சாராயக்கடை அரசும் கொலைகார தாயும்…!

tasmac.PNG

அரசு சாராயக்கடையினை மூட முடியாது என போராடும் அரசை உலகில் வேறொங்கும் பார்க்க முடியாது.

இதோ தனது பாலிடெக்னிக் படிக்கும் மகன் குடிகாரனாகி தொந்தரவு கொடுப்பதை பொறுக்காமல் அவனை வெட்டி கொன்ற செய்தியை கடந்த வாரம் பார்க்க முடிந்தது.

குழந்தைகளுக்கு மது கொடுப்பது, மாணவர்கள் போதையுடன் வருவது ஒரு புறம் என்றால் குடியால் தந்தையை, மகனை , நண்பனை கொலை செய்வது தொடர்ந்து வருகிறது.

நீ எவனுக்கு ஓட்டுபோட்டாலும், காசு வாங்கிட்டோ, காசு வாங்காமலோ…

சகாயம் போதையிலோ போய் ஓட்டுப்போட்டாலும் அது இந்த டாஸ்மாக் அரசை அங்கிகரிப்பது என்று தான் சொல்ல முடியும்.

குற்றத்தை அங்கீகரித்துவிட்டு பின் அதனிடம் நேர்மையினை எதிர்பார்ப்பது எப்படி..?

பணம் வாங்காமல் போனால் மட்டும் வாக்கு இயந்திரத்தில் கக்கனா தெரியப்போகிறார்..?

கொலைகாரனை ஆதரிக்கும் பாதுகாக்கும் கொலைகாரர்களாக நீங்கள் மாறி வருகிறீர்கள் என்பதை உணர முடிகிறதா?

Advertisements

டாஸ்மாக்: வைக்கவிடாதே…அப்புறம் சசிபெருமாள் கதிதான்…@

55845094.cms

நெடுஞ்சாலை ஓரமாக சாராயக்கடையை அகற்றுங்கள் என உச்சநீதிமன்றம் தொடர்ந்து உத்தரவு போட்டும் முடியாது என வாய்தா வாங்கிய தமிழக அரசு கடந்த வாரமும் முயற்சி செய்தபோது உச்சநீதிமன்றம் அதெல்லாம் முடியாது என்று கூறிவிட்டது. மற்றமாநிலங்களுக்கு செப் 31 கடைசி என்றால் தமிழகத்துக்கு மார்ச் 31 கடைசி என சொல்லிவிட்டது.

கடையை மாற்ற முடியாது என தொடர்ந்து போராடும் இந்த ‘மக்கள் தேர்தெடுத்த அரசு’ மூடிவிட்டு சும்மா இருக்குமா… பின்வாசல் போட்டு கடையை நடத்திய அரசு ஆச்சே.

கடையினை ஊருக்குள் மாற்ற முடிவு செய்து மாற்றி வருகிறது. அனைத்து இடங்களிலும் மக்கள் மூடுடா கடையை, திறக்காதடா கடையை என போராடும் நிலையில், போலீசு காரர்கள் இப்ப விட்டுடுங்க… கலெக்டர் பார்த்து மனு கொடுங்க என அப்புறப்படுத்த பார்ப்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.

மதுரை அருகே ஒத்த டாஸ்மாக் கடையை மூடுங்க என மதுரை உயர் நீதிமன்ற உத்தரவை எடுத்துக்கொண்டு கலெக்டர் ஆபிஸ், அரசு அலுவலங்களுக்கு நடையாக நடந்து இறுதியில் சசி பெருமாள் அந்த டாஸ்மாக் கடை எதிரே டவரில் ஏறி போராடும்போது கொலைசெய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே..

ஆக கடையை வைக்கவிட்டீங்கனா… அப்புறம் எடுக்கமாட்டான் அவ்வளவு சீக்கிரத்தில்….மத்திரபிரதேசத்தில் நேற்று இதே போல சாராயக்கடையினை ஊருக்குள் வைக்க வந்த டெம்போ வண்டியை மக்கள் கற்களை வீசி விரட்டிய காட்சியை நீயூஸ் 18 ல் பார்க்க முடிந்தது.

தமிழகம் அடுத்த கட்ட போராட்டத்தை அம்மாநில மக்கள் உணர்த்துவது போல இருந்தது.

டாஸ்மாக்-க்கு பார்சல் உண்டு – 1ரூ இட்லிக்கு பார்சல் இல்லை…!

maxresdefault

 

குடியை கெடுக்கும் அரசு சாராயக்கடையில் சரக்கை  எம் ஆர் பியை விட 5 ரூ 10ரூ அதிகம் தான் கடைக்காரர் கொடுப்பார் ( 10 ரூ சரக்கை மிடாஸும் எலைட்டும் 100 ரூ எம் ஆர் பி போடுவது ஒப்பிட்டால் குறைந்த கொள்ளை தான்) பில் கிடையாது. அதையும் பார்சல் வாங்கி  எங்கு வேணாலும் குடிக்கலாம்,பாரில் குடித்த்தால் வாட்டர் பாக்கெட் 7ரூ, கிளாஸ் 7ரூ சைடிஸ்ட் 50ரூ 100ரூ என மொய் வைக்கனும்… வெளியில் எடுத்துக்கொண்டு பப்ளிக்காக குடிக்க முடியாத சரக்குற்கு பார் உண்டு 100% விலை உயர்வில். கடையும்  தனியார் கட்டிடத்தில் தான் இயங்கும். அந்த பக்கமே மக்கள் போக முடியாது, சரக்கு வாடையும் – மூத்திர வாடையும் கம கம என மணக்கும்.

ஆனால் 1ரூ இட்லி, 5 ரூ சாம்பார் சாதம் தரும் அம்மா உணவகத்திற்கு டைல்ஸ் போட்ட சாப்பிடும் இடம், மின்விசிறி – டிவி , பில் போட்டு உணவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசம், சிசிடிவி ( சாப்பிடும் ஏழைகள் அரசுக்கு எதிராக சதி திட்டம் போடுவாங்களோ) செக்கூரிட்டி ( ரேஷன் அரிசி இட்லி இந்த பில்டப்பு) என அம்மா படமும் திரும்பிய பக்கம் எல்லாம்.. முக்கியமாக பார்சல் கிடையாது என போர்டு வேறு. ஏன்னா இட்லியை வெளியில் எடுத்துக்கொண்டு போய் அதிக விலைக்கு விற்று விடுவார்கள் அல்லவா..?

 

டாஸ்மாக் சரக்கை அரசே காய்ச்சி அரசு பாரில் விற்கலாமே…!

மாநிலத்தை சுற்றி மதுவிலக்கு இல்லை, இந்தியா முழுவதும் மதுவிலக்கு இல்லை என ஆரம்பித்து நிறுத்தி கேட்டா வருமானத்துக்கு பின்ன என்ன வழி ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் ஜெயா உள்ளிட்ட ஆண்ட அரசுகள் அந்த டாஸ்மாக் சரக்கை மிடாஸ், எலைட், கால்ஸ் என தங்கள் தனிப்பட்ட தொழிற்சாலையில் காய்ச்சிவது ஏன்? கட்சிக்காரன் பார் வைத்து நடத்த கொள்ளையடிக்க அனுமதிப்பது ஏன்?

liquor(2)

பேசாமல் அரசே சரக்கை தயாரித்தால் 28000 கோடியை விட அதிகமாக லாபம் கிடைக்குமே… 10 ரூபாய் வாட்டர் பாட்டிலை அரசு பாரில் விற்றால் ரயில் நீர் விற்பனை இலக்கை எட்டிவிடும் அளவுக்கு லாபம் வருமே….!

மிக்சி, கிரைண்டர் , லேப்டாப் தான் வாங்கி இலவசமாக கொடுக்கிறீர்கள்… கேவலம் 10 ரூபாய் தயாரிப்பு டாஸ்மாக் சரக்கு இதை கூடவா அரசு தயாரிக்க கூடாது என சி.ஆர்.சரஸ்வதி, மாபா பாண்டியராஜனிடம் நிறுத்தி கேட்டால் தெரியும், டாஸ்மாக் சாம்ராஜ்ஜியம் ஏன் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படுகிறது என்று.

இட்லி 1ரூ டாஸ்மாக் கிளாஸ் 7 ரூ நான்காண்டு ஆட்சி சாதனை..!

amma itly

water

மக்களை ஒரு ரூபாய் இட்லிக்கு கையேந்த  வைக்கும் அரசு மறுபுறம் டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய் கூட பெறாத சரக்கை 120 ரூபாய் என்றும் 50 காசு கூட பெறாத கிளாஸை 7 ரூபாய்க்கும் விற்கிறது. சமூக விரோத கும்பலாக இந்த அரசு செயல்படுகிறது என்பதற்கு வேறு உதாரணம் இதைவிட வேண்டுமா?

1ரூ இட்லிக்கு சிசிடிவி, 28,000 கோடி டாஸ்மாக்-க்கு….?

இன்றைக்கு ரேஷன் கடையில் பருப்பு இல்லை, எண்ணெய் இல்லை இன்றாலும் அதே ரேஷன் பொருட்கள் மூலம் தயாராகும் ஒரு ரூபாய் இட்லிக்கடையில் இட்லி, பொங்கலுக்கு தட்டுபாடு இல்லாமல் விற்பனை ஆகுகிறது.

Amma-Canteens

அப்படிப்பட்ட இட்லிகடை சாப்பிடும் இடத்தை எப்படி பராமரிக்கிறார்கள் என பார்த்தோமானால், இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் & டைல்ஸ் தளம், மின்வசிறி, எல்சிடி டிவி,கம்யூட்டரைஸ்டு பில் என வசதிகள் செய்யப்பட்டதோடு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, செக்கூரிட்டி தனியாக வாசலில் உட்காரவைக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரம் மட்டும் திறக்கப்பட்டு நடத்தப்படுகிறது, அந்த டிவி வரிக்கு வரி தமிழக முதல்வர் என இன்னமும் ஜெயலலிதா (அம்மா என்று தான் அவர்கள் கூறுவார்கள்) அவர்கள் குறித்த செய்திகள் ஒளிப்பரப்பப்படும்.திரும்பி பக்கம் எல்லாம் அம்மா படங்கள் இருக்கும்.

ஒரு ரூபாய் இட்லிக்கு இத்தனை வசதிகள். கண்காணிப்புகள்.

ஆனால் ‘குடிப்பழக்கம் நாட்டுக்கு, உயிருக்கு, வீட்டுக்கு கேடு’ என போடு வைக்கப்பட்டு மக்களின் தாலி அறுக்கும் டாஸ்மாக் கடைக்கு,அதுவும் அரசுக்கு 28,000 கோடி அள்ளி தரும் அமுத சுரபிக்கு எந்தவிதமாக வசதியும், பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதை ஒப்பீட்டு பாருங்கள்.

maxresdefault

சரக்கின் மேல் 5 முதல் 10 ரூபாய் அதிகம் வைத்து பில் இல்லாமல் விற்கும் விற்பனையாளர்கள், எச்சில், முத்திரம் கமழும் பார், ஒரு ரூபாய் கூட பெறாத வாட்டர் பாக்கெட், 7 ரூபாய், அதுபோல அனைத்து வித பொருட்களும் 4,5 மடங்கு விலை உயர்வு,சுகாதாரமற்ற முறையில் பொருட்கள் தயாரிப்பு, காலை 10 முதல் இரவு 10 வரை தொடர்ந்து கடையிலும் மீதி நேரம் பாரிலும் என 24நான்கு மணி நேரமும் சரக்கு கிடைக்கும் வசதி என ’மக்கள் நலன்’ பாதுகாக்கப்படுகிறது.

ஒரு ரூபாய் கடையை கூட தேடனும் ஆனால் நம்ம டாஸ்மாக் கடை தெருமுனைக்கு ஒன்று, சிக்னலுக்கு 3 என திறக்கப்பட்டு ’மக்களின் நலன்’ பாதுகாக்கப்படுகிறது.

உண்மையில் ஒரு இட்லிக்கடைக்கு ஏன் சிசிடிவி இருந்தும் செக்கூரிட்டி என்றால் எல்லாம் அதிமுக கட்சிக்காரன் டெண்டர் எடுத்து சம்பாதிப்பதற்க்கு என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.

டாஸ்மாக் சரக்கு – மிடாஸ், எலைட்,கால்ஸ் என கட்சிக்கு ,இலவசங்கள் கொடுக்க அரசுக்கு. கழககண்மணிகள் பொறுக்கி திண்ண, சிந்திக்கும்  தகுதி இல்லாத மூளையை சமூகம் உற்பத்தி பண்னுவதற்கு…

ஒரு  ரூபாய்இட்லிக்கடை – மக்களை சிந்தனை அளவில் விலைவாசி உயர்வை ஏற்றுக்கொள்ள வைக்க, மக்கள் விரோத அரசை மக்கள் நண்பன் போல நம்ப வைக்க, டெண்டர் மூலம் கழககண்மணிகள் பொறுக்கி திண்ண.

பெண்கள் போராடியதால் எம்ஜிஆர் மதுவிலக்கை ரத்து செய்தாரா?

இன்றைக்கு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள் தங்கள் பகுதியில், பள்ளிக்கு அருகில் இருக்கும் மதுக்கடைகளை மட்டுமாவது அகற்றுங்கள் என போராடுவதை நாம் தினந்தோறும் பத்திரிக்கைகளில் செய்திகளாக காணலாம். ஆனால் அங்கெல்லாம் தடிக்கொண்டு தாக்குவதும், வெறும் நெடுஞ்சாலை கடைகளை கூட உடனே எடுக்க முடியாது என உச்சநீதிமன்றம் வரை போகும் ஜெயா அரசை பார்த்து வரும் சூழ்நிலையில் மதுவிலக்கு குறித்து இரண்டு நாளைக்கு முன்னர் புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் பங்கு கொண்ட அதிமுக கட்சிக்காரர் கீழ்கணடவாறு சொல்கிறார்.

’சாராயத்துக்கு எதிரான எம்ஜிஆர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்கள் ராமபுரதோட்டத்தில் போய் நின்று மதுவிலக்கை ரத்து செய்ய சொன்னதால் தான் மதுவிலக்கை விலக்கிக்கொண்டார் ’

mto27c

தன்னை சுற்றி இருக்கின்ற அல்லக்கைகள் கொள்ளையடிக்க எம்ஜி ஆர் மதுவிலக்கை ரத்து செய்தார் என்ற உண்மையினை மறைத்து மேற்கண்டவாறு இவர்கள் பொய் பேச காரணம் மிடாஸ், எலைட்,கால்ஸ்,என பல ஆலைகளை தாங்களே திறந்து கோடிக்கணக்கில் இன்று சாராயத்தை விற்கும் மதுபான அதிபர்களாக திமுக, அதிமுக கட்சியினரின் கூட்டுக்கொள்ளையினை மறைப்பதற்காகதான்.

new-tas

இவர்களை எதிர்ப்பது போல பேசும் பாமக, மதிமுக, தேதிமுக, நாம் தமிழர் என அனைத்து கட்சிக்காரர்களும் இவர்களுடன் கூட்டணியோ, ஓட்டுப்பொறுக்க உதவியவர்களாக இருந்தவர்களே எனும்போது மதுவிலகை நாம் சட்டவரப்புக்குள் அதாவது வாக்குச்சீட்டினால் தீர்க்க முடியும் என நம்புவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

modi2

ஊழலை ஒழிப்பேன் என வந்த மோடி இன்று லலித்மோடியாக மாறியபின் என்னப்பா என்றால் இன்னும் 4 ஆண்டுகள் இருக்கு பேசாதே எனும்போது, மக்கள் அதிகாரம் இல்லாத இந்த அமைப்பில் ஒரு முதல்வர வந்து அவர் கையெழுத்து இட்டு தான் மதுவிலக்கு மட்டுமல்ல நமது வாழ்வும் விடியும் என நம்பினால் இதை விட முட்டாள் தனம் வேறேது?

டாஸ்மாக் வித்தவனுக்கு 28,000 கோடினா காச்சுனவுனுக்கு கூட்டணி வைச்சவனுக்கு…

new-tas

குடியை ஒரே கையெழுத்தில் நிறுத்துவேன் என சொல்லும் பாமக சாதிவெறி கட்சிக்காரர்களும் குடிக்கிறார்கள்… கேட்டா டாஸ்மாக் முடிய பின் நிறுத்திவிடுவார்கள் என புரூடா விடுகிரார்கள், குடியை நிருத்த முடியாது, நிருத்த பார்ப்போம் என சொல்லும் திமுக அதிமுக கட்சிக்காரன் 30 ரூபாய் கூட பெராத சாராயத்தை காச்சும் ஆலையை நடத்துரான், இவர்களுடன் இதுவரை கூட்டனி வைக்காத ஆதரவாக பேசாத ஒருத்தரை நீங்கள் வாக்குச்சீட்டில் தேடினீர்கள் என்றால் கிடைக்க போவதில்லை.

சீமான், வைக்கோ, தமிழருவி, திருமா, ராமதாஸ் என எல்லா கட்சிக்காரனும் சேர்த்து கும்பி அடிச்ச பின் இன்று தனியா நின்ரு கொன்டு சவுன்டு விடுவது, மாறி மாறி கூட்டனி வைக்க பேரம் பேசுவதும் எதை காட்டுகிறது… இதோ இவர்களை அம்பலப்படுத்தும் விதத்தில் புதிய வாசகன் தளத்தில் வந்த கட்டுரையின் மறுபிரசுரம் இதோ….

ஒவ்வையார், வள்ளூவன் காலத்தில் இருந்தே மது குடிக்கும் பழக்கம் இருக்கு, ,,மேலும்  நமது மாநிலத்தில் மட்டும் மதுவிலக்கு சாத்தியமில்லை என திமுக வழக்கறிஞர் பிரசன்னாவும், அதிமுக ஆவடி குமாரும் கீழ்கண்ட நிகழ்ச்சியில் டாஸ்மாக்–கடைக்கு பிரச்சாரம் செய்கின்றனர்.

 

இவர்கள் இப்படி பேசுவதற்கு காரணம்,

குடியை நிறுத்த முடியாது என்றால் அரசே சரக்கை தயாரித்து, ஒரு ரூபாய் இட்லி கடை போல 30 ரூபாய் டாஸ்மாக் கடை (30 ரூபாய்க்கும் குறைவாகவும் இருக்கலாம்) – மாலை நேரம் மட்டும் (காலை முதல் நடத்த இது என்ன காபி கடையா..?) என திறந்து நடத்தவது தான் சரியாக இருக்க முடியும் என யாரும் இவர்களை கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற தையரியம் தான் காரணம்,,,,

மிடாசு, எலைட்,கால்சு ஓனர் யாரு…?

நாட்டில் இருக்கும் பள்ளிகளின் எண்ணிக்கையினை விட டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை அதிகம் எனும் அளவிற்கு தடுக்கி விழுந்தால் டாஸ்மாக் என பள்ளிகள், மருத்துவமனைகள்,கோயில்கள் என எதன் பக்கத்திலேயும் டாஸ்மாக் என தமிழகமே இன்று டாஸ்மாக்மயமாகி வருகிறது என்றால் அது மிகையில்லை.

tasmac tn

20ரூ, 30 ரூ கூட பெறாத சரக்கை அரசு அநியாய விலைக்கு விற்று 25ஆயிரம் கோடி லாபம் பார்க்கிறது என்பதை தாண்டி அந்த சரக்கையே தனது கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களுமே தயாரித்து ஒரு மாபியாவாக வளர்ந்து வருகின்றனர் என்பதே நிதர்சன உண்மை.

அதனால் தான் டாஸ்மாக் கடையினை மூடச்சொல்லி அதன் அருகில் இருக்கும் மக்கள், மாணவர்கள் போராடும்போது அரசு தடி கொண்டு தாக்குகிறது.

பெரிய பெரிய மால்களில் எலைட் டாஸ்மாக் என்ற உயர்ரக சரக்கு கடையினை திறப்பதிலும் மும்முரமாக இருக்கிறது.

கேவலம் ஒரு சாராயக்கடையை அதுவும் அரசு சாராயகடையை கூட மக்கள் விருப்பமில்லை என்றால் அந்த இடத்தில் இருந்து எடுக்க தயாரில்லாத அரசாங்கம் மறுபுறம் புதிது புதிதாக கடைகளை திறப்பது, பெரிய பெரிய மால்களில் எலைட் டாஸ்மாக் என்ற உயர்ரக சரக்கு கடையினை திறப்பதிலும் மும்முரமாக இருக்கிறது.

டாஸ்மாக் அரசு கையில் எடுத்த முந்திய ஆண்டில் தான் மிடாஸ் என்ற சரக்கு தயாரிக்கும் நிறுவனத்தை சசிகலா உறவினர் மூலம் ஆரம்பிக்கப்படுகிறது. அதன் பின் திமுகவும் தனது பங்கிற்கு நிறுவனங்களை ஆரம்பித்து அதனோடு சேர்ந்து கொண்டது.

குடிக்கிற பாரிலேயே டூவீலர் பார்க்கிங் அனுமதி கொடுத்து விட்டு கடைக்கு 20 வண்டி  நிச்சியம் நிற்கும் போது  ‘எங்க ஊது’ என மறுமுனையில் கேட்கும் அரசு.

இப்படி தாதுமனல் , கிரானைட் போல டாஸ்மாக் சரக்கும் ஒரு பெரிய மாபியாக்களின் கையில் சிக்கிகொண்டதால் அரசு கனவில் கூட மதுவிலக்கு என்பதை யோசிக்க வாய்ப்பு இல்லை.

வெறுமனே ’அரசுக்கு வருமானம், இலவசங்களை கொடுக்கிறான்’ என டாஸ்மாக் –யை சுருக்கி பார்த்தால் ராமதாஸ் வந்தால் கடையை மூடிடுவாரு, வைகோ வந்தால் கடையை மூடிடுவாரு என தான் யோசனை வரும். அதனை தாண்டி டாஸ்மாக் இப்படி இந்த கட்சிகளின் மாபியா நிறுவனங்கள் கையில் இருக்கும் பின்னணியை தெரிந்து கொண்டால் தான் இதே ராமதாஸும், வைகோவும் ஜெயாவையும், கருணாநிதியையும் பார்த்து பல்லீலித்த சமயத்தில்(மாறி மாறி கூட்டணி) அடைந்த கைமாறுகளை என்னவென்று யோசிக்க முடியும்.

மதுபான மாபியாக்களுக்கு வருமானம், அரசுக்கு வருமானம் என்பதோடு பார்கள் மூலம்  வட்டம், சதுரம் என கட்சியினருக்கும் வருமானம் மட்டுமல்ல இது எல்லாவற்றையும் விட மது குடிக்கும் இளைஞர்கள் உள்ளிட்ட மொத்த சமூகமுமே சிந்தனை மழுங்கி,அம்மணமாக இன்று நிற்கும் இந்த அரசை கூட உணர்ந்து ஒதுக்காமல், ஓட்டுமொத்த அரசு எந்திரத்துக்கும் பாதுகாப்பு என்பதை தான் நிகழ்கால உண்மைகள் காட்டுகின்றன.

joseph-stalin-today

1930 களில் சோசலிச ரஷ்யாவில் தோழர் ஸ்டாலின் ஒரு பேட்டியில் அரசே மதுபானக்கடைகளை நடத்தலாமா? என்ற கேள்விக்கு ”இன்றைய நிலையில் உடனடியாக மதுபானக்கடைகளை மூட முடியாது என்பதால் திறந்து வைத்து உள்ளோம் அதே நேரத்தில் எவ்வளவு சீக்கிரத்தில் அதனை மூட வேண்டும் எனபதை அது அரசின் கைகளில் இருக்கும்போது மட்டுமே சாத்தியமாக்க முடியும்” என்பதால் அரசே அதனை நடத்துகிறது…!” என்று பதில் அளித்தார்.

மிகப்பெரிய குளிர் பிரதேசத்தில், மதுகுடிப்பது என்பது ஒரு உணவின் ஒரு பகுதி என இருக்கும் நாட்டிலேயே மதுவிலக்கினை கொண்டு வரத்தான் அரசின் கைகளில் அதனை வைத்து உள்ளோம் என கூறும் ஆட்சியாளர்கள் எங்கே…!

திட்டமிட்டு நிறுவனங்களை ஆரம்பித்து வைத்து கொண்டு பின்னர் டாஸ்மாக் மூலம் அரசே சாராயக்கடையினை ஏற்று நடத்துவது,  அதுவும் ’மக்கள் ஒரு இடத்தில் வேண்டாம் என்றால் கூட அதனை ஏற்க முடியாது என போலீசை கொண்டு தாக்கும் இந்திய ஆட்சியாளர்கள் எங்கே.. இதில் தாங்கள் தான் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகவாதிகள் என்று புளங்காகிதம் வேறு…!.

டாஸ்மாக்கை மூடனுமா.. புதுச்சேரி பெண்களை பின்பற்றுங்கள்…!

puthucheri

1990-களில் ஆந்திராவில் பெண்கள் திரண்டு பல சாராயக்கடைகளை அடித்து நொறுக்கி மூடிய வரலாற்றின் தொடர்ச்சி நேற்று புதுச்சேரியில் கவுண்டன்பாளைத்தியில் நிகழ்ந்தது

தொடர்ந்து கடைக்கு எதிராக உண்ணாவிரதம், முற்றுகை என போராட்டம் நடத்திய பின்னர் மறுபடியும் சாராயக்கடையினை ஏலம் விடமாட்டோம் என வாக்குறுதி கொடுத்துவிட்டு எப்பவும்போல கடையினை ஏலம் விட்டு நடத்திய அரசுக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் கடையில் நுழைந்து சாராயப்பாட்டில்களை, கேண்களை அடித்து நொறுக்கினர்….

அரசுன்னா பள்ளிக்கூடம் தொறக்கனும், ஃபாக்டரி தொறக்கனும் அதைவிட்டுவிட்டு சாராயக்கடையினை திறக்கிறேன்லாபம் அதிகம் வருகிறது என்று சொல்வது கேவலமாக இல்லை என முதலமைச்சர் நாக்கை புடுங்கிக்கொள்கிற கிழி கிழி என கேட்டனர் பெண்கள்….!

தமிழகத்தில்

மிடாஸ், எலைட் என சரக்கை தயாரிப்பவனே அம்மா, கலைஞர் கட்சிக்காரனாக இருப்பதும், அன்புமனி போன்ற சாதிவெறி அரசியலும், கொள்ளையடிச்ச காசில் சொகுசு வாழ்க்கை வாழும் மைனர்களாலும் கனவிலும் மக்கள் நலன் குறித்தோ, டாஸ்மாக் வறுமை குறித்தோ உணர முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

உண்மை நிலை இப்படி இருக்க தமிழகத்தில் டாஸ்மாக் கடையினை அன்புமணி வந்தா மூடிடுவாரு, அம்மா திடிரென மனம் மாறி மூடிடுவாங்க என நம்பி தெருவெல்லாம் டாஸ்மாக் ஆறு ஓடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டுயிருக்கும் மக்களுக்கு ஆந்திரா, புதுச்சேரி மக்கள் எப்படி சாராயக்கடையினை மூட வேண்டும் என வழியினை காட்டியுள்ளனர்.