இட்லி மட்டுமல்ல மொத்த சிஸ்டமும் பொய்…!எய்ம்ஸ் முதல் கவுன்சிலர் டவுசர் வரை…!

தம்ஸ் அப் காட்டலை – தீபக், 

தம்ஸ் அப் காட்டுனாங்க – ஆளுநர்,

இட்லி சாப்பிடலை,

சிபிஐ கேட்டவர்கள் ஓய்வு பெற்ற நீதிபதி  விசாரணைக்கு உத்தரவு,

ஜெ-யுடன் இருந்ததாக மொத்தமாக குற்றசாட்டுக்கு ஆளாகும் தினகரன் தரப்பு எனக்கு இண்டர்போல் போலீசுதான் வேணும் என கேட்பது,

எப்பவேணாலும் வீட்டுக்கு போகலாம் என பிரதாப் ரெட்டி,

எப்பவுமே முன்னேற்றம் வரலை இது பீலே,

வீடியோ அனுமதியுடன் சசி எடுத்தாங்க இது தினகரன்,

எய்ம்ஸ் டாக்டர் வந்தாங்க,

ஆளுநர் அறிக்கை விட்டாங்க,

15 மணி நேரத்தில் ஏற்ற முடியாத திரவத்தை 15 நிமிடத்தில் ஏற்றியது எப்படி,

2 நாளில் 2 பெரிய குளிர்சாதன மெஷினில் வைக்க எதற்கு பதப்படுட்தனும்,

கையெழுத்து போட்டாங்க, இல்லை வாங்குனோம்…

கால் இருந்துச்சு, இல்லை என

ஒரு முதல்வரை 75 மருத்துவமனை மர்மமாக வைக்க முடியும் என்றால் என்ன அர்த்தம்…

இதோ நம்ம விடுதலை சிறுத்தை ஆளூர் நவாஸே சொல்கிறார் கேளுங்க..

“ பிரதமர், ஆளுநர், எய்ம்ஸ் டாக்டர், அதிகாரிகள், தலைவர்கள் என அனைவரின் கண்ணையும் மறைத்து விட்டு ஒருவரால் (சசி) ஒரு முதல்வரை 75 நாட்கள் மருத்துவமனையில் வைக்க முடியும் என்றால், தகவல்களை மறைக்க முடியும் என்றால் என்ன அர்த்தம்….. ஆக இதனை ஏற்றால்  மொத்த அரசியல் செட்டப்பும், அதிகார செட்டப்பும்  என அனைத்தும் சந்திக்கு வருவது நிச்சியம்… மாட்டினா கூட்டோடு மாட்டனும் அது நடக்காது…!” 

தேர்தல் பாதைதான் தீர்வு என வாதிடும் இவர் போன்றவர்களே

தேர்தல் பாதையின் அதிகாரத்தை இன்று தோலுரிப்பது தான் காலத்தின் கட்டாயம்.

 

 

Advertisements

நான் ஜெ , நீ சசி வாரிசு: நான் எட்டாங் கிளாஸ் பாசுனே..!

 

je-sasi.PNG

சசி படத்தை போட்டு, ஓட்டு கேட்டு பாரு என்கிறார் மதூசூதனன். ஆனால் மொத்தத்தில ஜெ படத்தை போடப்போறீங்க…. அப்புறம் என்ன பெருமை..? இப்படி யோசிக்க கூட மக்கள் அரசியல் படுத்தபட வில்லை என்பது தான் முகஸ்டாலின் முதல் சீமான், அன்புமணி வரை அனைவரின் பலமே….

என்னவேணாலும் பேசலாம்…. யாரை வேணாலும் மாறி, மாறி ஆதரிக்கலாம்… மக்கள் வாக்குசாவடிக்கு வருவது என்ற ஆனபின் பார்ச்சூனர் காரில் தண்ணியை போட்டு ஏசியை போட்டு கொடியை போட்டு திரிவதற்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற சிந்திப்பது தான் ஓட்டுப்பொறுக்கி அரசியலின் அனைத்துக்கு கட்சியினருக்கும் அடிப்படை தகுதி என ஆகிப்போய்விட்டது.