திமுக Boycott ஜனநாயகம் – மக்கள் Boycott தீவிரவாதமா..?

 

 

குமாரசாமியால் விடுதலை வாங்கி ஆர்.கே.நகரில் 2015 ஜெயலலிதா போட்டியிட்டபோது அங்கே ஜனநாயகம் மதிக்கப்படாது என்றும் அதனால் அந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக திமுக அறிவித்தது.

குமாரசாமி தீர்ப்பு தப்பு என இன்று உச்சநீதிமன்றம் சொல்லித்தான் திமுகவுக்கு தெரியுமா? இல்லையே அன்றே தெருதெருவாக போய் ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்து இருக்க வேண்டியதுதானே?

இன்று ஜனநாயத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் தங்களை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் Mrஸ்டாலின் அவர்கள் அன்று 2015-ல் இல்லாத ஜனநாயாகம் எப்படி 2017 வந்தது என விளக்க முடியுமா?

அன்று ஜனநாயகத்தின் மீது திமுக நம்பிக்கை வைக்காமல் யாருக்கும் ஆதரவு கூட கொடுக்காமல் இருந்ததன் பின்னணி விளக்க முடியுமா?

இடைத்தேர்தல் கூட ஜெ உயிருடன் இருந்தால் ஜனநாயகம் கசக்கும்… இல்லாதபோது இனிக்குமா?

+++++++++++++++++

எவன்வந்தாலுங்கிறிங்க… அப்ப என்ன சசி.. பன்னீரு…!

நம்பர் ஒன் குற்றவாளியின் வாரிசு நம்பர் டூவா இல்லை நம்பர் ஒன் உடன்  இருந்த நம்பிக்கைக்குரிய பன்னீரா என ஒரு வாரமாக வாய் கிழிய ஆபாசத்தை அலசும் ஊடகங்களும், அப்படியே அலச பழக்கப்பட்டு போன ஜனங்களும்  இருப்பதை பார்க்கும் போது நந்தினியின் சாதிவெறி கொலையாளிகளை, ஹாசினி கொலைகளை ஊக்குவிக்கும்  பாலியல் சமுதாயத்தை மாற்றுவது என்பது எத்தகையதொரு  மிக கடினமாக பணி என்பது தெரிகிறது.

( ஜெயா சசிக்கு எதிராக போட்ட வீடியோவை டெலிட் செய்து விட்ட சுப்பனின் இன்னொரு விடியோ இது)… தீர்ப்பு வைந்தவுடன் திருந்திய எம் எம்ல் ஏ போல சுப்பன் திருந்திவிட்டார் போல.

மேலே உள்ள வீடியோவில் சுப்பன் என்பவர் ஒரு முதல்வரையே 75 நாள் வைச்சு செச்சு அது குறித்து ஒரு ரகசியமும் கசியாமல் பார்த்து கொண்ட சசி, ஜெயுடன் சிறைக்கு போன சசி என சசி முதல்வர்  ஆக வேண்டிய காரணத்தை  அடுக்குகிறார்.

அடுத்தது சசி எதிர்ப்பு … இதற்கு வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றன.
அதில் ஒன்று

 

அதாவது சசி ஒரு மாபியா, ஒரு கவுன்சிலாராக கூட நிக்கலை,பன்னீரு எளிமை என ஒரே பல்லவி தான் எல்லாத்திலேயும்.
இதில் சசி ஆதரவு, பன்னீரு ஆதர்வு என சொல்லும் பெரும்பாண்மையினர் ஒன்றுக்கொள்ளும் ஒரு விசயம் எவன் வந்தாலும் எதுவும் ஆகப்போறது இல்லை என்பது.

இதோ ஓட்டுப்போட்ட மக்களை தே… மகன் என திட்டும்  அம்பத்தூர் அதிமுக எம்.எல்.ஏ.

 

இவன் மட்டும் அல்ல சேகர் ரெட்டி முதல் ராம மோகன் ராவ் வரை ஒருவனையும் இந்த சட்டத்தை கொண்டு ஒரு மயிரைக்கூட புடுங்க முடியாது.

அம்பத்தூர் எம் எல் ஏ வை தண்டிக்க அடுத்த எலெக்சன் சரி சேகர் ரெட்டி, ராம மோகன் ராவை தண்டிக்க என்ன செய்ய போகிறோம்….?

 

75 நாளாக ஒரு முதல்வரை வைச்சு செய்ய எய்ம்ஸ் , பிரதமர்  முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் என அனைத்து அதிகாரங்களும் மொத்தமாக வேலை செய்து உள்ளது அல்லது முறையான வேலை செய்யாமல் உள்ளது எனும் போது மொத்த கட்டமைப்பும் அயோக்கியத்தனமானது என புரியவில்லையா

இதுல என்ன அடுத்த எலெக்‌ஷன், நல்லவனுக்கு ஓட்டு..?

எந்த நலலவனை கொண்டு தண்டிக்க போறோம்…?

பன்னீரு சிம்பிள்….. ஐயா இந்த பன்னீரை விட சிம்பிளு எங்க நல்லகண்ணு. பன்னீராவது இன்னோவா எங்க நல்லக்கண்ணு அதை விட சிம்பிள் அம்பாஸிடர் தான் போராரு, நோக்கியா 1100 போன்ல பேசுறாரு,,, இதெல்லாம் ஒரு தகுதியா? 

அதே நல்லக்கண்ணு 1100 ல ஜெயலலிதாவிடன் 2 சீட்டு வாங்க எப்ப வரட்டும் என பேசும் போது  நம்பர் 1 குற்றவாளியை அங்கிகரித்த பின் என்ன சிம்பிள்…நோக்கியா 1100.????

தருமபுரியில் அதிமுக காலிகள் 3 மாணவிகளை எரிக்கவில்லை என பொய் பேசி, நேற்று வரை அம்மாவுக்கு ஓட்டு கேட்ட சீமானும் நம்பர் 1 குற்றவாளியிடம் என்ன வாங்கிக்கொண்டு கத்தினார் என உங்களால் அவர் சட்டையை பிடித்து கேட்டும் அமைப்பு இருக்கிறதா நம்மிடம்..?

போதை தவறு எனும் போது அது மிடாஸ் சரக்கா ஜெகத்ரட்சன் சரக்கா  என விவாதிப்பது என்ன நேர்மை….?

கொள்ளை குற்றவாளி தப்பு என்றால் அதில் நம்பர் 1  குற்றவாளி ஆதரவு  பன்னீரு, சீமான், வைகோ, நியூஸ் 7 …. என நீளும் பட்டியல் நல்லவங்களா? இல்லை நம்பர் 2 குற்றவாளி ஆதரவு சசி, சுவாமி, சிபிஎம், சுப்பன்… என நீளும் பட்டியல் நல்லவங்களா? இப்படி விவாதிப்பது ஆபாசம் என தெரியலை…

தமிழகத்தில் இப்போது நிலையான அரசு இல்லாம மக்கள் பாதிக்ப்பட்டு வருகிறார் என முக ஸ்டாலின் வருத்தப்படுவதையே எடுத்து கொள்ளுவோம்…

நந்தினி ஆதிக்கசாதிவெறி கொலை முதல் ஹாசினி கொலை வரை எந்த கொலை நடந்து இருக்காது, இல்லை எந்த கொலைகாரர்கள் தண்டிப்பட்டு இருப்பார்கள் நிலையான அரசு இருந்திருந்தால்….!

120 ரூபாய் ரேசன் பொருளுக்கு ஆதார் கட்டாயம், தெருவுக்கு 2 டாஸ்மாக், விண்ணை முட்டும் பருப்பு, அரிசி விலை, ஆதார் இல்லாதவனுக்கு 120 ரூபாய் மானியம் இல்லை, வாங்குகின்ற 71 ரூ பெட்ரோலில் வரிக்கொள்ளை ரூ35 , அரசு ஆஸ்பத்திரியில் ஆதார் கட்டாயம், விவசாயிகள் தற்கொலை, திரும்பிய பக்கமெல்லாம் ஜேப்பியார் – பச்சமுத்து போன்றவர்களின் கல்வி கொள்ளை, நிமிடத்துக்கு ஒரு பார்ச்சுனர் காரில் பறக்கும் கறை வேட்டிகள்….

இதில் எந்த ஆணியை புடுங்க ஓட்டு, மக்களுக்கு இதை விட்டால் வேறு வழி இல்லை என்ற உங்க  ‘ஜனநாயகத்தை’  நினைக்கும் போது ….

இந்த ஓட்டுப்போட்டு ஒரு திருட்டை அங்கீகரிக்கவில்லை என போன வாரம் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி உனக்கு இந்த அரசை கேள்வி கேட்கும் தகுதியில்லை என சொன்னதை நாம் நினைவு படுத்தி பார்க்க வேண்டும்.

ஓட்டுபோட்டால் தான் அரசின் தவறை கேள்வி கேட்க முடியும்  என சொல்வது மூலம் , நாம் ஓட்டுப்போடவில்லை என்றால் தான் இந்த தவறான  அரசை மாற்ற முடியும் என நமக்கு உரைக்கவில்லை…!

நீங்கள் போடும் ஓட்டு தான், டாஸ்மாக்கை மூடனும்மா அதை தேர்தலில் செய் மக்களை கலைந்து போக சொல்கிறது…

நீங்கள் போடும் ஓட்டு தான், நான் ரெண்டு முறை முதல்வர் ஆக இருந்தவள் என பெங்களூரு கோர்ட்டில் ஜெயா  தன்னை நல்லவர் என காட்டிக்கொள்ள ஆதாராமாக காட்டப்படுகிறது….

நீங்கள் போடும் ஓட்டு தான், நந்தினி, சங்கர், இளவரசனை கொன்ற ஆதிக்கச்சாதிவெறியர்கள் சுத்ந்திரமாக் நடமாட , கட்சி நடத்த அனுமதிக்கிறது….

……
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்…

ஆக முதலில் திருடர்களை அங்கீகரிப்பதை நிறுத்துவோம்…. இல்லை மாட்டேன் என பேசுபவர்கள் நீங்கள் என்றால் உங்கள் ஓட்டால் சேகர் ரெட்டி, ராம் மோகன் ராவின் ஒரு மயிரை புடுங்கிவிட்டோம் என ஆதாரம் காட்டிவிடுங்கள் …?

சரி ஓட்டுபோட்டவர்களை தே… மகன் என திட்டிய அம்பத்தூர் எம் எல் ஏ வை தண்டிச்சுட்டு அதாவது எம்.எல்.ஏ எலெஷனில் அடுத்த 4 வருசன் கழித்து  தண்டிப்பது இல்லை, இப்பவே அவன் பதவியை பறித்து சிறையில் அடைத்து காண்பிக்கனும்…?

இது எதுவும் இல்லாமல் கிணறு வெட்டுன ரசீது இருக்கு என பார்த்திபன் மெரினாவில் நின்று கத்துவது போல பில்டப் கொடுக்காமல் ஒதுங்கி கொள்ளவும்..!

Advertisements

5 ஆயிரம் ஏக்கர்ல தக்காளி, 5ஆயிரம் ஏக்கர்ல கொய்யா… – சீமான் புரட்டுகள்..!

தனது கட்சியில் உறுப்பினர் அட்டை கூட கொடுக்காமல் சீமான் ஒருவர் தான் பொதுக்குழு, செயற்குழு, மொத்த கட்சி என நாம் தமிழர் கட்சி என்ற பிஆர்பி, வைகுண்டராஜன் தமிழர் நல கட்சி நடத்தும் சீமான் அவர்கள் கடந்தமாதம் தந்தி டிவியில் கொடுத்த பேட்டியின் போதும் சரி தற்போது பிரச்சார கூட்டங்களில் அவரது கட்சிக்காரர்களும் சரி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேளாண் துறையினை அரசு வேலையாக மாற்றி படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கு 20 ஆயிரம் 30 ஆயிரம் சம்பளத்தில் வேலை அதாவது 5 ஆயிரம் ஏக்கர்ல தக்காளி, 5ஆயிரம் ஏக்கர்ல கொய்யா… என பயிர் செய்வது அருகிலேயே தக்காளி தொழிற்சாலை, கொய்யா தொழிற்சாலை என அமைத்து கொடுப்போம் என சொல்கின்றனர்.

 

5 ஆயிரம் , 5 ஆயிரம் ஏக்கர் என எப்படி இவர்கள் நிலங்களை எங்கிருந்து எடுத்து அமைக்க போகிறார்கள் என விளக்குவது இல்லை, இப்படி ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசு, மற்றும் அடுத்தவர்களுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரிமித்த பிஆர்பிக்கு போலீசு நன்றி மறந்து எதிர்ப்பது என தவறு என வக்காலத்து வாங்கிய சீமான், வைகுண்டராஜன் வீட்டு திருமணத்தில் பங்கெடுத்த புரட்சியாளர் சீமான் அவர்கள் ஆட்சியில் உண்மையில் யார் தமிழக மக்கள், யாரிடம் இருந்து யாரை பாதுகாக்க போகிறார் சீமான்.

நடப்பது தமிழக தேர்தலா? புரட்சிகர போரா? சும்மாவே போலீசு நல்லவர்கள், பிஆர்பி நல்லவர் என சொல்லும் சீமான் எந்த போலீசை, நீதிபதியை எதிர்த்து (இதற்கே வாய்ப்பு இல்லை….) யாருக்கு நிலம் வாங்கி தருவார்..? பிஆர்பிக்கா மக்களுக்கா? 

வேளாண் அரசு வேலைக்கு மேற்கண்டவாறு வசனம் பேசும் சீமான், இலவச கல்வி, மருத்துவத்திற்கு என்ன சொல்கிறார். வன்னியர் சாதிவெறி முதல்வர் அன்புமணி போல தனியார் பள்ளியில் அரசு கட்டணத்தில் படிப்பு என உதார் விடுவாரா? அல்லது தனியார் பள்ளி, கல்லூரிகளை அரசுடைமையாக மாற்றி அரசு கல்விய வழங்கும் என சொல்ல போகிறாரா? அப்படி என்றால் அவருடைய அன்பு தமிழர் பச்சமுத்து போன்றவர்களுக்கு வேட்டு வைக்கவேண்டி வருமே? நிச்சியம் அப்படி பேசப்போவதும் இல்லை, செய்யபோவதும் இல்லை. அதனால் தான் கல்வி, மருத்துவம் குறித்து மேற்கொண்டு பேச முற்படுவது இல்லை.

தேர்தல் அறிக்கை என நாங்கள் கொடுக்க மாட்டோம், எல்லாம் முதலில் இருந்து என சீமான் வீரவசனம் பேசுவது எல்லாம் அடிப்படையில் அப்படி ஒரு அறிக்கை தயாரிக்கும் அளவுக்கு அரசியல், பொருளாதாரம் குறித்த தெளிவு அவருடைய கட்சிக்கு கிடையாது என்பதே உண்மை.

seeman-cartoon
ஹிண்டாய் ஒரு கார் தயாரிக்க 40ஆயிரம் லிட்டர் தண்ணீர் செலவு ஆகிறது என்ரும் அதனால் அது போன்ற தொழிற்சாலைகளை மூடுவோம் என சொல்லும் சீமான் வைகுண்டராஜன் தூத்துக்குடியில் செய்வது என்ன? பலசரக்கு வியாபாரமா?

திராவிட எதிர்ப்பு என்ற பெயரில் தமிழ்தாய் வாழ்த்தை மாற்றுவேன் என சொல்லும் சீமான், ஊழல் எதிர்ப்பு என்ற பெயரில் அம்மாவை தண்டிப்பேன் என சொல்ல மறுப்பது ஏன்?

தனியார்மயம் தான் விலைவாசி உயர்வுக்கு காரணம் என நேற்று கூறிய சீமான், அப்படி தனியார்மய கொள்கையிலிருந்து தமிழகத்தை எப்படி மீட்பேன் என கூறுவது இல்லை. தமிழக முதல்வர் ஆகி இலங்கைக்கு மிலிட்டரியை அனுப்பி தமிழர்களை பாதுகாப்பேன் என அர்த்தம் இல்லாமல் பேசுவது போலத்தான் இவருடைய எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சி என்றவாதமும்.

பிரச்சனை என்பது ஆதிக்க சாதிவெறி, இந்து மதவெறி சக்திகளும் நாட்டை கார்ப்பரேட் கம்பெனிக்கு விற்பதை மறைத்து தங்கள் நலன்களை பாதுகாக்க சாதிவெறியினை, மதவெறியினை பரப்பி வரும் நிலையில் தமிழன் என நினைச்சுக்கோ – இளவரசன்களை அன்புமணி ராமதாஸ்கள் ஒன்றும் செய்யாமல் சென்று விடுவர் என பிரச்சனை சுருக்கி போங்காட்டம் ஆடுகிறார் சீமான்.

போலீசு ரொம்ம நல்லவங்க என சொல்லும் சீமான் தான் மறுபுறம் வீரப்பனையும் எல்லை காத்த மாவீரன் என உதார் விடுகிறார். போலீசு மெஞ்சும் உலகின் ஒரு புரட்சியாளர் சீமான் மட்டுமே.இதனை தான் தனது ’நாளை நமதே’ தம்பி படத்திலும் காட்டியிருப்பார்.

ஏன் இப்படி சீமான் உள்ளிட்டவர்களை அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது என்றால், மாற்று என மக்கள் முன்னர் அவதரித்து உள்ள வைகோ- விஜயகாந்த் அணி, அன்புமணி, சீமான் போன்ற மூன்று கட்சிகளும் நம்மை மேலும் நூற்றாண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்லும் சக்திகளாக இருப்பதால் தான்.

மொத்த அரசு கட்டமைப்பும் கிழிஞ்சு தொங்கும் போதுமீண்டும் மீண்டும் தேர்தல் மூலம் மாற்றம் , எதிர்காலம் என பேசுவதால் மக்கள் அன்றாடம் வீதிகளில் வீசியெறியப்படுவது குறித்து எந்தவித குற்றவுணர்வும் அற்ற போக்கை தான் காட்டுகிறது.

தமிழராட்சி அதுவும் ஒரே தமிழர் சீமான் ஆட்சி வந்தால் நாடு ஏரோப்பிளனில் பறக்கும் என்பது மோடி வந்தால் நாடு ஏரோப்பிளனில் பறக்கும் என்பதற்கு ஒப்பானதாகும்.

தருமபுரி மாணவிகளை கொலை செய்த அதிமுக காலிகளை இயல்பாக ஆதரித்து பொய் பேசும் சீமான்,

போலீசை ரொம்ப நல்லவங்க என பேசும் சீமான்,

பிஆர்பிக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கி பேசும் சீமான்,

பச்சமுத்துவை தமிழர் என ஆராதிக்கும் சீமான்,

வைகுண்டராஜன் வீட்டு திருமணத்தில் பங்கெடுக்கும் சீமான்,

ஒரு நாள் முதல்வராக்கு மிலிட்டரியை அனுப்புவேன் என கேவலமாக உதார் விடும் சீமான்,

5 வருஷம் கத்தி பார்ப்பேன் இல்லைன்னா நமீதாவுடன் நடிக்க போயிடுவேன் என மிரட்டும் சீமான்,

யார் தமிழன் – யார் திராவிடன் என பிரச்சனையினை திசைதிரும்பும் சீமான்,

ஜெயலலிதாவை மீண்டும் தேர்தெடுத்து மக்கள் மன்னிச்சுட்டாங்க எனவே கேஸ் போட்டதே தப்பு என ஊழலுக்கு வக்காலத்தும் வாங்கும் சீமான் கடைதெடுத்த நாஞ்சில் சம்பத் ஆவார். இதை விட நீங்கள் புரிந்து கொள்ள வேரு வார்த்தை கிடைக்கவில்லை.

தொடர்புடைய பதிவுகள்

தருமபுரி மாணவிகள் எரியும்போது காப்பாற்றியவர்கள் அதிமுகாவினர் – சீமான்…!

திருடர்கள் தேர்தலில் ஜெயிச்சா ‘பரிசுத்த’ ஆவிகளாகின்றனர்-சீமான்…!

சரத்குமார் சிறந்த உழைப்பாளியாம் – ‘புரட்சியாளர்’ சீமான்…!

அதிமுக கூட்டணி பற்றி சீமானுக்கு ’என்னையா’ கவலை…?

நேர்மையான தேர்தல்:சரியான கூட்டணி என்பது போல ஒரு ‘மாயை’

india_election

நேர்மையான தேர்தல், கண்ணியமான தேர்தல் , வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை, பணம் வாங்காமல் ஓட்டுப்போடுங்கள் என சச்சேனா முதல் சகாயம், சீமான் வரை மூச்சுக்கு முண்ணூறு தடவை சொல்கின்றனர்.

ஆனால் சாதிரீதியாக, பணரீதியாக வேட்பாளரை நிறுத்துவது முதல்,

வேட்பாளரை கடத்துவது, மிரட்டுவது,

ஓட்டுக்கு பணம் கொடுப்பது,கறிசோறு போடுவது,

ரிசல்ட்டையே மாற்றி வெற்றி என அறிவிப்பது,

எதிர்கட்சிக்காரனே தேர்தலை புறக்கணைக்க வைக்கும் அளவுக்கு அடாவடி செய்வது,

மாற்று கட்சிக்காரனை – மாற்று கட்சி எம்.எல்.ஏ பணம் கொடுத்து விலைக்கு வாங்குவது,

தன்னை அசிங்கமாக திட்டியவனையே கட்சியில் சேர்த்துக்கொள்வது,

எப்படியும் ஜெயிக்கனும் என தொகுதி -எம்.எல்.ஏ சீட்டு – பெட்டி என கூட்டணியை அமைப்பது மாற்றிக்கொள்வது,

போன முறை கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டு மீண்டும் தற்போதைய அரசு கெட்ட அரசு என தேய்ந்த ரெட்காடோடு வருவது,

இதற்கு பதில் சொல் என யாராவது கேட்டால் நீ யோக்கியமா என்பது என ஒலியும் ஒளியும் ஆதாரத்துடன் தப்பு செய்யும் திருமங்கலத்துகாரனும் ஆர்.கே நகர்காரனும் இவர்களுடன் கூட்டணியில் பல்லிளித்த அனைத்து கட்சிக்காரனும் மேற்கண்ட சச்சேனா , சகாயத்து வார்த்தைகுறித்து சிறிதும் கவலைப்படுவது இல்லை.

ஏன் என்றால் கக்கூசு முதல் காண்ட்ராக்ட் வரை கூட்டு வைத்து கொள்ளையினை அரசியல்வாதிகள் நடத்துவதே இன்று தேர்தல் அதிகாரிகளாக இருக்கும் அதிகாரவர்க்கத்தோடு தான்.

இதனால் அரசியல்வாதியின் செயலை ஆதாரத்தோடு கொண்டு சென்றாலும் எப் ஐ ஆரும் போடமாட்டான், தண்டிக்கவும் மாட்டான் என அனைத்து கட்சிக்காரனுக்கு தெரியும்,

ஆக நேர்மையான தேர்தல் என்பது எப்படி சந்தர்ப்பவாத கூட்டணி என சரியான கூட்டணி என்று ஒன்று இருப்பது போல மாயை ஏற்படுத்துவது போல மக்களுக்கான தேர்தல் என்று ஒன்று இருப்பது போல ஒரு மாயை ஏற்படுத்தும் முயற்சி…. அவ்வளவே..

கூட்டணி சேர்ந்தால் மக்களுக்கு என்ன? சேராவிட்டால் மக்களுக்கு என்ன?

நேர்பட பேசு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய ஸ்டாலின் விருப்பம்’ குறித்த விவாதத்தில் பங்கு பெற்ற திமுக வக்கீல் பிரசன்னா,பொதுத்தேர்தலில் மக்களுக்கு எதிரான அரசை எதிர்த்து வாள் எடுத்து போர்புரியும் போது ஒத்த கருத்துகளை உடையவர்களை சேர்த்து மக்களுக்காக போர்புரிவதில் என்ன தவறு’ என கேள்வி எழுப்பினர்.

‘விவாதமும் கூட்டணி வைப்பதில் உள்ள அடிப்படை அறம் குறித்து அல்ல, அதற்கு வாய்ப்பு இருக்குமா’ என்பது குறித்து என நெறியாளர் குணசேகரனும் கறாராக சொல்லி விட்டு தான் விவாதம் நகர்ந்தது.

2001-06 ஆட்சிக்கு பின்னரான தேர்தலில் மிக மோசமாக ஜெயா ஆட்சியால் மக்கள் பாதிக்கப்பட்ட போது கூட அதிமுக 60 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுகிறது, ஆனால் 2011 தேர்தலில் வெறும் 20 தொகுதிகளுக்கு திமுக வெற்றி பெற்று 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டத்தை பார்த்தோம்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் இவர்கள் யாரும் மக்களை நம்பி, அவர்களிடம் சென்று அரசியல் ரீதியில் தனது கொள்கைகளை பேசி வெற்றி பெற வேண்டும் என்ற அறம் துளி கூட இல்லை, அதற்கு வாய்ப்பும் இல்லை என்பதால் அனைத்து ஓட்டுக்கட்சிகளும் எந்த கட்சியும் சேர்ந்தால் எப்படி ஜெயிக்கலாம் என ஓட்டுசதவீத கணக்குகளுடன் தான் தேர்தலை அணுகுகிறது.

திருமா முதல் இன்று அதிமுக அடிமையாக மாறிப்போன நாஞ்சில் சம்பத், தமிழருவி என அனைத்து நபர்களின் பேட்டிகளை பார்த்தோமானால் இதனை உணர முடியும்.

ஜெயா வழக்கு, தீர்ப்பு குறித்து மக்களிடம் சென்று இந்த கட்சிகள் எதுவும் பிரச்சாரம் செய்ய மறுப்பதற்காக காரணம் இங்கு அனைவரும் மக்கள் விரோத சிந்தனை கொண்ட சொகுசு வாழ்க்கை வாழ கூடிய மக்கள் எதிரிகளாக இருப்பதால் தான். நல்லவனாக இருந்தாலே நல்லது செய்ய முடியாத கட்டமைப்பில் பேசிக்கலி கெட்டவர்களாக இருப்பவர்களை கொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம்…?

கூட்டணி வைப்பதை அறம் அற்ற செயல் எனும்போது அப்படி கூட்டணி சேர்ந்தால் மக்களுக்கு என்ன? சேராவிட்டால் மக்களுக்கு என்ன? இதனை கேட்காமல் அந்த அறமற்ற கூட்டணியினை சூதாட்டம் என தெரிந்தும் ஐபிஎல் விளையாட்டை போல கடைவிரிக்க பார்க்கின்றனர் ஊடகங்கள்.

ஸ்டாலினுடன் வைகோ, அன்புமணி இளிப்பது எதற்கு? எவ்வளவு கேவலமாக பேசினாலும் கூட்டணிக்கு அலைவதும், அவர்களை கட்சியில் சேர்த்துகொள்வது ஏன்? கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து கொகுசாக காரில் பவனி வருபவர்கள் ஏழை மக்களின் நண்பனாக இருக்க முடியுமா?

இது போன்ற கேள்விகளை கேட்டு பார்த்தால் தெரியும் கூட்டணி ஏன்? தேர்தல் என்பது போர்புரிவதா? என்பது போன்ற அபத்தங்கள் குறித்து.

மக்களுக்கு ஒரே ஆப்சன் இது தான் வைத்துக்கொண்டு இவர்கள் இதனை நியாயப்படுத்துவது இருக்கிறதிலேயே மிகப்பெரிய அபத்தம்.