திமுக Boycott ஜனநாயகம் – மக்கள் Boycott தீவிரவாதமா..?

 

 

குமாரசாமியால் விடுதலை வாங்கி ஆர்.கே.நகரில் 2015 ஜெயலலிதா போட்டியிட்டபோது அங்கே ஜனநாயகம் மதிக்கப்படாது என்றும் அதனால் அந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக திமுக அறிவித்தது.

குமாரசாமி தீர்ப்பு தப்பு என இன்று உச்சநீதிமன்றம் சொல்லித்தான் திமுகவுக்கு தெரியுமா? இல்லையே அன்றே தெருதெருவாக போய் ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்து இருக்க வேண்டியதுதானே?

இன்று ஜனநாயத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் தங்களை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் Mrஸ்டாலின் அவர்கள் அன்று 2015-ல் இல்லாத ஜனநாயாகம் எப்படி 2017 வந்தது என விளக்க முடியுமா?

அன்று ஜனநாயகத்தின் மீது திமுக நம்பிக்கை வைக்காமல் யாருக்கும் ஆதரவு கூட கொடுக்காமல் இருந்ததன் பின்னணி விளக்க முடியுமா?

இடைத்தேர்தல் கூட ஜெ உயிருடன் இருந்தால் ஜனநாயகம் கசக்கும்… இல்லாதபோது இனிக்குமா?

+++++++++++++++++

எவன்வந்தாலுங்கிறிங்க… அப்ப என்ன சசி.. பன்னீரு…!

நம்பர் ஒன் குற்றவாளியின் வாரிசு நம்பர் டூவா இல்லை நம்பர் ஒன் உடன்  இருந்த நம்பிக்கைக்குரிய பன்னீரா என ஒரு வாரமாக வாய் கிழிய ஆபாசத்தை அலசும் ஊடகங்களும், அப்படியே அலச பழக்கப்பட்டு போன ஜனங்களும்  இருப்பதை பார்க்கும் போது நந்தினியின் சாதிவெறி கொலையாளிகளை, ஹாசினி கொலைகளை ஊக்குவிக்கும்  பாலியல் சமுதாயத்தை மாற்றுவது என்பது எத்தகையதொரு  மிக கடினமாக பணி என்பது தெரிகிறது.

( ஜெயா சசிக்கு எதிராக போட்ட வீடியோவை டெலிட் செய்து விட்ட சுப்பனின் இன்னொரு விடியோ இது)… தீர்ப்பு வைந்தவுடன் திருந்திய எம் எம்ல் ஏ போல சுப்பன் திருந்திவிட்டார் போல.

மேலே உள்ள வீடியோவில் சுப்பன் என்பவர் ஒரு முதல்வரையே 75 நாள் வைச்சு செச்சு அது குறித்து ஒரு ரகசியமும் கசியாமல் பார்த்து கொண்ட சசி, ஜெயுடன் சிறைக்கு போன சசி என சசி முதல்வர்  ஆக வேண்டிய காரணத்தை  அடுக்குகிறார்.

அடுத்தது சசி எதிர்ப்பு … இதற்கு வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றன.
அதில் ஒன்று

 

அதாவது சசி ஒரு மாபியா, ஒரு கவுன்சிலாராக கூட நிக்கலை,பன்னீரு எளிமை என ஒரே பல்லவி தான் எல்லாத்திலேயும்.
இதில் சசி ஆதரவு, பன்னீரு ஆதர்வு என சொல்லும் பெரும்பாண்மையினர் ஒன்றுக்கொள்ளும் ஒரு விசயம் எவன் வந்தாலும் எதுவும் ஆகப்போறது இல்லை என்பது.

இதோ ஓட்டுப்போட்ட மக்களை தே… மகன் என திட்டும்  அம்பத்தூர் அதிமுக எம்.எல்.ஏ.

 

இவன் மட்டும் அல்ல சேகர் ரெட்டி முதல் ராம மோகன் ராவ் வரை ஒருவனையும் இந்த சட்டத்தை கொண்டு ஒரு மயிரைக்கூட புடுங்க முடியாது.

அம்பத்தூர் எம் எல் ஏ வை தண்டிக்க அடுத்த எலெக்சன் சரி சேகர் ரெட்டி, ராம மோகன் ராவை தண்டிக்க என்ன செய்ய போகிறோம்….?

 

75 நாளாக ஒரு முதல்வரை வைச்சு செய்ய எய்ம்ஸ் , பிரதமர்  முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் என அனைத்து அதிகாரங்களும் மொத்தமாக வேலை செய்து உள்ளது அல்லது முறையான வேலை செய்யாமல் உள்ளது எனும் போது மொத்த கட்டமைப்பும் அயோக்கியத்தனமானது என புரியவில்லையா

இதுல என்ன அடுத்த எலெக்‌ஷன், நல்லவனுக்கு ஓட்டு..?

எந்த நலலவனை கொண்டு தண்டிக்க போறோம்…?

பன்னீரு சிம்பிள்….. ஐயா இந்த பன்னீரை விட சிம்பிளு எங்க நல்லகண்ணு. பன்னீராவது இன்னோவா எங்க நல்லக்கண்ணு அதை விட சிம்பிள் அம்பாஸிடர் தான் போராரு, நோக்கியா 1100 போன்ல பேசுறாரு,,, இதெல்லாம் ஒரு தகுதியா? 

அதே நல்லக்கண்ணு 1100 ல ஜெயலலிதாவிடன் 2 சீட்டு வாங்க எப்ப வரட்டும் என பேசும் போது  நம்பர் 1 குற்றவாளியை அங்கிகரித்த பின் என்ன சிம்பிள்…நோக்கியா 1100.????

தருமபுரியில் அதிமுக காலிகள் 3 மாணவிகளை எரிக்கவில்லை என பொய் பேசி, நேற்று வரை அம்மாவுக்கு ஓட்டு கேட்ட சீமானும் நம்பர் 1 குற்றவாளியிடம் என்ன வாங்கிக்கொண்டு கத்தினார் என உங்களால் அவர் சட்டையை பிடித்து கேட்டும் அமைப்பு இருக்கிறதா நம்மிடம்..?

போதை தவறு எனும் போது அது மிடாஸ் சரக்கா ஜெகத்ரட்சன் சரக்கா  என விவாதிப்பது என்ன நேர்மை….?

கொள்ளை குற்றவாளி தப்பு என்றால் அதில் நம்பர் 1  குற்றவாளி ஆதரவு  பன்னீரு, சீமான், வைகோ, நியூஸ் 7 …. என நீளும் பட்டியல் நல்லவங்களா? இல்லை நம்பர் 2 குற்றவாளி ஆதரவு சசி, சுவாமி, சிபிஎம், சுப்பன்… என நீளும் பட்டியல் நல்லவங்களா? இப்படி விவாதிப்பது ஆபாசம் என தெரியலை…

தமிழகத்தில் இப்போது நிலையான அரசு இல்லாம மக்கள் பாதிக்ப்பட்டு வருகிறார் என முக ஸ்டாலின் வருத்தப்படுவதையே எடுத்து கொள்ளுவோம்…

நந்தினி ஆதிக்கசாதிவெறி கொலை முதல் ஹாசினி கொலை வரை எந்த கொலை நடந்து இருக்காது, இல்லை எந்த கொலைகாரர்கள் தண்டிப்பட்டு இருப்பார்கள் நிலையான அரசு இருந்திருந்தால்….!

120 ரூபாய் ரேசன் பொருளுக்கு ஆதார் கட்டாயம், தெருவுக்கு 2 டாஸ்மாக், விண்ணை முட்டும் பருப்பு, அரிசி விலை, ஆதார் இல்லாதவனுக்கு 120 ரூபாய் மானியம் இல்லை, வாங்குகின்ற 71 ரூ பெட்ரோலில் வரிக்கொள்ளை ரூ35 , அரசு ஆஸ்பத்திரியில் ஆதார் கட்டாயம், விவசாயிகள் தற்கொலை, திரும்பிய பக்கமெல்லாம் ஜேப்பியார் – பச்சமுத்து போன்றவர்களின் கல்வி கொள்ளை, நிமிடத்துக்கு ஒரு பார்ச்சுனர் காரில் பறக்கும் கறை வேட்டிகள்….

இதில் எந்த ஆணியை புடுங்க ஓட்டு, மக்களுக்கு இதை விட்டால் வேறு வழி இல்லை என்ற உங்க  ‘ஜனநாயகத்தை’  நினைக்கும் போது ….

இந்த ஓட்டுப்போட்டு ஒரு திருட்டை அங்கீகரிக்கவில்லை என போன வாரம் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி உனக்கு இந்த அரசை கேள்வி கேட்கும் தகுதியில்லை என சொன்னதை நாம் நினைவு படுத்தி பார்க்க வேண்டும்.

ஓட்டுபோட்டால் தான் அரசின் தவறை கேள்வி கேட்க முடியும்  என சொல்வது மூலம் , நாம் ஓட்டுப்போடவில்லை என்றால் தான் இந்த தவறான  அரசை மாற்ற முடியும் என நமக்கு உரைக்கவில்லை…!

நீங்கள் போடும் ஓட்டு தான், டாஸ்மாக்கை மூடனும்மா அதை தேர்தலில் செய் மக்களை கலைந்து போக சொல்கிறது…

நீங்கள் போடும் ஓட்டு தான், நான் ரெண்டு முறை முதல்வர் ஆக இருந்தவள் என பெங்களூரு கோர்ட்டில் ஜெயா  தன்னை நல்லவர் என காட்டிக்கொள்ள ஆதாராமாக காட்டப்படுகிறது….

நீங்கள் போடும் ஓட்டு தான், நந்தினி, சங்கர், இளவரசனை கொன்ற ஆதிக்கச்சாதிவெறியர்கள் சுத்ந்திரமாக் நடமாட , கட்சி நடத்த அனுமதிக்கிறது….

……
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்…

ஆக முதலில் திருடர்களை அங்கீகரிப்பதை நிறுத்துவோம்…. இல்லை மாட்டேன் என பேசுபவர்கள் நீங்கள் என்றால் உங்கள் ஓட்டால் சேகர் ரெட்டி, ராம் மோகன் ராவின் ஒரு மயிரை புடுங்கிவிட்டோம் என ஆதாரம் காட்டிவிடுங்கள் …?

சரி ஓட்டுபோட்டவர்களை தே… மகன் என திட்டிய அம்பத்தூர் எம் எல் ஏ வை தண்டிச்சுட்டு அதாவது எம்.எல்.ஏ எலெஷனில் அடுத்த 4 வருசன் கழித்து  தண்டிப்பது இல்லை, இப்பவே அவன் பதவியை பறித்து சிறையில் அடைத்து காண்பிக்கனும்…?

இது எதுவும் இல்லாமல் கிணறு வெட்டுன ரசீது இருக்கு என பார்த்திபன் மெரினாவில் நின்று கத்துவது போல பில்டப் கொடுக்காமல் ஒதுங்கி கொள்ளவும்..!

Advertisements

டோல்கேட்-ல் போகும் டுவீலர்காரரும் – விஜய் மல்லையாவும் ….!

டோல்கேட்-ல் டூவீலரில் போகும் லட்சக்கணக்கான சாதாரண ஏழை எளிய மக்கள் பணம் கொடுக்காமல் போகும்பாதையினை கவனித்தீர்கள் என்றால் அந்த பாதை டோல்கேட்டின் மிக ஓரமாக,  மிக நெரிசலாக, ஒரே ஒரு பாதை மட்டும், ரோடு சரியாக தார் போடாமல் ரோடேஇல்லாமல் குண்டும் குழியுமாக இருப்பதை பார்க்கலாம்.

ஆனால் பணம் கட்டி போகும் வாகனங்கள் நேர் ரோடு, அதிக பாதை, ரோடு பக்காமாக இருப்பதை பார்க்கலாம்.

எவ்வளவு வசூல் செய்யிறான், என்ன செலவு செய்யுறான், இன்னமும் இது தேவையா என மக்கள் எந்தவித ஆய்வுக்கு செல்ல முடியாது. ஆனால் இவன் வசூல் செய்வது படியே பணம் கொடுத்து போவனுக்கு மட்டும் எப்படிப்பட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது என்பதை நாம் கவனிக்கனும்.

இதே போலத்தான் எல்லா இடமும், கோடக் தனியார் வங்கி கடன் வாங்கிய விவசாயியை அடிக்கும் போலீசு, அரசு வங்கியில் கடன் வாங்கி ஆட்டையை போட்ட மல்லையாவை பிளைட் ஏற்றி வழியனுப்பி வைக்கிறது.

பெட்ரோல் முதல் தீப்பெட்டி வரை வரி போட்டு, மினிமம் பேலன்ஸ் 5 ஆயிரம் வை, ஏடிஎம் 4 முறைக்கு மேல் 150 ரூபாய் என மக்கள் பாக்கெட் ஆட்டையை போடும் அரசு மறுபுரம் அந்த பணத்தை எப்படிபட்டவர்களுக்கு கடன் கொடுத்து வாராக்கடன் என பைல் எழுதுகிறது.

இப்படி நம் கண் முன் எண்ணீலடங்கா உதாரணங்கள் இருக்கிறது இந்த அரசு நமக்கானது அல்ல என்பதற்கு… நமது மரமண்டைக்கு தான் அது புரியவே மாட்டேன் என்கிறது.

GH, 108 ஆம்புலன்ஸில் இலவசமுன்னு ஏன்டா எழுதுற..!

அம்மா பிறந்தநாளை முன்னிட்டு, முகஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு என்று பலரும் இலவச மருத்துவ முகாம் என நடத்துவதை நாம் பார்க்கின்றோம். ஆனால் நமது வரிப்பணத்தில் இயங்கும் அரசு மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ், 155377 அமரர் ஊர்தி என எங்கு பார்த்தாலும் இலவசம், இலவச சிகிச்சை இலவச ஊர்தி என எழுதி உள்ளது அரசு.

14317430_1272641402748851_1940780198426450022_n

ஒரு புறம் அரசு அனைத்து மட்டங்களிலும் சட்டப்படி பணம் வசூலிக்க தொடங்கி விட்டத்தால் இது மட்டும் இலவசம் என நமக்கு சுட்டி காட்டுகிறது.

நாம் வாங்கும் தீப்பெட்டி முதல் பெட்ரோல், கொசுபத்தி வரை வரி போட்டு அதில் ஆட்சி செய்யும் அரசு, டாஸ்மாக்கில் மட்டும் 30ஆயிரம் கோடி வரி போட்டு கல்லா கட்டும் அரசு மறுபுறம் நம்மிடம் இலவசம் இலவசம் என போங்காட்டம் ஆடுகிறது.

Ambulance

Enter a caption

மனைவியின் பிணத்தை எடுத்துசெல்ல ஆம்புலன்ஸ் பணம் கேட்டதால் தன் தோளில் எடுத்து செல்லும் கணவன் – பிண பேய் அரசின் வக்கித்திற்கு இதைவிட உதாரணம் ஏது..?

 

இவன் டிரைவருக்கு சம்பளம் கம்மியாக கொடுப்பதால் தான் பிணத்தை எடுக்க அரசு ஆம்புலன்ஸ் டிரைவர் லஞ்சம் கேட்கிறார், டாஸ்மாக் கடையில் ஊழியருக்கு சம்பளம் கம்மியாக கொடுப்பதால் அவர்கள் பாட்டிலுக்கு 5ரூபாய்,10 ரூபாய் உயர்த்தி வைத்து மேல் மட்டம் வரை லஞ்சத்தை பகிர்ந்துகொள்கின்றனர்.

ஆக இலவசம் என இவன் போர்டு போட்டு சொல்ல வருவது என்ன?

மீனாட்சி மிஷன் அறம் என இலவச சிகிச்சை பப்பிளிசிட்டி போல தானே இவன் செய்கிறான்.

gh-hospital

இதற்கு எதுக்கு ஓட்டு, இத்தனை வரிகள் … அனைத்தையும் பேர் மாற்றி இது பிஆர்பி ஏரியா, வைகுண்டராஜன் ஏரியா , அதானி ஏரியா, டாடா ஏரியா என பிரித்து கொடுத்து விடலாமே…!

அப்படித்தான் ஆல்ரெடி இருக்கிறது … நமக்கு தான் சுட்டு போட்டாலும் சுரனை வராதே..?

Related links:

பிணம் என்றாலும் பணம் வேண்டும் ! இலவச அமரர் ஊர்தி ஓட்டுனர்கள் மீது குற்றச்சாட்டு

மீனாட்சிமிஷனின் அறமும், அரசு மருத்துவமனைகளின் இலவச போங்காட்டமும்…!

GH: தப்பு ஸ்டக்சருக்கு 50ரூபாயா? சிடிஸ்கேனுக்கு 500ரூபாயா?

நேற்று சென்னை அரசு மருத்துவமனையில் மருத்தவர் தாக்கப்பட்டதை கண்டித்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவசர வார்டு உள்ளிட்ட அனைத்து நோயாளிகளும் பாதிக்கப்பட்டதையும், அதில் ஒருவர் மரணம் அடைந்துவிட்டதையும் தொடர்ச்சியாக தொலைக்காட்சிகள் செய்திகளாக வெளியீட்டு வந்தனர்.

அப்போது அரசு மருத்துவமனையில் எங்குபார்த்தாலும் லஞ்சம், ஸ்டக்சர் தள்ள கூட 50, 100 ரூ என லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என மக்கள் கோபமாக பேட்டி கொடுப்பதை பார்த்தோம்.

அதில் ஒருவர் தன் மனைவி அனுமதிக்கப்பட்டு 20நாள் ஆகியும் இந்த டெஸ்ட் எடு, அந்த டெஸ்ட் எடு என்கிறானே தவிர என்ன சிகிச்சை எப்ப சரியாகும் என சொல்லமாட்டேன் என்கிறான்… என குமுறியதை பார்க்க  முடிந்தது.

அதற்கு அடிப்படை காரணம் என்பது ஸ்டெக்சருக்கு 50 ரூபாய் கேட்கும் லஞ்சம் அல்ல… நோயாளியை பதிவு செய்வதற்க்கு 20 ரூபாய் , சிடிஸ்கேனுக்கு 500 ரூபாய், முழு உடல் பரிசோதனைக்கு இவ்வளவு, பெரிய பரிசோதனைக்கு வெளியில் விட பாதி பணம் என்றும்… அப்படியே ஆப்ரேசன் என்றால் அம்மா காப்பீடு கொடு மீதி பணம் கொடு என எங்கு பார்த்தாலும் பணம் வசூல் செய்யும் அரசு நிர்வாகம் தான் காரணம்.

பணம் பணம் என ராமச்சந்திரா, அப்போலா போன்ற தனியார் மருத்துவமனைகள் மட்டும் அலைகிறது என நம் சிந்திக்க பழக்கப்பட்டு விட்டோம். ஆனால் அரசே இப்படி எதற்கெடுத்தாலும் பணம் என மாறிவிட்டது என்பதை நாம் சிந்திப்பது இல்லை.

அப்படி மாறிய காரணத்தால் தான்  அரசு மருத்துவமனையில் குடிக்க தண்ணீ கூட அக்குவா ஃபால்ஸ் வாங்கி தான் குடிக்கனும் என்றும், வார்டுக்கு வெளியே உள்ள கழிவறைகள் அனைத்தும் பூட்டு போட்டு மக்கள் பயன்படுத்த முடியாமல் வைத்து இருப்பதும் நடக்கிறது. மக்களை கிள்ளூ கீரை போல பேசுவதும், மதிக்காமல் எதையும் தெரிவிக்காமல் அலைக்கழிப்பதும் இருக்கிறது.

ஆக பிரச்சனை என்பது ஸ்டக்சர் தள்ளுவதற்கு வாங்கும் லஞ்சம் அல்ல… மொத்த அரசும் பணம் பிடுக்கும் பேயாக மாறிவிட்டது என்பது தான்.

தெருவுக்கு 2 டாஸ்மாக் நடத்தும் அரசு, அதனால் மக்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு அவன் பாக்கெட்டில் பிளேடு போடும் அவலம் எங்கேயாவது உண்டா?

இப்ப கூட பெட்ரோலுக்கு 4ரூ டீசலுக்கு 2ரூ வரி போட்டு மக்களை சுரண்டும் அரசு மறுபுறம் அந்த மக்களுக்கு என்ன வித சேவைகள் வழங்குகிறது…?

இப்படிப்பட்ட அரசை நாம் அங்கீகரிப்பது தான் மிகப்பெரிய தவறு.

அரசு ஆஸ்பத்திரியில் எதற்கு காப்பீடு, பணம்…. எதற்கு பயிற்சி மருத்துவர்கள்… !

1000 உயர் மருத்துவம் படித்த மருத்துவர்களை நியமி… மக்களுக்கு உயரிய சிகிச்சை கொடு…. ஸ்கூட்டியும், லேப்டாப்பும் வேணாம்… மருத்துவமும் படிப்பும் கொடு என நாம் யோசிப்பது எப்போது..?

 அதற்கான வழி வாக்குச்சாவடிக்கு போய் மக்களை தே.மகன் என பேசும் எம் எல் ஏகள், சட்டசபையில் நீலப்படம் பார்க்கும் எம் எல் ஏக்கள், கோடிகளில் புரளும் பார்ச்சூனர் காரில் பறக்கும் எம் எல் ஏக்கள் அல்லது அனைத்தையும் பார்த்துக்கொண்டு மவுனமாக  நான் நல்லவருப்பா என அம்பாசிடர் போகும் அரசியல் கட்சிக்காரர்களை நாம் தேர்ந்தெடுப்பது மூலம் நிறைவேற்ற முடியுமா என சிந்திக்க போகிறோமா?

அல்லது இவர்களை மக்கள் விரோதிகள் என அடையாளப்படுத்தும் விதமாக….. தினந்தோறும் இந்த அரசு எந்திரத்தால் பாதிக்கப்படும் ஏழைகள், வினோதினி முதல் நந்தினி போன்ற பெண்கள், ஸ்ருதி முதல் கும்பகோணம் பள்ளி மாணவர்கள் என எண்ணிலடங்கா மக்களின் விடியலுக்கு நாம் தடைகற்களாக இருக்கும் வாக்குச்சாவடிக்கு போக மாட்டோம் என உறுதி எடுக்க போகிறோமா?

அரிசிக்கு ஆதார் கொடு – 1 ரூபாய் இட்லி அன்லிமிடெட்…!

 

card_liveday

 

ரேஷன் கடையில் புளுத்த அரிசிக்கு ஆதார் கேட்கும் அரசு மறுபுறம் எத்தனை இட்லி வேணாலும் வாங்கிக்கோ என அதே அரிசியை சுட்டு விக்கிறது…! எப்படிப்பட்ட அயோக்கியத்தனம்.

Amma-Canteens

பாதி கார்டுக்கு மொத்த பொருட்கள் இல்லை, அந்த பாதிக்கும் பாதி பொருட்கள் இல்லை என சொல்லும் ரேஷன் கடையில் அரசு இடத்தில் இல்லை, கம்யூட்டர் பில் இல்லை, கேமரா இல்லை, செக்கூரிட்டி இல்லை, ஆனால் அதனை அரைத்து விற்கும் அம்மா இட்லி கடையில் இவை அனைத்தும் இருக்கிறது….!

வெரிகுட் கவர்மெண்ட்…. வெரிகுட் பொதுஜனம்…!

ஒரு லிட்டர் பெட்ரோல் வரி நீங்கலாக ரூ31 தானாம்..!

img-20170112-wa0001

ஒரு லிட்டர் பெட்ரோல் தயாரித்து முடிந்த நிலையில் ரூபாய் 31.54 மட்டுமே.. டீசல் விலை 30.34 மட்டுமே. ஆனால் தன் பின் மத்திய கலால் வரி மட்டும் 21.48 ரூபாய் பெட்ரோலுக்கும், 17.33 ரூபாய் டீசலுக்கும் போடப்படுகிறது. அதன் பின் வாட் வரி மாநில அளவில் முறையே ரூபாய் 15.01  , ரூபாய் 8.51 போடப்பட்டு பெட்ரோல் பங்க் கமிஷனாக ரூபாய் 2.58 , ரூபாய் 1.65  போடப்பட்டு இறுதியில் மக்கள் கையில் ரூபாய் 70.6 மற்றும் 57.82 ரூபாய் க்கு கொடுக்கப்படுகிறது.

அதாவது 100% மேல் வரி போடப்பட்டு விற்கப்படுகிறது. தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் விலை குறைந்த போது  தொடர்ந்து அதன் பயனை மக்களுக்கு அளிக்காமல் கலால் வரியினை உயர்த்தியது மோடி அரசு. வெட்கமே இல்லாமல் இன்று ஏழைகளின் வீட்டில் அடுப்பு எரிய கேஸ் மானியத்தை விட்டு தாருங்கள் என 150 ரூபாய்க்கு ஆத்து ஆத்து என பெட்ரோல் பங்க் 50 அடி பேனரில் சிரிக்கும் மோடி மேற்கண்ட பெட்ரோல் கலால் வரிகொள்ளை குறித்து என்ன சொல்ல போகிறார்?

காங்கிரஸ் ஆட்சி இப்ப இருந்தாலும் வரிக்கொள்ளை நடந்து இருக்கும், ஆனால் மன்மோகன் வாய் கிழிய ஏழைகளின் நண்பன், கருப்பு பணத்தை மீட்டு 15 லட்சம் போடுவேன் என சொல்லியிருக்க மாட்டார் என்பது மட்டும் ஆறுதல்.

பெட்ரோல் இந்த ஆண்டு ரூபாய் 100ஐ தொடுவது உறுதி…!

 

மீனாட்சிமிஷனின் அறமும், அரசு மருத்துவமனைகளின் இலவச போங்காட்டமும்…!

 

108 ஆம்புலன்ஸ் முதல் மாநகராட்சி , ஊராட்சி அரசு மருத்துவமனை முதல் பெரிய ஜி.ஹெச் வரை எங்கு பார்த்தாலும் இலவச சிகிச்சை, இலவச ஊர்தி, இலவச பரிசோதனைகள் என இலவச , இலவச என ஆத்து ஆத்து என ஆத்துகின்றது அரசு.

அதாவது தீப்பெட்டி முதல் இரவு கொசுபத்தி வரை நமது வரிப்பணத்தில் இயங்கும் அரசு, மக்கள் சொத்தை நிர்வகிப்பதாக கூறிக்கொள்ளும் அரசு, அந்த பணத்தில் மக்களுக்கு கொடுக்கும் குறைந்தபட்ச சிகிச்சை, ஏற்பாடுகளை கூட ஏதோ அம்பானி வீட்டு காசில் பிச்சை போடுவது போல நடந்து கொள்கிறது.

GH Hospital.jpg

 

மதுரை மீனாட்சி மிஷனில் அறம் செய்து பழகு என , ராமசந்திரா மருத்துவமனையில் இலவச வார்டு உள்ளது போல மிகப்பெரிய கொள்ளையில் சிறு உதவி செய்யும் முதலாளிகளின் பித்தலாட்டத்தை விட அரசின் இலவச அறிவிப்பு என்பது உழைக்கும் மக்களை மிகக்கேவலமாக நினைக்கும் வக்கிரத்தின் உச்சம். இந்த அரசு நமக்கானது அல்ல, பணக்காரர்களுக்கானது என ஏன் நமக்கு இன்னும் உரைக்க மாட்டேன் என்கிறது..!

 

புதிய இந்தியா பிறக்குமா? – அ.முத்துகிருஷ்ணன்

ன்றைய நிலையில் பண மதிப்பு நீக்கம் நடவடிக்கையைப் பற்றி அறியாதவர்கள் இந்தத் தேசத்தில் இல்லை. நவம்பர் 8-ஆம் தேதி இரவு முதலே இந்தியர்கள் அனைவரும் இந்த நடவடிக்கையைப் பற்றி மெள்ள மெள்ளத் தகவல்களை அறிந்துகொண்டு இன்றைய நிலையில் ஆய்வாளர்களாகவே உருமாற்றம் அடைந்திருக்கிறார்கள். முதன்முறையாக ஒரு மக்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த அடுக்குகளையும் ஒரே நேரத்தில் ஒரு விஷயம் பாதித்திருக்கிறது என்றால், அது இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான்.

ஒரு தேசத்தில் புழக்கத்தில் இருந்து 86.4% ரொக்கப் பணம் நான்கு மணி நேர அவகாசத்தில் இனி வர்த்தக நடவடிக்கைகளுக்குச் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதன் பின் தொடர்ந்து கடந்த 50 தினங்களில் கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு இந்திய அரசாங்கம் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டபடி இருக்கிறது. இந்த அறிக்கைகளைத் தொடர்ந்து வாசித்து அறிய முற்பட்டதிலும் புயல்போல் திட்டமிட்டுக் கிளப்பிவிடப்பட்ட வதந்திகளையும் எதிர்கொண்டதில்தான் ஒரு தேசமே ஆய்வாளர்களாக உருமாறியிருக்கிறது.

முதலில் இந்தக் கடும் நடவடிக்கையை, கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்கும், தீவிரவாதத்துக்கான நிதி மூலதனங்களை முடக்குவதற்கும், கறுப்புப் பணத்தைத் துல்லியமாகத் தாக்குவதற்கும் என பிரதமர் அறிவித்தார். இந்தியாவில் புழங்கும் கள்ள நோட்டுகள் என்பது வெறும் ரூ.400 கோடிதானே, அதற்கு ஏன் ரூ.17 லட்சத்து 60 ஆயிரம் கோடியை செல்லாக்காசாக அறிவிக்க வேண்டும். உலகம் முழுவதுமே தீவிரவாதிகள் ரொக்கப் பணத்தைத் தங்கள் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது இல்லை என்றும் அவர்கள் ஏற்கனவே ஆன்லைன் டிரான்சாக்‌ஷனுக்கு மாறிவிட்டார்கள் என்பதை, ஏற்கனவே உலகம் முழுமையும் விவாதித்திருக்கிறார்கள். இதனை இந்திய நாடாளுமன்றமும் விவாதித்திருக்கிறது. கறுப்புப் பணம் என்பது புழக்கத்தில் இருக்கும் ரொக்கப் பணத்தில் வெறும் 6% தானே என்பதாக, ஒவ்வொரு வாதத்துக்கும் ஆவணங்களுடன் எதிர்வாதங்கள் தொடங்க, அன்றில் இருந்து தினசரி ஒரு விளக்கம் கொடுத்து விவாதத்தில் ஈடுபடாமல் மொத்தத் தேசத்தையும் திசை திருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். இன்றையத் தேதியில் இந்தத் திட்டத்தை கொண்டுவந்தவர்களுக்கே இதை எதற்குக் கொண்டுவந்தோம் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக, பொருளாதார அறிஞர்கள் கருதுகிறார்கள்.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதில் பொதுமக்களுக்கு என்றுமே இருவேறு கருத்துகள் இருந்தது இல்லை. அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை இடதுசாரிகளைத் தவிர்த்து முதலாளித்துவக் கட்சிகள் அனைத்துக்குமே அதில் தீவிரமாக ஈடுபடுவதில் கொஞ்சம் சுணக்கம் இருக்கிறது என்பதை வரலாற்றை கொஞ்சம் உற்றுநோக்கினால் எளிதாக புரியும்.

டி-மானிட்டைசேஷன் என்று அழைக்கப்படும் இந்த பணமதிப்பு நீக்கம் நடவடிக்கை ஏற்கனவே 1946 மற்றும் 1978 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு, அதனால் பெரிய பலன் ஒன்றும் கிட்டவில்லை என்பதை கடந்த மத்தியஅரசு அமைத்த பல குழுக்கள் தெளிவுபடுத்துகின்றன. 1946 மற்றும் 1978 ஆகிய காலத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, இது ஒரு பத்திரிகை செய்தி மட்டுமே. அன்றையத் தேதிகளில் ஒழிக்கப்பட்ட பெரிய மதிப்பிலான ரூபாய் தாள்களை சாமானியர்கள் பார்த்ததுகூட கிடையாது. ஆனால், இன்றையத் தேதியில் மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 1,000 மற்றும் 500 ரூபாய் தாள்கள் தினக்கூலிகள் வாங்கும் சம்பளப் பணம் என்கிற அளவில் இந்தச் சமூகத்தில் அசைவியக்கத்தைத் தீர்மானிக்கும் ஒரு கருவியாக அது விளங்கிவருகிறது.

இந்தியாவின் 86% பரிவர்த்தனைகள் ரொக்கத்தில்தான் நடந்து வந்தது. இந்தியாவில் 80% வேலைவாய்ப்புகளை வழங்கிய முறைசாராத் தொழில்கள் அனைத்தும் ரொக்கத்தில்தான் நடத்தப்படுகிறது என்பதை அரசு நன்கு அறியும். இந்திய நடுத்தரக் குடும்பங்களின் சேமிப்புகள், விவசாயிகளின் அன்றாடச் செலவுகள், சிறு வியாபாரிகள், குறு தொழில்கள் என அனைத்துமே ரொக்கம்தான். இப்படி தேசத்தின் 86% பரிவர்த்தனைகளை முடக்கிவிட்டால், அதனால் என்ன பலன் கிடைக்கக்கூடும் என்பது பெரும் கேள்வியாக முன்வைக்கப்பட்டது.

உலகின் இரண்டாம் பெரும் ஜனத்தொகை உள்ள ஒரு தேசம், வங்கிகள் நோக்கி அலறியபடி ஓடியது. ஆனால் இத்தனைப் பெரும் கூட்டத்தைச் சமாளிக்கும் அளவுக்கு நம்மிடம் வங்கிகளும் இல்லை, வங்கி ஊழியர்களும் இல்லை. இதில் விவசாய நடவடிக்கைகளின் முதுகெலும்பாகத் திகழ்ந்த கூட்டுறவு வங்கிகள் இந்த மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் தாள்களை பெறக்கூடாது என ரிசர்வ் வங்கி தடை விதித்தது. 100 கோடி ஜனங்களும் இரண்டு லட்சம் வங்கி கிளைகள் நோக்கிச் சென்று தங்களின் பணத்தை கணக்கில் வரவு வைக்கவும், மாற்றவும் ஒரு மாதம் முழுவதும் காத்துக்கிடந்தார்கள். வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டு, தங்களின் அன்றாடச் சேமிப்புகள் நிர்மூலமாகிவிடுமே என்கிற பதற்றத்தில், எதையும் செய்ய முடியாமல் மொத்த சமூகமே ஒருவித பதற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, இதுவரை 20 வங்கி ஊழியர்கள் உட்பட, 150 பேர் மரணமடைந்திருக்கிறார்கள்.

பெரிய மதிப்பிலான ரூபாய் தாள்களில்தான் கறுப்புப் பணம் பதுக்கப்படுகிறது. அதனால்தான் 1,000 ரூபாய் தாளை ஒழித்தோம் என்றவர்கள் ஒழித்த கையோடு 2,000 ரூபாயை வெளியிட்டார்கள். சாமானியர்கள் பணம் பெற கடும் உச்சவரம்புகளை அரசு அறிவித்தது. சாமானியர்கள் 4,000 ரூபாய் பெற வங்கிகளின் முன் எல்லாவித சர்க்கஸ் வித்தைகளிலும் ஈடுபட்டார்கள். ஆனால், மறுபுறம் ஒவ்வொரு கறுப்புப் பண முதலையும் சர்வசாதாரணமாக இந்தியா முழுமையிலும் தங்களின் பழைய பணத்தை கோடிக்கோடியாக புதிய 2,000 ரூபாய் தாள்களில்  மாற்றினார்கள். தனியார் வங்கிகள் இதில் முனைப்புடன் செயல்பட்டன. இந்தப் பண மாற்றம் ஒரு பெரும் தொழிலாகவே செழித்தது. இதன் வாயிலாக ஒரு ‘புதிய வேலைவாய்ப்பு’ துரிதமாகவே உருவானது. திரும்பிய பக்கமெல்லாம் தரகர்கள் விதவிதமான கமிஷன் தொகைகளுடன் பேரத்தில் ஈடுபட்டார்கள்.

தங்களின் சொந்தச் சேமிப்பை, வாழ்நாள் உழைப்பை வங்கியில் இருந்து எடுக்க முடியாமல் சாமானியர்கள் தவித்தார்கள். 50,000 திருமணங்கள் நின்றுபோயின.குடும்பங்கள் சொல்லொணாத் துயரத்தில் மூழ்கின. ஆனால், இதே காலகட்டத்தில்தான் 650 கோடி ரூபாய் செலவில் பா.ஜ.க-வின் முக்கியஸ்தரான ஜனார்தன ரெட்டி மகள் திருமணம், அருண் ஜெட்லி மகள் திருமணம், நிதின் கட்கரி மகள் திருமணம் என கோடிகள் புழங்கும் திருமணங்கள் நடந்தேறின. மருத்துவச் செலவுகளுக்கு, அவசரமான அறுவை சிகிச்சைகளுக்கு என பணம் கிடைக்காமல் சாமானியர்கள் வங்கிகள் முன் மண்டியிட்டுக் கிடந்தார்கள்.

இந்தியா முழுவதிலும் தொழில்கள் முடங்கின; பொருளாதாரப் புள்ளி விவரங்கள் மயங்கி விழுந்தன; வேலைவாய்ப்புக் குறியீடுகள் பாதாளம் நோக்கிச் சென்றன; ஏற்றுமதி/இறக்குமதி பாதிக்கப்பட்டது; விவசாயிகள், விதைகளையும் உரங்களையும் வாங்க முடியாமல் தவித்தார்கள்; விவசாயிகள், தங்களின் அறுவடையை விற்க முடியாமல் தவித்தார்கள். ஒரு முட்டுச்சந்தில் தேசமே திணறியது, புலம்பியது. கண்ணீர் மல்கக் கைகளைப் பிசைந்துகொண்டு நின்றது. ஆனால், இதுபற்றி எந்த வகையான ஒரு ஜனநாயகப்பூர்வமான விவாதத்தையும் நிகழ்த்த பா.ஜ.க கட்சியினர் அனுமதிக்கவில்லை. பொருளாதாரத்தை அதன் மொழியில் பேச மறுத்தவர்கள், ஆவணங்கள் – புள்ளிவிவரங்களுக்குப் பதில் சொல்ல மறுத்தவர்கள், தொடர்ந்து மதத்தின் மொழியில் பேசினார்கள். மகா யக்னம், தர்மம் – அதர்மம், தேசப்பற்றாளர் – தேசவிரோதி, சிலுவைப்போர் என்று அனைத்தையும் இருமுனைப் போராக மாற்றினார்கள். பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து விவாதங்களில் ஈடுபடாமல் தனது கைபேசி செயலி மூலம் தனக்குத்தானே வாக்கெடுப்புகள் நடத்தி மகிழ்ந்தார். அரசு செலவில் தினசரி முழுப் பக்க விளம்பரங்கள் கொடுத்தார். தங்களின் தலைவனுக்கு எதிராகப் பேசுபவர்கள் அனைவரும் தேசத்துரோகிகளே என்ற கோஷங்கள் காதைக் கிழித்தன. இந்த 50 தினங்கள் ஜனநாயக ஆட்சியின் சுவடுகளே இல்லாமல், ஒரு மன்னராட்சியை, சர்வாதிகார ஆட்சியை இந்த நாட்கள் நினைவுபடுத்தின.

ரத்தன் டாடா, சந்திரபாபு நாயுடு முதல் நிதிஷ் குமார் வரை முதலில் இதற்கு ஆதரவு தெரிவித்த பலரும் மெள்ள மெள்ள இதன் சங்கடங்கள் பூதாகரமானவை என்பதை அறிந்து வருத்தங்களைப் பதிவுசெய்யத் தொடங்கினார்கள். மாநில அரசுகளின் செயல்பாடுகள் முடங்கின. அரசுகளின் செயல்பாடுகளே முடங்கும்போது சாமானியர்களின் கதி என்ன என்பதை நீங்கள்தான் கற்பனைசெய்து பார்க்க வேண்டும்.

இரண்டரை லட்சம் ரூபாய் வரை வங்கிக் கணக்குகளில் போடலாம். அதுவும், உங்கள் பணமாகவே அது இருக்க வேண்டும். எப்பொழுது வேண்டுமானாலும் அது உங்கள் பணம்தான் என்பதை விசாரணைக்கு உட்படுத்துவோம். அதை நிரூபிக்கும் பொறுப்பு உங்களுடையது என்கிற எச்சரிக்கைகளின் ஊடே நகர்ந்தன நாட்கள். உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்ட நேரம் இந்தியப் பொருளாதாரம் ஸ்திரமாக இருந்தது. இந்தியர்களின் சேமிப்புப் பழக்கம் குறித்து வெகுவாகப் பாராட்டிப் பேசப்பட்டது. இந்தியக் குடும்பப் பெண்களின் சேமிப்புகள் ரொக்கமாக உள்ளது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. வங்கிக் கலாசாரத்துக்கு இன்னும் பழக்கப்படாத மக்கள், தங்களின் அவசரத் தேவைக்கு யாரிடமும் கையேந்த விரும்பாத சுயமரியாதை மிக்கவர்களாக தங்களின் சேமிப்பை ரொக்கமாகவே வைத்திருப்பதைப் பாதுகாப்பு உணர்வு அளிக்கும் ஒரு செயலாகக் கருதினார்கள். நம் கூட்டுறவு வங்கிகள் கிராமப்புற மக்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட அளவுக்கு தேசிய வங்கிகளால் நெருங்கிச் செல்ல முடியவில்லை. தேசிய வங்கிகள் தங்களின் செயல்பாட்டு மொழியை ஹிந்தி/ஆங்கிலமாக வைத்திருப்பதும் அதன் அதிகாரத் தோரணையான செயல்பாடுகளால் சாமானியர்களை நெருங்க முடியவில்லை. மக்களிடம் இந்த நெருக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனது வங்கிகளின் தோல்விதானே ஒழிய, இதில் கிராமப்புற மக்களைக் குறைகூற இயலாது.

அரசு ஊழியர்களும், மாதச் சம்பளம் (ஐந்திலக்கத்தில்) பெறும் நகரவாசிகளும்தான் வங்கிகளை முறையாகப் பயன்படுத்துகிறார்கள். இவர்களின் மனதில் வங்கி சார்ந்த அச்சம் இல்லை. ஆனால், வங்கிகளில் மிகக் குறைந்த வட்டியையே இவர்கள் அளிப்பதால், தங்களின் பணத்தைத் தங்கமாகவும் நிலமாகவும் மாற்றுவதில் முனைகிறார்கள். இதை எல்லாம் தாண்டி பொதுத் துறை வங்கிகளின் சேமிப்புகளைக் கடனாகக் கொடுப்பதுதான் அவர்களின் பெரும் வர்த்தக நடவடிக்கை. இந்தக் கடன்களில் சாமானியர்கள் வாங்கும் வீட்டுக் கடன், வாகனக் கடன், நகைக் கடன், கல்விக் கடன் ஆகியவை மிக முறையாகத் திருப்பிச் செலுத்தப்படுகிறது. இவற்றை வைத்துதான் இந்த வங்கிகளே இயங்குகின்றன. ஆனால், இந்த வங்கிகள் அனைத்தும் சமீபகாலமாக முடங்கும் நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. அதற்குக் காரணம், கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத இந்தியாவின் பெரும் தொழில் குழுமங்கள். இந்தியப் பெருமுதலாளிகள் பொதுத் துறை வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை இன்றளவில் ரூ.11 லட்சம் கோடி. இந்தக் கடனை இந்தப் பெரு முதலாளிகள் செலுத்த மறுக்கிறார்கள். தொடர்ச்சியாக இவர்கள் கடன் பெறுவதற்கு பொதுத் துறை வங்கிகளை நாடுவதும் அதைத் திரும்பச் செலுத்தும் நெருக்கடியான நேரங்களில் அரசாங்கத்தை நாடுவதும், அரசியல் கட்சிகளுக்குப் பெரும் நன்கொடை அளிப்பதும், தனிப்பட்ட முறையில் அதிகார வர்க்கத்தின் பிரதிநிதிகள் சகலரையும் கவனிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். பெரு முதலாளிகள், அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கம் – இந்தக் கூட்டணிதான் இந்தியத் தேசத்தை சீரழித்து வருகிறது. இவர்கள் வசம்தான் இந்தியாவின் மொத்த கறுப்புப் பணமும் உள்ளது. இவர்கள் நினைத்தால், இந்தக் கடன் வலையில் இருந்து யாரையும் தப்பிக்க வைக்க முடியும். லலித் மோடி, விஜய் மல்லையா முதல் ஒரு பெரும் கூட்டமே தப்பிச் செல்ல எல்லா வகையிலும் அவர்களுக்கு உதவி சௌகர்யங்களைச் செய்து கொடுப்பதே நம் அரசின் வேலையாக உள்ளது. இந்தக் கட்டுரையை எழுதும் நேரத்தில் சஞ்சய் பண்டாரி எனும் பெரும் ஆயுத வியாபாரி இந்தியாவில் இருந்து தப்பிச்  சென்ற செய்தி வந்துகொண்டிருக்கிறது.

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 26,999.

ஹெச்.எஸ்.பி.சி வங்கி இதுவரை 629 இந்தியர்களின் பட்டியலையே அரசு வசம் வழங்கியிருக்கிறது. இந்தப் பட்டியலில் இருப்பவர்களுக்கும் இந்திய அதிகார வர்க்கத்துக்கும் இருக்கும் நெருக்கம்தான் கறுப்புப் பணத்தின் உற்பத்திக்கும் பாதுகாப்புக்குமான உத்தரவாதமாக விளங்குகிறது. அதிலும், இந்தியாவின் பெரும் பகுதி கறுப்புப் பணம் என்பது கனிம வளச் சுரண்டல், உயர் கல்வி மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில்தான் உற்பத்தியாகிறது என்பதை பல ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. அதுவும் இன்றைய காலத்தில் இந்தப் பணம், முறையாக இங்கிருந்து மொரீஷியஸ், சிங்கப்பூர், கேமன் தீவுகள், கேமரூன் சென்று, மீண்டும் வெள்ளையாக மாறி அந்நிய முதலீடு உடுப்பு அணிந்து இந்தியாவுக்குள் மாலை மரியாதையுடன் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக இப்படி இங்கிருந்து வெளியேறிய தொகை 35 ஆயிரம் லட்சம் கோடி என்கிறது Illicit Financial Flows from Developing Countries என்கிற ஆய்வுக் கட்டுரை.

இப்படியாக உண்மையான கறுப்புப் பணம் எங்கே இருக்கிறது, எப்படி இருக்கிறது, எந்த ரூபத்தில் இருக்கிறது என்கிற சகலத்தையும் அறிந்துகொண்டு அதை எல்லாம் நோக்கி சுண்டுவிரலையும் அசைக்காமல், சாமானிய ஜனங்களை அச்சுறுத்தி அவர்களின் சேமிப்புகள் அனைத்தையும் வங்கிகளுக்குள் கொண்டு வந்து சேர்க்கும் நடவடிக்கையாகவே இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை மாறியுள்ளது. அவர்களின் வாழ்நாள் உழைப்பை வங்கிக் கணக்கில் போட்டு அதை வெளியே எடுக்க முடியாமல் நாளும் தவித்து வருகிறார்கள். இது அவர்களுக்கு அரசியல் சாசனம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கே எதிரானது.

இப்பொழுது புதிதாக கறுப்புப் பணம், ஊழல் ஆகிய அனைத்தையும் விடுத்து, இனி இந்தியாவில் ரொக்கப் புழக்கம் இருக்காது. அனைவரும் இனி ரொக்கம் இல்லா பரிவர்த்தனைக்கு மாறுங்கள் என கழுத்தில் கத்தியை வைக்கிறார்கள். பணம் இல்லா டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஈடுபட இந்தியாவில் அதற்கான அடிப்படை கட்டமைப்புகள் உள்ளதா, கருவிகள் உள்ளதா என்றால், இல்லை என்பதே ஒற்றைப் பதில். கிராமங்கள்தோறும் முதலில் மின்சாரம் இருக்கிறதா, சிறு நகரங்களில் கூட தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறதா, அதை விடுங்கள் இந்தியாவில் இணையத்தின் புழக்கம் என்பது 35% மட்டுமே. இதை வைத்துக்கொண்டு எப்படி ஒரு தேசம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நோக்கி நகர இயலும் என்று கேள்வி கேட்டால், நீங்கள் ஒரு அக்மார்க் தேசத்துரோகி என்பதே தேசபக்தர்களின் ரெடிமேட் பதில். டிஜிட்டல் பரிவர்த்தனை நகரங்களில் பல ஆண்டுகளாக இருந்து வந்தபோதிலும் அதைப் பாவிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஏனெனில், அது ஒரு புதிய நடைமுறை. அதை நோக்கி மக்கள் மெள்ள மெள்ளவே செல்வார்கள். இந்தப் புதிய நடைமுறையின் மீது மக்கள் நம்பிக்கைக் கொள்வது மிகவும் அவசியம் என்று அவர்களை அழுத்துவது, ஒருவருக்கு நீங்கள் கட்டாயப்படுத்தி நீச்சல் சொல்லிக் கொடுக்க முயல்வதற்குச் சமம். மற்றொரு விஷயம் இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை களுக்கு நாம் ஒவ்வொரு முறையும் ஒரு கட்டணத்தைச் செலுத்த வேண்டும், சேவை வரி செலுத்த வேண்டும். இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் நிறுவனங்களுக்குத் தினசரி லட்சம், கோடிகளில் லாபம் கிடைப்பதற்கான ஏற்பாடாகவும் இந்தத் திட்டம் முன்வைக்கப்படுகிறது. இதைத்தான் சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய ஊழல் என்று வர்ணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பெரும் ஆபத்துகள் இல்லாமல் இல்லை. இணையத்தில் நடக்கும் தில்லுமுல்லுகள், கார்டு ஸ்வைப் செய்யும் இடங்களில் நடக்கும் கோல்மால்கள் பற்றி தினசரி நூற்றுக்கணக்கான செய்திகள் வந்தபடி உள்ளன. சமீபத்தில் இந்தியாவின் பெரும் பொதுத் துறை வங்கியின் ஒட்டு மொத்த வாடிக்கையாளர்களின் கடவு எண்கள் களவாடப் பட்டதை வாசித்தோம். எப்படி இரவோடு இரவாக மொத்த வாடிக்கையாளர்களும் தங்கள் ரகசிய எண்களை மாற்றும்படி அறிவுறுத்தப்பட்டார்கள்? இப்படியான ஒரு நடைமுறையை மக்கள் மீது எப்படிக் கட்டாயப்படுத்தித் திணிக்கிறது மத்திய அரசு என்பது பெரும் கேள்வி.

தங்கள் சொந்தப் பணத்தை பொதுமக்கள் வங்கிக் கணக்கில் செலுத்த/மாற்ற ரிசர்வ் வங்கி பல கெடுபிடிகளை விதித்தது. விரல்களில் அடையாள மை வைக்கும் ரேகை சட்ட காலத்துக்கு சென்றது. ஆனால், இப்பொழுது இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலுத்தலாம் என்று ஒரு சுதந்திரப் பிரகடனத்தைச் செய்துள்ளது. இதுவும் இந்த நாட்டின் ஜனங்களைக் கேவலப்படுத்தும் மற்றுமொரு செயல். ஏற்கனவே பா.ஜ.க கட்சியினருக்கு மற்றும் அவர்களின் நெருங்கிய வட்டாரங்களுக்கு மட்டும் இந்தத் தகவல் முன்கூட்டியே கிடைத்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் ஏராளமாக வெளியாகியுள்ளன. பா.ஜ.க-வின் மாநிலக் கிளைகள் தங்களின் வங்கிக் கணக்குகளில் நவம்பர் 8 அன்றும் அதற்கு முன்பும் பெரும் தொகைகளைக் செலுத்தியிருக்கிறார்கள். பல மாநிலங்களில் பெரும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்துள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்களும் வந்த வண்ணம் உள்ளன. இவை தவிர்த்து நவம்பர் 8 -ம் தேதிக்கு ஒரு மாதம் முன்பாக வங்கிகளுக்கு பல லட்சம் கோடி பணம் டெபாசிட்டுகளாக அதிவேகமாக வந்துள்ளதையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டியது அவசியம் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இந்திய மத்தியதர வர்க்கம் இன்னும் நம் நாட்டின் உண்மை நிலவரம் என்ன என்பதை அறிந்துகொள்ளாமல் இருப்பதால், அவர்கள் மேக் இன் இந்தியா, இந்தியா ஒளிர்கிறது, டிஜிட்டல் இந்தியா போன்ற விளம்பரங்களுக்குப் பலியாகிவிடுகிறார்கள். இன்றும்கூட மத்தியதர வர்க்கம்தான் பெரும் மெளனத்துடன் கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டே செயற்கையாக புன்னகைக்க முயல்கிறது. சமூகத்தைக் கடும் இக்கட்டான நேரத்தில் வழிநடத்த வேண்டியவர்கள் காக்கும் மௌனம் மிகவும் கொடியது.

பல திசைகளில் இருந்து நெருக்கடிகளைச் சந்தித்து வருகிற மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றமும் சமீபத்தில் ஒரு புதிய நெருக்கடியைக் கொடுத்துள்ளது. உச்ச நீதிமன்றம், தனது பங்கிற்கு 9 கேள்விகளை முன்வைத்துள்ளது. ரூபாய் மதிப்பிழக்கச் செய்யும் அறிவிப்பு, ரிசர்வ் வங்கியின் எந்தச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டது? ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் 26-ன் கீழ், ரூபாய் நோட்டுகளைச் செல்லாததாக்கும் அதிகாரம் முரணானதா? தனக்குச் சொந்தமான சொத்துகளை அனுபவிப்பதை யாரும் தடுக்க முடியாது என்ற 300ஏ பிரிவுக்கு எதிரானதா? அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவின்படி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கு புறம்பானதா? சட்டப்பூர்வமான பணத்தை எடுக்க வங்கிகள் அனுமதி மறுப்பது அடிப்படை உரிமைகளை மீறுவதாகாதா? இந்த அறிவிப்பின் நடைமுறைத் தோல்விகள் மக்களைப் பாதிக்காதா? நடைமுறைப்படுத்தும்போது தோல்வி ஏற்பட்டால், மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவது ஆகாதா? ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைவிட, இந்த அறிவிப்பால் கூடுதல் அதிகாரம் பயன்படுத்தப்பட்டதா? ரூபாய் நோட்டு விவகாரத்தில் கூட்டுறவு வங்கிகளுக்குத் தடை விதிக்க முடியுமா? இந்தக் கேள்விகள் மிகவும் நியாயமானவை. மற்ற விமர்சகர்களை அழைத்ததுபோல் உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் தேசத்துரோகிகள் என்று அழைக்க முடியாது. இவர்களுக்கு என்ன பதில் அளிக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நம்முன் உள்ள கடமை என்பது ஒட்டுமொத்த தேசத்திலும் ஒரு சீரான அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். இன்று நாம் ஏற்படுத்தியிருக்கும் கட்டமைப்புகள் அனைத்துமே பெரும் நகரங்கள் சார்ந்தவை மட்டுமே. நகரங்களை விட்டு கொஞ்சம் வெளியே வந்தால், துரிதமான மொபைல் சிக்னல் முதல் பாதாளச் சாக்கடை வரை எதுவும் கிடையாது. வர்தா புயலால் சென்னையில் கிடுகிடுத்துக்கிடக்கும் ஆன்லைன் டிரான்சாக்‌ஷன், கேஷ்லெஸ் எகனாமி என்பதெல்லாம் என்னவாகின என்பதைப் பார்த்தோம்.

இந்தக் கட்டுரையை நீங்கள் ஜனவரி முதல் வாரத்தில் வாசிக்கும்போது அரசாங்கம் தனது அடுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கும். 50 நாட்கள் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள். வரும் புத்தாண்டில் புதிய இந்தியா பிறக்கும். ஆகவே மக்கள் தங்களின் சங்கடங்களை பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்திருக்கிறார்கள். ஆனால் வருகிற ஜனவரி 2 -ம் தேதி வங்கிகள் திறக்கும்போது வியாபாரிகளும் பொதுமக்களும் தங்களின் சொந்தப் பணத்தை தங்களில் தேவைக்காக எடுக்க வரும்போது அது கிடைக்கவில்லை என்றால், பெரும் நெருக்கடிகள் உருவாகும். ஒரு தேசத்தை சதா ஒரு செயற்கையான நெருக்கடியில் வைத்திருக்க இயலாது!

நன்றி: விகடன் தடம், ஜனவரி 2017

நன்றி: விகடன் தடம், ஜனவரி 2017

”நகரத்தை இயக்குபவர்கள் நாங்கள்” நாய்கள் அல்ல – நடைபாதைவாசிகள்..!

சல்மான்கான் சிறைத்தண்டனையினை நிறுத்தி வைத்துள்ள மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நேற்று நடைபாதைவாசிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

against salman

சாமானிய மக்கள் விரைவில் கிடைக்காத ஜாமீன், 12 ஆண்டுகள் வழக்கு நடத்தி சல்மான்கானுக்கு கிடைத்த தண்டனைக்கு 2 நாளில் கிடைக்கிறது. வாழ்க ’இந்திய ஜனநாயகம்’…!