26 பற்பசை தயாரிக்கின்ற கோல்கேட்-யின் தண்ணீர் பாசம்…!

colgate.PNG

 

26 விதமான பற்பசை தயாரித்து வியாபாரம் செய்யும் கோல்கேட் கம்பெனிக்காரர்கள் தண்ணீருக்கான மக்கள் படும் கஷ்டங்களை வீடியோவாக போட்டு தண்ணீரை சேமியுங்கள் என விளம்பரம் செய்கிறது.

இவர்கள் 26 பற்பசை தயாரிக்க எவ்வளவு தண்ணீர் செலவு செய்வார்கள் என யோசித்தீர்கள் என்றால் புரியும் இதன் அயோக்கியத்தனம்.

தெருவுக்கு இரண்டு டாஸ்மாக் கடையை நடத்திக்கொண்டு மறுபுறம் குடிச்சுட்டு வண்டி ஓட்டினீயா? இந்த மக்கள் நல அரசு கேட்பது போல உள்ளது.

அரசே தண்ணீரை பாட்டில் போட்டு விற்றுக்கொண்டும் கோல்கேட் கம்பெனிக்காரனை விளம்பரம் போடுவதும் ஒப்பிட்டால் புரியும் இந்த அரசு மல்லையாவுக்கா? விவசாயிக்கா?

 

Advertisements

2015-ல் இல்லாத ஜனநாயாகம் எப்படி 2017 வந்தது Mrஸ்டாலின்…?

குமாரசாமியால் விடுதலை வாங்கி ஆர்.கே.நகரில் 2015 ஜெயலலிதா போட்டியிட்டபோது அங்கே ஜனநாயகம் மதிக்கப்படாது என்றும் அதனால் அந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக திமுக அறிவித்தது.

குமாரசாமி தீர்ப்பு தப்பு என இன்று உச்சநீதிமன்றம் சொல்லித்தான் திமுகவுக்கு தெரியுமா? இல்லையே அன்றே தெருதெருவாக போய் ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்து இருக்க வேண்டியதுதானே?

இன்று ஜனநாயத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் தங்களை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் Mrஸ்டாலின் அவர்கள் அன்று 2015-ல் இல்லாத ஜனநாயாகம் எப்படி 2017 வந்தது என விளக்க முடியுமா?

அன்று ஜனநாயகத்தின் மீது திமுக நம்பிக்கை வைக்காமல் யாருக்கும் ஆதரவு கூட கொடுக்காமல் இருந்ததன் பின்னணி விளக்க முடியுமா?

இடைத்தேர்தல் கூட ஜெ உயிருடன் இருந்தால் ஜனநாயகம் கசக்கும்… இல்லாதபோது இனிக்குமா?

ஆனால் இந்த இடைத்தேர்தல், பொதுத்தேர்தலால் மக்களுக்கு இம்மியளவும் பிரோஜனம் இல்லை என்பது தான் உண்மை. இதோ அம்மக்கள் வார்த்தைகள்:

பெட்ரொல்: வாட்-ஆல் விலையேறும்-ஹெச்.ராஜா..! கலால்-ஆல் விலைகுறையுமா?

h raaja

தமிழக அரசின் வாட் வரி அதிகரிப்பால் பெட்ரோல் விலை உயர்ந்து உள்ளதால் விலைவாசி உயரும், பருப்பு விலை கூடும் – ஹெச்.ராசா கருத்து.

அப்ப 15 நாளுக்கு ஒரு முறை பெட்ரோல் -டீசல் விலை கூட்டும் மத்திய அரசால், பேரல் விலை குறைந்த போது தொடர்ச்சியாக கலால் வரி ஏத்தி விலை குறையாமல் பார்த்து கொண்ட மத்திய அரசால் விலைவாசி குறையுமோ….?

ஏத்தினாலும் பெட்ரோல் போடுவோம்-அடிச்சாலும் அங்கீகரிப்போம்..!

Tamil_News_large_1253796பெட்ரோல் என்ன விலை ஏத்தினாலும் நீங்க போடத்தான் போறீங்க…! – இது நேற்று பெட்ரோல் பங்க் ஊழியர் சொன்னது.

இதை போல பல குரல்கள் “தொடர்ச்சியாக நாங்க கோரிக்கை மனு கொடுத்து பார்த்தோம் நடவடிக்கை இல்லை… அதனால் போராட முடிவு செய்து உள்ளோம்..” இது அரசின் கல்குவாரி அனுமதி முதல் டாஸ்மாக் அனுமதி வரை அனைத்து வித மக்கள் பாதிப்புக்குள்ளாகும் விஷயங்களுக்கு எதிராக தினந்தோறும் வேறு வேறு செய்திகளில் நாம் கேட்டு வருவது…!

 

இப்ப மேலே சொன்ன பெட்ரோல் ஊழியர் கருத்தை மீண்டும் படித்து பாருங்கள்… நாம ஓட்டுப்போட்டு தேர்தெடுத்து அனுப்பிய அரசு மக்களை மதிக்காமல் அனுமதி இல்லாமல் விலையை ஏத்துறான்… அவனே இதற்கு முன்னரும், பின்னரும் தொடர்ச்சியாக நமது பகுதியில் குப்பை கிடங்காக, கல்குவாரியாக , டாஸ்மாக் சாராய கடையாக , ஹைட்ரோ கார்பன் – மீத்தேன் – நியூட்ரினோ திட்டஙளாக நமது எதிர்ப்பையும் மீறியும் அனுமதிக்கிறான்.

ஆக மக்களுக்கு எதிராகவே இருக்கும் இந்த அரசுக்கு நாம் எந்த இடத்தில் அனுமதி கொடுத்தோம் என பார்த்தோமானால் “ சார் ஓட்டு போடலைன்னா எப்படி சார், நமது கடமை சார், ஜனநாயக நாடு இது சார், நல்லவனுக்கு போடனும் சாரி, கொஞ்சமாவது நல்லது செய்வான் என நம்புவோம் சார், சின்னவயசுல இருந்து நான் இந்த சின்னத்துக்கு ஓட்டுப்போட்டு பழகிட்டேன் சார்” இப்படி நம்மிடம் 5 ஆண்டுக்கு ஒரு முறை வாங்கும் ஓட்டை தான் அவர்கள் தங்களுக்கான அதிகாரமாக காட்டி கொள்கின்றனர்.

நீ என்ன செஞ்சாலும் திருடனில் ஒருவனை அங்கிகரிப்போம் என்ற பண்பு நிலைக்கு நாம் வந்துவிட்டதன் வெளிப்பாடு இது.

ஜனநாயகம், உரிமை கடமை பேசுற சூர்யாவே, கார்த்தியோ , தேர்தல் ஆணையமோ அதன் பின் நமது பிரச்சனைகளுக்கு ஏதாவது வந்து இருக்கிறதா? போராடுபவர்கள் பயங்கரவாதிகள் என பேசுபவர்களை கண்டித்து உள்ளனரா?

 

சந்தனதேவன் – அமீர் சாரை ஊருக்குள் பின்பக்கம் அழைத்து சென்றது யார்?

 

santhana thevan.JPG

பாரதி ராஜா  அவர்கள் குற்றபரம்பரை எடுப்பதை விட ஒரு இஸ்லாமியரான அமீர் அவர்கள் சந்தனத்தேவன் எடுப்பதையும், கலாச்சாரம் மக்கள் பண்பாடு என சொல்வதையும் நாம் என்னவென்று சொல்லப்போகிறோம்….

ஒரு கிராமத்தில் சென்றாலே மக்கள் ஒருவரை உடனே அடையாளம் கண்டு , இன்னார் இன்னார் என புட்டு புட்டு வைப்பார்கள் என சொல்லும் அமீர் அப்படிபட்ட மக்கள் உயிரோட்டமான கலாச்சார பண்பாட்டை தான் இனி படமாக நான் எடுப்பேன் என்கிறார்.

 

ஆனால் அந்த ஒவ்வொரு ஊருக்குள்ளும் செல்லும் முன்னும் இளவரசனும், சங்கரும் வாழும் சேரி என்ற காலனி இருக்குமே அவர்கள் எல்லாம் தமிழர்களா? அவர்களின் பண்பாட்டை கலாச்சாரத்தை யார் படமாக எடுப்பது?

இஸ்லாமியராக இருந்தாலும் தேவர் சாதி அடையாளத்தை உச்சிமுகர்வதும், இன்று பெயருக்கு பின்னால் சாதி பெயர் போடுவதை கேவலம் என்ற நிலையினை உருவாக்கிய பெரியார்  மண்ணில் வெள்ளையத்தேவா, சந்தனதேவன் என சாதிய அடையாளத்தோடு படங்கள் வருவது குறித்தும் நாம் என்னவித கருத்துக்களை கொண்டு உள்ளோம்.

ஜல்லிக்கட்டு என்பது பண்பாடு, கலாச்சாரம் என்பது ஓகே – அதில் மத்திய , மாநில அரசு – உச்சநீதிமன்றம் தலையீட்டு அதிகாரத்தை செலுத்துகிறது என்பது நிதர்சனம். ஆனால் அத்தகைய அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்க நாம் இணையும் போது தமிழர் என்ற போர்வையில் ஆதிக்க சாதியினரின் ஆணவப்படுகொலைகளையோ,  சாதிவெறி தாக்குதலையோ கேள்விக்குள்ளாக்காமல் அவர்களை மட்டும் தமிழர் என ஏற்பது சரியா…?

மத்திய அரசின், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் குறித்து கண்டிப்பாக இந்த படம் பேசப்போவதில்லை, நாங்கெள்ளாம்…. என ஒரு தற்பெருமை படத்தை தான் நீங்கள் எடுக்கப்போகிறீர்கள் எனும் போது எதற்கு இந்த பில்டப்பு…

மண் சார்ந்த கதை என்பது  ஓகே அமீர் சார், ஆனால் ஊரே இரண்டா கிடக்குது இந்து சாதீய கட்டுமானத்தால், இதில் எந்த ஊரை பிரதிநிதித்துவப்படுத்த போகிறோம்.. ?

மொத்த ஊரையும் மையப்படுத்தி , பிரச்சனைகளை அனுகி எடுப்பது தான் யதார்த்த மக்கள் கதையாக இருக்க முடியும்.NH-45 இந்தி  படம் , வானம் – ஒரு நாள் கூத்து, ஜோக்கர் போன்ற தமிழ் படங்கள் போல சில படங்கள் வந்து கொண்டு இருக்கறதே அப்படிப்பட்ட படங்கள் எடுப்பது சரியா..? இல்லை இன்னும் பிரச்சனை வளர்த்து எடுக்கும் படங்களை எடுப்பது சரியா….?

 

ராம்மோன்களை நியாயப்படுத்த இன்னோவா நாஞ்சிலை தடுக்கும் அறம் – மிக ஆபத்தான வக்கிரத்தின் உச்சம்…!

ஜெயா குறித்து தீப்பொறி ஆறுமுகம் கூட பேசாததை பேசிய நாஞ்சில் சம்பத் பின்னாளில் ஜெயா புகழ் பாடி திரிந்ததை போன்று ஓட்டுப்பொறுக்கி அரசியலின்  கோவணத்தை உருவியவர்கள் எவரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட நாஞ்சில் சம்பத் கீழ்கண்ட வீடியோவில் விவசாயிகள் சுருண்டு விழுந்து சாகும்போது  சேகர் ரெட்டி, ராம்மோகன் ராவ் ோன்றவர்கள் கருப்பு பணத்தில் திரிவதை நியாயப்படுத்த என்னை அறம் தடுக்கிறது என 30 நிமிடம் ஆத்துகிறார். நன்றாக கவனிக்கவும் ஜெயா மரணத்தை அடுத்து தான் இவ்வாறு பேசுகிறார்.

இனி இலக்கிய வெளியில் மட்டும் பயணம் செய்யப்போவதாக கூறுகிறார். இவரை இலக்கிய வெளியில் சந்திப்பவர்கள் என்ன செய்ய போகிறார்கள்..! மெளனமாக இருக்க போகிறார்களா…?

இவர் தான் இந்த புத்தககாட்சியில் படிப்பு அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றப்போகிறார்…. 

பணத்துக்கு கூவும் இந்த  கிரிமினலுக்கு என்ன படிப்பின் முக்கியத்துவம் தெரியும்…!

 

அதே சம்பத் 2,3 நாளில் தனது முடிவை மாற்றிக்கொண்டு சசிகலாவை சந்தித்து இன்னும் தீவிரமாக சின்னம்மாவுக்காக உழைக்கப்போவதாக கூறுகிறார்.

 

 

முடிவை மாற்றிய நாஞ்சில் சம்பத்தை கலாய்ப்பதும், போகிற போக்கில் செய்தியை வாசித்து விட்டு செல்வதும் தான் இன்று நடக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட அடிமைகள் அழைத்துதான் அரசியலை விவாதிக்கிறேன் என ஊடகங்கள் மார்தட்டிகின்றனர்.

தீப்பொறி ஆறுமுகத்தையும், நாஞ்சில் சம்பத்தையும் அதிமுக ஜெயலலிதா கட்சியில் இணைத்துக்கொண்டதையும், சேகர்பாபுவையும், சேடப்பட்டி முத்தையாவையும் திமுக கருணாநிதி இணைத்துக்க்கொண்டதையும் உற்று நோக்கி பார்த்தால் தெரியும் இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியலில் முத்தெக்க முடியாது, சாணியைத்தான் எடுக்க முடியும் என்று.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்டவர்களை தாக்கி, பெண்களின் மார்புகளை இழுத்து பிடித்த போலீசு காலிகளை உங்கள் ஓட்டுசீட்டின் மூலமாகவோ, நோட்டோ மூலமாகவோ அங்கீரிக்கிறீர்கள் என்பதை கூட புரிந்து கொள்ள முடியாது தான்.

ஆனால் சின்னம்மா வாழ்க என நாஞ்சில் சம்பத் வருவதும், செயல்தலைவர் வாழ்க என சேகர்பாபு வருவதும் கூட வா உங்களுக்கு சுரனை ஏற்படுத்தவில்லை…?

மெட்ரோ ரயில்: ‘சுற்றுலா’ போல வந்தால் அபராதமாம்…!

metro-2

மெட்ரோ ரயில் ஆளே இல்லாமல் வெறிச்சோடி கிடப்பதாக தினகரன் செய்தி வந்த நிலையில் இன்று மக்கள் சுற்றுலா பார்க்கும் இடம் போல ஒருமுறை வந்து நீண்ட நேரம் நிலையத்திலோ, ரயிலிலோ இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என தினமணியில் இன்று செய்தி வந்து உள்ளது.

பாருங்க, மக்கள் காசில் கட்டிவிட்டு என்னடா கட்டணம் அதிகம் என்றால் ஒப்பந்தம் அப்படி, கலைஞர் தான் போட்டார், அம்மா தான் திட்டத்தை இழுத்தார் என கதை விடுகிறார்கள்.

கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் சென்னை மெட்ரோ நிறுவனம் என்ற ஆணையத்திக்கு மட்டும் தான் உண்டு என்றால் என்ன மயிருக்கு ஆட்சியாளார்கள்.

பெட்ரோல், மின்சாரம், டெலிபோன், ரயில்வே என எல்லாமே ஆணையம் கையில் கொடுத்தாச்சு என்றால் தேர்தல், ஆட்சியாளர்கள் எதற்கு… ?

நடப்பது மக்கள் அரசு போல நாடகம் ஆடும் திரைசேலை அரசு. இதனை மூடிமறைத்து மக்களை நம்ப வைக்க எத்தனை கதைகள்….!

எதிர்க்கட்சிகள் ஒன்றிணையலைனா உலகம் அழிச்சிடுமா..?

ஒவ்வொரு ஆளும் கட்சியும் தேர்தல் வரும்போது மிகப்பெரிய மக்கள் விரோத ஆட்சி செய்வதாக சித்தரிப்பது, பின்னர் ஆட்சிக்கு வரும் எதிர்க்கட்சி மீண்டும் அதே மக்கள் விரோத ஆட்சி செய்வதாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதும் இயல்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதோ கடந்த முறை திமுகவை வீழ்த்த அதிமுகவோடு கூட்டணி வைத்த விஜயகாந்த் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தற்போது அதிமுகவை வீழ்த்த திமுகவோடு கூட்டணி வைக்க முயற்சிப்பதை விமர்சனமே இன்றி ஊடகங்கள் எழுதுவதும், மக்கள் ஏற்றுக்கொள்வது வியப்பாக உள்ளது.

யார் வந்தாலும் அது மக்கள் விரோத ஆட்சியாக தொடர்கிறது என்றால் ஆள்பவர்கள் பிரச்சனையா…? இல்லை இந்த மக்களால் தேர்தெடுக்கப்படுவர்களுக்கு கட்டுபடாத, அதிகாரமில்லாத இந்த அரசமைப்பு பிரச்சனையா…?

அதிகாரிகளும், போலீசும், நீதிமன்றங்களும் நிரந்தரமாக மக்களுக்கு எதிராக இருக்கின்றனர் என்பது நிஜம் என்றால் எம்.எல்.ஏ, எம்.பி போன்ற தேர்தல் பிரதிநிதிகளால் என்ன பயன்?

அப்படி மக்களுக்கு நல்லது செய்வோம் என வரும் மோடி அரசு போன்ற பிரதிநிதிகளும் கார்ப்பரேட்களுக்கு சேவை செய்வது என தொடரும் போது மீண்டும் அந்த தற்காலிகமான அதிகாரமில்லாத மோடி பிரதிநிதிகளை கூட திருப்பி அழைக்க முடியாத நாட்டில் என்ன வெங்காயத்துக்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணையனும்..? அதனை மக்கள் ஏற்றுக்கொண்டு வாக்குச்சாவடிகளுக்கு போக வேண்டும்…?

இதோ பாருங்கள் மாறி மாறி கூட்டணி வைக்கம்போது சிரிப்பதை… உள்ளுக்குள் இவர்கள் மனது மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற சிந்திக்கும், நிச்சியம் இல்லை ‘தான் எப்படி சொத்து சேர்த்து சொகுசாக செட்டில் ஆக முடியும்’ என்று தான் யோசிக்க முடியும்.

ARV_RAMADOSS_JAYALALI_6702f

jayalalitha_vaiko_20060320

karunanidhi_sr_ramadoss_20100614naam-tamilar-to-thank-cm-jayalalitha-movie-event-stills039karuna-vijayakanthAlliance

முஸ்லீம்களுக்கும் காவல் மோடிக்கும் தோழன் ’நம்ம’ வைகோ..!

vai vai2

இன்று ரமலான் நோன்பு திறப்பு விழாவிl சிறுபாண்மையினருக்கு என்றும் உறுதுணையாக இருப்பவன் இந்த வைகோ என பேசியுள்ளார் நமது ‘கருப்புசட்டை’ வைகோ…!

குஜராத் முஸ்லீம் இனப்படுகொலையினை தலைமையேற்று மோடி நடத்தும்போது மத்தியில் கூட்டணியில் இருந்த கருணாநிதி, ராம்தாஸ் உடன் சொகுசாக அமர்ந்திருந்த வைகோ, போன தேர்தலில் மோடியையே பிரதமராக்க ஊர் ஊராக போய் ஓட்டு கேட்ட அதே வைகோ தான் இன்று முஸ்லீம்களும் நண்பன் என பேசுகிறார்.

ஓட்டுப்பொறுக்கி அரசியலில் சென்ற எவரும் நேர்மையாளனாக இருக்க முடியாது என்பதற்கு இன்னும் எத்தனை உதாரணங்கள் வேண்டும்..?

சரத்குமார் சிறந்த உழைப்பாளியாம் – ‘புரட்சியாளர்’ சீமான்…!

அதிமுக அடிமையாக இருக்கும் ஒருவரின் உழைப்பு என்பது யாருக்கானதாக இருக்கும்..? சொந்த வாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் நேர்மையில்லாத ஒருவரின் உழைப்பு என்பது எப்படிப்பட்டதாக இருக்கும்..? நிச்சியமாக அது மக்களுக்காக இருக்க முடியாது எனபதே நிதர்சன உண்மை.

seeman

ஆனால் பாருங்க நம்ம தேர்தல் பாதையில் புரட்சியை கண்டெடுக்க கிளம்பியிருக்கும் சீமான் அவர்களுக்கு சரத்குமார் ஒரு சிறந்த உழைப்பாளி ஆக தெரிகிறார்.

கூடங்குளம் அணு உலையினை தான் முதல்வர் ஆனால் ஒரே நாளில் மூடுவேன் என பிரச்சனையின் அடிப்படை தெரியாமல் பேசும் சீமானால் கூடங்குளம் வந்தால் 2000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் 2012 பொதுக்கூட்டம் போட்டு ஆதரவாக பேசிய சரத்குமார்  ( இன்றைக்கு வரை கிடைக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று) உழைப்பாளி என்று தான் முடிவுக்கு வர முடியும்.

தான் செத்தபின் என் உடல் மீது திமுக கொடிதான் போர்த்தபட வேண்டும் என சொல்லி 2 மாதத்தில் அதிமுக சென்று சேர்ந்த சரத்குமாரின் உழைப்பு, போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்ன ஜெயலலிதாவை ஈழத்தாய் ஆக மாற்ற முயற்சித்த சீமான் அவர்களால் தான் நிச்சியம் அறிய முடியும்.

நடிகர் சங்கத்திற்கான இடத்தை தனியார் ஷாம்பிங் காம்ளக்ஸ் கட்ட 29 வருஷம் லீசு போட்டு நடிகர்களுக்கு எதிராக அம்பலப்பட்டு போய் நிற்கும் சரத்குமாரை நடிகர் சஙக் தேர்தல் சமயத்தில் வெறும் இடப்பிரச்சனை மற்றபடி சரத்குமார் நல்ல உழைப்பாளி என சொல்லும் சீமான் குறித்து நடிகர்கள் மட்டுமல்ல மக்களும் ஏற்கனவே முடிவுக்கு வந்துவிட்டார்கள் எனபதே நிதர்சன உண்மை.