திருடர்கள் தேர்தலில் ஜெயிச்சா ‘பரிசுத்த’ ஆவிகளாகின்றனர்-சீமான்…!

1991-96 ஊழல் செஞ்ச ஜெயலலிதாவை மக்கள் அடுத்த தேர்தலில் தண்டிச்சுட்டு பின்னர் 2 முறை முதல்வர் ஆக்கிட்டாங்க, 37 தொகுதிகளில் ஜெயிக்கவைச்சுட்டாங்க மக்களே அவங்களை ஏத்துகிட்ட பின் ஊழல் என பேசுவது தவறு… மேலும் அவருக்கு எதிராக மேல்முறையீடு பண்ண இங்க யாருக்கும் தகுதி இல்லை…. எனக்கு தகுதி இருந்தாலும் எனக்கு விருப்பமில்லை, நிறைய வேலை இருக்கு ….

இது ஜெயா வழக்கு குறித்து புதிய தலைமுறை பேட்டியின் இறுதியில் சீமான் உதிர்த்த முத்துக்கள்…. நிறைய முத்துக்கள் உதிர்த்தார்…. இவற்றை தனித்தனியாக பின்னர் பார்க்கலாம். இப்போதைக்கு ஜெயா வழக்கு குறித்து மட்டும்.

மக்கள் சொத்தை கொள்ளை அடிச்சுட்டு 18 வருஷம் வழக்கை வாய்தா வாங்கி, தண்டனை வாங்கிய பின் 3 மாதத்தில் வழக்கில் இருந்து விடுதலை வாங்கி மீண்டும் முதல்வர் பதவியில் அமர முடியும் என மொத்த நீதித்துறை, தேர்தல் ஆணையம் என எல்லா மானமும் காற்றில் பறக்கும் போது, மக்கள் அவரை முதல்வராக்கிட்டாங்க அதனால் விட்டுரலாம் என்றால் என்ன சீமான் இப்படி பேசுறீங்களே…

அரசு என்றால் என்ன? ஆட்சியாளார்கள் என்றால் என்ன? எவன் வந்தாலும் நல்லது நடக்கலை என்றால் ஆட்சியாளர்களை மாற்றனுமா? மக்களுக்கு அதிகாரம் இல்லாத அரசமைப்பை அடித்து நொறுக்கிவிட்டு மக்களுக்கு அதிகாரம் இருக்கின்ற ஒரு மக்கள் சர்வாதிகார கட்டமைப்பை ஏற்படுத்தனுமா?

sushma-1--1_650_030714101220

நாம் தமிழர் கட்சியில் உறுப்பினர் அட்டையோ, அமைப்பு முறையோ கூட இல்லை, சீமான் என்ற தனிநபர் கட்சியாக (அதிமுக போல) மாறி விட்டது என அய்யநாதன் உங்க கட்சியில் இருந்து விலகி பின் கூறுகிறார்.

ஒரு கட்சியை கூட தனிநபர் சாகசவாதமாக நடத்தும் நீங்கள் முதல்வராகி விட்டால் பச்சமுத்து காலேஜ் அரசுடைமை ஆகிடுமா? அல்லது ராமதாஸ் போன்ற ஆதிக்க சாதிவெறியர்களை சிறையில் அடைக்கப்பட்டு விடுவார்களா? ஐயா என கட்டமொம்மபனையும் முத்துராமலிங்க தேவரையும் ஒரே தட்டில் வைத்து மதிப்பிடும் உங்களுக்கு சாதி குறித்து 1ம் வகுப்பு பையனுக்கு தெரிந்தது கூட தெரியாதது போல பேசுவது ரொம்ப பெரிய மொக்கை சீமான் அவர்களே…?

சாதி குறித்து, கல்வி தனியார்மயம் குறித்து ஒரு புரிதல் கூட இல்லாமல் தமிழன் வந்தா எல்லா பிரச்சனையும் தீரும் என்பது, மோடி வந்தா எல்லா பிரச்சனை தீரும் என்பது போல உள்ளது. தீரலை என மோடி முகமூடி கிழிந்து தொங்கபின்னரும் சீமான் முகமூடி அதுவும் மாநில அளவில் ஒரு பால்தாக்கரே முகமூடி வைத்து மக்கள் என்ன நன்மை வந்துவிடும்…

மற்ற மாநிலங்கள் மக்களும் சேர்ந்து அரசுடன் இனவெறி அரசியல் நடத்துறாங்க என நீங்கள் சொல்வது உண்மையினா கேரளா, கர்நாடக, ஆந்திராவில் பாலாறும், தேனாறும் ஓடனும்,,, ஓடலையே சீமான்..?

பிரச்சனை திசைதிருப்பி அந்த இனவெறியர்கள் குளிர்காய்வது போல நீங்கள் உங்க குளிர்காயனும்…. இதற்கு இந்த அக்கப்போரா?

சீமானை முதல்வராக்கிவிட்டால் அணு உலையினை மூடுவேன்,ராணுவத்திற்கு பயிற்சி கொடுப்பென் என்று பேசுவது என்ன சின்னப்பிள்ளைதனமாக இருக்க்கு?

போராடிக்கிட்டே தான் இருக்கனுமா என்றால் போராட்டத்தின் வெற்றி புரட்சியில் இருக்கிறதா அல்லது வாக்குசீட்டில் இருக்கிறதா?

மொத்த கட்டமைப்பு நொறுக்கி விழும் போது மீண்டும் வந்து எனக்கு வாய்ப்பு கொடுங்க என 56 இன்ச் மார்ப்பளவை தகுதியாக காண்பித்த மோடி போல நீங்கள் ஆண்மை உள்ள தமிழன் என பேசுவது எப்படி அறிவுடையதாகும்…?

நீங்கள் வாங்கு சீட்டுக்கு ஒளிவட்டம் போடாமல் ஒதுங்கி நில்லுங்க…. மக்கள் தங்கள் சொந்த கையில் இந்த அரசை நொறுக்கி ஒரு மக்கள் தலைமை நிறுவதை பார்த்து ரசியுங்கள்…அதை விட்டுவிட்டு பிரபாகரன் போல தனிநபர் சாகசவாத பாதையில் அதுவும் அவரை விட படுகேவலமாக ஓட்டுப்பொறுக்கி அரசியலில் சாகசம் செய்து ராணுவ பயிற்சி,என்ன செய்கிறேன் பார், அணு உலையினை மூடுகிறேன் என வெத்து பில்டப்பு கொடுப்பது உலகிலேயே மிகவும் கடைந்தெடுத்த பிழைப்புவாதம்.

Advertisements

One comment on “திருடர்கள் தேர்தலில் ஜெயிச்சா ‘பரிசுத்த’ ஆவிகளாகின்றனர்-சீமான்…!

  1. Pingback: 5 ஆயிரம் ஏக்கர்ல தக்காளி, 5ஆயிரம் ஏக்கர்ல கொய்யா… – சீமான் புரட்டுகள்..! | புதிய வாசகன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s