சர்கார்: கேவலம் ஒரு டாஸ்மாக் கடையினை கூடமூட முடியாத ஓட்டுக்கு என்ன பில்டப்பு..!

இசக்கிமுத்துவை கொன்ற இந்த ஆளும் வர்க்கத்தை மறைத்துவிட்டு எல்லாத்துக்கும் காரணம் நல்லவன் வராதது தான் என திரும்பவும் 1947க்கு நம்மை அழைத்து செல்கிறார் முருகதாஸ். சன் டிவிக்காரன் படத்தில் இது போன்ற ஒரு விரல் புரட்சிதான் காட்ட முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஒரு டாஸ்மாக் கடையினை மூட கடை வாசலிலே மொத்த ஊரும் தீபாவளியை கொண்டாடமல்  மழையில் நனைந்து போராடிக்கொண்டு இருக்கும் செய்தியும், எந்த அடிப்படை வசதியும் இல்லை என மக்களும் கருப்புகொடி ஏந்தி போராடிக்கொண்டும், கரும்புவிவசாயிகள் உரிய விலை இல்லை என மறியல் செய்து கொண்டு இருக்கும் செய்தியும் தினந்தோறும் வந்துகொண்டு இருக்கும் நாட்டில் எல்லாத்தும் காரண்ம் எலி வாலு தான் பேசுவது எப்படி சார் சரி?

மோடி எடப்பாடி என வாக்குச்சீட்டு அரசியலுக்கு ஒரு இன்டுகார்டு போடுற நேரத்துல கள்ள ஓட்டு, வாக்குசீட்டின் முக்கியத்துவம் என இத்துபோன ரெக்காடை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். நல்லவன் வருனும் என்பதடா இப்ப பிரச்சனை …

எல்லா கட்சிக்காரனும் இன்னோவோ, பார்ச்சூனர் காரில் தெலுங்கு பட வில்லன்கள் போல உலா வர்றான். இவனை தண்டிக்க முடியாத, தேவிடியா மகனே என மக்களை பார்த்து கேட்ட எம் எல் ஏவை தண்டிக்க முடியாத இந்த கேலிக்கூத்தை மறைத்துவிட்டு ஓட்டுச்சீட்டு, ஓட்டுச்சீட்டு என மந்திரம் ஓதிகின்றனர் இந்த சமுத்தகனி மொக்கைகள். உன் ஓட்டை வைச்சு அப்பல்லோ போய் அம்மா இருந்தப்பவும் பார்க்க முடியாது, செத்தப்பின்னரும் கேட்க முடியாது… இட்லி சாப்பிட்டாங்க என சொன்னவனை  என்ன செய்யமுடியும் உன் வாக்குச்சீட்டினால்.

ஏற்கனவே இந்த கேவலாமன , ஒன்னும் துப்பில்லாத வாக்குச்சீட்டின் யோக்கியதை குறித்து நமது வலைத்தளத்தில் வந்த பதிவு இதோ..!

***************

வெறும் ‘மை’யினால் எதுவும் சாத்தியமில்லை…. !

vote-meaning

’உங்கள் ஓட்டு உங்கள் எதிர்காலம்’ என வாக்குசீட்டின் பெருமைகள் என்று வாசகங்களை ஆர்.கே.நகர் தொகுதிகளில் ஆவின் பாக்கெட்–ல் பிரண்ட் செய்து தேர்தல் ஆணையம் பிரச்சாரம் செய்கிறது.

இடைத்தேர்தல் மட்டுமல்ல பொதுத்தேர்தல் வாக்காளர் அட்டை முகாம்களிலும் இதுபோன்ற ஜனநாயகம், இந்தியன் என பிரமாண்ட வாசகங்களுடன் தேர்தல் ஆணையம் பிரச்சாரம் செய்வதை நாம் அனைவரும் பார்த்து வருகிறோம்.

இவ்வாறு பிரச்சாரம் செய்யும் இதே தேர்தல் ஆணையம், வாக்கு உறுதியினை நிறைவேற்றாமல் மோடி அரசு போல நம்பவைச்சு கழுத்தறுத்தாலும் அதற்கு நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று 2 வாரங்களுக்கு முன்னர் சொன்னது, சரி நிக்கிறவனாவது கேடி, கிரிமனலாக நிற்காமல் செய்ய முடியும் என்றால் அதுவும் கிடையாது கிரிமினலுக்காகவே தீர்ப்பு மட்டுமல்ல, தேர்தலையே கூட 10 நாளில் நடத்துமளவுக்கு மழுங்கிபோய் உள்ள தேர்தல் ஆணையம் தான் மறுபுறம் உங்க வாக்கு உங்க எதிர்காலம் என பில்டப்பு கொடுக்கிறது.

அவரவர் தொதிகுகளில் மட்டுமல்ல இதே ஆர்.கே.நகரில் கூட எம்.எல்.ஏவை தேடிக்கொண்டியிருந்த 4 ஆண்டுகளாக ஒருத்தரும் வரலை இன்று மொத்த அமைச்சரவையும் விழுந்து விழுந்து பணம் கொடுக்கிறான் என ஊரே பேசுகிறது, மொத்த எதிர்க்கட்சிகளும் யோக்கியன் போல இந்த தேர்தலிலேயே நிக்கலை என தேர்தல் ஆணையத்தின் டவுசரை கிழிச்சு தொங்கப்போட்டுவிட்டார்கள் இவ்வளவுக்கும் பிறகு ஆர்.கே.நகர் ஆவின் பால் பாக்கெட்-ல் உங்க எதிர்காலம் உங்க வாக்கு என எதற்கு இந்த பில்டப்பு.. தேர்தெடுத்தவனை திருப்பி அழைக்க கூடிய முடியாத ஒரு தேர்தலை எப்படி மக்களுக்கானது, ஜனநாயகம் என்று பேசுகிறீர்கள்…?

எவ்வளவு உழைச்சாலும் அதற்கான ஊதியமோ, அவ்வுழைப்பு வாங்கும் அரசமைப்போ அவர்களுக்காக தான் இயங்குகிறது என இருந்தால் அதாவது அவர்களுக்காக குடியிருப்பு, கல்வி, மருத்துவமனை என ஏழை எளிய ஒடுக்கப்பட மக்கள் நலனே பிரதானம் என்று இருந்தால் மக்கள் இன்று உழைப்பிலிருந்து அந்நியமாகி இருக்கமாட்டார்கள்.

ஏழைகளுக்கு என்று ஆட்சியை பிடித்த மோடி, பின்னர் ஏழைகளுக்கும் அதானிகளுக்கும் ஒரே அரசு என சொல்லி இன்று அம்பலப்பட்டு முகமூடி கிழிந்து தொங்குவதற்கு காரணம் இதுதான்.

ஒரு அரசு என்பது பெருண்பாண்மை உழைக்கும் மக்களுக்கானதான இருக்க முடியும் இல்லையே அவர்களின் உழைப்பை சுரண்டி வாழும் அதானி அம்பானிகளுக்கானதாக இருக்க முடியும். இரண்டுள ஒன்னுதான்.

அப்ப மோடி அரசு தப்புதான் அது அதானிகளுக்காக இருக்கிறது என ஒத்துக்கொண்ட பின் ஒரு கேள்வி வருகிறது. அப்ப சரியான அரசை மக்களுக்காக அரசை மீண்டும் வாக்குசீட்டின் மூலம் தேர்தெடுக்கலாம் என்ற கேள்வி…?

மோடி அரசு போல மக்களுக்கு எதிராக செயல்படும்போது அதனை திரும்ப அழைக்கும் உரிமை நமக்கு உண்டா? இதோ இன்னும் 4 ஆண்டுகள் இருக்கு நங்களை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என பாஜக மந்திரி கொக்கரிக்கிறார். அப்ப இங்கயிருந்தே ஆரம்பிக்கிறது மக்களுக்கான அதிகாரம். அப்படியே நீதிமன்றம், போலீசு, அரசு அலுவலங்கள் என எங்கு சென்றாலும் மக்களை கில்லு கீரை போலத்தான் மதிக்கிறார்கள் மட்டுமல்ல தூக்கிபோட்டு மிதிக்கிறார்கள்.

அப்ப நமக்கு தேவை மோடி போய் நல்லவர் தலைமைக்கு வர வேண்டும் என்பதை விட ஒரு பரந்துபட்ட மக்கள் அதிகாரம் கொண்ட அமைப்பு வேண்டும் என்பது தான்.

அதனை இந்த வாக்குசீட்டின் மூலம் பெற முடியாது என்பதற்கு 65ஆண்டுகளான வாக்குசீட்டு வரலாறே சான்று.

உங்க பணம் உங்க கையில் என்பது எவ்வளவு அபத்தமோ அதுபோலத்தான் உங்க ஓட்டு உங்க எதிர்காலம் என்பது.

நமது எதிர்காலத்தை நாம் தான் மீட்க வேண்டும்.

வெறும் மையினால் அது சாத்தியமில்லை…. !

நமது கைகளினால்  மட்டுமே அது சாத்தியம்….!

அடுத்த சிஎம் : சகாயம்..புதிதா..தெரியலை..வேஸ்ட்..- விகடனில் மக்கள்…!

தமிழகத்தின் அடுத்த சிஎம் யார் என பாண்டிபஜாரில் சுமார் 50 பேரிடம் விகடன் நிருபர் பேட்டி எடுக்கும்போது ஆகப்பெரும்பாண்மையான மக்கள் யாரும் சரியில்லை, சகாயம் வந்தா நல்லாயிருக்கும், தெரியலை சார் , எல்லோருடன் திருட்டு பசங்க சார், நான் யாருக்கும் ஓட்டு போடமாட்டேன் சார் (இதை சொன்னதில் முதல் முறை ஓட்டு போட போகும் இளைஞன் ஒருவரும்) என மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ஆக, மக்கள் அதிமுக, திமுக மாற்றாக பாமகவையோ, மக்கள் நலக்கூட்டணியையோ சொல்லாதது மட்டுமல்ல மெஜாரிட்டியாக எவனும் சரியில்லை என கருத்து தெரிவித்து உள்ளதை தான் நாம் இங்கு கவனிக்க வேண்டும்.

தேர்தல் வந்தவுடன் எப்படியும் ஆட்சியை பிடிக்கனும், எம்.எல்.ஏ சீட் வாங்கனும் , பெட்டி வாங்கனும் என அதுவரை பேசிவந்த மதவாதம், ஊழல் என எல்லாத்தையும் ஏரம்கட்டி வைத்துவிட்டு தொகுதி உடன்பாடு என்ற அளவில் பல வண்ண கட்சிகள் களத்தில் நிற்கும்காரணத்தால் மக்கள் இந்த தேர்தல் மூலம் யார் வந்து நமது வாழ்க்கை சரியாகும் என்ற நம்பிக்கையிலிருந்து விலகி , அதனை சடங்காக பார்க்க ஆரம்பித்து விட்டனர் என்பது தான் பேட்டி முழுவது தெரிகிறது…

தொடர்புடைய பதிவு:

தேர்தலை நேர்மையாக நடத்தினா பி.ஆர்.பி யை தண்டிக்க முடியுமா MR.சகாயம்..?

நாட்டில விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொள்கிறார்கள், வேலை இல்லாமல் இளைஞர்கள் கஷ்டப்படுகிறார்கள், கிரானைட் கொள்ளையின் ஆழத்தை தேடுகிறேன், மலையையே திருடிய பிஆர்பிக்கு எலும்புக்கூடு ஜூஜிப்பி என சுடுகாட்டில் படுத்துறங்கி அறிக்கை எழுதினேன்…. இவ்வாறு சொல்லும் ’நேர்மையின் அடையாளம்’ சகாயம் அவர்கள் இறுதியில் தேர்தலை நேர்மையாக மக்கள் நடத்த வேண்டும் என்றும், ஓட்டுக்கு பணம் வாங்காமல் அனைவரும் ஓட்டுப்போட வேண்டும் என்றும் இதனை கடந்த முறை மதுரையில் தான் சாதித்ததாக விவரிக்கிறார்… இதோ அவருடைய சென்னை தேர்தல் கருத்தரங்கில் பேசிய முத்துக்கள்…!

சட்டமன்ற தேர்தல் நேர்மையாக நடப்பதற்கு மாணவர், இளைஞர் சக்தி உறுதுணையாக இருக்கவேண்டும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பேசினார்.

sagayam-election-1

மாணவ, மாணவிகள்தான் தேசத்தின் மாற்றங்களுக்கு வித்திடுகிறார்கள். தேர்தலை கண்ணியமாக நடத்தும் புரட்சி மாணவிகளிடம் இருந்து தொடங்கிஇருக்கிறது. இந்தியாவில் கண்ணியமான முறையில் தேர்தல் நடத்தப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

ஜனநாயகத்தின் அடிப்படை என்பது நேர்மையான தேர்தல்தான். 2011-ம் ஆண்டில் மதுரை கலெக்டராக என்னை தேர்தல் கமிஷன் நியமித்திருந்தது. பணநாயகத்தை வீழ்த்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. தேர்தலை நேர்மையாக நடத்த முடியாது என்று எல்லாரும் அச்சுறுத்தினார்கள்.

மகத்தான சக்தி

தேர்தல் நடத்த 19 நாட்களே இருந்த சூழ்நிலையில், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அரிமா சங்கம், வர்த்தக கூட்டமைப்பு, வணிகர் சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அணுகினேன். யாருமே வரவில்லை. இப்போது நான் திருமங்கலத்தைப் பற்றி பேசவில்லை.

எனவே மாற்றம் கொண்டுவரக்கூடிய மகத்தான சக்தியான மாணவர்களை அணுகினேன். நேர்மையும் பொறுப்பும் உள்ள சமூகமாக இருந்தால்தான் அதுபோன்ற தலைவர்களை உருவாக்க முடியும். பணம் வாங்கி ஓட்டுபோடக் கூடாது என்பதை நீங்கள் பின்பற்றுவது மட்டுமல்ல பெற்றோர்களிடமும் சொல்ல வேண்டும் என்று கூறினேன்.

ஓட்டு விற்பனைக்கல்ல

எனது செல்போனை மாணவரிடம் கொடுத்து, மேடையில் இருந்தபடியே பெற்றோரிடம் பேசச்சொன்னேன். கட்டாயம் ஓட்டுபோட வேண்டும், பணம் வாங்காமல் ஓட்டு போட வேண்டும் என்று பெற்றோரிடம் பேசினர். இந்த முயற்சி நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது.

19 நாட்களில் எங்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்தது. இந்த முறையும் அதுபோன்றே தேர்தல் நடக்கும். மதுரையில் பல வீடுகளில், ‘எனது ஓட்டு விற்பனைக்கல்ல‘‘ என்று எழுதி வைத்திருந்தனர். ஒரு விவசாயி தனக்கு ஓட்டுக்காக கொடுக்கப்பட்ட ரூ.500ஐ அரசு நிர்வாகத்திடம் வந்து கொடுத்தார். அவரிடம் கேட்டபோது, மாணவியான தனது மகள் கூறியபடி காசுவாங்கிக் கொண்டு நான் ஓட்டுபோட விரும்பவில்லை என்றார்.

விவசாயி தற்கொலை

நேர்மையாக நடப்பது இரவில் நிம்மதியாக தூங்குவதற்கல்ல. புகழுக்காகவோ, சொர்க்கத்துக்கு செல்வதற்காகவோ அல்ல. தவறிழைப்பவர்களை நிம்மதியாக தூங்க விடக்கூடாது என்பதற்காகத்தான். தேசத்தை நேசிப்பதன் அடையாளம்தான் நேர்மை.

வேலை வாய்ப்பின்மையால் இளைஞன் விரக்தியில் இருக்கிறான். அதை போக்கியாக வேண்டும். கிராமங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. கடந்த ஆண்டு கரூர் மாவட்ட விவசாயி, பேட்டைவாய்த்தலை பஸ் நிலையத்தில் மயக்கமடைந்து கிடந்தார். அவர் விஷமருந்தி தற்கொலை செய்திருக்கிறார்.

வாழையை பயிரிட்ட நிலையில் காவிரியில் நீர் வரவில்லை. வாழை கருகியதால் வாழ வழியில்லை. எனவே அந்த விவசாயி தற்கொலை செய்துகொண்டான். இந்தியாவில் 2000-05ம் ஆண்டுகளில் 25 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

நேர்மைக்கு உதவுங்கள்

எனது தலைவன் நேர்மையாக, ஊழலற்றவனாக இருக்கவேண்டும் என்று எண்ணுவது நமது அடிப்படை உரிமை. நேர்மையின்மைக்கு இணையான பொறுப்பின்மையும் ஊழலுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. பொறுப்பின்மையால் பலவற்றை தேசம் இழந்திருக்கிறது.

நேர்மையாக தேர்தல் நடைபெறுவதற்கு நீங்கள் உதவி செய்யுங்கள். அதுதான் இந்த தேசத்துக்கு நீங்கள் காட்டும் நன்றி. இந்த தேர்தலை நேர்மையாக நடப்படதற்கு இந்த முறை மாணவர், இளைஞர் சக்தி உறுதுணையாக இருக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சரி தேர்தல் இத்தனை ஆண்டு காலம் நேர்மையாக நடக்கவில்லையா? நேர்மை என்றால் தேர்தலில் என்ன?

பணம் வாங்கிட்டு ஓட்டுப்போட்டதால் தான் கலைஞரும், ஜெயலலிதாவும் மக்களுக்கு துரோகம் செய்து கார்ப்பரேட்களுக்கும் பிஆர்பி, வைகுண்டராஜனுக்கும் அரசை நடத்துகிறார்களா?

பணம் வாங்காமல் இவர்களுக்கோ அல்லது அன்புமணி,விஜயகாந்த், சீமான், வைகோ என ஒருவரையோ ஓட்டுப்போட்டு தேர்தெடுத்து விட்டால் மக்கள் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிடுமா?

கேவலம் கக்கூசு கட்ட கூட ஒரு எம் எல் ஏ வால் முடியவில்லை என அதிமுக முன்னாள் பெருச்சாளி பழ.கருப்பையா சொன்னது பொய்யா?

ஓட்டுக்கு பணம் கொடுப்பது, சேகர்பாபு, பண்ருட்டி ராமச்சந்திரன், குஷ்பு, மாபா பாண்டியராஜன் போன்று தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறுவது அல்லது வைகோ , கலைஞர், ராமதாஸ், திருமா, ஜெயலலிதா போன்று தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவது என தேர்தல் என்பது தொகுதி உடன்பாடு என்ற அளவில் மக்களை விட்டு அந்நியப்பட்டு திருடர்களின் பாதையாக மாற்றியது யார்? மக்களா அல்லது இவர்களா?

கேவலம் ஒரு கக்கூசு கூட கட்ட அதிகாரம் இல்லாத தேர்தலை, அதிமுகவில் விருப்பமனு தாக்கல் செய்ததற்கு அதே கட்சியை சேர்ந்தவர்கள் தாக்கல் செய்தவரின் கணவர், தங்கச்சியை கடத்தும் ஜனநாயகத்தில், அந்த டாஸ்மாக் கடையினை மூடுவிடுங்கள் என நீதிமன்ற உத்தரவை காட்டி அமுல்படுத்த சொல்லி ஒரு ஆண்டுக்கு மேலாக போராடி அந்த கடை வாசலில் உயிரைவிட்ட சசிபெருமாள்களை காவு வாங்கிய டாஸ்மாக் ஜனநாயகத்தில் என்ன அதிகாரம் இந்த தேர்தலில் பிறக்கிறது..?

அல்லது என்ன நேர்மையினை மக்கள் இதற்கு மேலும் காட்டிவிட முடியும் சகாயம் அவர்களே..?

வாக்களிப்பதை தவிர எந்த அதிகாரமும் இல்லாத தேர்தலை கொண்டு மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றும் இந்த அரசு குறித்து, அந்த அரசுக்கு எதிராக தினந்தோறும் போராடும் மக்கள் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் அதிகார வர்க்கத்தோடும் ஆளும் வர்க்கத்தோடும் சேர்ந்துகொண்டு ஜே ஜே போடுவது ஏன்?

இவை அனைத்திற்கும் கூட நீங்கள் பதில் சொல்ல வேண்டாம்… இந்த தேர்தல் மூலம் பிஆர்பி தண்டிக்க முடியும் என நீங்கள் சொல்ல முடியுமா? இல்லை அப்படி தண்டிக்க முற்படுவது போல சொல்லும் கட்சியை கூட நீங்கள் கை காட்ட முடியுமா?

சத்தியமா இது ‘மன்னராட்சி’தான் மிஸ்டர் பச்சமுத்து…!

மன்னராட்சியா? மக்களாட்சியா? மக்களாட்சி என்றால் மாற்றம் வேண்டாமா? மாற்றத்தின் மறுபெயர் IJK என போஸ்டர் அடித்து எஸ் ஆர் எம் கல்வி நிறுவன முதலாளியும் இளவரசரும் ஜம்மென போஸ் கொடுத்து போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர்.

IJK 2
ஏற்கனவே ஊழல் ஒழிய, வறுமை களைய என போஸ்டர் போட்டனர், அதன் பின் நேற்று கல்வி இன்று அரசியல் நாளை ஆட்சி மாற்றம் என போஸ்டர் போட்டனர் தற்போது மேற்கண்ட மன்னராட்சி போஸ்டர்

IJK
நூற்றுக்கணக்கில் தனியார் கல்வி நிறுவனக்களையும், தனியார் மருத்துவ மனைகளையும் ஆயிரக்கணக்கில் தனியார் பேருந்துகளையும் சில தொலைக்காட்சி நிலையங்களையும் தற்போது சினிமா தயாரிப்பு , ஐ ஜே கே கட்சி என மிகப்பெரிய ஆக்டோபஸாக வலம் வரும் பச்சமுத்துவை மக்கள் நலக்கூட்டணி அண்ணன் வைகோ அவர்கள் நேற்று வரை மோடியுடன் சேர்த்து கொண்டு ஆதரிக்கும் நிலையில், நமது வாக்கு நம்மை ஆளவா நாமே ஆளவா அண்ணன் சீமான் அவர்கள் நம்ம தமிழன் பச்சமுத்து என ஆதரிக்கும் நிலையில், ராமதாஸ் அவர்கள் மோடியுடன் சேர்ந்து பச்சமுத்துவுக்கு வக்காலத்து வாங்கும் நிலையில்…..

பச்சமுத்து அவர்களே நீங்கள் கவலையே பட வேண்டாம், இன்று மட்டுமல்ல 2016க்கு பின்னரும் வரப்போவது உங்களுக்கு சேவகம் செய்யும் மன்னராட்சிதான்.

மாற்றம் அது இது என மக்களுக்கு நீங்களா ஏன் சந்தேகத்தை ஏற்படுத்துகிறீர்கள்….?

அப்புறம் திடீரென மக்கள் இது பச்சமுத்து போன்ற மன்னர்களின் ஆட்சி என உணரத்தொடங்க போகிறார்கள்…!

அம்மாவோ அன்புமணியோ ஜெயிச்சுட்டா திமுக,மதிமுக,சீமான் நிலைப்பாடு..?

எவன் கூட சேர்ந்தாவது ஆட்சியை பிடிக்கனும், சீட்டு அதிகம் வாங்கனும், பெட்டி அதிகம் வாங்கனும் என இதுவரை பேசிவந்த ஊழல் எதிர்ப்பு, மதவாதம், ஈழம் என எது குறித்தும் யோசிக்காமல் தொகுதி உடன்பாடு, கூட்டணி என ஒரே நேர்கோட்டில் அனைத்து கட்சிகளும் பீடுநடை போட்டு வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

Alliance

இதனை மக்களாட்சி போல ஊடகங்களும் உங்கள் வேட்பாளர், உங்களில் யார் முதல்வர் என கைகோர்த்து கொண்டு ஜிங்கி ஜா அடிப்பதை நாம் பார்த்து வருகிறோம்.

சரி ஒருவேளை ஜெயலலிதாவோ, பாமகவோ மெஜாரிட்டி பெற்று ஆட்சி பிடிச்சுடுறாங்க வைத்துக்கொள்ளுவோம் ஒரு பேச்சுக்கு, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடன் நிலைப்பாடு என்ன?

karuna-vijayakanth

இந்த கோணத்தில் நாம் பரிசீலித்து பார்த்தால், மக்கள் ஊழலையோ, சாதிவெறியையோ ஏற்றுக்கொண்டு விட்டனர் என்று மற்ற கட்சிகள் கட்சியை கலைத்துவிட்டு அதிமுக, பாமக வில் சேர்ந்துவிடுமா என்ன?இல்லையே…

மீண்டும் 5 ஆண்டுகள் கழித்து எங்களுக்கு இப்பவாவது ஓட்டுபோடுங்கள் என்று தான்வந்து நிற்க போகிறது.

ஜெயலலிதாவை மக்கள் மீண்டும் 3 தடவை தேர்தெடுத்து முதல்வர் ஆக்கியதால் சொந்து குவிப்பு மேல்முறையீடு என்பது தேவையில்லாதது என நாட்டாமை சீமான் தீர்ப்பு எழுதும் காலத்தில், நாயக்கன்கொட்டாயில் 300 வீடுகளை கொளுத்தி தலித்துகளுக்குஎதிரான அணி சேர்த்த கட்சியை கூட்டணியில் சேர்த்து ‘அன்புமணி நண்பர்’ விஜயாகாந்தும், ‘புரட்சிபுயல்’ வைக்கோவும் குஜராத் கதாநாயகன் மோடிக்கு ஓட்டுக்கேட்டு அலைந்து வரும் காலத்தில் மேற்கண்டவாறு நாம் இவர்களை உரசி பார்ப்பதில் தப்பு ஏதும் இல்லையே.

ஆக மக்களுக்கு இது ஒன்று தான் வாய்ப்பு, ஜனநாயகத்தை காப்பாற்ற என்று இவர்கள் வைத்து உள்ள வாக்குச்சீட்டு அரசியல் மூலம் கேவலம் ஒரு கவுன்சிலரிடம் உள்ள கொள்ளையடிச்ச பணத்தை கூட கையகப்படுத்தி அவரை தண்டிக்க முடியாது என்பது மட்டுமல்ல, நீங்கள் தேர்தெடுத்துட்டா அதே கவுன்சீலர் யோக்கியன் ஆகிவிடுகிறான் என்று தான் சொல்கிறார்கள் இவர்கள்.

மீண்டும் மீண்டும் முதல்வர் ஆக்கு என்பது, எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்பது மாற்றத்தை கொண்டு வராது என்பதற்கு இவர்கள் நம்மை நசுக்கும் அனைத்து கொள்கைகளுடனும் மாற்றுக்கருத்து இல்லாதவர்கள் மட்டுமல்ல, அதனை அமுல்படுத்திய, அல்லது அமுல்படுத்தும் போது உடன் இருந்த கூட்டாளிகள் ஆவர்.

மோடி வந்தால் நாடு ஏரோப்பிளேனில் பறக்கும் என்ற அறிவாளிகள் இன்று முதல்வர் என்ற ஒன்றை கதாநாயகன் நமது அனைத்து வில்லன்களை அடித்து வீழ்த்துவார் என்று கதை விட கிளம்பி உள்ளனர்.

மக்கள் கதாநாயகர்கள் வராலாற்றில் தோன்றுவார்கள் ஆனால் இவர்கள் சொல்லும் பார்ச்சூனர் ஜனநாயகத்தில், டாஸ்மாக் ஜனநாயகத்தில் உதிப்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை என்பது தான் கண் முன் விரியும் உண்மையாக இருக்கிறது.

தளபதி, கேப்டன், அம்மா, சீமான், வைகோ, திருமா என ஒன்றை சொல்லில் மக்கள் விடுதலை பிறக்க முடியாது, இதனை நாம் உணரத்தொடங்குவதற்கு முதல் படியாக இவர்களை நாம் அங்கிகரிப்பதை நிறுத்தவேண்டும். அப்போதுதான் எதிரி யார் நண்பன் யார் என தெரியும்.

நேர்மையான தேர்தலுக்கு திருமங்கலத்துகாரனும் ஆர்.கே.நகர்காரனும் பயப்படாதது ஏன்..?

india_election

நேர்மையான தேர்தல், கண்ணியமான தேர்தல் , வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை, பணம் வாங்காமல் ஓட்டுப்போடுங்கள் என சச்சேனா முதல் சகாயம், சீமான் வரை மூச்சுக்கு முண்ணூறு தடவை சொல்கின்றனர்.

ஆனால் சாதிரீதியாக, பணரீதியாக வேட்பாளரை நிறுத்துவது முதல், வேட்பாளரை கடத்துவது, மிரட்டுவது, ஓட்டுக்கு பணம் கொடுப்பது,கறிசோறு போடுவது, ரிசல்ட்டையே மாற்றி வெற்றி என அறிவிப்பது, எதிர்கட்சிக்காரனே தேர்தலை புறக்கணைக்க வைக்கும் அளவுக்கு அடாவடி செய்வது, மாற்று கட்சிக்காரனை – மாற்று கட்சி எம்.எல்.ஏ பணம் கொடுத்து விலைக்கு வாங்குவது, தன்னை அசிங்கமாக திட்டியவனையே கட்சியில் சேர்த்துக்கொள்வது, எப்படியும் ஜெயிக்கனும் என தொகுதி -எம்.எல்.ஏ சீட்டு – பெட்டி என கூட்டணியை அமைப்பது மாற்றிக்கொள்வது, போன முறை கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டு மீண்டும் தற்போதைய அரசு கெட்ட அரசு என தேய்ந்த ரெட்காடோடு வருவது, இதற்கு பதில் சொல் என யாராவது கேட்டால் நீ யோக்கியமா என்பது என ஒலியும் ஒளியும் ஆதாரத்துடன் தப்பு செய்யும் திருமங்கலத்துகாரனும் ஆர்.கே நகர்காரனும் இவர்களுடன் கூட்டணியில் பல்லிளித்த அனைத்து கட்சிக்காரனும் மேற்கண்ட சச்சேனா , சகாயத்து வார்த்தைகுறித்து சிறிதும் கவலைப்படுவது இல்லை.

ஏன் என்றால் கக்கூசு முதல் காண்ட்ராக்ட் வரை கூட்டு வைத்து கொள்ளையினை அரசியல்வாதிகள் நடத்துவதே இன்று தேர்தல் அதிகாரிகளாக இருக்கும் அதிகாரவர்க்கத்தோடு தான்.

இதனால் அரசியல்வாதியின் செயலை ஆதாரத்தோடு கொண்டு சென்றாலும் எப் ஐ ஆரும் போடமாட்டான், தண்டிக்கவும் மாட்டான் என அனைத்து கட்சிக்காரனுக்கு தெரியும்,

ஆக நேர்மையான தேர்தல் என்பது எப்படி சந்தர்ப்பவாத கூட்டணி என சரியான கூட்டணி என்று ஒன்று இருப்பது போல மாயை ஏற்படுத்துவது போல மக்களுக்கான தேர்தல் என்று ஒன்று இருப்பது போல ஒரு மாயை ஏற்படுத்தும் முயற்சி…. அவ்வளவே..

தருமபுரி மாணவிகள் எரியும்போது காப்பாற்றியவர்கள் அதிமுகாவினர் – சீமான்…!

கடந்த தேர்தல்களின் போது பல முறை ‘அம்மா’வுக்காக சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்ட சீமான் அவர்கள் கம்பம் தொகுதியில் பேசிய வீடியோ இதோ…!

இதில் போலீசுகாரர்கள் ரொம்ப நல்லவர்கள் எனவும் 5ரூ லஞ்சம் வாங்கி 2 ரூ டீ சாப்பிடுபவர்கள், நாம் டிப்ஸ் கொடுப்பது போல  இதனை நினைச்சுறாமல் தப்பா சொல்வது தப்பு என போலீசுக்கு சர்டிபிகேட் கொடுப்பது, சகாயத்தை கார் ஏற்றி கொல்ல கலைஞர் அரசு முயல்வதாகவும் (இன்று அம்மா அரசு சகாயத்தை மெஞ்சுகிறார் என எவனும் கேட்கப்புடாது….) என சீமான் பேசுவது போன்றவற்றை கூட சகித்துகொள்ளலாம், ஆனால் தருமபுரி பேருந்து எரிப்புக்கு புதிய வசனம் எழுதி வாங்கிய காசுக்கு மேலே கூவுவது ரொம்ப ரொம்ப பட்டவர்த்தனமாக தெரிவதை நாம் அனைவரும் பார்க்கலாம்.

அதாவது கொடைக்கானல் வழக்கில் ஜெயாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தவுடன் அதிமுக காலிகள் தருமபுரி அருகே வேளான் பல்கலைக்கழக மாணவிகள் வந்த பேருந்தை வழிமறித்து தீ வைத்து அதில் 25 மாணவிகள் படுகாயம் அடைந்து 3 மாணவிகள் படுகொலை செய்யப்பட்டதையும் இதனை செய்த அதிமுக காலிகளை ஜெயா இன்று வரை ஆதரித்து வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

ஆனால் சீமான் அவர்கள் சொல்கிறார், ‘தான் வேலூர் சிறையில் அந்த அதிமுக காலிகள் உடன் இருந்ததாகவும் அவர்கள் அப்பாவிகள் என்றும், பேருந்தை நிறுத்திவிட்டு மாணவிகள் அருகில் டிபன் சாப்பிட்டு கொண்டு இருந்ததாகவும் அப்போது சிலர் யாரும் இல்லாத பேருந்தை தவறாக தீ வைத்து எரிக்க முற்பட்டபோது அப்பேருந்தில் விலை உயர்ந்த துணிகளை வைத்து இருந்ததால் அதனை எடுக்க சென்ற மாணவிகள் 3 பேர் மாட்டிக்கொண்டதாகவும் அவர்களை காப்பாற்ற சென்றவர்கள் தான் அந்த 3 அதிமுக காரர்கள் என்றும் சத்தியம் அடித்து கூறுகிறேன்’ என சொல்லிவிட்டு இதே போல தினகரன் ஆபிஸில் 3 பேரை எரித்தவர்களுக்கு என்ன தண்டனை என பேசுகிறார்.

திமுக காரரும் செம் திருடன், கொலைகாரன் என சீமான் மட்டுமல்ல நாமும் ஏற்றுக்கொள்வதால் மேலும் தொடர்ந்து அதிகாரத்துக்கு வந்த ஜெயாவும் அந்த கொலைகார அழகிரியையும், கொள்ளைக்கார திமுகாவையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கவும் இல்லை என்பதாலும் அதற்குள் செல்லாமல் தருமபுரி விஷயத்திற்கு வருவோம்….

ஒரு கும்பல் பேருந்தை வழிமறித்து தீ வைத்து கொளுத்தி 3 மாணவிகள் படுகொலை உள்ளீட்ட பல மாணவிகள் படுகாயம் அடைய காரணமாக இருந்து உள்ளதை சன் டிவிகாரன் வீடியோ பார்த்து அன்றைய மக்கள் அறிந்த ஒன்றை இன்று வந்து வேலூரில் உடன் இருந்தேன், இது சத்தியம் என அதிமுக காலிகளுக்கு வக்காலத்து வாங்கும் இந்த சீமான் தான் இன்று மாற்றம் குறித்து வகுப்பு எடுக்கிறார். நமது வாக்கு நம்மைஆளவா? நாமே ஆளவா? சீமானின் அறம் என்ன வென்பதற்கு மேற்கண்ட தருமபுரி பொய்யுரையே உதாரணம்.

பாமக காரன் கூட எல்லோர் கூடவும் கூட்டணி வைத்து இன்று திமுக, அதிமுக க்கு மாற்றாக மற்ற எந்த கட்சியும் அதாவது தினந்தோறும் கருச்சுக்கொட்டும் விஜயகாந்த் உடன் கூட கூட்டணி வைக்க ரெடி என்று தான் சொல்கிறார்கள், ஆனால் நம்ம சீமான் எந்த காங்கிரஸை எதிர்த்து அதிமுக வை கூட ஆதரித்து பிரச்சாரம் செய்தாரோ அந்த காங்கிரஸை கூட அதாவது தனது இனத்தை கொன்றொழித்த கட்சி என தினந்தோறும் பேசிவந்த காங்கிரஸ் கட்சி கூட தனது தலைமையை ஏற்றால் கூட்டணி வைத்து மக்களுக்கு சேவை செய்யும் சி எம் கிரீடத்தை சுமக்க தயார் என்கிறார்.

உலகில் இதை விட சந்தர்ப்பவாத பொறுக்கி அரசியலுக்கு உதாரணம் வேணுமா என்ன?

தொடர்புடைய பதிவுகள்:

‘தமிழக முதல்வர் நாற்காலி’ : சீமானின் ‘பெருங்கனவு’ …!

சரத்குமார் சிறந்த உழைப்பாளியாம் – ‘புரட்சியாளர்’ சீமான்…!

அதிமுக கூட்டணி பற்றி சீமானுக்கு ’என்னையா’ கவலை…?

தேர்தலை நேர்மையாக நடத்தினா பி.ஆர்.பி யை தண்டிக்க முடியுமா MR.சகாயம்..?

நாட்டில விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொள்கிறார்கள், வேலை இல்லாமல் இளைஞர்கள் கஷ்டப்படுகிறார்கள், கிரானைட் கொள்ளையின் ஆழத்தை தேடுகிறேன், மலையையே திருடிய பிஆர்பிக்கு எலும்புக்கூடு ஜூஜிப்பி என சுடுகாட்டில் படுத்துறங்கி அறிக்கை எழுதினேன்…. இவ்வாறு சொல்லும் ’நேர்மையின் அடையாளம்’ சகாயம் அவர்கள் இறுதியில் தேர்தலை நேர்மையாக மக்கள் நடத்த வேண்டும் என்றும், ஓட்டுக்கு பணம் வாங்காமல் அனைவரும் ஓட்டுப்போட வேண்டும் என்றும் இதனை கடந்த முறை மதுரையில் தான் சாதித்ததாக விவரிக்கிறார்… இதோ அவருடைய சென்னை தேர்தல் கருத்தரங்கில் பேசிய முத்துக்கள்…!

சட்டமன்ற தேர்தல் நேர்மையாக நடப்பதற்கு மாணவர், இளைஞர் சக்தி உறுதுணையாக இருக்கவேண்டும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பேசினார்.

sagayam-election-1

மாணவ, மாணவிகள்தான் தேசத்தின் மாற்றங்களுக்கு வித்திடுகிறார்கள். தேர்தலை கண்ணியமாக நடத்தும் புரட்சி மாணவிகளிடம் இருந்து தொடங்கிஇருக்கிறது. இந்தியாவில் கண்ணியமான முறையில் தேர்தல் நடத்தப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

ஜனநாயகத்தின் அடிப்படை என்பது நேர்மையான தேர்தல்தான். 2011-ம் ஆண்டில் மதுரை கலெக்டராக என்னை தேர்தல் கமிஷன் நியமித்திருந்தது. பணநாயகத்தை வீழ்த்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. தேர்தலை நேர்மையாக நடத்த முடியாது என்று எல்லாரும் அச்சுறுத்தினார்கள்.

மகத்தான சக்தி

தேர்தல் நடத்த 19 நாட்களே இருந்த சூழ்நிலையில், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அரிமா சங்கம், வர்த்தக கூட்டமைப்பு, வணிகர் சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அணுகினேன். யாருமே வரவில்லை. இப்போது நான் திருமங்கலத்தைப் பற்றி பேசவில்லை.

எனவே மாற்றம் கொண்டுவரக்கூடிய மகத்தான சக்தியான மாணவர்களை அணுகினேன். நேர்மையும் பொறுப்பும் உள்ள சமூகமாக இருந்தால்தான் அதுபோன்ற தலைவர்களை உருவாக்க முடியும். பணம் வாங்கி ஓட்டுபோடக் கூடாது என்பதை நீங்கள் பின்பற்றுவது மட்டுமல்ல பெற்றோர்களிடமும் சொல்ல வேண்டும் என்று கூறினேன்.

ஓட்டு விற்பனைக்கல்ல

எனது செல்போனை மாணவரிடம் கொடுத்து, மேடையில் இருந்தபடியே பெற்றோரிடம் பேசச்சொன்னேன். கட்டாயம் ஓட்டுபோட வேண்டும், பணம் வாங்காமல் ஓட்டு போட வேண்டும் என்று பெற்றோரிடம் பேசினர். இந்த முயற்சி நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது.

19 நாட்களில் எங்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்தது. இந்த முறையும் அதுபோன்றே தேர்தல் நடக்கும். மதுரையில் பல வீடுகளில், ‘எனது ஓட்டு விற்பனைக்கல்ல‘‘ என்று எழுதி வைத்திருந்தனர். ஒரு விவசாயி தனக்கு ஓட்டுக்காக கொடுக்கப்பட்ட ரூ.500ஐ அரசு நிர்வாகத்திடம் வந்து கொடுத்தார். அவரிடம் கேட்டபோது, மாணவியான தனது மகள் கூறியபடி காசுவாங்கிக் கொண்டு நான் ஓட்டுபோட விரும்பவில்லை என்றார்.

விவசாயி தற்கொலை

நேர்மையாக நடப்பது இரவில் நிம்மதியாக தூங்குவதற்கல்ல. புகழுக்காகவோ, சொர்க்கத்துக்கு செல்வதற்காகவோ அல்ல. தவறிழைப்பவர்களை நிம்மதியாக தூங்க விடக்கூடாது என்பதற்காகத்தான். தேசத்தை நேசிப்பதன் அடையாளம்தான் நேர்மை.

வேலை வாய்ப்பின்மையால் இளைஞன் விரக்தியில் இருக்கிறான். அதை போக்கியாக வேண்டும். கிராமங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. கடந்த ஆண்டு கரூர் மாவட்ட விவசாயி, பேட்டைவாய்த்தலை பஸ் நிலையத்தில் மயக்கமடைந்து கிடந்தார். அவர் விஷமருந்தி தற்கொலை செய்திருக்கிறார்.

வாழையை பயிரிட்ட நிலையில் காவிரியில் நீர் வரவில்லை. வாழை கருகியதால் வாழ வழியில்லை. எனவே அந்த விவசாயி தற்கொலை செய்துகொண்டான். இந்தியாவில் 2000-05ம் ஆண்டுகளில் 25 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

நேர்மைக்கு உதவுங்கள்

எனது தலைவன் நேர்மையாக, ஊழலற்றவனாக இருக்கவேண்டும் என்று எண்ணுவது நமது அடிப்படை உரிமை. நேர்மையின்மைக்கு இணையான பொறுப்பின்மையும் ஊழலுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. பொறுப்பின்மையால் பலவற்றை தேசம் இழந்திருக்கிறது.

நேர்மையாக தேர்தல் நடைபெறுவதற்கு நீங்கள் உதவி செய்யுங்கள். அதுதான் இந்த தேசத்துக்கு நீங்கள் காட்டும் நன்றி. இந்த தேர்தலை நேர்மையாக நடப்படதற்கு இந்த முறை மாணவர், இளைஞர் சக்தி உறுதுணையாக இருக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சரி தேர்தல் இத்தனை ஆண்டு காலம் நேர்மையாக நடக்கவில்லையா? நேர்மை என்றால் தேர்தலில் என்ன?

பணம் வாங்கிட்டு ஓட்டுப்போட்டதால் தான் கலைஞரும், ஜெயலலிதாவும் மக்களுக்கு துரோகம் செய்து கார்ப்பரேட்களுக்கும் பிஆர்பி, வைகுண்டராஜனுக்கும் அரசை நடத்துகிறார்களா?

பணம் வாங்காமல் இவர்களுக்கோ அல்லது அன்புமணி,விஜயகாந்த், சீமான், வைகோ என ஒருவரையோ ஓட்டுப்போட்டு தேர்தெடுத்து விட்டால் மக்கள் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிடுமா?

கேவலம் கக்கூசு கட்ட கூட ஒரு எம் எல் ஏ வால் முடியவில்லை என அதிமுக முன்னாள் பெருச்சாளி பழ.கருப்பையா சொன்னது பொய்யா?

ஓட்டுக்கு பணம் கொடுப்பது, சேகர்பாபு, பண்ருட்டி ராமச்சந்திரன், குஷ்பு, மாபா பாண்டியராஜன் போன்று தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறுவது அல்லது வைகோ , கலைஞர், ராமதாஸ், திருமா, ஜெயலலிதா போன்று தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவது என தேர்தல் என்பது தொகுதி உடன்பாடு என்ற அளவில் மக்களை விட்டு அந்நியப்பட்டு திருடர்களின் பாதையாக மாற்றியது யார்? மக்களா அல்லது இவர்களா?

கேவலம் ஒரு கக்கூசு கூட கட்ட அதிகாரம் இல்லாத தேர்தலை, அதிமுகவில் விருப்பமனு தாக்கல் செய்ததற்கு அதே கட்சியை சேர்ந்தவர்கள் தாக்கல் செய்தவரின் கணவர், தங்கச்சியை கடத்தும் ஜனநாயகத்தில், அந்த டாஸ்மாக் கடையினை மூடுவிடுங்கள் என நீதிமன்ற உத்தரவை காட்டி அமுல்படுத்த சொல்லி ஒரு ஆண்டுக்கு மேலாக போராடி அந்த கடை வாசலில் உயிரைவிட்ட சசிபெருமாள்களை காவு வாங்கிய டாஸ்மாக் ஜனநாயகத்தில் என்ன அதிகாரம் இந்த தேர்தலில் பிறக்கிறது..?

அல்லது என்ன நேர்மையினை மக்கள் இதற்கு மேலும் காட்டிவிட முடியும் சகாயம் அவர்களே..?

வாக்களிப்பதை தவிர எந்த அதிகாரமும் இல்லாத தேர்தலை கொண்டு மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றும் இந்த அரசு குறித்து, அந்த அரசுக்கு எதிராக தினந்தோறும் போராடும் மக்கள் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் அதிகார வர்க்கத்தோடும் ஆளும் வர்க்கத்தோடும் சேர்ந்துகொண்டு ஜே ஜே போடுவது ஏன்?

இவை அனைத்திற்கும் கூட நீங்கள் பதில் சொல்ல வேண்டாம்… இந்த தேர்தல் மூலம் பிஆர்பி தண்டிக்க முடியும் என நீங்கள் சொல்ல முடியுமா? இல்லை அப்படி தண்டிக்க முற்படுவது போல சொல்லும் கட்சியை கூட நீங்கள் கை காட்ட முடியுமா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s