சமுத்திரகனியும் உருட்டுகட்டையும் 108 ஆம்புலன்ஸும்….!

தொண்டன் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்த சமுத்திரகனி அவர்கள் அப்படத்தின் காட்சிப்படுத்தபட்ட சமூக பிரச்சனைகளை பட்டிலிட்டு சொன்னதையும், இப்படிப்பட்ட அட்டைகத்தி சகாய நேர்மைகளுக்கு ஒளிவட்டம் போட்டு ராஜீ முருகன், யுகபாரதி போன்றோர் பேசியதையும் விமர்சனத்துக்கு உட்பத்தி ஒரு பதிவு எழுத வேண்டும் என தோன்றியது.

நிமிர்த்துநில் போன்ற டிராபிக் கான்ஸ்டபிள் லஞ்சத்தை பெரிதாக்கி மொத்த காக்கிசட்டையின் கோரமுகத்தை மறைத்தது போல….

தொண்டன் குறித்து சமுத்திரகனி சொல்லும் போது, ஒரு கல்லூரியில் நுழைந்த ஒரு இளைஞன் உருட்டைக்கட்டையினால் ஒரு மாணவியை அடித்து கொல்லும் துணிச்சல் எப்படி வருகிறது, அவனை சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் எதுவும் செய்யமாட்டார்கள் என்ற தைரியத்திலிருந்து தான் வருகிறது. ஆனால் வேடிக்கை பார்க்காமல் அவர்கள் அவனை திருப்பி தாக்கி இருந்தால் எப்படி இருக்கும்… அப்படி யோசித்த கதை தான் இது என ஆரம்பித்து 108 ஆம்புலன்ஸ் சேவை அதில் உயிர் காக்கும் பயிற்சி, மனிதாபிமானம் என அவர்களுடன் தங்கி அதனை காட்சிபடுத்தி உள்ளோம் என்றார்.

அதனை மடக்கி செய்தியாளர்கள் கேள்வி எழுப்புவதை ( அதெல்லாம் மூட் செய்யப்பட்டு உள்ளது) அடுத்து சமுத்திரகனி நாங்கள் பார்ப்பது உயிர் காப்பாற்றப்படுவது தான் என்றும், போலீசில் நல்ல போலீஸ் எனக்கு தெரிகிறது உங்களுக்கு வேற போலீஸ்கார்கள் தெரிகிறது என உதாரணம் வேறு கொடுத்தார்.

இறுதியாக அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவு கொடுத்து பங்கெடுப்பதை கூறிவிட்டு மாற்றம் என்பது மற்றவர்களிடம், சட்டத்திடம் இருந்து வரவேண்டும் என எண்ண கூடாது என நம்மிடம் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என ஒரே போடாக போட்டார்.

இது தான் சமுத்திரகனி…. போராட்டாங்களை ஆதரிக்கும் சமுத்திரகனி, மாற்றம் எனும் வரும் போது நம்மிடம் என ஜக்கியிடன் சரணடைவது ஏன்?

மாணவியை கொன்ற இளைஞனுக்கு எதிராக தாக்குதல் தொடுக்க அழைக்கும் சமுத்திரகனி, 108 ஆம்புலன்ஸ் என்று தனியார் ஏஜென்ஸிக்கும், தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு அடியாள் வேலை பார்ப்பது அரசு ஆஸ்பத்திரியை குழிதோண்டி புதைத்துவருவதையும் அம்பலப்படுத்தாமல் அதனை மனிதாபிமானம் என மெஞ்சுவது ஏன்?

இது தான் சமுத்திரகனியின் நிமிர்த்துநிற்க மக்களுக்கு காட்டும் இடம்?

போலீசு முதல் நெடுவாசல் வரை, விவசாயிகள் டெல்லியில் எலிக்கறி சாப்பிடுவது முதல் கொல்லிமலையில் பிரதமர் சிரிப்பது வரை அனைத்தும் நமக்கு வெளியில் நடக்கும் போது மாற்றம் மட்டும் எமக்கு உள்ளே என சொல்வது எப்படிப்பட்ட அயோக்கியத்தனம்…?

இதனை ராஜி முருகனும், யுகபாரதியும் மெஞ்சுவதற்கான காரணம்..என்ன ? வேற் என்றும் இல்லை… இவர்கள் இந்த அமைப்பை மாற்றாமல் பிஆர்பியிடம் இருந்தும், வைகுண்டராஜன் – பச்சமுத்துவிடம் இருந்தும் மக்களை மீட்க முடியும் என சிபிஎம்- சிபிஐ சிந்தனையில் மூழ்கி திளைப்பவர்கள் என்பதால் தான்.

இதனையே பிஆர்பியும் வைகுண்டராஜனும் நம்ம ஆள்தான், மண்ணை பறிகொடுத்த மக்களும் நம்ம ஆள் தான் என தமிழ் இனவெறியில் இந்த அமைப்பை ஆதரிப்பவர் சீமான்.

கவுன்சிலிங்-யை கலாய்க்கும் ‘நியாநானா கோபிநாத்’- மொட்டிவேசன் தொல்லை தாங்கமுடியலை…!

vik890

பெருகிவரும் கவுன்சிலிங் VS பொதுமக்கள் என்ற தலைப்பில் நேற்றைய நியாநானா ஒளிப்பரப்பானது.

இதில் பொதுமக்கள் தரப்பை பேசவிடாமலும், கவுன்சிலிங் செய்பவர்களை அறிவு இல்லாத டம்மிகளாக சித்தரிக்க கோபிநாத் தொடர்ந்து அவர்களை கேணத்தனமாக கேள்வி கேட்டார். இதை விலாவாரியாக பார்ப்பதை காட்டிலும் குறிப்பாக இரண்டு விசயங்களை மட்டும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என தோன்றியது..

முதலாவதாக, பெரும்பாலும் சைக்காலிஸ்ட் படித்து வந்து இருந்தாலும் சைக்காலிஸ்ட்க்கு எதிராக என்று பேசுவதை கூட சொல்லாதிங்க, நம்ம தலைப்பு கவுன்சிலிங் செய்பவர்களை பற்றி மட்டும் தான் என அவர்களை மடக்கி சமூகம் குறித்த அடிப்படை அறிவே இல்லாமல், பொத்தாம் பொதுவாக குடும்பம்,. மாணவர்கள், கார்ப்பரேட் ஊழியர்கள் என இவர்கள் கவுன்சிலிங் செய்வதாக சித்தரிக்க முயலும் கோபிநாத் அடிப்படை அறம் குறித்தது.

இன்றைய கவுன்சிலிங் முறைகள் எத்தகையது , சமூகத்தின் அடிப்படை பிரச்சனைகளில் தலையிடாமல் இவர்கள் கூறும் தீர்வுகள் எத்தகையது என ஒருவர் பேசுவது சரியானது, நாம் கூட விமர்சித்து கட்டுரை எழுதலாம். ஆனால் ஒவ்வொரு கல்லூரியாக சென்று மொட்டிவேசன் என்ற பெயரில் அல்லலூயா கூட்டம் நடத்தும் கவுன்சிலிங் மன்னன் கோபிநாத் மறுபுறம் கவுன்சிலிங் க்கு எதிரான மனிதர் போல பேசுவது தான் சகிக்கவில்லை.

கோபிநாத்யின் இத்தகைய அல்லலூயா கூட்டத்தை தோலுரித்து

நீயா நானா கோபிநாத் : இளைஞர்களை மொக்கையாக்கும் 2-ம் அப்துல்கலாம்..! என விமர்சித்து வினவு தளத்தில் கட்டுரை வெளிவந்து உள்ளது.

இரண்டாவதாக, கவுன்சிலிங் செய்பவர்கள் தரப்பில் வணிகம் குறித்து பேசமுற்பட்ட ஒருடைய பெயர் ஸ்டாலின் என்றதும், கம்யூனிசத்தை வலியுறுத்திய உங்கள் தந்தையின் விருப்பத்துக்கு எதிராக வணிகம் குறித்து பேசுகிறீர்கள், அத்தகைய அப்பாவுடன் வாழ்ந்த நீங்களே கம்யூனிஸ்டாக மாறாமல் வணிகம் குறித்து சிந்திக்கும் போது மற்றவர்களை எப்படி மாற்ற முடியும் என மடக்குகிறார் கோபிநாத்.

வணிகம் என்றாலே அது கம்யூனிசத்துக்கு எதிரானது என சித்தரிக்க முயலும் கோபிநாத் சமூகம் குறித்த பார்வை எத்தகையது?

அப்பா கம்யூனிஸ்டு என்பதாலேயெ அவர் குழந்தையும் கம்யூனிஸ்டாக வரவேண்டும் என்பது எப்படி சரியான வாதமாகும்….

மக்கள் யார் பக்கம், என் தேசம் என் மக்கள் என்ற நிகழ்ச்சிகள் மூலம் ஆகப்பெரும்பாண்மையாக மக்களின் வாழ்வாதரம் இந்த அரசால் அழிக்கப்பட்டு தினந்தோறும் தற்கொலைக்கு தள்ளிவருகிறது என தெரிந்த கோபிநாத், அப்போது உச் கொட்டி கண் கலங்கியவர்,

மறுபுறம் ஸ்டாருடன் ஒரு நாள் என கருணாநிதி, முக ஸ்டாலினுடன் சென்று ஈஈஈஈ என வலிவதும் & ஒவ்வொரு இன்ஜினியரிங் கல்லூரியாக சென்று பணத்துக்காக மொட்டிவேசன் நிகழ்ச்சி என இந்த சமூகம் குறித்த தவறான மதிப்பீடுகளையும், இளைஞர்களுக்கு எதிரி இளைஞர்களே என அவர்களை குற்றவாளியாக மாற்றுவதும் என கோபிநாத் அவர்கள் மக்கள் எதிரியாக மாறும் போது, அப்பா போல மகன் கம்யூனிஸ்டாக மாறாதது அவர் தப்பு அல்ல, இந்த சமூகத்தின் தவறு என்பது வெள்ளிடைமலை.

5 ரூபாய்க்கு தயாரித்த பேனாவை 10 ரூபாய்க்கு விற்றால் உங்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை கிடைக்கும் என தாகூரிடம் சொன்ன சோசலிச குழந்தைக்கு தெரிந்த சமூகப்பார்வை எங்கே…!

வணிகம் என்பதே கம்யுனிஸ்டுகளுக்கு எதிரானது என்பது போல மட்டை அடி அடிக்கும் கோபிநாத்யின் சமூகப்பார்வை எங்கே…?

எடிட்டிங் செய்யப்பட்ட 2 மணி நேரத்திலேயே இப்படி எதிர்தரப்பு வாதத்தை கேட்காமல் அதிங்கப்பிரங்கிதனம் செய்கிறார் என்றால் முழு ஒளிப்பதிவு 6 மணி நேரம் உட்கார்ந்து இருந்தவர்களை எவ்வளவு டார்ச்சர் செய்தியிருப்பார் என நினைக்கவே பயமாக இருக்கிறது. எவனாவது எழுந்து சட்டையை பிடித்து கேட்டால் தான் ’உன்னை மாற்றிக்கொள், உலகம் தன்னால் மாறும்’ எனும் இதுபோன்ற சமுத்திரகனிகளின் கொசு தொல்லைகள் ஒழியும்.

********************

மேற்கண்ட பழனி இன்ஜினியரிங் கல்லூரியில் கோபிநாத் அவர்கள், மாணவர்களை சமூக மாற்றம் குறித்து யோசிக்க வைப்பது போல ஆரம்பித்து மீண்டும் மோடிகளின் ரசிக குஞ்சுகளாக மாற்றும் ஆளும் வர்க்க அருவருடியாக  பேசுவதை சாட்டையடியாக விமர்சித்து வெளிவந்த வினவு கட்டுரையின் சுட்டி இதோ:

நீயா நானா கோபிநாத் : இளைஞர்களை மொக்கையாக்கும் 2-ம் அப்துல்கலாம்..!