் இல்லாத வக்கிரம்.

மக்களுக்கு பதில் சொல்லாமல் ஆளில்லாத மேடைகளில் வீரவசனம் பேசும் ஆளும் வர்க்க கும்பல் உருவாகி அது மக்களை அணிதிரளாமல் இருக்கும் என்னமா நடிக்கிறது…!