ஆட்சிக்கு வந்தா பிஆர்பி-வைகுண்டராஜனை கைது செய்வேன்- ‘புரட்சியாளர்’ சீமான்.!

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து சீமான் கொடுத்த பேட்டியில், இந்த தேர்தல் பணநாயகமாகிவிட்டது என விட முடியுமா? அதனை மாற்றி புரட்சியை ஏற்படுத்த வேண்டும் எனவும், தனது கட்சி அத்தகைய புரட்சியை சாதிக்க இருப்பதாகவும் கூறினார்.

அப்பேட்டியில் உயிர் , உழவு, உயிர் என வார்த்தை விளையாடி பேசும் இந்த ’புரட்சியாளர்’ இந்த ஓட்டுப்பொறுக்கி பணநாயகத்தில் அதிகாரம் அற்ற எம்.எல்.ஏக்களை பெற்று எதையும் சாதிக்க முடியாது என்பதை கேள்விகேட்ட பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்ல ஓட்டுபோடும் மக்களும் ஏற்றுக்கொண்டு வேறு வழியில்லாமல் தான் வாக்குச்சாவடிக்கு செல்கின்றனர் என்பதால் அதனை விளக்க முற்படவில்லை இப்பதிவில்.

ஆனால் புரட்சியை சாதிக்க போவதாக கூறும் சீமான் எத்தகைய கருத்துக்களை உடையவர் என பார்ப்பது தான் இப்பதிவு.

பிஆர்பியிடம் பணம் வாங்கிவிட்டு போலீஸ்காரர்கள் நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர் என்றும், தருமபுரியில் பேருந்து எரிவதை அணைக்கப்போவர்கள் அதிமுகவினர் என்றும், போலீசுகாரர்கள் வாங்குவது லஞ்சம் அல்ல அன்பளிப்பு என்றும், இறந்த போன பெரியாரை அழைத்து மேடையேற்றி  எம்ஜீஆர் பாராட்டு விழா நடத்தினார் என்றும், கூடங்குளம் அணு உலையினை ஒருநாள் முதல்வர் ஆக்கினால் மூடுவேன், கத்திபார்ப்பேன் 5 வருஷத்துக்கு இல்லைன்னா நமீதாவுடன் நடிக்க போய்விடுவேன், கனிம வள திருடன் வைகுண்டராஜன் எனது அப்பா , கல்வி கொள்ளையன் பச்சமுத்து எனது அண்ணன், சாதிவெறியர் ராமதாஸ் எனது ஐயா, முருகன் எனது பாட்டான் என்றும் , இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என தெருத்தெருவாக அதிமுகாவுக்கு தொடர்ந்து ஓட்டுக்கேட்டது நான் தான் என்றும் … இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்….!

இப்படிப்பட்டவர் முதல்வர் ஆனால் ஏற்கனவே பிஆர்பிக்கு ஆதராவாக தீர்ப்பு எழுதிய பூபதியை , ஜெயாவுக்கு ஆதரவாக தீர்ப்பு எழுதிய குமாரசாமியை தண்டிக்க நினைப்பாரா? ராம் மோகன் ராவை தண்டிக்க நினைப்பாரா? நினைத்தாலும் முடியாது என்பது யதார்த்தம், அது சீமானுக்கு தெரிந்தாலும் அப்படி சிந்திக்க கூட தன்னால் முடியாது என வெளிப்படையாக திருடர்களுக்கு சாதிவெறியர்களுக்கு, கல்வி கொள்ளையர்களுக்கு ஆதரவாக பேசவரும் இந்த தம்பி புரட்சியாளர் வெட்கம் இல்லாமல் மறுபுரம் பொய் வசனங்கள் அவிழ்த்துவிட முடியும் என்பதும் நமது இந்த கேடுகெட்ட ஜனநாயகத்தின் சிறப்பு அம்சம் கூட.

***************************************

ஆட்சிக்கு வந்தா பிஆர்பி-வைகுண்டராஜனை கைது செய்வேன்- ‘புரட்சியாளர்’ சீமான்.!

சீமான் அவர்கள் நியூஸ் 7 தொலைக்காட்சியில் கொடுத்த நேர்காணலில், சாதிவெறிக்கு திராவிட கட்சிகள் என்ன செய்ததது என கேட்டீங்களா? ஊழல் கட்சி – இனவெறிக்கு துணைபோன கட்சி என அதிமுக-திமுகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் சிபிஎம், சிபிஐ, பாமக என சொல்லிவிட்டு தமிழினவெறியர்கள் வருகிறார்கள் என அதிமுக, திமுகவை அழைத்தவர் வைகோ அவர்கள் என நேற்றைய  அம்மா வழிபாடு முதல் இன்றைய முருகன் வழிபாடு வரை அனைத்தையும் ‘மாறி மாறி எதிர்க்கேள்வி கேட்டு’ நியாயப்படுத்தினார் சீமான் அவர்கள்.

ஒரு நாளில் அணு உலையினை மூடுவேன், நமது வாக்கு நம்மை ஆளவா நாமே ஆளவா, சாதிவெறி பாத்துக்கோ ஆனால் வெளியில் பேசாதே என அவருடைய பல புரூடா கண்டுபிடிப்புகளை அம்பலபடுத்தி நாமும் எழுதிவிட்டோம். இருந்தாலும் மேற்கண்ட பேட்டியில் ஜெ குறித்தும், ஆட்சிக்குவந்தால் நாம் தமிழர் கட்சி என்ன செய்யும், கூட்டணி வைக்கமாட்டோம் என்றைக்கோ சொல்லிவிட்டு கட்சி ஆரம்பித்தோம் என்பது குறித்து சீமான் உதிர்த்த மொட்டுகள் மிகவும் கவனிக்கத்தக்கவை.. விவாதிக்க வேண்டியவை.

images

தீய ஆட்சி அகற்றி நல்லாட்சி நாங்கள் கொடுப்போம் , மாற்று என சொல்பவர்கள் அதிமுக என்ற ஊழல் கட்சியுடன் கூட்டணி வைத்தவர்கள் சீட்டுக்காக என சொல்லும் சீமானை கடந்த தேர்தல்களில் இதே ஜெயலலிதாவுக்காக ஓட்டுக்கேட்டீர்களே என செந்தில் மடக்கியபோது, சீமான் அதற்கு ஆமா கேட்டேன் அதிமுகவுக்கு மட்டுமா சிபிஎம், சிபிஐ, திமுக ஏன் காங்கிரஸ் கைசின்னத்திற்கு கூட ஓட்டுக்கேட்டேன் ஆனால் நான் சீட்டு பேரம் பேசி கேட்கவில்லை என விளக்கம் கொடுத்தார். அதற்கு அன்றைக்கு அது அவசியம் என பட்டது என அல்ஜிப்ரா கணக்கு போடுகிறார் சீமான்.

ஜெயலலிதாவுக்காக தருமபுரி மாணவிகளை கொளுத்திய அதிமுக காலிகளை யோக்கியர்கள் என சிந்தரிப்பது என்பது முதல் பக்க அதிமுக விசுவாசியாக அடையாளப்படுத்திக்கொண்டு போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்றும், புலி புலி என ஈழத்தமிழர்கள், அகதிகள் மீது அரசை ஏவிவிட்ட ஜெயாவின் அதிமுகவிற்காக  2011, 2014 ஓட்டுக்கேட்டு அதனை ஈழ மக்களுக்காக என சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்…!

 மக்கள் 3 முறை தேர்தலில் ஜெயிக்க வைத்து ஜெயலலிதாவை மக்கள் ஏற்றுக்கொண்டபின் நாம் ஜெயலலிதாவுக்கு எதிராக மேல்முறையீடு போவது தவறு என சில மாதங்களுக்கு முன்னர் கூட ஊழலுக்கு விளக்கம் கொடுத்த நீங்கள் இன்று அதிமுக ஊழல் கட்சி என தீர்ப்பு எழுதுவது ஏன்..?

எல்லாத்தையும் அடித்து நொறுக்குவோம், புதிதாக ஆரம்பிப்போம் என சொல்லிவிட்டு அதே கட்டமைப்பின் ஒரு அங்கமான தேர்தலில் பங்கெடுப்பது எப்படி சரியாகும், வெளிச்சம் இங்க தான் இருக்கு என தொலைத்த இடத்தைவிட்டுவிட்டு வேறு இடத்தில் தேடுவது அல்லவா இது, அரசு கட்டமைப்பின் ஒரு அங்கமான போலீசு துறையில் வேலைசெய்யும் போலீசு குறித்து இன்று விசாரணை இயக்குனருக்கு இருக்கும் அறம் கூட தெரியாமல், போலீசு நம்ம ஆட்கள் , லஞ்சம் கொடுப்பது டிப்ஸ் மாதிரி என போலீசுக்கு வக்காலத்து வாங்கி பேசும் நீங்கள் உடைத்தெறிய போகும் அரசு கட்டமைப்பு எதை?

தெரிந்து இருந்தாலே தேர்தல் மூலம் உடைக்க முடியாத அரசை நீங்கள் இவங்க ரொம்ப நல்லவங்க என சொல்லிவிட்டு எந்த வெங்காய கட்டமைப்பை அடித்து நொறுக்க போகிறீர்கள்..? கடனை தள்ளுபடி செய்து கல்வி, சுகாதாரம் கொடுப்போம் என சொல்லும் நீங்கள் பச்சமுத்து தமிழரின் கல்வி நிறுவனங்களை, மருத்துவமனைகளை என்ன செய்வோம் என சொல்ல மறுப்பது ஏன்? பச்சமுத்துகள்  இருக்கின்ற வரை அனைவருக்கும் பொதுவான கல்வி, சுகாதாரம் சாத்தியமா? சொத்து சேர்ப்பது ஏற்றுக்கொண்ட பின் ஏழ்மையை ஒழிக்க முடியுமா?

IJK

 பச்சமுத்துவையும், வைகுண்டராஜனை ஜப்தி செய்து மக்கள் உரிமையை, சொத்தை மீட்பேன் என சொல்லமுடியுமா சீமான் அவர்களே…? பிஆர்பியிடம் காசுவாங்கிய  போலீசு இன்று அவரை எதிர்ப்பது தவறு என வக்காலத்து வாங்கி நீங்கள் பிஆர்பி கைது கைது செய்து தமிழ்நாட்டின் மலைகளை மீட்பேன் என சொல்ல முடியுமா? ஒருவேளை தமிழனை தமிழன் கொள்ளையடிக்கலாம் என விட்டுவிடலாமா…?

seeman-cartoon

ஆக தேர்தல் மூலம் நீங்கள் புரட்சி என சொல்வது மக்களை ஏமாற்ற என்பதற்கு பச்சமுத்து குறித்தும் போலீசு, நீதிமன்றம், அதிகார மையம் குறித்தும் பேச மறுப்பதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்..?  இதெல்லாம் பேசுபவன் தேர்தலில் அதனை சாதிக்க முடியாது என ஆரம்ப கட்டத்திலேயே முடிவு செய்துவிடுவான்… தமிழனிவாதி தியாகுவிற்கு இருக்கும் அரசு குறித்த அறிவு கூட தங்களுக்கு இல்லையே என்பதல்ல அதனை சொல்லும் அறம் இல்லை.

bala-cartoons-seeman-20-5-13-e-trim

மூன்றாவதாக யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என்பது, கடந்த காலங்களில் 2016 ஜெயிக்க எவர் வேணும் ஆனாலும் வாங்க ஆனா தலைமை நாங்கதான்… ஏன் காங்கிரஸ் கட்சி கூட என் பின்னாடி வந்து நில்லு என இன்றைக்கு திமுக-காங்கிரஸ் கூட்டு போல ஜெயிப்பதற்கு எவனுடனும் சேரதயார் என சொன்னவர் நீங்கள், இதை தான் பாமக அன்புமணி சொல்றாரு இன்றைக்கு… அன்புமணியை ஏற்றுக்கொள் என்று.

ஆக சாதிவெறியர்கள் குறித்து, பச்சமுத்து-வைகுண்டராஜன்-பிஆர்பி போன்ற மாபியாக்கள் குறித்து துளி கூட கருத்து சொல்லாமல் நேற்றுவரை ஜெயா உள்ளிட அனைவருக்கும் வக்காலத்துவாங்கிவிட்டு இன்று காங்கிரஸை கூட என் பின்னால் வந்து நில்லு என முதல்வர் பதவிக்கு நீங்கள் ஒளிவட்டம் போடுவது கடைதெடுத்த பிழைப்புவாதம் அன்றி வேறென்ன?

Nanjil-Sampath

இதற்கு புரட்சி , கட்டமைப்பு என சொல்லாடல்களை பயன்படுத்துவது தான் சகிக்க முடியவில்லை…? பதவி , சொகுசான வாழ்க்கை வேணும் என்றால் அம்மா, அம்மா என நாஞ்சில் போல போய் திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லலாம்… இப்பவும் சொன்ன வசனங்களை தான் திரும்ப திரும்ப சொல்கிறீர்கள் ஆனால் அது மக்களின் விடுதலையை கேலி செய்வதாக உள்ளதே…!

பதிவின் தலைப்பை படித்தால் பொருத்தமற்று இருக்கிறதே என யோசிக்கலாம்… சீமான் தனக்கு ஓட்டுப்போட சொல்லும் காரணமும் இதைவிட பொருத்தமற்று இருப்பதால் தான் மேற்கண்ட தலைப்பு.

தொடர்புடைய பதிவுகள்

தருமபுரி மாணவிகள் எரியும்போது காப்பாற்றியவர்கள் அதிமுகாவினர் – சீமான்…!

திருடர்கள் தேர்தலில் ஜெயிச்சா ‘பரிசுத்த’ ஆவிகளாகின்றனர்-சீமான்…!

 

சரத்குமார் சிறந்த உழைப்பாளியாம் – ‘புரட்சியாளர்’ சீமான்…!

தமிழினத்தை ஆளப்பிறந்த ஒரேதமிழன் சீமான்- அல்ஜீப்ரா இதோ..!

Advertisements

பார்ச்சூனர் காரையும், டாஸ்மாக்கையும் தடை செய்…!

hqdefault

குடிநீர், ரேசன் முதல் லாக்கப் டெத் வரை அன்றாட மக்கள் பிரச்சனைகள் அனைத்தும் முதல்வர் தொகுதி உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும்  தீர்க்கப்படாமல் இருக்கும்போது மொத்தமாக அடையாள போராட்டம் நடத்துவது அல்லது வீடுவீடாக ஓட்டுக்கேட்டு வருவது இந்த இரண்டை மட்டும் பார்க்கும் முகஸ்டாலின் முதல் சீமான் கட்சி வரை அனைத்து ஓட்டுக்கட்சியினரின் செயல்பாடாக இருக்கிறது.

vaiko-pacha

மக்கள் பிரச்சனைகளை ஒரு கோடி உறுப்பினர் கொண்ட கட்சியும், ஆயிரக்கணக்கில் உறுப்பினர் கொண்ட கட்சியும் ஒரே மாதிரி அனுகுவதன் பின்னணி என்ன?

ஒன்றும் இல்லை மக்களுக்கு அதிகாரம் இல்லாத இந்த அமைப்பில் கவுன்சிலர் முதல அமைச்சர் வரை நல்லா கல்லா கட்டலாம். மாட்டிக்கிட்டாலும் சொத்து பறிமுதல் செய்யப்படமாட்டாது,  சிறிது காலம் கழித்து வேறு கட்சியில் ‘மக்கள் சேவை’ செய்யலாம் என்ற உறுதியான நம்பிக்கை தான் காரணம்..

vaiko_350_020914045507

நினைத்தவுடன் கட்சி மாற நாஞ்சில், சேகர்பாபு, பரிதி, வைகோ, குஷ்பூ… வகைறாக்கள் பயப்படாமல் இருப்பது, நினைத்தவுடன் நிலைப்பாடை மாற்றிக்கொள்ள சீமான் ( ஜெ ஆதரவு) , திருமா (காங்கிரஸ் முதல் கலைஞர் ஆதரவு),  ராமதாஸ் ( வன்னியர் ஆளனும்- மோடி ஆகனும்) போன்றவர்கள் சீறுவதும், லைபாய் தான் தெரியும் வாஜ்பாய் வர நாந்தான் காரணம் என்ற ஜெ முதல் & குஜராத் படுகொலை அது வேறுமாநில பிரச்சனை என்ற கருணாநிதி வரை வேறு வேறு கூட்டணி மாற தைரியம் அளிப்பதற்கும் மேற்கண்டநம்பிக்கை தான் அஸ்திவாரமே.

55845094.cms

ஒரு ஓட்டுக்கட்சிகாரனும் நாங்க வந்தால் பிஆர்பி- பச்சமுத்துவை தண்டிப்போம் சொத்தை பறிமுதல் செய்வோம் என எந்த வாக்கு உறுதியும் தருவது இல்லை, நல்லாட்சி தருவோம் என பொதுவாக தான் கொடுக்க முடியும்.

கடவுள் நம்பிக்கையை என்றைக்குமே கேள்விக்குள்ளாக்காமல் கோவிலுக்கு செல்வது போல இன்று திருடனுக்கும் ஆதரவு பறிகொடுத்தவனுக்கும் ஆதரவு என சொல்லிக்கொண்டு திரியும் மக்கள் பிரதிநிதிகளை என்றைக்குமே கேள்விக்குள்ளாக்காமல் அவர்களை தேர்தெடுக்க வாக்குச்சாவடிக்கு  போவது என்ற நிலைக்கு மக்கள் வந்து விட்டனர்.

கருவேலமரம் கெடுதிங்கிற வைகோவுக்கு ஜெயா குற்றவாளியினு தெரியாதோ..?

vaiko-pacha

இப்படியெல்லாம் கேட்க பிடாது…. மோடிக்கு ஓட்டுக்கேட்ட வைகோவிடம் பிட்பாக்கெட் கேஸ் பற்றி கேட்டால் எப்படி…? பிட்பாக்கெட் கேஸே கூடாது எனும்போது மேலே உள்ள பிரச்சாரத்தை பற்றியெல்லாம் யார் கேட்க தகுதி இருக்கு… 

***************************

jayalalitha_vaiko_20060320

 

மோடிக்கு ஓட்டுக்கேட்ட வைகோ இன்று விஜயகாந்த்-தால் மாற்றப்போவது எதை..?

இன்று மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்தால் தமிழக அரசியலில் மாற்றம் வரும் என வைகோ அழைப்பு விடுத்து உள்ளதாக செய்தி வந்து உள்ளது.

பதவி சுகத்திற்காக சாதிவெறி அன்புமணி, கழிசடை அரசியல்வாதி விஜயகாந்த் ஆகியோருடன் இணைத்து இதே இந்துமதவெறி பாசிஸ்ட் மோடிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஓட்டுக்கேட்ட வைகோ அவர்கள் தான் இன்று விஜயகாந்த் அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.

vaiko_350_020914045507
19 மாதம் ஜெயிலில் வைத்த ஜெயலலிதாவுடன் வெறும் 7 எம்.எல்.ஏ சீட்டுக்காக கூட்டணி வைத்த வைகோ, கலைருடன் மீண்டும் தேவைப்படும்போதெல்லாம் கூட்டணிக்கு போவதுபோல சீன் போடும் வைகோ, நடைபயணத்தில் இதே ஜெயலலிதாவை பார்க்கும் போது சிரித்து பேசியது அவர் புகழ் பாடிய வைகோ தான் இன்று மோடியை ஜெயிக்க வைத்து நாடு நாறிப்போக தானும் தெரு தெருவாக கூவியது குறித்து குற்றவுணர்வு இல்லாமல் இன்று விஜயகாந்த்-க்கு அழைப்பு விடுக்கிறார்.

இவர் தான் பகத்சிங் என புரட்சியாளார்கள் குறித்து புத்தகம் எழுதுகிறார் என பாராட்டுகின்றனர் சிலர். மோடிக்கு , விஜயநாந்த் அரசியலை கூட புரிந்து கொள்ள வக்கற்ற என்பதை விட தெரிந்து கொண்டே மக்கள் ஏய்ப்பது என்ற சிந்தனையில் இருக்கும் வைகோ தான் மறுபுறம் மக்கள் நலன், தமிழக நலன் என உதார் விடுகிறார்.

2002 குஜராத் இனப்படுகொலை சமயத்திலேயே குஜராத்-க்கு சென்று மோடிக்கு பாராட்டு கூட்டம் நடத்தி பேசியவர் தான் இந்த வைகோ என்பது தான் இதில் கூடுதல் சிறப்பு நம்ம வைகோ அவர்களுக்கு….

இப்படி தேசப்பணியில் ஈடுபடும் வைக்கோ அவர்கள் தான் தனது 50 ஆண்டு அரசியல் வாழ்க்கை என பொன்விழா நடத்த அழைப்பிதழை எடுத்து விமானத்தில் சென்று பல மாநில தலைவர்களை சந்தித்து பேசிவிட்டு திரும்புகிறார்.

இதைவிட கேப்மாரித்தனம் உலகில் இருக்க முடியுமா?

நாஞ்சில்:‘பணத்துக்கு படியும்’ கிரிமினலின் புத்தககண்காட்சி சிறப்புரை ‘படித்தால் படியும்’…!

capture

பணத்துக்காக மக்களின் வாழ்வை சூறையாடும் ஓட்டுக்கட்சிக்கு அடியாள் வேலை செய்யும் இந்த  கிரிமினலுக்கு என்ன படிப்பின் முக்கியத்துவம் தெரியும்…!

எந்த புத்தகம் படித்து  ‘சின்னம்மா’ காலில் படிந்தார் என இந்ந அடிமை சொல்ல வேண்டாம்… இவரை அழைத்து வந்தவர்களாவது சொல்வார்களா..?

இவரின் அயோக்கியத்தனமான அறம் குறித்த நமது சமீபத்திய பதிவு இதோ…

ராம்மோன்களை நியாயப்படுத்த இன்னோவா நாஞ்சிலை தடுக்கும் அறம் – மிக ஆபத்தான வக்கிரத்தின் உச்சம்…!

 

 

அருண்குமார் தவே: மேகி உள்ளிட்ட கார்ப்பரேட்களின் அருவருடிகள்..!

அதிக ரசாயனம் காரணமாக மேகி தடை செய்யப்பட்டது குறித்து நேற்றைய நேர்பட பேசு நிகழ்ச்சியில் விவாதம் நடைபெற்றது.

அதில் மருத்துவர் ஒருவர் உடலுக்கு கெடுதல் என தெரிந்தபின்னர் நாம் இதுபோன்ற உணவுப்பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து விட்டு இடியாப்பம் போன்ற இயற்கையாக செய்யக்கூடிய பொருட்களுக்கு மாறுவதே நல்லது என சொல்லி முடிக்கவில்லை அதற்குள் அருண்குமார் தவே என்ற பொருளாதார நிபுணர் என்றும் பின்னர் பாஜக ஆதராளர் என்றும் சொல்லிக்கொண்டு வரும் கார்ப்பரேட் அருவருடி துள்ளிகுதித்து அப்படியெல்லாம் மாற முடியாது,

மாம்பழத்தை கூட கார்பைடு பழம் போட்டு பழுக்க வைக்கிறான், தர்பூசணியை ஊசி போடுறான் என ஆரம்பித்து ரோட்டு கடை அசுத்தமின்மை, காற்று தண்ணீர் மாசு, டாஸ்மாக் கடையில் குடிப்பது போல மேகி போன்றவைகளும் இன்றைய சூழலில் தவிர்க்கமுடியாதது என்றும்,

காரில் ஒரு குறிப்பிட்ட பகுதி தவறாக உற்பத்தி செய்யப்பட்டு விற்றபின் மீண்டும் அதனை வாங்கிக்கொண்டு புது கார் கொடுப்பது போல மேகி மீண்டு வரும் என கூறினார்.

இப்படி குடிப்பது, காரை திரும்ப வாங்கிக்கொள்வது போன்றவற்றை மேகி தடையுடன்  ஒப்பிட முடியுமா என நிகழ்ச்சி நெறியாளர் சுட்டிக்காட்டி விவாதத்தை தொடர்ந்தார்.

இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டியது பொருளாதார நிபுணர் என்ற போர்வையில் அருண்குமார் தவே போன்ற கார்ப்பரேட் அடியாட்கள் கார்ப்பரேட் நலனுக்காக மோடி அரசையும் அதனுடைய காவி நடவடிக்கைகளையும் ஆதரித்து இதற்கு முன்னர் பலமுறை வெட்கம் இல்லாமல் தொலைக்காட்சிகளில் பேசியதையும் இன்று நெஸ்லேவுக்காக ஆவேசப்படுவதையும் இணைத்து பார்த்தால் புரியும்.

பொதுவான கார்ப்பரேட் ஆதரவு அதற்காக  காவி ஆதரவு என பேசும் போது பொறுமையாக அதனை விவாதிக்கும் அருண்குமார் தவே போன்ற அடியாட்கள் நெஸ்லே போன்ற மிகப்பெரிய, குறிப்பிட்ட கார்ப்பரேட் கொள்ளை பாதிக்கப்பட போகிறது என்ற நிலை  வரும் போது எந்த அளவுக்கு வேகமாக அதனை தடுத்து நிறுத்த முற்படுகிறது என்பதை தான் நாம் கவனிக்க வேண்டும்.

போபாலில் ஒரே இடத்தில் மிகப்பெரிய மனித படுகொலையினை செய்த முதலாளித்துவ இலாபவெறி இன்று இதுபோன்ற உணவு, மருத்துவம் போன்ற அன்றாடம் மக்கள் உயிர்வாழ அடிப்படையான விஷயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை ஏன் எதற்காக சாகிறோம் என தெரியாமல் தினந்தோறும் கொன்று வருகிறது எனபதே நிதர்சன உண்மையாக இருக்கிறது.

இதனை நாம் உணரும் போது தான் கார்ப்பரேட்களை மட்டுமல்ல அவர்களுக்காக நடத்தப்படும் அரசையும் புரிந்துகொள்ள முடியும்.

ஒருநாள் முதல்வராக்கினால் அணு உலையினை மூடுவேன் – சீமான்…!

‘தமிழக முதல்வர் நாற்காலி’ : சீமானின் ‘பெருங்கனவு’ …!

ரோட்டில் குப்பை போடுபவனை கண்டால் கோபமாகி விடுவேன்’ என தம்பி படம் எடுத்து பின் விகடனில் பேட்டி கொடுத்த ஒரே ‘புரட்சியாளர்’

தம்பி என்கிற ’நாளை நமதே பாகம் 2’ என்ற படத்தை எடுத்துவிட்டு புரட்சி, சே குவேரா என வீரவசனம் பேசி வந்த சீமான், தொடர்ந்து வந்த தேர்தல்களில் ஜெயலலிதாவும் அதிமுகவும்; காங்கிரஸு, திமுகவிற்க்கு மாற்று & 7 பேர் விடுதலைக்கு ‘போராடக்கூடிய’வர் என சூறாவளியாக பிரச்சாரம் செய்வதும், அதே நேரத்தில் பச்சைத்தமிழர்’ பச்சமுத்து, அண்ணன் வைகோ, ’கொங்கு ஐயா’ ஈஸ்வரன் போன்றோர்கள் பாஜகவுடன் பிழைப்புக்காக கூட்டணி இருந்தாலும் அவர்கள் நிற்கும் தொகுதிகளில் எதிர்த்து பிரச்சாரம் செய்வது இல்லை என ‘பச்சையாக’ பிழைப்புவாதியாக மக்கள் மத்தியில் அம்பலமாகிப்போனார் என்றால் அது மிகையில்லை.

இடிந்தகரை போராட்டத்துக்கும் ஆதரவு, வைகுண்டராஜன் வீட்டு திருமணத்தில் பங்கேற்பு, பி.ஆர்.பழனிச்சாமியிடம் காசு வாங்கிட்டு அவரையே இன்று எதிர்க்கும் அதிகாரிகள் என பி.ஆர்.பிக்கு வக்காலத்து என இவரின் உள்ளடி செயல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

எவனோ ஒருவன் என்ற சமுத்திரகனியின் நிமிர்ந்து நில் படத்தை அன்றே எடுத்தவர். விஜயின் அடுத்த படத்தை எடுக்க ஆசை என பேட்டி கொடுத்த ’நேர்மையான கோபிநாத்’ என்றும் இவரை சொல்லலாம்.

தற்போது 2016 முதல்வர் பதவியில் தான் (சீமான்) அமர வேண்டும் என்ற ஒரே ’உலகமக மாற்றத்துக்கு’தேர்தலில் களமாட போவதாக பிரச்சாரம் செய்துவரும் இவரின் திருவிலையாடல்கள் தமிழன் மதம், முருகன் முப்பாட்டன், வீரத்தமிழர் முன்னணி என நடந்துவருவது அனைவரும் அறிந்த ஒன்று.

சரி நாட்டின் இன்றைய நிலைமைக்கு என்ன காரணம் என இவரின் பேட்டியில் பார்த்தோமானால், கல்வியிலிருந்து குடிக்கிற தண்ணி வரை காசு இருக்குறவனுக்கு என்ற தனியார்மய கொள்கை என காரணமாக இருக்கு, திமுக, அதிமுக மாறி மாறி வந்தாலும் கொள்கையில் மாற்றமில்லை என கூறுகிறார், சரி அப்ப என்ன தீர்வு என்றால் ஒரு தமிழன் முதல்வர் ஆனால் தான் தமிழனின் வலி தெரியும் , அந்த தமிழனும் நானாகத்தான் இருக்கனும் என ஒரே போடாக போடுகிறார்.

இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரின் வெற்றி பெற காரணமான தேர்தலையும், அவரின் அதிகாரத்தையும் கேள்வி கேட்கும் சீமான், இந்தியா தேசத்தின் தமிழக முதல்வராக மட்டும் வந்து விட்டால் விடுதலை அடைந்துவிட முடியும் என கூறுவது ஏற்க முடியாமா என அவர் விளக்குவது இல்லை..

பிரச்சனைக்கு காரணம் கல்வி தனியார்மயம், மருத்துவம் தனியார்மயம் தான் காரணம் என்றால் பச்சமுத்து போன்ற கல்வி கொள்ளையர்களுக்கு எதிராக, அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் அரசுக்கு எதிராக போராடுவது என்பதை விட்டுவிடுவது என்பது மட்டுமல்ல அது குறித்து பேசவே மறுத்துவிட்டு, மறுபுறம் தமிழன் ஆளாதது தான் காரணம் என முதல்வர் பதவிக்கு ஒளிவட்டம் போடுவது ஏன்?

சாதிவெறி தாக்குதலுக்கு என்ன சொல்றீங்க?   என்றால் அதெல்லாம் சின்ன பிரச்சனை, தமிழன் நினைச்சுகிட்டா சரியாகிடும் என போதையீற்றுகிறார் இந்த தேவர்சாதிவெறியர். ஐயா தேவர், ஐயா ராமதாஸ் என எச்சில் ஒழுக பேசுபவன் எவனுக்காவுது கயர்லாஞ்சி முதல் பரமக்குடி, தருமபுரி வரை ஆதிக்க சாதிவெறியின் கொடுமையினை கிஞ்சித்தும் உணர முடியுமா என்றால் முடியவே முடியாது என்பது தான் பதிலாக இருக்க முடியும்.

எப்படி பெரியார், அம்பேத்கார், மார்க்ஸ் படத்தை மாட்டிக்கொண்டு நாங்கள், ‘பாதிக்கப்படும் பெரும்பாண்மையான வன்னியர்களின்’ வாழ்க்கைக்கு விளக்கு ஏத்த வந்த மாற்று’ என ஆதிக்க சாதிவெறியினை கட்டவிழ்த்துவிட்டு அதிகாரத்துக்கு தன் குழந்தையை கொண்டு வரத்துடிக்கும் ராமதாஸ் போன்றோர் சாதிவெறி அரசியல் நடத்துகிறாரே அதுபோல அதே பெரியார், அம்பேத்கார் என போட்டுகொண்டு சாதிவெறியை கேள்விக்குள்ளாக்காமல் தமிழினவெறி என்ற அரசியல் மூலம் முதல்வர் பதவியை அடைய துடிக்கிறார் சீமான்.

அதனால் தான் அரை மணி நேரத்தில் ஐ.நாவில் பேசவிட்டால் ஈழம் வாங்கி தந்து இருப்பேன் என பேட்டி கொடுப்பதும், பின்வரும் வீடியோவில் ஒரு நாள் முதல்வர் ஆக்கி பாருங்கள் அணு உலையினை மூடிக்காட்டுகிறேன் என உதார் விடுவது எல்லாம். சர்வலோக நிவாரணியாக இவர் நிறுத்தும் முதல்வர் பதவி குறித்த பிம்பத்தை பார்த்து ‘இன்றைய’ தமிழக முதல்வர் ஓபிஎஸ் மட்டுமல்ல, தமிழக மக்களும் சிரிப்பார்கள் என்பது நிச்சியம்.

 

கடந்தவாரம் ‘பச்சைதமிழர்’ தொலைக்காட்சியிலேயே தனது திட்டத்தை’ விள்க்க முடியாமல் திணறிய சீமான் இறுதியில் தமிழனுக்கு என ஒரு வாக்கு இருக்குதால் இல்லையா என்பதற்கு தான் இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளரா நிற்கிறேன என்பதும் ( இதே வெங்காய தேர்தலில் விக்னேஷ்வர் நின்றால் அது தக்காளி சட்னி) சரி அப்படி நின்று உங்களை தமிழக மக்கள் ஜெய்க்க வைக்கவில்லை என்றால் என கேட்கும் போது, மீண்டும் கத்துவேன் மக்களிடம் பிரச்சாரம் செய்வேன் என கூறும் சீமான், மேற்கண்ட கூடங்குளம் உரையின் இறுதியில் ஐந்து வருஷம் கத்தி பார்ப்பேன், எவனும் கேட்கலையா , நயன்தாரா நமீதா என அவங்களோடு சினிமா நடிக்க போயீடுவேன் என மிரட்டுகிறார் இந்த ’புரட்சியாளர்’.

 
 

அனைத்தையும் தனியார்மயமாக்கும் அரசின் போக்கு, இந்துமதவெறி பாசிசம், ஆதிக்க சாதிகளின் அக்கிரமம் என எதையும் பேசாதே என்னை ஒரு நாள் முதல்வர் ஆக்கு…. அப்புறம் பாரு ஒரு நாளில் அணு உலையை மூடுறேன்…. என உதார் விடும் இவர்தான் மறுபுறம் பிழைப்புவாதிகளையும்  சாதிவெறியர்களையும், கல்விக்கொள்ளையர்களையும் ஐயா என பாசத்தோடு அழைக்கிறார். இப்படி பல்டி குளியலே போடும் இவரு மட்டும் தான்  தமிழன் வலி உணர்ந்த ஒரே தமிழர் என்று முதல்வராக்க சொல்வது ஒன்றே போது வாக்குசீட்டு அரசியல் டவுசரின் யோக்கியதை என்னவென்று மக்கள் அறிந்து கொள்வதற்கு..

’உலகம் சுற்றும் வாலிபன் மோடி’ சொல்றது வைகோ

மோடி ஆட்சி மிக மோசமாக மக்கள் விரோத ஆட்சியாக இருக்கிறது என தற்போது பேசும் வைகோவின் லேட்டஸ்ட் கருத்து ‘உலகம் சுற்றும் வாலிபனா’ மோடி இருக்கிறார் என்பது….

மீனவர் பிரச்சனையோ, கச்சதீவோ, காவேரி பிரச்சனையோ எதிலேயும் ஆட்சிக்கு வரும் முன்னர் பாஜக தமிழக மக்களுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தது இல்லை, எதிராக தான் பேசி உள்ளது.

மோடியும் மக்கள் நல அரசாக குஜராத்-ல் ஆட்சி செய்யவில்லை என்பது உலக அரசியலை கரைத்து குடித்த நம்ம வைகோவிற்கு நன்றாகவே தெரியும்.

தன்னுடைய பிழைப்புவாத பொறுக்கி அரசியலுக்காக விஜயகாந்த், ஜெயலலிதா, ராமதாஸ் என யாருடனும், எப்பவேணாலும் கூட்டணி சேரக்கூடியவர்களாக தான் அன்புமணி முதல் வைக்கோ வரை உள்ளனர்.

இதுல மக்கள் மறதி நோயில் இருப்பது போல 6 மாதம் ஒரு முறை கூட்டணி மாறும்போது எல்லாம் புரட்சியாளர்கள் போல இந்த ஓட்டுப்பொறுக்கி பிழைப்புவாதிகள் கொடுக்கிற பில்டப்பு இருக்கே தாங்க முடியலை.

ஆஸ்ரம் பள்ளி: நிஜத்தில் ரஜினி ‘சிவாஜி’ அல்ல சுமன்(ஆதி) தான்…!

ashram-rajini-school 1

அங்கீகாரம் இல்லாமல் 4 ஆண்டுகளாக ஆஸ்ரம் பள்ளியினை ரஜினி குடும்பம் நடந்தி வரும் செய்தி வெளிவந்து உள்ளது.

பல லட்சம் கட்டணமாக மாணவர்களிடம் கொள்ளை வசூல் செய்யும் இப்பள்ளிக்கு அங்கீகாரம் கூட வாங்காமல் நடத்தும் இதே ரஜினி தான் சினிமாவில் சிவாஜி படத்தில் ஏழைகளுக்கு இலவசமாக கல்வி நிலையங்களை நடத்த போராடுவதாகவும், அதற்கு லஞ்சம் கொடுத்து கஷ்டப்படுவதாகவும் காட்டியிருப்பார்கள். ரஜினிக்கு எதிராக சதிசெய்யும் கல்விக்கொள்ளையனாக ஆதி(சுமன்) நடத்தியிருப்பார்.

ashram-rajini-school

ஆனால் நிஜத்தில் ரஜினி சிவாஜி அல்ல, சுமன் (ஆதி) தான் என்பதை தான் மேற்கண்ட ஆஸ்ரம் பள்ளி கட்டணமும், அங்கீகார குறித்த செய்தியும் காட்டுகிறது.

திரையில் மட்டும் தமிழ்மக்கள், தமிழ்பால் என கதைவிடும் ரஜினி நிஜத்தில் தமிழ்மக்கள் ரத்தத்தை உறுஞ்சும் அட்டையாக இருக்கிறார்.

இன்றைய அரசியல் கட்சியிலும் மத நிறுவனங்களிலும் சினிமா பிரபலங்களிலும் கல்விக்கொள்ளையர்களாகவும், அவர்களை ஆதரிப்பவர்களாகவும் இருக்கும் நிலையில் இவர்கள் மூலம் நமக்கு தீர்வு வரும் என யோசிப்பது எப்படி சரியாகும்…?

காஞ்சனா : ராகவேந்திரா மனதில் பேய் வருமா….?

kanchana-2

ரஜினியின் எளிமை, 3 மாதத்துக்கு ஒரு படம் எடுக்க முடியும் என்றாலும் பணத்தின் மீது ஆசைப்படாமல் இமயமலைக்கு சென்றுவிட்டு ஆண்டுக்கு ஒருபடம் எடுப்பது என, முக்கியமாக அவரும் ராகவேந்திரா பக்தராக இருப்பது என ரஜினியின் தீவிர பக்தராக காட்டிக்கொள்பவர் ராகவா லாரன்ஸ்.

மறுபுறம் லாரன்ஸ் அனாதை குழந்தைகளுக்கு பள்ளி நடத்துவது பார்ப்பதற்கு மிகவும் எளிமையானவராக ரஜினி போல தோற்றத்தை ஏற்படுத்தி வருபவர்.

ஆனால் தொடர்ந்து முனி, காஞ்சனா, காஞ்சனா2 என பேய், பில்லி, சூனியம் என படம் எடுப்பது எதைக்காட்டுகிறது. ராம.நாராயணன் போல அம்மன் படம் எடுப்பது போல தொடர்ந்து இவ்வாறு படம் எடுப்பதன் நோக்கம் என்ன?

 ‘பணம் மட்டுமே நோக்கம்

எப்படி எளிமையின் ரஜினி லட்சம் ரூபாய் வாடகைக்கு விடும் கல்யாண மண்டபம், லட்சக்கணக்கான ரூபாய் கட்டணம் வசூலிக்கும் ஆஸ்ரம் பள்ளி, இது இல்லாமல் பலவித கர்நாடக மாநிலத்தில் முதலீடுகள் என ஒரு துளி வியர்வைக்கு ஒருபவுன் தங்ககாசு கொடுத்த தமிழகம் என தமிழகம், தமிழக மக்கள், தமிழ்பால் என ஏமாற்றுகிறாரோ, அதுபோல பேய், சூனியம், லட்சுமிராய், டாப்சி நடனம் என மூடத்தனத்தையும், கவர்ச்சியையும் காட்டி அதை குடுப்பத்தோடு பார்க்கும் திரைப்படம் என மக்களை அசிங்கப்படுத்தி கல்லா கட்டும் வேலைதான் லாரன்ஸ் படத்தின் பின்னணி.

பெரியார் மண்ணில் கமர்சியல் என்ற போர்வையில் நச்சுகருத்தினை ராகவேந்திர பக்தர் லாரன்ஸ் பரப்பி வருகிறார்,

ராகவேந்திரா பக்தன் மனதில் எப்படி பேய், டாப்சி வரும்…?

வரும் என்றால் அது எப்படி கடவும் ஆன்மா, இமயமலை என மறுபுறம் சிந்திக்கும்….?

இதற்கு பதில் லாரன்ஸே சொல்கிறார்…

 ‘எனக்கு ரஜினி மிகவும் பிடிக்கும்’